Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாட்சியங்கள் மீதான அச்சுறுத்தல்களை அரசு மேற்கொள்வது உண்மைகளை மூடிமறைக்கும் செயல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சாட்சியங்கள் மீதான அச்சுறுத்தல்களை அரசு மேற்கொள்வது உண்மைகளை மூடிமறைக்கும் செயல்

 

 
யுத்த குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகள் கோரப்படும் போதே நாட்டின் உள்ளக செயற்பாடுகளை மிகச்சரியாக கையாண்டிருந்தால் அழுத்தங்களில் இருந்து தப்பியிருக்க முடியும். சர்வதேசத்திற்கு சவால் விடுத்தமையே அரசாங்கம் செய்த மிகப்பெரிய தவறு என தெரிவிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல சாட்சியங்கள் மீதான அச்சுறுத்தல்களை அரசு மேற்கொள்வது உண்மைகளை மூடி மறைக்கும் செயலாகும் எனவும் குறிப்பிட்டார்.
Lakshman-Kiriella_0.jpg
 
இலங்கையில் இடம்பெறும் அச்சுறுத்தல்களும் பயமுறுத்தல்களும் சர்வதேச விசாரணைக்கு பாரிய சவாலாக அமைந்துள்ளது என ஐ.நா. பிரதி மனித உரிமைகள் ஆணையாளர் குற்றம் சுமத்தியுள்ளது தொடர்பில் நாட்டின் பிரதான எதிர்க்கட்சியிடம் வினவிய போதே லக்ஷ்மன் கிரியெல்ல மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்;
 
யுத்தம் முடிவடைந்து வடக்கின் ஆக்கிரமிப்பினை அரசாங்கம் மேற்கொண்ட போது யுத்த குற்றச்சாட்டுக்கள் சர்வதேச அழுத்தங்கள் எழ ஆரம்பித்து விட்டது. அரசாங்கம் யுத்த வெற்றிகளை கொண்டாடாது வடக்கின் சிக்கலான நிலைமைகளை தீர்க்க சரியான நடவடிக்கைகளை எடுத்திருக்குமாயின் இலங்கை மீதான அழுத்தங்களை தடுத்திருக்கவும் சர்வதேசத்தின் ஆதரவினை பெற்றிருக்கவும் முடியும். எனினும் அரசாங்கம் ஆரம்பத்தில் உள்நாட்டு சுயாதீன பொறிமுறைகளை தவிர்த்து ஆட்சியினை தக்க வைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டமையே இன்று நாட்டிற்கு அச்சுறுத்தலாக அமையப் பெற்றுள்ளது.
 
எனினும் சர்வதேச அழுத்தங்களை இலங்கை மீது பிரயோகிக்கப்பட்ட அனைத்து சந்தர்ப்பங்களிலும் அவற்றினை சமாளிக்கவும் பிரச்சினைகளையும் தீர்க்க முடிவெடுக்காது சர்வதேசத்திற்கு சவால் விடுத்து இலங்கையில் இனவாத அமைப்புக்களை தூண்டி விட்டமையே அரசாங்கம் செய்த மிகப்பெரிய தவறாகும். இலங்கையில் எண்ணிக்கை அளவில் தமிழ் மக்களின் வீதம் குறைவாக இருப்பினும் மனித உரிமைகள் விடயத்திலும் மக்களின் பாதுகாப்பு விடயத்திலும் அனைத்து இன மக்களும் சமமானவர்களே. எனவே, நாட்டு மக்களின் பாதுகாப்பினையும் உரிமைகளையும் பாதுகாப்பதில் எல்லா அரசாங்கங்களுக்கும் பொறுப்பு இருக்கின்றது. இந்த விடயங்களில் அரசாங்கம் தவறிழைத்து விட்டது.
 
அதேபோல் இலங்கையில் இருக்கும் சாட்சியங்களை அச்சுறுத்தி அவர்களை கட்டுப்படுத்தும் செயலை செய்வது மனித உரிமை மீறலாகவே அமையும். சர்வதேசத்தின் கேள்விகளுக்கு உண்மையான பதிலை சொல்லும் நிலையில் அரசாங்கம் இல்லாமையும் தமது பக்கம் தவறுகள் இருக்கின்றமையினை உணர்ந்துள்ளதனாலேயே அரசாங்கம் இவ்வாறான அடக்கு முறை செயற்பாடுகளை கையாள்கின்றது.
 
சாட்சியங்கள் மீதான அச்சுறுத்தல்களும் அவர்களை பயமுறுத்தும் செயலை அரசாங்கம் மேற்கொள்வதும் உண்மைகளை மூடி மறைக்க முயற்சிக்கும் செயற்பாடாகவே அமையும். அரசாங்கம் மீதான தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்களை இது மேலும் பலப்படுத்தி விடும் எனவும் அவர் தெரிவித்தார்.

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.