Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடமாகாண மக்களின் மனங்களை வெல்ல முடியாது! – ஒப்புக்கொண்டார் அமைச்சர் ராஜித சேனாரத்ன.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாண மக்களின் மனங்களை வெல்ல முடியாது! – ஒப்புக்கொண்டார் அமைச்சர் ராஜித சேனாரத்ன.

[Thursday 2014-10-02 08:00]
Rajitha-Senaratne-150514-150.jpg

வடக்கில் எத்தகைய அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டாலும் வடமாகாண மக்களின் மனங்களை வெல்ல முடியாது என்று கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். அரியாலையில் அமைக்கப்பட்ட நவீன மீன் விற்பனை நிலையத்தை நேற்றுத் திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், ஜனாதிபதி, வடமாகாணத்துக்கு பெருமளவு நிதியை ஒதுக்கி அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கின்றார். அதிலும் கடற்றொழில் நீரியல் வளத்துறைக்கு அதிகளவு நிதியை ஒதுக்கியுள்ளார்.

  

இருந்தும் அபிவிருத்தி பணிகளை எவ்வளவு முன்னெடுத்தாலும் வடக்கு மக்களின் மனங்களை வெல்ல முடியாது. ஐனநாயக வழியில் இணைந்து செயற்படாமல் தொடர்ந்தும் பயங்கரவாத செயற்பாடுகளை மேற்கொண்டமையாலேயே விடுதலைப்புலிகள் நிர்மூலமாக்கப்பட்டனர். நேபாளத்திலிருந்த மாவோயிட்ஸ் தீவிரவாதிகள் ஆயுதங்களை கீழே வைத்து ஐனநாயக வழியை பின்பற்றியதால் அவர்களின் தலைவர் பிரதமராக இருக்கிறார். ஆனால், அந்த நடைமுறையை விடுதலை புலிகளோ அல்லது ஜே.வி.பி.யின் றோகண விஜயவீரவோ பின்பற்றவில்லை. இதனால் அவர்கள் இல்லாமல் போனார்கள்.

தமிழ் மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை 1980 ஆம் ஆண்டிலிருந்து நான் குரல்கொடுத்து வருகின்றேன். வடமாகாண சபை எங்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு இருந்தது. இருந்தும் அது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கைகளில் சென்றது. இருந்தும் எவ்வித கட்சிகள் பேதமின்றி இலங்கை பிரஜைகள் என்ற ரீதியில் முன்னேற்ற பணிகளை முன்னெடுக்க வேண்டும். அவ்வாறு நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம். கடற்றொழில் நீரியல் வளத்துறை தொடர்பில் அரசியல் வேறுபாடுகள் இருக்கின்ற போதும், எம்முடன் இணைந்து வடமாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் செயற்படுகின்றார்.

வடமாகாணத்தில் இருக்கும் மீன்பிடி பிரச்சினைகள் தொடர்பில் தீர்வு காணுமாறு வடமாகாண மீன்பிடி அமைச்சர் கோரியிருந்தார். அதன்போது, கொழும்பிலுள்ள அதிகாரிகள் பயந்த நிலையில் இருந்தார்கள். எனினும் பயப்படாது சென்று பிரச்சினைகளை ஆராய்ந்து வாருங்கள் என்று அவர்களை அனுப்பி வைத்தேன். வடமாகாணத்தையும், இலங்கையையும் கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றினைந்து செயற்பட வேண்டும். வடமாகாண மீன்பிடிக்கு தேவையான உபகரணங்களை வழங்குவதற்கு டெனீஸ்வரனுக்கு நான் உறுதியளித்துள்ளேன் என்றார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=117890&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.