Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கரிமலையூற்றுப் பள்ளிவாசல் முற்றாக அழிக்கப்பட்டதை ஒப்புக்கொண்டார் கிழக்கு முதல்வர்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கரிமலையூற்றுப் பள்ளிவாசல் முற்றாக அழிக்கப்பட்டதை ஒப்புக்கொண்டார் கிழக்கு முதல்வர்!

[Thursday 2014-10-02 08:00]
najeeb-a-majeed-150-cm.jpg

திருகோணமலை கரிமலையூற்றுப் பள்ளிவாசல் முற்றாகத் தகர்க்கப்பட்டு விட்டதை கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீத் ஒப்புக்கொண்டுள்ளார். பள்ளிவாசலின் கூரையில் சில பகுதிகள் தவறுதலாக உடைக்கப்பட்டு விட்டன என்று இராணுவத்தினர் கூறியதை ஆமோதித்து வந்த முதலமைச்சர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களின் நெருக்குதல்கள் - தொடர் கேள்விகள் காரணமாக இந்த உண்மையை ஒப்புக்கொண்டார்.

  

கரிமலையூற்றுப் பள்ளிவாசல் முற்றாக உடைக்கபபட்டமை ஓகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி மக்களால் கண்டறியப்பட்டது. இது மக்களின் பிரதிநிதிகளின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டதை அடுத்து பள்ளியின் அமைவிடத்துக்குச் சென்று உண்மையைக் கண்டறிய அவர்கள் முயற்சித்தனர். ஆனால், இராணுவத்தினர் அவர்களை அனுமதிக்கவில்லை. மழையின் காரணமாக பள்ளிவாசலின் கூரைகளில் சில பகுதிகள் சேதமடைந்துள்ளன என்றும், உடனடியாகத் திருத்தித் தரப்படும் என்றும் இராணுவத்தினர் கூறினர்.

அத்தோடு, கிழக்கு மாகாண முதலமைச்சரை மாத்திரம் அந்த இடத்துக்குச் சென்று பார்வையிட இராணுவத்தினர் அனுமதித்தனர். ஓகஸ்ட் மாதம் 19 ஆம் திகதி இது தொடர்பிலான விசேட பிரேரணை ஒன்று கிழக்கு மாகாணசபை அமர்வில் மாகாணசபை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் அன்வரால் கொண்டு வரப்பட்டது. அந்தப் பிரேரணையில் கலந்து கொண்டு உரையாற்றிய ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் பள்ளிவாசல் உடைப்பைக் கண்டித்தனர். இது தொடர்பில் பதில் வழங்கிய முதலமைச்சர் மஜீத், பள்ளிவாசல் முற்றாக உடைக்கப்படவில்லை என்றும், கூரைகளில் சில பகுதிகளே உடைந்துள்ளன என்றும் கூறினார்.

இருந்தாலும் தாம் நேரில் சென்று பார்ப்பதற்கான அனுமதியைப் பெற்றுத் தரவேண்டும் என்று உறுப்பினர்கள் முதலமைச்சரிடம் கேட்டுக்கொண்டனர். ஒரு வாரத்திற்குள் அதற்கான ஏற்பாடு செய்யப்படும் என்று முதலமைச்சர் பதிலளித்தார். ஒரு மாதம் கடந்துள்ள நிலையில் நேற்றுமுன்தினம் சபை கூடியபோது இந்தப் பிரச்சினையை மீண்டும் கிளப்புவது என உறுப்பினர்கள் முடிவெடுத்தனர்.

இந்தநிலையில், ஊவா மாகாண சபைத் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டபோது ஐக்கிய தேசியக் கட்சியின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் நிஷாந்த மன்சுல பெர்னாண்டோ தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தயா கமகே கண்டன பிரேரணை ஒன்றைக் கொண்டு வந்தார். அந்தப் பிரேரணை மீது கலந்து கொண்டு உரையாற்றிய முதலமைச்சர் மஜீத், "கரிமலையூற்றுப் பள்ளிவாசல் முற்றாகத் தகர்க்கப்பட்டுவிட்டது" என்று கூறினார். அத்தோடு உறுப்பினர்களை அங்கு அழைத்து செல்வதற்காக அனுமதி பெறுவது கடும் கஷ்டமான காரியம் என்றும் கூறினார். இருந்தாலும் பள்ளிவாசல் புனரமைக்கப்படுகின்றது எனவும், 50 வீதமான வேலைகள் முடிந்துவிட்டன எனவும் முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=117884&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.