Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னை கால்பந்து அணியில் கேப்டன் தோனி

Featured Replies

  • தொடங்கியவர்

ஐஎஸ்எல்: சென்னையை பந்தாடியது டெல்லி
 

 

டெல்லி இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ் எப்.சி. அணி 4-1 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்.சி. அணியைத் தோற்கடித்தது.

டெல்லியில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே ராய்மேக்கர்ஸ் கோலடித்து டெல்லிக்கு அசத்தலான தொடக்கம் ஏற்படுத்தினார். தொடர்ந்து 21-வது நிமிடத்தில் அந்த அணியின் ஜங்கர் கோலடிக்க, முதல் பாதி ஆட்டநேர முடிவில் டெல்லி 2-0 என முன்னிலை பெற்றது.

 

2-வது பாதி ஆட்டத்தின் 69-வது நிமிடத்தில் சென்னைக்கு முதல் கோலை பெற்று தந்தார் இலனோ. இதன்பிறகு 79-வது நிமிடத்தில் டெல்லி 3-வது கோலை அடித்தது. பெனால்டி வாய்ப்பின் மூலம் ஹெரேரோ இந்த கோலை அடித்தார்.

 

90-வது நிமிடத்தில் டெல்லியின் சாண்டோஸ் கோலடிக்க அந்த அணி 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி கண்டது.

கொல்கத்தாவில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தாவும், கேரளாவும் மோதுகின்றன. பயிற்சியாளர் சஸ்பெண்ட் ஐஎஸ்எல் போட்டியில் ஒழுங்கு நடவடிக்கை விதிமுறைகளை மீறியதாக அட்லெடிகோ டி கொல்கத்தா பயிற்சியாளர் அந்தோணியோ லோபஸுக்கு 4 போட்டிகளுக்கும், கோவா வீரர் ராபர்ட் பயர்ஸ், அட்லெடிகோ வீரர் பிக்ரு லெமெஸா ஆகியோருக்கு 2 போட்டிகளுக்கும் தடை விதித்துள்ளது அகில இந்திய கால்பந்து சம்மேளனம்.

இதுதவிர இவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் அட்லெடிகோ கோல் கீப்பிங் பயிற்சியாளர் பிரதீப் குமாருக்கு ஒரு போட்டிக்கு தடையும், ரூ.30 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF/article6535174.ece

  • Replies 86
  • Views 4.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

கோல்கட்டா பயிற்சியாளர் ‘சஸ்பெண்ட்’ * இரண்டு வீரர்களுக்கு தடை
அக்டோபர் 25, 2014.

 

புதுடில்லி: கோவா அணியின் ராபர்ட் பிரேஸ் முகத்தில் குத்து விட்ட, கோல்கட்டா அணி பயிற்சியாளர் ஹபாஸ், 4 போட்டிகளுக்கு ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார். தவிர, ராபர்ட் பிரேஸ், பிக்ருவுக்கும் இரு போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டது.

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்.,) தொடர் தற்போது இந்தியாவில் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் கோல்கட்டா, 2–1 என்ற கணக்கில் கோவா அணியை வீழ்த்தியது.

இப்போட்டியில் வீரர்கள் அதிக ஆக்ரோஷமாக நடந்து கொண்டனர். கோவா வீரர் அர்னாலின் மீது தலையை வைத்து முட்டினார் கோல்கட்டாவின் முன்னணி வீரர் பிக்ரு. இதனால், அர்னாலின் இடது கண் புருவத்தில் காயம் ஏற்பட்டது. கோல்கட்டா வீரர் கொன்சாலஸ், தலையில் கட்டுடன் காணப்பட்டார்.

இப்போட்டியில் மொத்தம் 8 முறை ‘எல்லோ கார்டு’ காண்பிக்கப்பட்டன. முதல் பாதியில் கோவா அணி 1–0 என, முன்னிலையில் இருந்தது.

முகத்தில் குத்து:

அப்போது ‘டிரசிங் ரூம்’ செல்லும் வழியில், கோல்கட்டா பயிற்சியாளர் லோபஸ் ஹபாஸ் (ஸ்பெயின்), ராபர்ட் பிரேஸ் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது, பிரேஸ் முகத்தில் குத்தியுள்ளார் ஹபாஸ்.

இந்த சம்பவம் குறித்து இரு அணி தரப்பிலும் புகார் தரப்பட்டன. இதுகுறித்து கோவா பயிற்சியாளர் ஜிகோ (பிரேசில்), கூறுகையில்,‘‘ஹபாஸ், பிரேஸ் மோதலை நேரில் பார்த்த சாட்சி கிடையாது. இருப்பினும், பிரேஸ் பொய் சொல்ல மாட்டார்,’’ என்றார்.

யார் மீது தவறு:

கோல்கட்டா செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,‘‘ பிரேஸ் மற்றும் சில வீரர்கள் இணைந்து, எங்கள் பயிற்சியாளர் மற்றும் நிர்வாகிகளை மிரட்டும் வகையில் பேசினர். இதற்கான சி.சி.டி.வி., ஆதாரங்களை பார்க்கும் படி தெரிவித்துள்ளோம். ஒருவேளை நாங்கள் தவறு செய்திருந்தால் எங்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். மற்றபடி, ஜிகோ கூறுவதை கேட்டு ஒருதலைப் பட்சமாக முடிவு எடுக்க கூடாது,’’ என்றார்.

இதனிடையே, போட்டியின் போது மற்றும் மைதானத்துக்கு வெளியே நடந்த சம்பவம் குறித்து ஐ.எஸ்.எல்., அமைப்பின் ஒழுங்கு நடவடிக்கைக்குழு விசாரித்தது.

கடும் நடவடிக்கை:

முடிவில், குத்துவிட்ட பயிற்சியாளர் ஹபாஸ், ரூ. 5 லட்சம் அபராதம் மற்றும் 4 போட்டிகளுக்கு ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டார். பிக்ரு (கோல்கட்டா), பிரேஸ் (கோவா) இருவருக்கு 2 போட்டி தடை, ரூ. 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

கோல்கீப்பர் பயிற்சியாளர் பிரதிப்குமாருக்கு, ஒரு போட்டி தடை, ரூ. 30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து, அடுத்த நான்கு நாட்களுக்குள் இவர்கள் ‘அப்பீல்’ செய்யலாம்.

 

‘ரெப்ரி’ மீது நடவடிக்கையா

கோல்கட்டா, கோவா அணிகள் மோதிய போட்டியில் ‘மேஜர் கால்பந்து லீக்’ ‘ரெப்ரி’ அமைப்பில் இருந்து அமெரிக்காவின் பிரன்சோ மற்றும் இருவர் ‘ரெப்ரியாக’ இருந்தனர்.

இப்போட்டியில், எதிரணி வீரர் மீது, பிக்ரு தலையால் மோதியதை சரியாக கண்டு கொள்ளாதது உட்பட, பல நேரங்களில், பிரன்சோ திறமையாக செயல்படவில்லை என, புகார் எழுந்துள்ளது. இதனால், அடுத்து வரும் போட்டிகளில் இருந்து இவர்கள் நீக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

http://sports.dinamalar.com/2014/10/1414256736/ISLsuspendsATKcoachandtwoplayers.html

  • தொடங்கியவர்

கேரளா– கோல்கட்டா டிரா: ஐ.எஸ்.எல்., கால்பந்தில் விறுவிறு
அக்டோபர் 26, 2014.

 

கோல்கட்டா: கோல்கட்டா, கேரளா அணிகள் மோதிய ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டி 1–1 என ‘டிரா’ ஆனது.      

முதலாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடர் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. கோல்கட்டாவில் உள்ள சால்ட்லேக் மைதானத்தில் நேற்று நடந்த லீக் போட்டியில், கங்குலி இணை உரிமையாளராக உள்ள கோல்கட்டா அணி, சச்சினின் கேரளா அணியை எதிர்கொண்டது.      

கோவா அணிக்கு எதிரான போட்டியில் ஒழுங்கீனமாக செயல்பட்டு  2 போட்டியில் விளையாட தடை பெற்றதால் கோல்கட்டாவின் பிக்ரு (எத்தியோப்பியா) நேற்று களம் காணவில்லை.

 

ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் கோல்கட்டா அணியின் பால்ஜித் ஒரு கோல் அடித்தார். சில நிமிடங்களில் கிடைத்த அரிய வாய்ப்பை இந்த அணியின் ஜோப்ரி (28வது நிமிடம்) வீணாக்கினார். 41வது நிமிடத்தில் கேரளா அணியின் ஹியும் (கனடா) ஒரு கோல் அடித்து பதிலடி தந்தார். முதல் பாதி முடிவில் போட்டி 1–1 என சமநிலையில் இருந்தது.      

இரண்டாவது பாதியில் இரு அணி வீரர்களும் அடிக்கடி மோதலில் ஈடுபட்டனர். தடுப்பாட்டத்தில் அதிக கவனம் செலுத்தியதால்  கூடுதலாக கோல் அடிக்க முடியவில்லை. முடிவில், போட்டி 1–1 ‘டிரா’ ஆனது.

புனே வெற்றி: புனேயில் நடந்த மற்றொரு லீக் போட்டியில், புனே அணி, கோவாவை 2–0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. புனே சார்பில், கோஸ்டாஸ் கட்சவ்ரானிஸ் (42வது நிமிடம்), டேவிட் டிரஜிகட் (81) தலா ஒரு கோல் அடித்தனர்.

 

http://sports.dinamalar.com/2014/10/1414342543/IndianSuperLeagueFootballKolkataKeralaSoccer.html

  • தொடங்கியவர்

பெனால்டியால் தோற்றோம்: மார்கோ மெட்டாரஸி
 

 

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் நேற்று முன்தினம் டெல்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ் அணி 4-1 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்.சி. அணியைத் தோற்கடித்தது.

போட்டிக்குப் பிறகு செய்தியா ளர்களைச் சந்தித்த சென்னையின் எப்.சி. அணியின் பயிற்சியாளர் மார்கோ மெட்டாரஸி, “சில நேரங் களில் 4-1 என்ற கோல் கணக்கில் தோற்கும்போது அது மோசமான தோல்வி போன்று தெரியும். இந்த ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் நாங்கள் சிறப்பாக ஆடி னோம். ஆனால் டெல்லிக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பு ஆட்டத்தின் போக்கை முற்றிலும் மாற்றிவிட்டது.

 

அதேநேரத்தில் டெல்லி அணி ஆரம்பம் முதலே அபாரமாகவும், வேகமாகவும் ஆடியதாக நினைக்கிறேன். நாங்களும் சிறப் பாகவே போட்டியைத் தொடங் கினோம். ஆனாலும் தோல்வி யடைந்துவிட்டோம். எனினும் இந்தத் தோல்வியிலிருந்து விரைவாக மீண்டு அடுத்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடுவது முக்கியமானதாகும்.

எங்கள் அணி தடுப்பாட்டம் ஆடியதாக மக்கள் நினைக்கலாம். ஆனால் எங்கள் அணியிலும் இலனோ, பல்வந்த், புருனோ, மென்டோஸா, ரானே போன்ற தாக்குதல் ஆட்டக்காரர்கள் இருக்கிறார்கள். எனினும் இந்த நாள் எங்களுக்கு சாதகமானதாக அமையவில்லை” என்றார்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B8%E0%AE%BF/article6537521.ece

  • தொடங்கியவர்

எழுச்சி பெறுமா சென்னை அணி: மும்பையுடன் இன்று மோதல்
அக்டோபர் 27, 2014.

சென்னை: இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடரில் இன்று நடக்கும் லீக் போட்டியில் சென்னை, மும்பை அணிகள் மோதுகின்றன. இதில் சென்னை அணி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி எழுச்சி காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.     

முதலாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடர் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. இதில் கோல்கட்டா, கோவா, வடகிழக்கு யுனைடெட் உள்ளிட்ட 8 அணிகள் ‘ரவுண்டு ராபின்’ முறையில் லீக் சுற்றில் பங்கேற்கின்றன. சென்னையில் இன்று நடக்கும் லீக் போட்டியில், தோனி இணை உரிமையாளராக உள்ள சென்னையின் எப்.சி., அணி, பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூரின் மும்பை சிட்டி எப்.சி., அணியை எதிர்கொள்கிறது.     

 

எலானோ நம்பிக்கை: முதலிரண்டு லீக் போட்டியில் கோவா, கேரளா அணிகளை வீழ்த்திய சென்னை அணி, 3வது லீக் போட்டியில் டில்லி அணியிடம் 1–4 என தோல்வி அடைந்தது. இப்போட்டியில் ஒரு கோல் அடித்து ஆறுதல் தந்த எலானோ புளுமர் (பிரேசில்), இத்தொடரில் அதிக கோல் (3) அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தை மும்பையின் மோரிட்சுடன் (பிரேசில்) பகிர்ந்து கொண்டுள்ளார். இத்தொடரில் கோல் அடித்த முதல் இந்திய வீரரான பல்வந்த் சிங்குடன், கேரளாவுக்கு எதிராக கடைசி நேரத்தில் ஒரு கோல் அடித்து வெற்றிக்கு உதவிய பெர்னார்டு மெண்டி (பிரான்ஸ்) மீண்டும் அசத்தலாம். மார்கோ மாட்டராசி (இத்தாலி), போஜன் (சுவீடன்), எரிக் டிஜம்பா–டிஜம்பா (கேமரூன்), ஜீன் மவுரிஸ் எடு (ஹெய்தி) உள்ளிட்ட அனுபவ வீரர்கள் எழுச்சி கண்டால் நல்லது. அபிஷேக் தாஸ், கவுரமாங்கி சிங், அந்தோனி பார்போசா, டேன் பெரைரா, பிரதீப், சுக்விந்தர் சிங், ஜிஜெ லால்பெக்குலா உள்ளிட்ட இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்படும் பட்சத்தில், மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பலாம்.    

 

சாதிப்பாரா மோரிட்ஸ்: கோல்கட்டாவுக்கு எதிராக தோல்வி அடைந்த மும்பை அணி, 2வது லீக் போட்டியில் புனே அணியை வீழ்த்தியது. பின், வடகிழக்கு யுனைடெட் அணிக்கு எதிராக 0–2 என வீழ்ந்தது. புனே அணிக்கு எதிராக ‘ஹாட்ரிக்’ கோல் அடித்த ஆன்ட்ரி மோரிட்சுடன் (பிரேசில்),  இதுவரை தலா ஒரு கோல் அடித்துள்ள சுபாஷ் சிங் (இந்தியா), ஜோஹன் லெட்ஜெல்டர் (பிரான்ஸ்) மீண்டும் அசத்தலாம். தடை காரணமாக முதல் மூன்று போட்டியில் விளையாடாத நிகோலஸ் அனேல்கா (பிரான்ஸ்), காயத்தில் இருந்து மீண்ட கேப்டன் சையது ரஹிம் முகமது இன்று களமிறங்குவது கூடுதல் பலம்.     

 

தீபக் மன்டால், பீட்டர் கோஸ்டா, லால்ரின்டிகா ரால்தே, ராம் மாலிக், அபிஷேக் யாதவ், நடாங் பூட்டியா, ரோகித் மிர்சா, சுஷில் குமார் சிங் உள்ளிட்ட இந்திய வீரர்களுடன் மானுவல் பிரைட்ரிச் (ஜெர்மனி), பிரான்சிஸ்கோ சேவியர் பெர்ணான்டஸ் (ஸ்பெயின்), லஜங்பர்க் (சுவீடன்), டியாகோ மானுவல் பெர்ணான்டஸ் ரிபைரோ (சுவிட்சர்லாந்து), டியாகோ பெர்ணான்டோ நடாயா (அர்ஜென்டினா) உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்களும் கைகொடுக்கும் பட்சத்தில் இரண்டாவது வெற்றியை பெறலாம்.

 

http://sports.dinamalar.com/2014/10/1414427604/ISLFootballChennaiMumbai.html

  • தொடங்கியவர்

சென்னையிடம் மும்பை ‘சரண்டர்’* எலானோ, மென்தோஜா அபாரம்
அக்டோபர் 28, 2014.

சென்னை: மும்பை அணிக்கு எதிரான ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில், கோல் மழை பொழிந்த சென்னை அணி, 5–1 என்ற கணக்கில் அசத்தல் வெற்றி பெற்றது. சென்னை சார்பில் எலானோ, மென்தோஜா தலா 2 கோல் அடித்தனர்.

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்.,) தொடர், தற்போது இந்தியாவில் நடக்கிறது. இதில் நேற்று சென்னையில் நடந்த லீக் போட்டியில் சென்னை, மும்பை அணிகள் மோதின.

முதல் இரு போட்டிகளில் வெற்றி பெற்ற சென்னை அணி, டில்லிக்கு எதிராக 1–4 என, மோசமாக தோற்றது.

இதையடுத்து, நேற்று மும்பைக்கு எதிரான போட்டியில், பயிற்சியாளர் மாட்டராசி, தற்காப்பு பகுதி வீரராக களமிறங்கி ஊக்கம் அளித்தார்.  9வது நிமிடத்தில் கிடைத்த ‘பெனால்டி’ வாய்ப்பில், எலானோ கோலாக மாற்றினார். அடுத்து 26வது நிமிடத்தில் மைதானத்தில் நடுப்பகுதியில் இருந்து எலானோ கொடுத்த ‘பாசை’ பெற்ற, இந்திய அணியின் இளம் வீரர் ஜீஜே, அப்படியே வளைக்குள் தள்ள, 2–0 என, முன்னிலை பெற்றது சென்னை.

இரண்டு கோல்:

பின் 41வது நிமிடத்தில் கிடைத்த ‘பிரீ–கிக்’ வாய்ப்பில் பந்தை துல்லியமாக உதைத்தார் எலானோ. இதை கோல்கீப்பர் சுப்ரட்டோ தடுத்த போதும், பந்தை இவரது கையில் இருந்து நழுவியது. இதைப் பயன்படுத்திய மென்தோஜா, தன் பங்கிற்கு ஒரு கோல் அடித்தார்.

தொடர்ந்து அசத்திய இவர், போட்டியின் 44வது நிமிடத்தில், ஹர்மன்ஜோத்திடம் இருந்து பந்தை பெற்று, கோல் அடித்து அசத்தினார். முதல் பாதி முடிவில், சென்னை அணி 4–0 என, அசைக்க முடியாத முன்னிலை பெற்றது.

அனெல்கா வீண்:

இரண்டாவது பாதியில் (69வது நிமிடம்), ‘பிரீ–கிக்’ அடிப்பதில் வல்லவரான எலானோ, மீண்டும் ஒரு அசத்தல் கோல் அடித்தார். இது இத்தொடரில் இவர் அடித்த 5வது கோல்.

‘பிபா’ தடையில் இருந்து மீண்ட அனெல்கா நேற்று மும்பை அணிக்காக முதல் போட்டியில் களமிறங்கிய போதும், பெரிய அளவில் சோபிக்கவில்லை. காயத்தில் இருந்து மீண்ட சையது நபி மட்டும், மும்பை அணிக்காக 87வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து ஆறுதல் தந்தார்.

முடிவில், சென்னை அணி 5–1 என்ற கோல் கணக்கில், அசத்தல் வெற்றி பெற்றது.

கோல் ‘மழை’

நேற்று மழை காரணமாக சென்னையில் போட்டி நடக்குமா என்று அச்சத்தில் ரசிகர்கள் இருந்தனர். இந்நிலையில், மும்பைக்கு எதிராக சென்னை வீரர்கள் கோல் மழை பொழிய, ரசிகர்கள் மகிழ்ச்சிக்கடலில் நனைந்தனர்.

 

மாட்டராசி மோதல்

சென்னை அணிக்கு பயிற்சியாளர் மற்றும் வீரராக உள்ளார் இத்தாலியின் மாட்டராசி. முதல் மூன்று போட்டிகளில் களமிறங்காத இவர் நேற்று சொந்தமண்ணில் முதன் முறையாக விளையாடினார். மும்பைக்கு எதிரான இப்போட்டியில், முதல் பாதியின் ‘ஸ்டாப்பேஜ்’ நேரத்தில் (45+1வது நிமிடம்), மும்பை வீரர் சுபாசுடன் மோதலில் ஈடுபட்டார். பிறகு நடுவர் தலையிட்டு சமாதானம் செய்தார்.

‘கோல்கீப்பர்’ தோனி

தற்போது ஓய்வில் உள்ள தோனி நேற்றைய போட்டியை சென்னை அணியின் இணை உரிமையாளர் என்ற முறையில் அரங்கில் இருந்து உற்சாகமாக கண்டு களித்தார். உடன் உரிமையாளர் நடிகர் அபிஷேக்கும் சேர்ந்து கொண்டாடினார். அடுத்து, சேவை அமைப்புக்கு நிதி சேர்க்கும் நிகழ்ச்சிக்காக, ‘கோல்கீப்பராக’ களமிறங்கிய தோனி, 2 கோல்களை தடுத்து அசத்தினார்.

 

http://sports.dinamalar.com/2014/10/1414512380/ChennaiyinFCMumbaihomematchISL.html

 

  • தொடங்கியவர்

ஐஎஸ்எல்: கொல்கத்தா அணியை வாங்க முடியாததால் ஷாருக் கான் வருத்தம்
 

 

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் கொல்கத்தா அணியை வாங்குவதற்காக தீவிர முயற்சி மேற்கொண்டேன். ஆனால் அதை வாங்க முடியாமல்போனது ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியது என பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் தெரிவித் துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

ஐஎஸ்எல் போட்டியில் பங்கெடுக்க மிகவும் ஆர்வமாக இருந்தேன். கால்பந்து அணிக்கு உரிமையாளராக வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் கொல்கத்தா அணியை வாங்குவதற்கு வழியில்லாமல் போய்விட்டது.

 

கொல்கத்தா அணியை வாங்க முடியாவிட்டால் வேறு எந்த நகரத்தைச் சேர்ந்த அணியையும் என்னால் வாங்க முடியாது. அதனால் ஐஎஸ்எல் போட்டியில் கொல்கத்தா அணியை வாங்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த அனைவரையும் சந்தித்தேன். ஆனாலும் எதுவும் நடக்கவில்லை. இறுதியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி உள்ளிட்டோர் கொல்கத்தா அணியை வாங்கிவிட்டனர்.

பின்னர் வேறு ஏதாவது ஒரு நகரத்தைச் சேர்ந்த அணியை வாங்கிக்கொள்ளுமாறு ஐஎஸ்எல் தரப்பு என்னிடம் கூறியது. ஆனால் நான் மறுத்துவிட்டேன். கொல்கத்தா அணியை வாங்கியிருக்கும் கங்குலிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள ஷாருக் கான், “கொல்கத்தா அணியை வாங்குவதற்கு என்னைவிட அவர்தான் தகுதியானவர். அவர்தான் அந்த அணியை வைத்திருக்க வேண்டும். அவருடன் நான் போட்டியிட முடியாது. கங்குலிக்கும், ஐஎஸ்எல் போட்டியில் இணைந்திருப்பவர்களுக்கும் எனது வாழ்த்துகள். கொல்கத்தா அணியை வாங்க முடியாதது இன்றும் வருத்த மாகத்தான் இருக்கிறது. நான் ஐபிஎல் போட்டியில் அணியை வாங்கியபோது ஐபிஎல் பாணியிலான போட்டிகள் கால் பந்திலும் நடத்தப்படும் என எனக்கு தெரிவிக்கப்பட்டது. கால் பந்தை மிகவும் நேசிக்கிறேன். விளையாடிக் கொண்டிருக்கிறேன். எனது மகன் கால்பந்து விளையாடுகிறான். எனது மகள் கால்பந்து அணிக்கு கேப்டனாக இருக்கிறார்” என்றார்.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/article6550012.ece

  • தொடங்கியவர்

கேரளா அணிக்கு முதல் வெற்றி
அக்டோபர் 30, 2014.

புனே: இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில், சச்சினின் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. நேற்று நடந்த லீக் போட்டியில் புனே அணியை வீழ்த்தியது.

புனேயில் நேற்று நடந்த இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடரின் லீக் போட்டியில், பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் உரிமையாளராக உள்ள புனே சிட்டி அணி, சச்சினின் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை எதிர்கொண்டது.

 

ஆட்டத்தின் 15வது நிமிடத்தில் கிடைத்த ‘பிரீ கிக்’ வாய்ப்பில், புனே அணி கேப்டன் டேவிட் டிரஸ்கட் (பிரான்ஸ்) முதல் கோல் அடித்தார். தொடர்ந்து போராடிய கேரளா அணிக்கு 41வது நிமிடத்தில் ‘கார்னர் கிக்’ வாய்ப்பு கிடைத்தது. இதில் ஸ்டீபன் பியர்சன் (ஸ்காட்லாந்து) அடித்த பந்தை ஹெங்பர்ட் (பிரான்ஸ்) தலையால் முட்ட, அதனை ‘கோல் போஸ்ட்’ அருகில் இருந்த இந்திய வீரர் சபீத் கோலாக மாற்றினார். முதல் பாதி முடிவு 1–1 என சமநிலை வகித்தது.

 

இரண்டாவது பாதியில் அசத்தலாக ஆடிய கேரளா அணிக்கு 65வது நிமிடத்தில் இயான் ஹுமே (கனடா) கொடுத்த பந்தை  கேப்டன் பென் ஆர்ஜி (நைஜீரியா) கோலாக மாற்றினார். கடைசி நிமிடம் வரை போராடிய புனே அணியினரால் கூடுதலாக ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.

ஆட்டநேர முடிவில் கேரளா அணி 2–1 என்ற கணக்கில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

 

 

http://sports.dinamalar.com/2014/10/1414690696/soccerindia.html

  • தொடங்கியவர்

மும்பை அணி வெற்றி
நவம்பர் 02, 2014.

மும்பை: கேரளா அணிக்கு எதிரான ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் மும்பை அணி 1–0 என வெற்றி பெற்றது.

மும்பை அணி வெற்றி  ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடர் இந்தியாவில் நடக்கிறது. மும்பையில் நேற்று நடந்த லீக் போட்டியில் கேரளா, மும்பை அணிகள் மோதின. முதல் பாதியின் 45வது நிமிடத்தில் கிடைத்த ‘பிரீ கிக்’ வாய்ப்பில் மும்பை அணியின் அனெல்கா (பிரான்ஸ்) கோல் அடித்தார்.  இரண்டாவது பாதியில் கோல் அடிக்க வேண்டிய நெருக்கடியில் கேரளா அணியினர் களம் கண்டனர். முரட்டு ஆட்டத்தால் கேரளா அணியின் நிர்மல் செத்ரி (83), பியர்சன் (90+2) ‘எல்லோ கார்டு’ பெற்றனர். கடைசி வரை போராடிய இந்த அணி வீரர்களால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. முடிவில், மும்பை அணி 1–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

http://sports.dinamalar.com/2014/11/1414948942/mumbaikeralasoccer.html

 

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இந்திய கால்பந்து அரங்கில் புரட்சி
நவம்பர் 03, 2014.

 

ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடர் இந்திய ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.   ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரை விட, அதிகமான ரசிகர்கள் இப்போட்டிகளை கண்டு களித்துள்ளனர்.     

ஐ.பி.எல்., ‘டுவென்டி–20’ கிரிக்கெட் வரவால், இந்திய விளையாட்டில் புத்துணர்ச்சி ஏற்பட்டது. இதன் பாணியில் ஹாக்கி லீக், பாட்மின்டன் லீக், கபடி லீக் துவங்கப்பட்டது. இதில் கபடி லீக்கிற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது.                  

இதே போல இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்.,) தொடரும் சிகரங்களை தொட்டிருக்கிறது. 2017ல் இந்தியாவில் ஜூனியர் உலக கோப்பை கால்பந்து தொடர் நடத்தவுள்ளது. இந்நிலையில், ஐ.எஸ்.எல்., தொடர் இந்தியாவில் உறங்கிக் கிடக்கும் கால்பந்து உணர்வுகளை தட்டியெழுப்பும் என சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (‘பிபா’) தெரிவித்தது. இது சரியாக நடந்துள்ளது.                

 

அதிக வருகை: கடந்த அக்., 12ல் துவங்கிய ஐ.எஸ்.எல்., தொடரின் முதல் 16 போட்டிகளை மொத்தம் 4,35,476 பேர் நேரில் பார்த்துள்ளனர். அதாவது ஒரு போட்டியை சராசரியாக 27,217 பேர் கண்டுகளித்தனர்.                 

இது ஸ்பெயினில் 1929 முதல் நடக்கும் லா லிகா தொடரை விட அதிகம். கடந்த 2013ல் இத்தொடரின் சராசரி வருகை 25,464 தான். கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த ஐ.பி.எல்., தொடரைக் காண சராசரியாக 23,763 பேர் தான் வந்தனர்.             

கனடா (27,005), சீனா (19,777) தொடர்கள் என, உலகில் நடக்கும் பல தொடர்களுக்கு கிடைக்கும் வரவேற்பினை விட, அதிகமான ஆதரவு ஐ.எஸ்.எல்.,க்கு கிடைத்துள்ளது.

அதிகமும் குறைவும்     

ஐ.எஸ்.எல்., தொடரின் துவக்க (அக்., 12) போட்டியை (கோல்கட்டா–மும்பை) அதிகபட்சமாக 65 ஆயிரம் பேர் பார்த்தனர். புனே, கோவா அணிகள் மோதிய போட்டியை (அக்., 26) காண குறைந்தபட்சமாக 7,517 பேர் வந்தனர்.      

கோல்கட்டாவின் சால்ட் லேக் மைதானத்தில், கோல்கட்டா அணி களமிறங்கிய 3 போட்டிகளை, சராசரியாக 53,064 ரசிகர்கள் பார்த்தனர்.     

 

‘ஐ–லீக்’ அவ்ளோ தான்     

இந்தியாவில் 2007 முதல் நடத்தப்படுவது ‘ஐ–லீக்’ கால்பந்து தொடர். சரியற்ற வியாபார தந்திரம், ‘டிவி’ ஒளிபரப்பு இல்லாதது போன்ற காரணங்களால், இத்தொடருக்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. 2013–14ல் நடந்த இத்தொடரின் சராசரி ரசிகர்கள் வருகை 5,617 தான். ஐ.எஸ்.எல்., வெற்றியை அடுத்து ‘ஐ–லீக்’ கிற்கு மூடுவிழா நடத்தப்படலாம்.

 

ஆசியாவின் ‘முதல்வன்’     

ஆசிய நாடுகளில் ஆஸ்திரேலியாவில் 2004 முதல் ‘ஏ–லீக்’ தொடர் நடக்கிறது. கடந்த ஆண்டில் இதன் சராசரி வருகை 13,046. ஜப்பானின் (1993) ‘ஜே–லீக்’ தொடருக்கு 17,226 பேர் வந்தனர். தென் கொரியாவின் ‘கே–லீக்’ தொடரைக் காண 7,652 பேர் தான் வந்திருந்தனர். இதனால், ஆசிய நாடுகளில் நடத்தப்படும் சிறப்பான கால்பந்து தொடர் என்ற பெருமை ஐ.எஸ்.எல்.,க்கு கிடைத்துள்ளது.

 

 

http://sports.dinamalar.com/2014/11/1414995426/IndianSuperLeagueFootballIndianPremierLeagueCricket.html

  • தொடங்கியவர்

புனே அணிக்கு இரண்டாவது வெற்றி
நவம்பர் 03, 2014.

 

புனே: ஐ.எஸ்.எல்., கால்பந்து போட்டியில் புனே அணி, வடகிழக்கு யுனைடெட் அணியை வீழ்த்தி, இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது.

ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடர் இந்தியாவில் நடக்கிறது. இதன் லீக் போட்டியில் புனே, வடகிழக்கு யுனைடெட் அணிகள் மோதின. இதன் முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க வில்லை.

இரண்டாவது பாதியில் பந்து பெரும்பாலும் புனே வீரர்கள் கையில் தான் இருந்தது. போட்டியின் 88வது நிமிடத்தில், புனே வீரர் டுடு அடித்த பந்து கோல் போஸ்ட்டின் மேலே பட்டு திரும்பியது.

 

இதை அங்கிருந்த கூசென்ஸ், தலையால் முட்டி கோலாக மாற்றினார். மறுபுறம், வடகிழக்கு அணி தனது மூன்று மாற்று வீரர்களை களமிறக்கியும் பலன் கிடைக்கவில்லை.

முடிவில், 1–0 என்ற கோல் கணக்கில் புனே அணி வெற்றி பெற்றது. ஏற்கனவே, கோவா அணிக்கு எதிராக வென்றிருந்த புனே அணிக்கு, இது இரண்டாவது வெற்றியாக அமைந்தது.

 

http://sports.dinamalar.com/2014/11/1415035412/puneISLnortheastunited.html

  • தொடங்கியவர்

சென்னை - கொல்கத்தா இன்று பலப்பரீட்சை: மழையால் போட்டியை நடத்துவதில் சிக்கல்

 

இண்டியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் சென்னையில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் ஆட்டத் தில் சென்னையின் எப்சி – அட்லெடிகா கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அப்போட்டி நடைபெறுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதுவரை 4 ஆட்டங்களில் பங்கேற்றுள்ள சென்னை 3 வெற்றி, 1 தோல்வியுடன் 9 புள்ளிகள் பெற்றுள்ளது. அதே நேரத்தில் கொல்கத்தா அணி இதுவரை தோல்வியடையவே இல்லை. அந்த அணி 5 ஆட்டங்களில் 3 வெற்றி, 2 டிராவுடன் 11 புள்ளிகள் பெற்றுள்ளது.

 

புள்ளிகள் பட்டியலில் கொல்கத்தா முதலிடத்திலும் சென்னை 2-வது இடத்திலும் உள்ளது. எனவே பலம் வாய்ந்த இந்த இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

சென்னை நேரு மைதானத்தில் இந்த ஆட்டம் நடைபெறவுள்ளது. எனினும் சென்னையில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இன்றும் மழை பெய்ய வாய்ப் புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. எனவே போட்டி நடைபெறுவதில் சந்தேகம் நிலவுகிறது.

 

சென்னை நேரு மைதானத்தில் சென்னையின் எப்.சி. அணி இதுவரை 2 ஆட்டங்களில் விளையாடி யுள்ளது. இதில் முதல் ஆட்டத்தில் 2–1 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்சை தோற்கடித்தது. 2–வது ஆட்டத்தில் 5–1 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டியை வீழ்த்தியது.

எனவே சென்னை மைதானத்தில் உள்ளூர் அணியான சென்னையின் எப்.சி. தொடர்ந்து 3-வது வெற்றியை பதிவு செய்யும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதே நேரத்தில் கொல்கத்தா அணி இதுவரை தோல்வியே அடையாத அணியாக உள்ளது. எனவே இப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/article6561941.ece

  • தொடங்கியவர்

முதல் பக்கம்
‘டிரா’ செய்தது சென்னை! *கடைசி வரை ‘டென்ஷன்’
நவம்பர் 04, 2014.

 

சென்னை: சென்னை, கோல்கட்டா அணிகள் மோதிய பரபரப்பான ஐ.எஸ்.எல்., லீக் கால்பந்து லீக் போட்டி, 1–1 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது.

இந்தியாவில் முதல் ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடர் நடக்கிறது. இதில் நேற்று சென்னையில் நடந்த லீக் போட்டியில் சென்னை, கோல்கட்டா அணிகள் மோதின.

போட்டியின் 12வது நிமிடத்தில் சென்னை வீரர் மாரிட்ஸ் தலையால் அடித்த பந்து, கோல் போஸ்டுக்கு மேல் சென்றது.

கோல்கட்டா வீரர்கள் சென்னை அணியின் நட்சத்திர வீரர் எலானோவை தடுப்பதில் குறியாக இருந்தனர். போட்டியின் 35 வது நிமிடத்தில் எதிரணி வீரரை ‘பவுல்’ செய்த, சென்னை கோல் கீப்பர் ஷில்டன் பால், ‘ரெட் கார்டு’ பெற்று வெளியேறினார். இதனால் கிடைத்த ‘பெனால்டி’ வாய்ப்பில் லுாயிஸ் கார்சியா கோல் அடிக்க, 0–1 என, கோல்கட்டா அணி முன்னிலை பெற்றது.

 

இக்கட்டான நிலை:

ஷில்டன் வெளியேறியதால், சென்னை அணி 10 வீரர்களுடன் விளையாடும் நிலைக்குத் தள்ளப்பட்டது. இருப்பினும், துணிச்சலான போராட்டத்தை தொடர்ந்தது. எலானோ, மென்டி, மென்தோஜா போராடிய போதும் கோல் அடிக்க முடியவில்லை.

 

இரண்டாவது ‘எல்லோ’:

இரண்டாவது பாதி துவங்கிய 2வது நிமிடத்தில், இரண்டாவது முறையாக ‘எல்லோ கார்டு’ பெற்றார் கோல்கட்டாவின் ஜோப்ரீ. இதையடுத்து உடனடியாக ‘ரெட் கார்டு’ வாங்கி ஜோப்ரீ வெளியேற, இரு அணியும் தலா 10 வீரர்களுடன் விளையாடியது.

 

அதிகமான ‘பவுல்’:

ஆவேச ஆட்டத்தை தொடர்ந்த கோல்கட்டா வீரர்கள், அதிகமான ‘பவுல்’ (11) செய்தனர். போட்டியின் 84வது நிமிடத்தில் பல்வந்த் அடித்த பந்து, கோல் போஸ்டில் பட்டு திரும்ப, சென்னை அணி ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

 

கடைசி ‘திரில்’:

போட்டியின் ‘ஸ்டாப்பேஜ்’ நேரத்தில் (93வது நிமிடம்), சென்னை அணிக்கு ‘பெனால்டி’ வாய்ப்பு கிடைத்தது. இதை எலானோ கோலாக மாற்றினார். முடிவில், சென்னை அணி 1–1, என்ற கோல் கணக்கில், போட்டியை ‘டிரா’ செய்தது.

 

50வது கோல்

ஐ.எஸ்.எல்., துவங்கி முதல் 20 போட்டிகளில் 49 கோல்கள் அடிக்கப்பட்டு இருந்தன. நேற்று 21வது போட்டியில் கோல்கட்டா வீரர் கார்சியா அடித்த பந்து, இத்தொடரின் 50வது கோலாக அமைந்தது.

 

எலானோ ‘6’

ஐ.எஸ்.எல்., தொடரில் இதுவரை நடந்த போட்டிகளின் முடிவில், சென்னை வீரர் எலானோ (பிரேசில்), அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் (6 கோல்) உள்ளார். மும்பை வீரர் மோரிட்ஸ் (பிரேசில்) இரண்டாவது இடத்தை (3) பெற்றுள்ளார். இந்தியாவின் கோல்கட்டா வீரர் கெவின் லோபோ (2) உள்ளிட்ட 8 பேர் அடுத்த இடத்தில் உள்ளனர்.

 

http://sports.dinamalar.com/2014/11/1415119783/ElanoscoresChennaiyinFCATKkolkataISL.html

 

  • தொடங்கியவர்

கால்பந்து களத்தில் காதல் ஜோடி
நவம்பர் 03, 2014.

 

கோஹ்லி, அனுஷ்கா இணைந்து கால்பந்து போட்டியை கண்டு உற்சாகமாக களித்தனர். இருவரும் சேர்ந்து பொது இடத்தில் தோன்றியது இது தான் முதன் முறை.           

இந்திய அணியின் துணைக் கேப்டன் விராத் கோஹ்லி, 25. இவரும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் ‘ஷாம்பு’ விளம்பரம் ஒன்றில் இணைந்து நடித்தனர். பின் இருவருக்கும் இடையே நல்ல ‘நட்பு’ உருவானது. கோஹ்லி செல்லும் இடங்களுக்கு எல்லாம் அனுஷ்கா செல்வார். இங்கிலாந்து தொடரின் இருவரும் இணைந்து ஊர் சுற்றியதற்கு, நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், கோஹ்லியின் கிரிக்கெட் திறமை பாதிக்கப்பட்டதாக விமர்சனம் எழுந்தது.    

         

திடீர் அதிர்ச்சி: தற்போது நடக்கும் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் கோவா அணியின் சக உரிமையாளராக உள்ளார் கோஹ்லி. இவரது அணி கடந்த வாரம் புனே அணியை சந்தித்தது. அப்போது கோஹ்லி, தனது தோழி அனுஷ்காவுடன் சேர்ந்து வந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்தார்.           

இருவருக்கும் திருமணம் நடக்கவுள்ள செய்தியை மறுக்கிறார் அனுஷ்கா. ஆனால், கோஹ்லியுடன் சேர்ந்து போட்டியை பார்க்க வருகிறார். ஒன்னுமே புரியலையே.

 

http://sports.dinamalar.com/2014/11/1414995839/ViratKohliAnushkaISLFootball.html

2026 உலக கோப்பை இறுதிஆட்டம்.

 

இந்தியா எதிர் ஜெர்மனி  :icon_mrgreen:  சும்மா  நினைக்கவே புல்லரிக்குது .

 

நிச்சயமாக. உண்மை. Super

  • தொடங்கியவர்

ஐஎஎஸ்எல்: மும்பை வெற்றி
 

 

மும்பையில் நேற்று நடைபெற்ற இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் மும்பை சிட்டி அணி 1-0 என்ற கோல் கணக்கில் டெல்லி டைனமோஸ் அணியைத் தோற்கடித்தது.

மும்பையில் நேற்று நடை பெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதி ஆட்டத்தில் கோல் எதுவும் விழவில்லை. பின்னர் நடை பெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் 59-வது நிமிடத்தில் அற்புதமாக பந்தை முன்னோக்கி கடத்திய சுபாஷ், அதை அனெல்காவை நோக்கி கிராஸ் செய்தார். அதை சரியாகப் பயன்படுத்தி கோலடித்தார் அனெல்கா.

இந்த ஆட்டத்தில் வெற்றி கண்டதன் மூலம் 9 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேறியது மும்பை. கொச்சியில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியும், கோவா எப்.சி. அணியும் மோதுகின்றன.
 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/article6570134.ece

 

  • தொடங்கியவர்

ரசிகர்களைக் கவர்ந்த சென்னை ஸ்டார்ஸ்!

 

சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) போட்டியின் வருகையால் இந்திய ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடிக்க ஆரம்பித்திருக்கிறது கால்பந்து. அதுவும் குறிப்பாக சென்னையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஐஎஸ்எல் போட்டியைக் காண நேரு மைதானத்தை நோக்கி படையெடுத்திருக்கிறார்கள். சென்னையில் நடைபெற்ற கடந்த 3 போட்டிகளுமே ரசிகர்களுக்கு விருந்து படைப்பதாக அமைந்தன.

 

இந்தியன்

தீபாவளிக்கு முந்தைய நாள் சென்னையில் நடைபெற்ற சென்னையின் எப்.சி.-கேரளா அணிகளுக்கு இடையிலான போட்டி, சென்னையைச் சேர்ந்த கால்பந்து காதலர்களுக்கு இரட்டை தீபாவளியைக் கொண்டாடியது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தியது. ஒருவாரம் கனமழையில் நனைந்த ரசிகர்கள், சென்னையில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தின்போது கோல் மழையில் நனைந்தார்கள். சென்னை அணி 5-1 என்ற கோல் கணக்கில் மும்பையை பந்தாடியது. கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அட்லெடிகோ டி கொல்கத்தாவுக்கு எதிராக கடைசி நிமிடத்தில் இலானோ கோலடிக்க டிராவில் முடிந்தது த்ரில் ஆட்டம். அப்போது இருக்கையின் நுனிக்கே வந்து போட்டியைப் பார்த்த ரசிகர்கள், தோல்வியிலிருந்து தப்பிய மகிழ்ச்சியில் சென்னை வீரர்களுக்கு வாழ்த்து சொல்லி விடை பெற்றார்கள்.

 

போட்டிக்கு போட்டி சென்னை அணியின் ஆட்டம் விறுவிறுப்பை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த விறுவிறுப்புக்கு சென்னை அணியின் நடுகள வீரர் இலானோ புளூமர், பின்கள வீரர் பெர்னாட் மென்டி, முன்கள வீரர் ஜான் ஸ்டீவன் மென்டோஸா ஆகியோரின் ஆட்டம் ஒருபுறம் பலம் சேர்த்தால், பயிற்சியாளர் மற்றும் வீரரான மார்கோ மெட்டாரஸியின் மிக நுட்பமான புத்திக்கூர்மை மறுபுறம் வலு சேர்க்கிறது. 3 போட்டிகளிலேயே இவர்களுக்கென்று சென்னையில் தனி ரசிகர் பட்டாளமே உருவாகி யிருக்கிறது.

 

புத்திசாலி மெட்டாரஸி

சென்னையில் நடைபெறும் சென்னை லீக் உள்ளிட்ட அனைத்து விதமான போட்டிகளையும் தவறாமல் நேரில் வந்து பார்ப்பவர் நாசர். சக ரசிகர்களால் கால்பந்து காதலன் என்றழைக்கப்படும் அவர் தனக்குப் பிடித்த வீரர்கள் பற்றி கூறியதாவது:

கடைசி நேரத்தில் வீரர்களை தேர்வு செய்து பயிற்சியளித்து அவர் களை பார்முக்கு கொண்டு வருவது எளிதல்ல. ஆனால் சென்னை அணி அதில் வெற்றி கண்டிருக்கிறது. அனைவரும் எதிர்பார்த்ததைவிட மிக அற்புதமாக ஆடி வருகிறது சென்னை. கேரளா, கொல்கத்தா, நார்த் ஈஸ்ட் அணிகள் மீது எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் சென்னை அணி கேரளாவை வீழ்த்தியதோடு, கொல்கத்தாவுக்கு எதிராக டிரா செய்திருக்கிறது.

 

சென்னையின் வெற்றியில் முக்கிய அங்கம் வகிப்பது மெட்டாரஸி, இலானோ, மென்டி, மென்டோஸா ஆகிய நால்வர் தான். மெட்டாரஸியை எடுத்துக் கொண்டால் அவர் எல்லா போட்டி களிலும் களமிறங்குவதில்லை. எதிரணிகளின் பலம், பலவீனத்தை அறிந்து தேவையான போட்டிகளில் மட்டுமே களமிறங்குகிறார். உதாரணமாக மும்பை அணியில் அனெல்கா இறங்கியதாலும், கொல்கத்தா அணியில் லூயிஸ் கிரேஸியா விளையாடியதாலும் மெட்டாரஸி ஆடினார்.

 

இளமை இலானோ

பிரேசில் வீரர்களுக்கே உரிய ரசிகர்களை மகிழ்விக்கும் தரமான ஆட்டத்தை இலானோவிடம் பார்க்க முடிகிறது. அதுமட்டுமின்றி மார்க்கீ வீரர்களில் (மார்க்கீ வீரர் என்பவர் கண்டங்கள் அளவிலான சாம்பியன்ஷிப்பில் விளையாடிய வெளிநாட்டவர்) இலானோதான் இளமையான வீரர். நடுகள வீரரான இவர் அணியின் மையமாக செயல் படுகிறார். பின்கள வீரர்களுக்கும், முன்கள வீரர்களுக்கும் இடையே பந்துகளை வாங்கி அற்புதமாக பரிமாற்றம் செய்கிறார்.

இதேபோல் முன்கள வீரர்களுக்கு ஏராளமான கோல் வாய்ப்புகளை உருவாக்குகிறார். பெனால்டி கிக், ப்ரீ ஹிக், கார்னர் வாய்ப்புகளில் மிகத்துல்லியமாக செயல்பட்டு அற்புதமாக கோலடிக்கிறார். எனக்கு தெரிந்து அவரிடம் இருக்கும் ஒரே பிரச்சினை

‘மூவிங் பந்துகளில்’ கோலடிக்க தடுமாறுவதுதான். மற்ற படி அவர் உலகத்தரம் வாய்ந்த வீரர். அட்லெடிகோவுக்கு எதிராக கடைசி நிமிடத்தில் கடும் நெருக்கடிக்கு மத்தியிலும்கூட பதற்றமின்றி கோலடித்தார் இலானோ.

 

பின்கள பீமர்

சென்னை அணியின் வலுவான பின்களத்துக்கு பலம் சேர்ப்பதில் மென்டியின் பங்கு அளப்பரியது. அவர் பின்கள வீரராக மட்டுமின்றி, தேவைப்படுகிற நேரங்களில் முன்னேறி சென்று முன்கள வீரர்களுக்கு நிகராகவும் ஆடுகிறார். கேரளாவுக்கு எதிராக மென்டி அடித்த பை சைக்கிள் கோலை வீரர்கள் மட்டுமல்ல, ரசிகர்களும் அவ்வளவு எளிதாக மறந்துவிடமுடியாது. அப்போது கேரளா அணியின் கோல் கீப்பராக களத்தில் நின்ற முன்னாள் இங்கிலாந்து கோல் கீப்பரான டேவிட் பெஞ்சமினே வியந்து போனார். சென்னை அணியின் மிகப்பெரிய பலமாகத் திகழ்கிறார் மென்டி.

 

துருதுரு மென்டோஸா

மென்டோஸா எப்போதுமே மிகவும் சுறுசுறுப்பாக துருதுரு வென செயல்படுவது எல்லோரை யும் கவர்ந்திழுக்கிறது. ஒரு ஸ்டிரைக் கரின் உச்சபட்ச இலக்கு கோலடிப் பதுதான். அதை மிகத்துல்லியமாக செய்து முடிக்கிறார் மென்டோஸா. எதிரணியினருக்கு கடும் சவாலாகத் திகழ்கிறார். அட்லெடிகோவுக்கு எதிராக கிடைத்த பெனால்டி வாய்ப்பு கூட அவரால்தான் கிடைத்தது.

வெளிநாட்டு வீரர்கள் இந்திய வீரர்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள். சென்னை அணி ஒரு குடும்பம் போன்று இருக்கிறது. ஆனால் மற்ற அணிகளில் அதைப் பார்க்க முடிவதில்லை. வரும் 8-ம் தேதிக்குப் பிறகு எதிரணிகளை அதன் சொந்த மண்ணில் சென்னை அணி சந்திக்கவுள்ளது. அந்தப் போட்டிகளிலும் இதேபோன்று செயல்பட்டால் சென்னை சாம்பிய னாக வாய்ப்பிருக்கிறது என்றார்.

 

மதராஸியான மெட்டாரஸி

கடந்த 20 வருடங்களாக நேரு மைதானத்தில் நடைபெறும் கால்பந்து போட்டிகளை பார்த்து வரும் சென்னை கொளத்தூரைச் சேர்ந்த தினேஷ் கூறுகையில், “என்னைப் பொறுத்தவரை இலானோவுக்குதான் முதலிடம். அடுத்த 3 இடங்களை முறையே மென்டி, மென்டோஸா, மெட்டாரஸிக்கு கொடுக்கலாம். மெட்டாரஸியை இப்போது நாங்கள் மதராஸியாக (சென்னைக்காரர்) பார்க்கும் அளவுக்கு எங்கள் மனதில் இடம்பிடித்துவிட்டார்.

சென்னை வீரர்களின் ஆட்டத்தைப் பார்த்து நாங்கள் அடைந்த மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் போதாது. கடந்த 20 வருடங்களில் இப்படியொரு கூட்டத்தை நேரு மைதானத்தில் பார்த்ததில்லை. ரசிகர்கள் படை யெடுப்பதை பார்க்கும்போது சென்னையில் இப்போதும் கால்பந்துக்கு மவுசு இருக்கிறது என்பதை உணரமுடிகிறது. எனது நண்பர்களில் பெரும்பாலானோர் கிரிக்கெட் ரசிகர்கள். ஆனால் இப்போது அவர்கள்கூட ஐஎஸ்எல் போட்டிக்கு வர ஆரம்பித்துவி ட்டார்கள்” என்றார்.

 

கால்பந்தின் தரம் உயரும்

சென்னையில் உள்ள மெட்ராஸ் கிறிஸ்தவக் கல்லூரி மாணவரும், தீவிர கால்பந்து ரசிகருமான விமல் கூறுகையில், “கால்பந்து தொடர்பான இலானோவின் புத்திக்கூர்மை அபாரமானது. அதுதான் சென்னை ரசிகர்களை கட்டிப்போட்டிருக்கிறது. அதே நேரத்தில் இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் ஆடிய அளவுக்கு தரமான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தவில்லை. அதற்கு வயது ஒரு காரணமாக இருக்கலாம்.

 

மென்டோஸா, கொலம்பி யாவின் முன்னணி ஸ்டிரைக்கரான ரோட்ரிகஸுடன் ஆடிய அனுபவம் பெற்றவர். அவர் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளை தவறவிடுவதில்லை. மெட்டாரஸியின் அனுபவ ஆட்டம் எல்லோரையும் கவர்ந்திருக் கிறது. அதேநேரத்தில் இடை வேளையின்போது தோனி, அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் போன்றோர் மைதானத்தில் வலம் வருவதை என்னைப் போன்ற கால்பந்து ரசிகர்கள் விரும்புவ தில்லை. ஆனாலும் இங்கே கால்பந்துக்கு புத்துயிர் கொடுக்க அவர்களின் வருகை தேவையான ஒன்றுதான். ஐஎஸ்எல் போட்டியால் இந்திய கால்பந்தின் தரம் உயரும் என நம்புகிறேன்” என்றார்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/article6570015.ece

  • தொடங்கியவர்

கேரளாவுக்கு 2-வது வெற்றி
 

 

கொச்சியில் நேற்று நடைபெற்ற இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் கேரள பிளாஸ்டர்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் கோவா எப்.சி. அணியைத் தோற்கடித்தது. இதன்மூலம் 2-வது வெற்றியைப் பதிவு செய்துள்ள கேரள அணி 7 புள்ளிகளுடன், புள்ளிகள் பட்டியலில் 7-வது இடத்தில் இருந்து 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிந்த நிலையில் 2-வது பாதி ஆட்டத்தின் 64-வது நிமிடத்தில் கேரளத்தின் மிலாகிரேஸ் கோலடிக்க, அந்த அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இதன்பிறகு இரு அணிகளுக்கும் கோல் கிடைக்காத நிலையில் கேரள அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-2%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/article6573482.ece

  • தொடங்கியவர்

கோல்கட்டா அணி முதல் தோல்வி
நவம்பர் 07, 2014.

கோல்கட்டா: ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரில் கோல்கட்டா அணி முதல் தோல்வியை சந்தித்தது. நேற்று நடந்த லீக் போட்டியில் புனேயிடம் வீழ்ந்தது.

முதலாவது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடர் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. கோல்கட்டாவில் நேற்று நடந்த லீக் போட்டியில் புனே, கோல்கட்டா அணிகள் மோதின. ஆட்டத்தின் 35வது நிமிடத்தில் புனே அணியின் ஒமாக்பெமி (நைஜீரியா) தலையால் முட்டி ஒரு கோல் அடித்தார். முதல் பாதியில் 1–0 என புனே அணி முன்னிலை பெற்றது. விறுவிறுப்பாக நடந்த இரண்டாவது பாதியில் புனே அணிக்கு (55வது நிமிடம்) கோஸ்டாஸ் (கிரீஸ்) ஒரு கோல் அடித்து அசத்தினார். இந்த இக்கட்டான நேரத்தில் கோல்கட்டா அணிக்கு 83வது நிமிடத்தில் ‘பெனால்டி கிக்’ வாய்ப்பு கிடைத்தது. இதை சிறப்பாக பயன்படுத்திய பிகுரு (எத்தியோப்பியா) கோலாக மாற்றினார். புனே அணிக்கு (89வது நிமிடம்) கடைசி கட்டத்தில் கிடைத்த ‘ பிரீ கிக்’ வாய்ப்பை டேவிடே (இத்தாலி) கோலாக மாற்ற, அரங்கம் அதிர்ந்தது. முடிவில், கோல்கட்டா அணி 1–3 என தோல்வியடைந்தது.

இதுவரை 7 போட்டிகளில் பங்கேற்றுள்ள கோல்கட்டா அணி 3 வெற்றி, 3 ‘டிரா’, ஒரு தோல்வியை பெற்றுள்ளது.

 

http://sports.dinamalar.com/2014/11/1415378475/Dudusoccer.html

  • தொடங்கியவர்

மீண்டும் அசத்துமா சென்னை
நவம்பர் 07, 2014.

 

சென்னை: ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் இன்று சென்னை, வடகிழக்கு அணிகள் மோதுகின்றன

முதல் இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து (ஐ.எஸ்.எல்.,) தொடர் இந்தியாவில் நடக்கிறது. இன்று சென்னையில் நடக்கும் 25வது லீக் போட்டியில் சென்னை அணி, வடகிழக்கு யுனைடெட் அணியை சந்திக்கிறது.

சென்னை அணியை பொறுத்தவரையில் பங்கேற்ற 5 போட்டிகளில் 3 வெற்றி, ஒரு ‘டிரா’ செய்தது. டில்லிக்கு எதிராக மட்டும் வீழ்ந்தது.

இத்தொடரில் இதுவரை 11 கோல்கள் அடித்து, சென்னை அணி மிரட்டுகிறது. அணியின் நட்சத்திர வீரர் எலானோ புளூமெர் மட்டும் 6 கோல்கள் அடித்து, அசத்தல் ‘பார்மில்’ உள்ளார். பந்துகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது (49.2 சதவீதம்), சக வீரர்களிடம் பந்தை ‘பாஸ்’ செய்வதில் சிறப்பாக செயல்படவில்லை என்ற போதும், கோல் அடிப்பதில் சாதிக்கின்றனர்.

 

மாட்டராசி பலம்:

தற்காப்பு வீரர் பெர்னார்டு மெண்டி, முன்கள தாக்குதல் வீரர்கள் மென்தோஜா நம்பிக்கை தருகின்றனர். இந்தியாவின் ஜீஜே, கவுர்மங்கி, பல்வந்த் சிங்கும் கைகொடுக்கின்றனர்.

இவர்களுடன் பயிற்சியாளர் மட்டும் வீரராக களமிறங்கும் ‘சீனியர்’ மாட்டராசி இருப்பது கூடுதல் பலம். கடந்த போட்டியில் ‘ரெட் கார்டு’ பெற்ற முன்னணி கோல் கீப்பர் ஷில்டன் பால் இல்லாதது இழப்பு தான்.

தொடரின் துவக்கத்தில் மிக வலுவான அணியாக கருதப்பட்டது வடகிழக்கு யுனைடெட். இதற்கேற்ப முதல் போட்டியில் கேரளாவை வென்றது. அடுத்தடுத்த போட்டிகளில் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத் தவறி விட்டது.

பங்கேற்ற 6 போட்டிகளில் தலா 2 வெற்றி, தோல்வி மற்றும் ‘டிரா’ செய்தது.நட்சத்திர வீரர் கேப்டெவில்லா, கேப்டன் கார்சியா இன்னும் கோல் கணக்கைத் துவங்கவில்லை.  கொக்கே (2 கோல்) முதல் இரு போட்டிக்குப் பின் சோபிக்கவில்லை.

கடந்த போட்டியில் கோல்கட்டாவுக்கு எதிராக கடைசி நேரத்தில் கோல் அடித்து ‘டிரா’ செய்த சென்னை அணி, இன்றும் அசத்த வாய்ப்பு உள்ளது.

 

http://sports.dinamalar.com/2014/11/1415379053/Elanosoccer.html

  • தொடங்கியவர்

அட்லெடிகோவுக்கு அதிர்ச்சியளித்தது புனே
 

 

கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் புனே சிட்டி அணி 3-1 என்ற கோல் கணக்கில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணியைத் தோற்கடித்தது.

இந்த ஆட்டத்துக்கு முன்பு வரை தோல்வியை சந்திக்காத வலுவான அணியான அட்லெடிகொ தனது சொந்த மண்ணில் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் 10 புள்ளிகளை எட்டிய புனே அணி, புள்ளிகள் பட்டியலில் 6-வது இடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு முன்னேறியது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 35-வது நிமிடத்தில் கோல் கம்பத்தின் இடதுபுறத்தில் இருந்த புனேவின் டேவிட்டிடம் பந்து செல்ல, அவர் அதை மிக அழகாக கோல் கம்பத்தை நோக்கி கிராஸ் செய்தார். அப்போது அட்லெடிகோ பின்கள வீரர்களை பின்னுக்கு தள்ளி முன்னேறிய டூடூ தலையால் முட்டி கோலடித்தார். இதனால் புனே அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற, கொல்கத்தா ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

 

பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் 55-வது நிமிடத்தில் புனே மிட்பீல்டர் டேவிட் கொடுத்த பாஸை மைதானத்தின் நடுப்பகுதியில் வைத்து வாங்கிய மற்றொரு மிட்பீல்டர் கான்ஸ்டான்டினோஸ் கட்சூரனிஸ் வேகமாக முன்னோக்கி எடுத்துச் சென்றார். 18 யார்ட் பாக்ஸை நெருங்கிய அவர் அங்கிருந்தபடியே மிகத்துல்லியமாக கோலடிக்க, புனே 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

84-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பின் மூலம் அட்லெடிகோவின் ஃபிக்ரு கோலடிக்க, 89-வது நிமிடத்தில் கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பில் கோலடித்து பதிலடி கொடுத்தார் புனேவிட் டேவிட்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%87/article6576154.ece

 

 

  • தொடங்கியவர்

சென்னை அணி மீண்டும் ‘டிரா’
நவம்பர் 08, 2014.

 

சென்னை: சென்னை, வடகிழக்கு யுனைடெட் அணிகள் மோதிய ஐ.எஸ்.எல்., லீக் கால்பந்து லீக் போட்டி, 2–2 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது.

இந்தியாவில் முதல் ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடர் நடக்கிறது. இத்தொடரின் 25 வது லீக் போட்டி நேற்று சென்னையில் நடந்தது.  இதில் சென்னை அணி, வடகிழக்கு யுனைடெட் அணியை சந்தித்தது.

முன்களத்தில் வாலன்சியா, எலானோ, ஜீஜே கூட்டணியுடன் களமிறங்கியது சென்னை. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவும் சேர்ந்து கொள்ள, தாக்குதல் ஆட்டத்தில் கவனம் செலுத்தினர். போட்டியின் 25 நிமிடத்தில், டென்சன் அடித்த பந்தை, எலானோ தலையால் முட்டி வலைக்குள் தள்ள, சென்னை அணி 1–0 என, முன்னிலை பெற்றது.

 

உடனே அதிர்ச்சி:

இந்த மிதப்பில் தற்காப்பு ஏரியாவில் கோட்டை விட்டது சென்னை. வாய்ப்பை பயன்படுத்திய வடகிழக்கு வீரர் லென், 38 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து அதிர்ச்சி கொடுத்தார். முதல் பாதியின் முடிவில் ஸ்கோர் 1–1 என, சமனில் இருந்தது.

 

எலானோ ‘2’:

இரண்டாவது பாதியில் 56, 59 வது நிமிடங்களில் கிடைத்த வாய்ப்புகளை சென்னை வீரர்கள் வீணடித்தனர். இருப்பினும், 78 வது நிமிடத்தில் எலானோ, சென்னை அணிக்கு இரண்டாவது கோல் அடித்து அசத்தினார்.

இம்மகிழ்ச்சி சிறிது நேரம் கூட நீடிக்கவில்லை. 85வது நிமிடம் கொக்கே ஒரு கோல் அடித்தார். முடிவில், 2–2 என்ற கோல் கணக்கில் போட்டி ‘டிரா’ ஆனது.

 

எலானோ ‘டாப்’

ஐ.எஸ்.எல்., தொடரில் இதுவரை 25 லீக் போட்டிகள் முடிந்துள்ளன. இதில் சென்னை வீரர் எலானோ (பிரேசில்), அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் (8 கோல்) உள்ளார். பிக்ரு (கோல்கட்டா), மோரிட்ஸ் (மும்பை), கொக்கே (வடகிழக்கு) என, மூவரும் தலா 3 கோல் அடித்து  இரண்டாவது இடத்தில் உள்ளனர்.

 

ஆக்ரோஷ மோதல்

நேற்று இரண்டாவது பாதியில் பந்தை கொண்டு செல்ல முயன்ற பெலிப், எலானோ இடையே மோதல் ஏற்பட்டது. மாட்டராசி இடையில் புகுந்து எலானோவை சமாதானம் செய்தார். இந்த பிரச்னையில், எலானோவுக்கு ‘எல்லோ கார்டு’ காட்டப்பட்டது.

 

http://sports.dinamalar.com/2014/11/1415465768/ChennaiNorthEastdrawISL.html

 

  • தொடங்கியவர்

ஐஎஸ்எல் கால்பந்து: டிராவில் முடிந்தது சென்னை - நார்த் ஈஸ்ட் ஆட்டம் - 2-வது இடத்தில் தொடர்கிறது சென்னை அணி
 

 

சென்னையில் நேற்று நடைபெற்ற இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி. - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் இடையிலான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் ஆரம்பம் முதலே தாக்குதல் ஆட்டத்தில் இறங்கின. வழக்கம் போல் இந்த ஆட்டத்திலும் சென்னை யின் நட்சத்திர வீரரான இலானோ அசத்தலாக ஆடினார். 16-வது நிமிடத்தில் மிக அற்புதமாக கோல் கம்பத்தின் அருகே பந்தை கடத்தி சென்ற இலானோவின் கோல் முயற்சியை நார்த் ஈஸ்ட் கோல் கீப்பர் ரெஹனேஷ் முறியடித்தார்.

 

இதன்பிறகு 25-வது நிமிடத் தில் இடது மூலையில் இருந்து மிக துல்லியமாக கோல் கம்பத்தை நோக்கி கிராஸ் செய்தார் சென்னை யின் டென்சன் தேவதாஸ். அப்போது பெனால்டி ஏரியாவுக் குள் நின்ற இலானோ, நார்த் ஈஸ்டின் இரு பின்கள வீரர்களையும் தாண்டி ஒரு ஜம்ப் செய்து பந்தை தலையால் முட்டி கோலடித்து சென்னை அணியை 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற வைத்தார். ஆனால் அடுத்த 13-வது நிமிடத்தில் (38-வது நிமிடம்) சென்னைக்கு பதிலடி கொடுத்தது நார்த் ஈஸ்ட். ஜேம்ஸ் கீன் கொடுத்த கிராஸில் சீமென்லென் இந்த கோலை அடித்தார்.

 

பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் 77-வது நிமிடம் வரை சமநிலை நீடிக்க, 78-வது நிமிடசத்தில் தனது 2-வது கோலை அடித்து சென்னையை முன்னிலை பெற செய்தார் இலானோ. இதன்பிறகு ஆட்டம் தீவிரமடைய அதன் உச்சகட்டமாக 84-வது நிமிடத்தில் இலானோவுக்கும், நார்த் ஈஸ்ட் மிட் பீல்டர் ஃபெலிப்புக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து இலானோ மஞ்சள் அட்டையால் எச்சரிக்கப்பட்டார். இந்த நிலையில் 85-வது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் முன்கள வீரர் கோகே மிக அழகான வாலி கோலை அடித்து தனது அணியை தோல்வியிலிருந்து மீட்க, போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

ஆட்டம் டிராவில் முடிந்தாலும் சென்னை அணி 11 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் தொடர்ந்து 2-வது இடத்திலேயே உள்ளது.

http://tamil.thehindu.com/sports/ஐஎஸ்எல்-கால்பந்து-டிராவில்-முடிந்தது-சென்னை-நார்த்-ஈஸ்ட்-ஆட்டம்-2வது-இடத்தில்-தொடர்கிறது-சென்னை-அணி/article658031

 

  • தொடங்கியவர்

ஐஎஸ்எல்: இரு ஆட்டங்களும் டிரா
 

 

கொச்சியில் நேற்று நடைபெற்ற இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ்-டெல்லி டைனமோஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கோலின்றி டிராவில் முடிந்தது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் கடுமையாகப் போராடியபோதும் கோல் எதுவும் விழாதது ஏமாற்றமாக அமைந்தது. முன்னதாக கோவா மாநிலம் ஃபட்ரோடாவில் நடைபெற்ற கோவா எப்.சி.-மும்பை சிட்டி அணிகளுக்கு இடையிலான ஆட்டமும் கோலின்றி டிராவில் முடிந்தது. நேற்று இரு நடைபெற்ற ஆட்டங்களுமே டிராவில் முடிந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

 

இன்று போட்டி எதும் கிடையாது. புனேவில் நாளை இரவு 7 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் புனே எப்.சி. அணியும், சென்னையின் எப்.சி. அணியும் மோதுகின்றன.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%90%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE/article6582540.ece

  • தொடங்கியவர்

தோனிக்கு அடுத்து எலானோ
நவம்பர் 09, 2014.

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடரில், அதிக கோல் அடித்த வீரர்களில் முதலிடத்தில் உள்ள சென்னை வீரர் எலானோ, தோனிக்கு அடுத்து தமிழக ரசிகர்களின் செல்லப்பிள்ளையாகி உள்ளார்.

ஐ.பி.எல்., கிரிக்கெட் துவங்கியது முதல் சென்னை அணிக்கு கேப்டனாக இருப்பவர் தோனி. தொடர்ந்து அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தி, இங்குள்ள ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பெற்றுள்ளார்.

 

இவர், ஐ.எஸ்.எல்., தொடரில் சென்னை அணியின் சக உரிமையாளரானதும், சென்னைக்கும் தோனிக்கும் பாசப் பிணைப்பு அதிகமானது. பிரேசிலைச் சேர்ந்த எலானோ புளூமெர், 33, சென்னை அணியின் நட்சத்திர வீரராக சேர்க்கப்பட்டார். ‘பிரீ–கிக்’ அடிப்பதில் வல்லவரான இவர், கோவா அணிக்கு எதிராக முதல் கோல் அடித்தார்.

தொடர்ந்து கேரளா (1), டில்லி (1), மும்பை (2) மற்றும் கோல்கட்டா (1) அணிகள் என, அனைத்து போட்டியிலும் கோல் அடுத்து அசத்தினார் எலானோ. அதிக கோல்(6) அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

 

இவரது, ‘சூப்பர்’ ஆட்டம் கைகொடுக்க, சென்னை அணி புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து‘டாப்–3’க்குள் தொடர்கிறது.

தனது சிறப்பான ஆட்டத்திறனால், தோனியைப் போல, இவரும் தமிழக ரசிகர்கள் மத்தியில் ‘ஹீரோ’ அந்தஸ்து பெற்றுள்ளதார்.

 

இதுகுறித்து எலானோ கூறியது:

சென்னை அணியின் வெற்றிக்கு கைகொடுப்பது மகிழ்ச்சி தருகிறது. இன்னும் நீண்ட துார பயணம் மீதம் உள்ளது. எதிர்வரும் போட்டிகளிலும் எனது அசத்தல் ஆட்டத்தை தொடர்வேன் என்ற நம்புகிறேன்.

இத்தொடரில் இத்தாலி அணியின் முன்னாள் வீரர் மாட்டராசியை சந்தித்தது உற்சாகம் தந்தது. சென்னை அணி சிறப்பான ஆட்டத்தை தொடர்வதற்கு இவருடன் இணைந்து செயல்படுவது தான் முக்கிய காரணம்.

இவ்வாறு எலானோ கூறினார்.

 

மகள்கள் மீது பாசம்

ஐ.எஸ்.எல்., தொடர் குறித்து கூறுகையில்,‘‘ இத்தொடரில் ஒப்பந்தம் ஆகும் முன், எனது மனைவி மற்றும் குடும்பத்தினரிடம் கலந்து ஆலோசித்தேன். அவர்களும் அனுமதி கொடுத்தனர். இருப்பினும், எனது இரு மகள்களை (8, 5 வயது) பிரிந்து நீண்ட துாரத்தில் இருப்பது தான் வருத்தமாக உள்ளது. இப்போது அவர்கள் பள்ளிக்கு செல்வதால், இங்கு வர முடியவில்லை,’’ என்றார்.

 

http://sports.dinamalar.com/2014/11/1415521795/Elanosoccer.html

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.