Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நகைகளை மீளளிப்பதாக கூறி ஏமாற்றிய ஜனாதிபதி மஹிந்த!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
நகைகளை மீளளிப்பதாக கூறி ஏமாற்றிய ஜனாதிபதி மஹிந்த! 
[Monday 2014-10-13 09:00]
mahinda-kilinochi-150-news.jpg
தமிழீழ வைப்பகத்தில் நகைகளை அடகு வைத்த 2352 பேருக்கு அவர்களது தங்கத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கிளிநொச்சில் வைத்து மீளளிப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது ஆயினும் நேற்று கிளிநொச்சிக்கு வந்த ஜனாதிபதி வெறும் 25 பேருக்கு மாத்திரமே அவற்றை மீளளித்தார். இதனால் தாங்கள் அடகு வைத்த நகைகள் மீள கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் காலை முதல் கால் கடுக்க காத்திருந்த 2352 பேர் ஏமாற்றத்தோடு திரும்பி சென்றனர். எனினும் இவர்களுக்கான நகைகளை அவர்களுக்கு உரிய இராணுவ சிவில் அலுவலகங்களில் ஒட்டப்பட்ட பெயர் விபரம் உறுதிப்படுத்தப்பட்டத்தை அடுத்து விரைவில் வழங்குவோம் என்று அரசு அறிவித்துள்ளது.
   
அதேவேளை, புலிகளிடம் நகைகளை அடகுவைத்த 2352 பேர் தமது நகைகளை நேற்று மீளப் பெற்றுக் கொண்டதாக தினகரன் உள்ளிட்ட அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால், எஞ்சியோருக்கு நகைகள் திரும்பக் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.http://www.seithy.com/breifNews.php?newsID=118586&category=TamilNews&language=tamil

புலிகளிடம் அள்ளிய நகைகளில் கிள்ளிக் கொடுத்த ஜனாதிபதி மகிந்த!

 

விடுதலைப் புலிகள் நிர்வாகத்தில் இருந்த வங்கியில் மக்களால் அடகு வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளில் உரிமையாளர் சிலரிடம் ஒப்படைத்துள்ளார்.

 

ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ வடபகுதிக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்ட நிலையில், 25 உரிமையாளர்களிடம் இவ்வாறு குறித்த நகைகள் மீளளிக்கப்பட்டுள்ளன.

 

தமிழீழ விடுதலைப் புலிகள் கிளிநொச்சியைத் தலைநகராகக் கொண்டு நடத்திய நிர்வாகத்தில் வங்கிகளையும் இயக்கி இருந்தனர். அரச வங்கிகளைப் போன்று சேமிப்பு, தங்க நகை அடகு வைத்தல், கடன் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.

 

புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் அடகு வைத்திருந்த நகைகள் இறுதி யுத்தத்தின்போது இராணுவத்தினரால் மீட்கப்பட்டிருந்தன.

 

ஆயிரக்கணக்கான கிலோ தங்கம் மீட்கப்பட்டிருந்ததாக இராணுவத் தகவல்களின் அடிப்படையில் எதிர்க்கட்சிகள் கூறியிருந்தன.

 

ஆயினும், அந்த தங்க நகைகள் பற்றிய விபரங்கள் எதனையும் அரசாங்கம் இதுவரை வெளிப்படுத்தவில்லை. இந்த நிலையிலேயே, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ? விடுதலைப்புலிகளிடம் இருந்து மீட்கப்பட்ட தங்க நகைகளை ஐந்து ஆண்டுகளின் பின்னர் உரியவர்களிடம் வழங்குவதாகக் குறிப்பிட்டு, 25 பேருக்கு மட்டும் தங்க நகைகளை வழங்கியுள்ளார். எனினும் அவற்றின் பெறுமதி மற்றியோ, அளவீடு பற்றியோ தகவல்களை வெளியிடவில்லை.

http://www.tamil.srilankamirror.com/news/2594-2014-10-13-05-49-19

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.