Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்தவிற்கு கட்சிக்குள் தலையிடி நாளுக்கு நாள் அதிகரிக்கிறது!

Featured Replies

ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவிற்கு சிங்கள மக்கள் மத்தியிலுள்ள மதிப்பு குறையத்தொடங்கியுள்ள தருணத்தில், ஜனாதிபதித் தேர்தலுக்குச் செல்வது பொருத்தமானதாக இருக்காது என ஏராளமான ஆளும் கட்சி உறுப்பினர்கள் கருதுகின்றனர்.

அத்துடன், நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை இரத்துச் செய்து நாடாளுமன்றத்திற்கு அதிகாரத்தை வழங்கும் அரசியலமைப்பு மாற்றத்தை ஏற்படுத்தாவிடின், அரசாங்கத்திலிருந்து விலகப் போவதாக சில அமைச்சர்கள் அச்சுறுத்தி வருகின்றனர்.

ஆளும் கட்சிக்குள் மாற்றுக் கருத்துக் கொண்டுள்ள அமைச்சர்களின் எண்ணிக்கை 40ஐத் தாண்டியுள்ளதாக அரசாங்கத்தின் தற்போதைய உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மாற்றுக் குழுவினர் அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதைத் தடுக்க முடியாத அளவிற்கு நிலைமை மாற்றமடையக்கூடும் எனவும் உட்கட்சி பூசல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை வருமாறு புனித பாப்பரசரை அழைப்பதற்காக வத்திக்கான் செல்வதற்கு முன்னைய நாள் இரவு, அமைச்சர் டியூ குணசேகர, திஸ்ஸ விதாரண, வாசுதேவ நாணயக்கார ஆகிய அமைச்சர்களுடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ விரிவான கலுந்துரையாடல்களை நடத்தியிருந்தார். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்‌ஷ வெற்றிகொள்வது இலகுவான விடயமல்ல என புள்ளிவிபரங்களுடன் அமைச்சர் டியூ குணேசேகர ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலை நடத்தாது, நாடாளுமன்றத்திற்கு அதிகாரத்தை வழங்கும் வகையில் அரசியலமைப்பில் மாற்றம் செய்து, நாடாளுமன்றத் தேர்தலை நடத்துமாறு இதன்போது ஜனாதிபதிக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், கட்சி அங்கத்தவர்களுடன் கலந்தாலோசிக்காமல் அவசரமாக ஜனாதிபதித் தேர்தல் ஒன்றை நடத்துவதன் எதிர்பார்ப்பு என்ன என்று ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதமொன்றில் கேள்வியெழுப்பியுள்ளார்.

அத்துடன், கருத்து முரண்பாடுகளை பேச்சுக்களை நடத்தி தீர்த்துக்கொள்ளுமாறு ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் ஜாதிக் ஹெல உறுமயவிடம் ஆளும் கட்சியின் உயர்மட்டத்தின் கோரியுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரெலியே ரத்தனதேரரைச் சந்தித்த அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவும், அமைச்சர் டளஸ் அழகப்பெருமவும் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

அரசாங்கத்தைப் பாதுகாத்துக் கொள்ள இதுவரை மனசாட்சிக்கு விரோதமாகவும் சில பணிகளுக்கும் கட்சி ஆதரவளித்துள்ளதாகவும், எனினும், தொடர்ந்தும் தம்மை ஏமாற்ற முடியாது என்றும், கோரப்பட்டுள்ள மாற்றங்களை செய்யாவிடின், அரசாங்கத்திலிருந்து வெளியேறுவது உறுதி என்றும் ரத்தனதேரர் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷவிடம் உறுதியாகக் கூறியுள்ளார்.

அத்துடன், ஜனாதிபதியின் ஆலோசகர்களில் ஒருவரும், வெளிவிவகார அமைச்சின் கண்காணிப்பு அதிகாரியுமான சஜின் வாஸ்குணவர்தன, பிரித்தானியாவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவரைத் தாக்கிய சம்பவமும் ஆளும் கட்சியில் பாரிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

சஜின்வாஸ் குணவர்தனவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமையினால் ஆளும் கட்சியிலுள்ள சிரேஷ்ட உறுப்பினர்கள் இதனால் அதிருப்தியடைந்துள்ளனர்.

http://www.tamil.srilankamirror.com/news/2599-2014-10-13-07-37-24

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.