Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் நிகழ்வில் கலந்துகொண்டால் கொல்லப்படுவீர்கள் - ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்!

Featured Replies

புலனாய்வு செய்தி சேகரிப்பு தொடர்பான பயிற்சிப் பட்டறைக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்துகொள்ளும் ஊடகவியலாளர்களுக்கு திட்டமிட்ட கும்பல் ஒன்று அச்சுறுத்தல் விடுத்துள்ளது.
 
ட்ரான்பெரன்ஸி இன்டர்நெஷனல் - இலங்கை அமைப்பினால் ஊடகவியலாளர்களுக்கு இந்தப் பயிற்சிப் பட்டறை வெற்றிகரமாக நடத்தப்பட்டிருந்தது. 
 
ஒன்றுகூடலும், சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் இன்று (15) புதன்கிழமை காலை 10 மணிக்கு கொழும்பு தனியார் ஹோட்டல் ஒன்றில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
 
எனினும், இந்த நிகழ்வில் கலந்துகொள்ளக்கூடாது என்று குறித்த கும்பல் அச்சுறுத்தியுள்ளது.
 
இந்த நிகழ்வு இரத்துச் செய்யப்படாவிடின் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் அல்லது உயிரைவிட வேண்டி வரும் என்று தொலைபேசி மூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக குறித்த பயிற்சிப் பட்டறைக் குழுவின் ஏற்பாட்டாளரும், பயிற்றுவிப்பாளருமான ஊடகவியலாளர் ஜயசிறி ஜயசேகர தெரிவித்தார்.
 
நேற்று (14) செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் அநாமேதய தொலைபேசி அழைப்பின்மூலம் இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
 
அதேபோல ட்ரான்பெரன்சி இன்டர்நெஷனல் - இலங்கை அமைப்பின் சிரேஷ்ட முகாமையாளர் ஷான் விஜயதுங்கவிற்கும் மூன்று முறை அநாமேதய தொலைபேசி அழைப்பு எடுக்கப்பட்டதாகவும் எனினும் அதற்கு அவர் பதிலளிக்கவில்லை என்றும் ஜயசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.
 
அதேபோல வடமேற்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் ஜனூர் குஜிலனுக்கும் தொலைபேசிமூலம் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
 
இதனைத்தவிர, புதன்கிழமை நிகழ்வு இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும், ''விடுதலைப் புலிகளின்'' குறித்த நிகழ்வில் கலந்துகொண்டால் தாக்கப்படுவீர்கள் என்றும் ஏராளமான ஊடகவியலாளர்களுக்கு குறுந்தகவல்களும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
 
''நாட்டை மீட்டெடுத்த தேசப்பற்றுப் படையணி'' (ரட்ட பேராகத் தேசப்பிரேமி பலகாய) என்ற பெயரில் இந்த குறுந்தகவல்கள் அனுப்பப்பட்டுள்ளன.
 
இன்றைய நிகழ்விற்கு சுமார் 60 ஊடகவியலாளர்களுடன் ரவய பத்திரிகையின் ஆசிரியர் விக்டர் ஐயவன், AFP இலங்கை அலுவலகத்தின் பிரதானி அமல் ஜயசிங்க ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளதாக ஜயசிறி ஜயசேகர தெரிவித்தார்.
 
ட்ரான்ஸ்பெரன்சி இன்டர்நெஷனல் அமைப்பினால் கடந்த சில மாதங்களாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த பல நிகழ்வுகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்ததுடன், சில நிகழ்வுகள் இரத்துச் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.