Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெளிவிகார அமைச்சு பெண் அதிகாரி செனுக்காவிற்கும் புலிகளுக்கும் தொடர்பு!

Featured Replies

Thamara.jpgதற்போதைய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் செனுகா செனவிரட்ன ஜெனீவாவின் நிரந்தர பிரதிநிதியாக கடமையாற்றிய காலத்தில், புலிகளுக்குச் சொந்தமான நிறுவனங்களுடன் தொடர்பு பேணப்பட்டமை குறித்து முன்னாள் இராஜதந்திரியான தமரா குணநாயகம் சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.
 
கொழும்பிலுள்ள தனியார் தொலைக்காட்சியொன்றின் நேர்காணலிலேயே அவர் இந்தத் தகவல்க வெளியிட்டுள்ளார்.
 
ஜெனீவாவிலுள்ள இலங்கைக்கான நிரந்தர பிரதிநிதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலம் புலிகளுக்கு சொந்தமான நிறுவனமொன்றினால் நிர்மாணிக்கப்பட்டது என்றும் இது தொடர்பிலான ஆவணங்கள் உண்டு எனவும் அவர் கூறியுள்ளார்.
 
இந்த நேர்காணலில் கருத்துரைத்த தமரா குணநாயகம்,
 
ஜெனீவாவிலுள்ள இலங்கைக்கான நிரந்தர பிரதிநிதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கான நிர்மாணப் பணிகள் வழங்கப்பட்ட நிறுவனத்தின் உயர் பதவிகளில் புலிகள் இயக்கத்தில் இருந்தவர்களே இருந்தனர். நான் பதவி வகித்த காலத்தில் குறித்த நிர்மாணப் பணிக்கான கணக்காய்வு மற்றும் பாதுகாப்பு தொடர்பான அறிக்கைகளை கோரியிருந்தேன். எதிர்த்தரப்பினரைக் கொண்டு வீடு கட்டினால் அவர்களுக்கு உள்ளே இருக்கக்கூடிய விடயங்கள் துல்லியமாக தெரிந்திருக்கும். சில தொழில்நுட்பங்களை அவர்கள் தெரியாமல் பொருத்தியிருந்தால் இரகசியமான முறையில் உள்ளே பேசப்படும் விடயங்கள் கூட ஒட்டுக் கேட்கப்படலாம். எனவேதான் குறித்த விபரங்களை நான் கோரியிருந்தேன்.
 
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகள் நடைபெறுவதற்கு ஒரு மாத காலத்திற்கு முன்னதாக என்னை ஜெனீவாவிற்கான நிரந்தரப் பிரதிநிதியாக நியமித்தார்கள். இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் நிறைவேற்ற உத்தேசித்திருந்த காலம் அது. நாம் எவ்வாறு அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போகின்றோம் என்பது பற்றிய அறிவுறுத்தல்கள் வழங்கப்படவில்லை. அவற்றை அறிந்துகொள்ள நான் இலங்கைக்கு வரப்போவதாக அறிவித்தேன். வெளிவிவகார அமைச்சு அதற்கு அனுமதியளிக்கவில்லை. ஜனாதிபதி என்னை அழைத்தார், அதன் அடிப்படையில் நான் இலங்கைக்கு வந்தேன். எனினும், சஜின் வாசும் அமைச்சரும் என்னை கடுமையான திட்டினார்கள். உத்தியோகபூர்வ உத்தரவுகளை மீறி இலங்கைக்கு வந்தது பிழையானது என தெரிவித்திருந்தனர். எவ்வாறான தந்திரோபாயங்களின் அடிப்படையில் நாம் நடவடிக்கை எடுக்கப் போகின்றோம் என்பது பற்றி தெரியாத காரணத்தினால் நான் இலங்கைக்கு வந்தேன். இராஜதந்திரிகள் நடத்தப்படும் விதம் குறித்து திருப்தி அடைய முடியாது. நாட்டின் அரச நிறுவனங்கள் உரிய முறையில் இயங்குவதில்லை. நாடாளுமன்றம், நீதிமன்றக்கட்டமைப்பு, அரசியல் கட்சிகள், ஜனநாயக நிறுவனங்கள் மற்றும் வெளிவிவகாரத் துறையுடன் தொடர்புடைய நிறுவனங்கள் செயலிழந்துள்ளன. இலங்கை வெளிவிவகார அமைச்சு எனது பணிகளை உரிய முறையில் மேற்கொள்ள அனுமதியளிக்கவில்லை.
 
இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற முயற்சித்த போது அதற்கு எதிராக போராடினன். அமெரிக்காவுடன் பேச வேண்டாம் என எனக்கு கட்டளையிட்ட வெளிவிவகார அமைச்சு எனக்குத் தெரியாமல் அமெரிக்காவுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள முயற்சித்தது. எவ்வாறெனினும், நான் பதவி வகித்த காலத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரவிருந்த தீர்மானத்தை வாபஸ் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க முடிந்தது. இலங்கை வெளிவிவகார அமைச்சு மற்றும் இராஜதந்திர சேவையை ஒரு குழுவினர் கைப்பற்றியுள்ளனர்.
 
தேசத்தின் கொள்கைகளை விடவும், குறித்த நபர்களின் விருப்பு வெறுப்புக்களே முன்னிலைப்படுத்தப்படுகின்றன. என்று தமரா குணநாயகம் மேலும் தெரிவித்தார்.
 
  • கருத்துக்கள உறவுகள்

அரசியல்வாதிகளும் ,ஊடகவியாளாலர்களும் தான் புலியை நம்பி பிழைப்பு நடத்தினார்கள்....இப்ப அதிகாரிகளும் புலியை வைத்துதான் பிழைப்பு நடத்தவேண்டியிருக்கு...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.