Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிர்வாகத்துடன் ஊதிய பிரச்சினை: இந்திய தொடரை பாதியில் கைவிடுகிறது மே.இ.தீவுகள் கிரிக்கெட் அணி

Featured Replies

நிர்வாகத்துடன் ஊதிய பிரச்சினை: இந்திய தொடரை பாதியில் கைவிடுகிறது மே.இ.தீவுகள் கிரிக்கெட் அணி
 

 

வீரர்கள் சம்பள விவகாரம் பூதாகாரமாக வெடிக்க, மேற்கிந்திய அணி இந்திய சுற்றுப் பயணத்தை ரத்து செய்து விட்டது. தற்போது நடைபெறும் 4-வது ஒருநாள் போட்டியே இந்தத் தொடரின் கடைசி போட்டி.

மேற்கிந்திய வீரர்கள் சங்கம், மேற்கிந்திய கிரிக்கெட் வாரியத்துடன் செய்து கொண்ட வீரர்கல் சம்பள ஒப்பந்தம் மீதான சர்ச்சைகளுக்கு தீர்வு ஏற்படாததால் தொடர்ந்து இந்தத் தொடரில் விளையாட முடியாது என்று மேற்கிந்திய வீரர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

இந்தத் தகவலை மேற்கிந்திய அணி நிர்வாகம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடம் இன்று தெரிவித்தது.

 

இதனால் வேறொரு அணியை விளையாட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவெடுத்துள்ளது. அந்த அணி இலங்கையாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிசிசிஐ செயலர் சஞ்சய் படேல் இது பற்றிக் கூறும்போது, “மேற்கிந்திய அணி தொடரிலிருந்து வெளியேறுகிறது. இது பற்றி அந்த அணியின் நிர்வாகி ரிச்சி ரிச்சர்ட்சனிடமிருந்து இ-மெயில் வரப்பெற்றோம்” என்றார்.

மேற்கிந்திய அணி வீரர்கள் கூட்டமைப்பின் தலைவரும், செயலதிகாரியுமாக இரட்டை பதவி வகிக்கும் வேவல் ஹிண்ட்ஸ், மேற்கிந்திய கிரிக்கெட் வாரியத்துடன் செய்து கொண்ட புதிய ஒப்பந்தத்தில் வீரர்கள் ஊதியத்தில் பெரும் பங்கு குறைக்கப்பட்டுள்ளது. ஆனாலும் வேவல் ஹிண்ட்ஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

 

அதாவது வீரர்களை ஆலோசிக்காமல் வேவல் ஹிண்ட்ஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இதற்கு டிவைன் பிராவோ உள்ளிட்ட வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் வீரர்களின் தனிப்பட்ட ஸ்பான்சர்கள் விவகாரத்திலும் மேற்கிந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கு எதிரான முடிவை எடுத்ததாகத் தெரிகிறது.

இதனை எதிர்த்து மேற்கிந்திய வீரர்கள் போர்க்கொடி உயர்த்தினர். இருதரப்பினருக்கு இடையிலும் கசப்பான வசை மின்னஞ்சல்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன.

 

இதனையடுத்து தற்போதைய இந்திய தொடரை பாதியிலேயே முடித்துக் கொண்டு கிளம்ப முடிவெடுத்துள்ளது மேற்கிந்திய அணி. இது குறித்து பிசிசிஐ அதிர்ச்சி தெரிவித்துள்ளது.

மேலும், இது போன்று தொடரைப் பாதியிலேயே நிறுத்துவதால் ஏற்படும் நஷ்டம் மற்றும் பல விவகாரங்கள் குறித்து ஐசிசி-யிடம் முறையீடு செய்யவுள்ளது பிசிசிஐ

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%87%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF/article6511385.ece

 

  • தொடங்கியவர்

பிராவோதான் இத்தனை குழப்பத்துக்கும் காரணம்.. பாயும் மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம்!

 

டெல்லி: சம்பளப் பிரச்சினை காரணமாக இந்திய தொடரை பாதியிலேயே கைவிட நேர்ந்ததற்கு மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் ஒரு நாள் கேப்டன் வேயன் பிராவோதான் காரணம் என்று மேற்கு இந்தியத்தீவுகள் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. ஐந்து ஒரு நாள் போட்டிகள், ஒரு டுவென்டி 20 மற்றும் டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக இந்தியா வந்திருந்த மேற்கு இந்தியத் தீவுகள் அணியில், வீரர்களின் சம்பளம் தொடர்பாக பிரச்சினை வெடித்தது. பிராவோதான் இத்தனை குழப்பத்துக்கும் காரணம்.. பாயும் மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம்! இதன் காரணமாக முதல் போட்டியிலேயே மேற்கு இந்தியத் தீவுகள் வீரர்கள் விளையாட முடியாது என்று பிடிவாதம் பிடித்தனர்.

 

அவர்களை வாரியம் சமாதானப்படுத்தியது. இதையடுத்து அதில் அவர்கள் ஆடி வெற்றி பெற்றனர். 2வது போட்டியில் இந்தியா வென்றது. 3வது போட்டி புயல் காரணமாக கைவிடப்பட்டது. இந்த நிலையில் நேற்று 4வது போட்டி நடந்தது. இதில் இந்தியா அபார வெற்றி பெற்றது. ஆனால் போட்டி தொடங்குவதற்கு முன்பே மீண்டும் சம்பளப் பிரச்சினை ஏற்பட்டது. இதன் காரணமாக நான்காவது போட்டியோடு அணி நாடு திரும்பும் என வாரியம் அறிவித்தது. இதனால் 5வது போட்டியும், மற்ற போட்டிகளும் கேள்விக்குறியாகி விட்டன. இதனால் இந்திய கிரிக்கெட் வாரியம் அதிர்ச்சி அடைந்தது. இந்த நிலையில், மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட்வாரியம் ஒரு அறிக்கை வெளியி்ட்டுள்ளது. அதில் கேப்டன் வேயன் பிராவோவை அது குற்றம் சாட்டியுள்ளது.

 

மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வேயன் பிராவோ தலைமையிலான மேற்கு இந்தியத் தீவுகள் அணி, எங்களுக்கு அனுப்பியுள்ள தகவலின்படி, மீதமுள்ள இந்தியத் தொடரில் தாங்கள் கலந்து கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளனர். இந்த அணிக்குப் பதில் வேறு அணியை அனுப்பும் சாத்தியக் கூறுகள் இல்லை என்பதால் நாங்கள் மாற்று அணியை அனுப்புவது குறித்து பரிசீலிக்கவில்லை. பார்படாஸில் வருகிற செவ்வாய்க்கிழமை அவசரக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. அப்போது இந்தியத் தொடர் பாதியிலேயே முடிந்து போனது தொடர்பாக ஆலோசிக்கப்படவுள்ளது. இந்தியத் தொடர் பாதியிலேயே முடிந்து போனதற்காக மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் வீரர்கள், இந்திய கிரிக்கெட் ரசிகர்கள், இந்திய கிரிக்கெட் வாரியம், ஸ்பான்சர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். இது மிகவும் வருத்தமான சூழலாகும்.

 

கேப்டன் பிராவோதான் இந்தக் குழப்பங்களுக்குக் காரணம் என்பதை நாங்கள் சொல்லியாக வேண்டும். குறிப்பாக மேற்கு இந்தியத் தீவுகள் வீரர்கள் சங்கத் தலைவர் வேவல் ஹிண்ட்ஸ் மீது அவர் தேவையில்லாமல் விமர்சனம் செய்துள்ளார். மேற்கு இந்தியத் தீவுகள் நிர்வாகத்திற்கும், கிரிக்கெட்டுக்கும், ஹிண்ட்ஸுக்கும் அவப் பெயரை தேடிக் தரும் வகையில் பேசியுள்ளார் நடந்துள்ளார் பிராவோ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/west-indies-cricket-board-slams-captain-dwayne-bravo-after-india-213230.html

  • தொடங்கியவர்

மன்னிப்பு கேட்டது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு
அக்டோபர் 17, 2014.

புதுடில்லி: இந்திய தொடரை பாதியில் ரத்து செய்து அதிர்ச்சி அளித்துள்ளது வெஸ்ட் இண்டீஸ் அணி. இதனால், இரு நாட்டு போர்டுகள் இடையிலான உறவு, பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு (டபிள்யு.ஐ.சி.பி.,), வீரர்கள் சங்கம் இடையில் சமீபத்தில் புதிய சம்பள ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதில், சம்பளம் 75 சதவீத அளவுக்கு குறைக்கப்பட்டதால், வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் (கொச்சி) களமிறங்க மறுத்தனர். ஒருவழியாக சமாதான பேச்சுவார்த்தை முடிந்து, முதல் போட்டியில் பங்கேற்றனர்.  இதுகுறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்தது.

வீரர்கள் நலனுக்கு எதிராக செயல்பட்ட, வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் சங்கத் தலைவர் வேவல் ஹிண்ட்ஸ், பதவி விலக வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.

 

திடீர் முடிவு:

இதனிடையே, சம்பள ஒப்பந்த பிரச்னை முடியாததால், தரம்சாலாவில் நடந்த நான்காவது ஒருநாள் போட்டிக்குப் பின், மீதமுள்ள தொடரை புறக்கணித்து, வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் நாடு திரும்ப முடிவு செய்தனர்.

இதனால், கோல்கட்டாவில் நடக்க இருந்த 5வது ஒருநாள் (அக்., 20), ஒரு ‘டுவென்டி–20’ (அக்., 22) மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகள் நடப்பது கேள்விக்குறியானது.

 

பி.சி.சி.ஐ., கோபம்:

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) வெளியிட்ட அறிக்கை:

தொடரில் இருந்து விலகுவது என, டபிள்யு.ஐ.சி.பி., முடிவு செய்தது அதிர்ச்சியாகவும், ஏமாற்றமாகவும் உள்ளது. போர்டு உள்விவகாரத்தைக் கூட தீர்க்க முடியாத நிலையில் தான் டபிள்யு.ஐ.சி.பி., உள்ளது.

 

உறவு பாதிப்பு:

இதனால், இரு போர்டுகள் இடையே உள்ள உறவு குறித்து சற்று சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தொடரை முழுமையாக நடத்த பல்வேறு முறை எடுத்துக் கூறியும், விலகுவது என்பது ஒருதலைப்பட்சமான முடிவு.

இப்படி விவேகமற்ற முறையில், தொடரில் இருந்து பாதியில் கிளம்புவதற்கு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) தகுந்த நடவடிக்கை எடுக்க, அனைத்து வழிகளிலும் வலியுறுத்துவோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வெஸ்ட் இண்டீஸ் மன்னிப்பு:

இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு (டபிள்யு.ஐ.சி.பி.,), தங்கள் நாட்டு வீரர்கள் பாதியில் தொடரை புறக்கணித்தற்காக, இந்திய கிரிக்கெட் போர்டிடம் (பி.சி.சி.ஐ.,) மன்னிப்பு கேட்டுக் கொண்டது. வரும் அக்., 21ல் பார்படாசில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டின் அவசரக் கூட்டம் நடக்கவுள்ளது. இதில் இந்திய தொடரை பாதியில் புறக்கணித்தது குறித்து விவாதிக்கப்பட்டு, தேவைப்படும் பட்சத்தில் வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

 

http://sports.dinamalar.com/2014/10/1413563793/bravowestindiescricket.html

 

  • தொடங்கியவர்

மே.இ.தீவுகளுடனான கிரிக்கெட் தொடரை 5 ஆண்டு நிறுத்தி வைக்க பிசிசிஐ திட்டம்?
 

 

இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் இருந்து மேற்கிந்தியத் தீவுகள் அணி திடீரென விலகியதால் கடும் கோபமடைந்துள்ள பிசிசிஐ, அந்நாட்டு அணியுடனான கிரிக்கெட் தொடரை அடுத்த 5 ஆண்டுகளுக்கு நிறுத்திவைக்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியத்தின் புதிய ஒப்பந்தப்படி வீரர்களுக்கு 75 சதவீதம் ஊதிய குறைப்பு செய்யப்பட்ட விவகாரத்தில் வாரியத்துக்கும் வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை.

 

இதனால் நேற்று முன்தினம் தர்மசாலாவில் நடைபெற்ற 4-வது ஒருநாள் போட்டியோடு இந்தியாவுடனான கிரிக்கெட் தொடரை ரத்து செய்துவிட்டு மேற்கிந்தியத் தீவுகள் அணி நாடு திரும்பியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் கடும் கோபமடைந்த பிசிசிஐ வரும் 21-ம் தேதி செயற்குழுவை கூட்டியுள்ளது. ஹைதராபாதில் நடைபெறும் இந்த கூட்டத்தின்போது மேற்கிந்தியத் தீவுகள் வாரியம் மற்றும் வீரர்கள் மீதான நடவடிக்கை, தொடரை ரத்து செய்ததால் ஏற்பட்ட இழப்புக்கு நஷ்டஈடு கோருவது ஆகியவை குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.

தொடரை பாதியிலேயே ரத்து செய்து பிசிசிஐக்கு பெரும் பிரச்சினையை ஏற்படுத்திய மேற்கிந்தியத் தீவுகள் வாரியத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் எண்ணத்தில் பிசிசிஐ நிர்வாகிகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

 

மேற்கிந்தியத் தீவுகளுடனான கிரிக்கெட் தொடருக்கு தடை விதிப்பதோடு மட்டுமின்றி அந்நாட்டு வீரர்கள் ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்கும் தடை விதிக்க பிசிசிஐ நிர்வாகிகள் விரும்புவதாகக் கூறப்படுகிறது. அதேநேரத்தில் வீரர்கள் மீது தவறில்லை. அவர்களை தண்டிக்கக்கூடாது என சில நிர்வாகிகள் கருதுவதாக கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக பிசிசிஐ செயலர் சஞ்சய் பட்டேல் கூறுகையில், “இந்தியாவுடனான தொடரை பாதியிலேயே ரத்து செய்வது என மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம் எடுத்த முடிவால் நாங்கள் மிகப்பெரிய இழப்பை சந்தித்திருக்கிறோம். இந்த விவகாரத்தை ஐசிசியிடம் எடுத்துச் சென்று எங்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டுமாறு கோரிக்கை விடுக்கப் போகிறோம். இந்த விவகாரம் தொடர்பாக பிசிசிஐ செயற்குழுவில் விவாதிக்கப்படவுள்ளது. அப்போது மேற்கிந்தியத் தீவுகளுடனான கிரிக்கெட் தொடரை நிறுத்தி வைப்பது குறித்து பரிசீலிக்கப்படலாம்.

 

இந்தியா-இலங்கை இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வரும் 1-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் தங்கள் அணியை இந்தியாவுக்கு அனுப்ப ஆர்வம் காட்டியது. ஆனால் இலங்கையுடனான தொடர் உறுதி செய்யப்பட்டுவிட்டதால் அதை ஏற்கவில்லை” என்றார்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AE%E0%AF%87%E0%AE%87%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88-5-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%90-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/article6515374.ece

  • தொடங்கியவர்

இந்திய தொடரிலிருந்து விலகிய விவகாரம்: சாமுவேல்ஸ் கருத்தால் பிராவோ அதிர்ச்சி

 

இந்தியாவுக்கு எதிரான தொடரிலிருந்து பாதியிலேயே வெளியேற விரும்பவில்லை. தொடர்ந்து விளையாடவே விரும்பினேன் என மேற்கிந்தியத் தீவுகள் ஆல்ரவுண்டர் மார்லான் சாமுவேல்ஸ் கூறியிருப்பது அந்த அணியின் கேப்டன் டுவைன் பிராவோவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக கரீபிய வானொலிக்கு பேட்டியளித்த சாமுவேல்ஸ், “மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தில் நான் உறுப்பினராக இல்லை. அதனால் புதிய ஒப்பந்தம் தொடர்பாக ஆட்சேபனை தெரிவிப்பதற்கு முன்னதாக இந்தியாவுக்கு எதிரான தொடரில் முழுவதுமாக விளையாடி முடிக்க விரும்பினேன்.

 

நான் வீரர்கள் சங்கத்தில் உறுப்பினராக இல்லாததால் மேற்கிந்தியத் தீவுகள் வீரர்கள் சங்க தலைவர் வேவல் ஹின்ட்ஸ் எனது சார்பாக வாரியத்திடம் பேச்சுவார்த்தை நடத்தமுடியாது. அதனால் இந்தியாவுக்கு எதிரான தொடரை முழுவதுமாக விளையாடி முடித்த பிறகு ஊதிய குறைப்பு தொடர்பாக கேள்வியெழுப்ப நான் விரும்பினேன். மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட்டுக்குத்தான் எனது முன்னுரிமை. அதனால் தொடரில் கவனம் செலுத்தவே விரும்பினேன்.

ஊதிய குறைப்பு தொடர்பாக இந்தியத் தொடரின்போது 8 முறை பிராவோ தலைமையில் வீரர்களின் கூட்டம் நடைபெற்றது. ஆனால் நான் இரண்டு முறை மட்டுமே பங்கேற்றேன். பெரும்பாலான கூட்டங்களை தவிர்த்துவிட்டேன் என கூறியுள்ளார்.

 

பிராவோ பதிலடி

சாமுவேல்ஸின் கருத்தால் அதிர்ச்சியடைந்துள்ள பிராவோ கூறியிருப்பதாவது:

சாமுவேல்ஸ் விருந்து நிகழ்ச்சியில் ஆர்வம் காட்டினார். வீரர்கள்கூட்டத்தின்போது மிகவும் ஆக்ரோஷமாக பேசினார். ஊடகங்களுக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியை நான் பார்த்தேன்.

அனைத்து கூட்டங்களுக்கும் அவரை அழைத்தோம். பெரும்பாலான கூட்டங்களில் அவர் பங்கேற்றார். மேலும் அணி வீரர்கள் எடுக்கும் எந்த முடிவுக்கும் துணை நிற்பதாக அவர் மிகத் தெளிவாக தெரிவித்தார். ஆனால் இப்போது அவர் தெரிவித்திருக்கும் கருத்து அதிர்ச்சியாக இருக்கிறது. அவர் கூறியதாக ஊடகங்களில் வெளியான செய்தி உண்மையாக இருந்தால் அதற்கு சாமுவேல்ஸ்தான் பொறுப்பு.

அணியில் உள்ள அனைத்து வீரர்களும் இணைந்தே இந்தியாவுக்கு எதிரான தொடரிலிருந்து பாதியிலேயே வெளியேறுவது என முடிவெடுத்தோம். நான் தனிப்பட்ட முறையில் முடிவெடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8B-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/article6533842.ece

  • தொடங்கியவர்

தொடரைக் கைவிடும் முடிவை நான் ஒருபோதும் ஆதரிக்கவில்லை: மர்லன் சாமுயெல்ஸ்
 

 

இந்தியாவுக்கு எதிரான தொடரை பாதியிலேயே கைவிடும் முடிவுக்கு நான் ஆதரவளிக்கவில்லை என்று மேற்கிந்திய தீவுகள் பேட்ஸ்மென் மர்லன் சாமுயெல்ஸ் மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

அணி எந்த முடிவெடுத்தாலும் அதற்கு சாமுயெல்ஸ் கட்டுப்படுவதாக கேப்டன் பிராவோ தெரிவித்ததை சாமுயெல்ஸ் கடுமையாக மறுத்துள்ளார்.

"நான் அவ்வாறு கூறவில்லை, தொடரைக் கைவிடும் முடிவுக்கு ஆதரவு அளிக்கிறேன் என்று நான் கூறவில்லை. ஏனெனில் ஒருவரும் என்னிடம் எதுவும் கேட்கவில்லை, இந்த விவகாரத்தில் தனி நபர் எடுக்கும் முடிவுதான் இறுதியாக இருக்கும் என்பதுதானே சரியாக இருக்க முடியும்? ஓய்வறையில் இருந்த எந்த ஒரு வீரரும் கைவிடும் முடிவு குறித்து எதுவும் கூறவில்லை. நான் மட்டும்தான் கேள்வி கேட்டேன், அதற்கு எனக்குக் கிடைத்த பதில் எனக்கு திருப்திகரமாக இல்லை.

 

 

நான் திருப்தி அடைந்திருந்தால் நான் உடனே கைவிடும் முடிவு குறித்து ஆதரித்து முதலில் வெளிப்படையாக தெரிவித்திருப்பேன். ஏனெனில் எனக்கு எதையும் மறைக்கத் தெரியாது. பிராவோ கூறியது அனைத்தும் சரி, அதற்கு என் முழு ஆதரவு என்று கூறியிருப்பேன்.

இந்தியாவுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை, இது நம் பிரச்சினை, ஆகவே முதலில் தொடரை முடித்து விடுவோம், பிறகு நாடு திரும்பி இந்தப் பிரச்சினையை கையாண்டிருக்க வேண்டும் என்பதுதான் என் கருத்து.

இந்தியா போன்ற பெரிய அணியுடன் மே.இ.தீவுகள் ஆடியிருக்க வேண்டும் என்பது முக்கியம். இந்தியாவுடனான உறவு மிகப்பெரிய விஷயம், அது ஒரு பிரமாதமான உறவு.

இரு அணி வீரர்களும் மைதானத்தில் ஒருவரையொருவர் கடிந்து பேசிக்கொள்வதில்லை. ஆஸ்திரேலியா அல்லது தென் ஆப்பிரிக்கா என்றால் இவ்வாறு இருக்காது. மேற்கிந்திய தீவுகளில் நிறைய இந்தியர்கள் இருக்கின்றனர். குடும்பம் போல்தான் நம் உறவு.

இந்த அனைத்துப் பிரச்சினைக்கும் காரணம் வீரர்கள் சங்கத் தலைவர் வேவல் ஹைண்ட்ஸ், ஆனால். இங்கு ஒன்றைக் கூறிவிடுகிறேன், நான் வீரர்கள் சங்கத்தைச் சேர்ந்தவன் அல்ல” என்றார் மர்லன் சாமுயெல்ஸ்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/article6541169.ece

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

பி.சி.சி.ஐ.,யிடம் வெ.இண்டீஸ் மன்னிப்பு
நவம்பர் 11, 2014.

 

மும்பை: இந்திய தொடரை பாதியில் ரத்து செய்ததற்கு வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு மன்னிப்பு கோரியுள்ளது.

சம்பள பிரச்னை காரணமாக இந்திய தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணியினர் பாதியில் ரத்து செய்தனர். நான்கு ஒரு நாள் போட்டிகளில் மட்டும் பங்கேற்று, தாயகம் திரும்பினர். மீதமுள்ள ஒரு நாள் போட்டி, 3 டெஸ்ட், ஒரு ‘டுவென்டி–20’ போட்டிகளை நடத்த முடியாததால், இந்திய கிரிக்கெட் போர்டுக்கு (பி.சி.சி.ஐ.,) அதிக இழப்பு ஏற்பட்டது. இதற்காக ரூ.250 கோடி இழப்பீட்டு தொகையை தரும்படி வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டுக்கு(டபிள்யு.ஐ.சி.பி.,), பி.சி.சி.ஐ., கடிதம் அனுப்பியது. இல்லையெனில், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நடந்த சம்பவத்திற்கு டபிள்யு.ஐ.சி.பி., மன்னிப்பு கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது.

 

இது குறித்து பி.சி.சி.ஐ., செயலர் சஞ்சய் படேல் கூறியது: சில நாட்களுக்கு முன் டபிள்யு.ஐ.சி.பி., அனுப்பிய கடிதம் கிடைத்தது. இதில் எங்களுக்கு ஏற்பட்ட இழப்பை சரிசெய்ய முடியாத நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர, இப்பிரச்னையை பேசிதீர்த்துக்கொள்வதாகவும் கூறியுள்ளது. இவ்வாறு சஞ்சய் படேல் கூறினார்.

இது குறித்து வரும் 20ம் தேதி பி.சி.சி.ஐ., பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்படவுள்ளது.

 

காரணம் என்ன:

அடுத்த எட்டு ஆண்டுகளில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டுக்கு தொடரை நடத்துவதன் மூலம் ரூ. 613 கோடி கிடைக்கும். இதில் பாதியை (ரூ.250 கோடி) பி.சி.சி.ஐ., இழப்பீட்டுத்தொகையாக கேட்கிறது. இதனால்தான், டபிள்யு.ஐ.சி.பி., மன்னிப்பு கோரியுள்ளது.

 

http://sports.dinamalar.com/2014/11/1415689358/bccicricket.html

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.