Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபனிடம் இராணுவத்தினர்விசாரணை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபனிடம் இராணுவத்தினர்விசாரணை  நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

 

இன்று 18.10.2014 காலை 11.30 மணியளவில் யாழ். ஏழாலைப்பகுதியில் அமைந்துள்ள தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபனின் வீட்டுக்குச்சென்ற சீருடை அணிந்த இராணுவத்தினர் மாகாணசபை உறுப்பினரிடம் விசாரணைகளிலீடுபட்டுள்ளனர். வசாவிளான் இராணுவ முகாமின் பொறுப்பதிகாரி பண்டார எனத்தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட அதிகாரியே விசாரணைகளிலீடுபட்டுள்ளார்.

 

வீட்டுக்கு வந்த பண்டார தலைமையிலான 03 சீருடை அணிந்த இராணுவத்தினர் அவரது தந்தையிடம், உங்கள் மகன் எங்கே, அவரை விசாரிக்க வேண்டும் எனத்தெரிவித்துள்ளனர். பின்னர் உறுப்பினரை விசாரணை செய்த அவர்கள் உங்களுக்கு திருமணமாகிவிட்டதா? மனைவி யார்? குழந்தைகள் உள்ளனரா? எத்தனை பேர்? என தேவையற்ற பல வினாக்களை எழுப்பி விசாரித்தனர்.

 

இவ்வாறு தன்னைப்பற்றியும், குடும்ப உறுப்பினர்கள் பற்றியும் தனது அரசியல் நடவடிக்கைகள் பற்றியுமே கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், இராணுவமயப்படுத்தப்பட்டுள்ள சமூக சூழ்நிலையில் தன்னைப்பற்றி இராணுவத்தினர் சகல தகவல்களையும் அறிந்துள்ள போதிலும் விசாரணைக்கான காரணத்தைக்கோரியபோது தாம் மேலிட உத்தரவின் பிரகாரமே விசாரணைகளிலீடுபடுவதாக குறித்த அதிகாரி தெரிவித்ததாக இதுகுறித் கருத்து தெரிவித்த வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்தார்.

 

அண்மைக்காலங்களில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினரால் இராணுவத்தினரின் நில அபகரிப்புக்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் அதன் உறுப்பினர்களை உளவியல்ரீதியாக பாதிப்படையச்செய்யும் ஒரு சம்பவங்களின் ஒரு பகுதியாகவே இவ்விசாரணை நடவடிக்கை இடம்பெற்றிருப்பதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

http://yarlfmradio.com/?p=13565

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.