Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுயநலங்கருதியே சும்மா இருந்த ஜனாதிபதி சுறுசுறுப்பாக வடக்கு வந்து சுற்றுலா மேற்கொண்டு விட்டு சென்றுள்ளார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
சுயநலங்கருதியே சும்மா இருந்த ஜனாதிபதி சுறுசுறுப்பாக வடக்கு வந்து சுற்றுலா மேற்கொண்டு விட்டு சென்றுள்ளார்; சி.வி.விக்னேஸ்வரன்
 
unnamed-437.jpg
வடகிழக்கு மாகாணங்களில் படையினர் தொடர்ந்து பெருவாரியாக அரசாங்கத்தால் நிலை நிறுத்தப்பட்டுள்ளாதால் எமது மக்கள் படும் அவலத்தையும் அவதியையும் எடுத்தியம்பும் ஒரு நிகழ்வாக இன்றைய இந்த நிகழ்வு அமைந்துள்ளது.
 
 
 
முள்ளிக்குளம் பகுதியில் இருந்து கடந்த ஏழு வருடங்களுக்கு முன்னர் இடம் பெயர்ந்த எம்மக்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்பிச் சென்று குடியேற முடியாத ஒரு நிலையை ஏற்படுத்தியிருக்கின்றனர் படையினர்.என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிதார்.
 
 
 
மன்னார் முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட முள்ளிக்குளம் கிராமத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு, மீளக்குடியமர்ந்துள்ள 82 குடும்பங்களுக்கு தற்காலிக வீடுகளை அமைத்துக்கொடுக்கும் நோக்கில் வீட்டுத் திட்டத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வு நேற்று(19) ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது.
 
 
 
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு முதலமைச்சர் அடிக்கல்லினை நாட்டி வைத்த பின் அங்கு இடம் பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
 
 
 
அவர் தொடர்ந்து உரையாற்றுகையிலே,
 
 
 
முள்ளிக்குள மக்களின்; பலகால வாழ்விடங்களை விட்டு வெளியேற படையினர் மறுக்கின்றனர். எங்கு சென்றாலும் இப்பொழுது இராணுவ பிரசன்னத்தையும் அவர்கள் முகாம்களையுந்தான் பார்க்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளார்கள் அரசாங்கத்தினர்.
 
 
 
நேற்று முந்தினம் இரணைமடுக் குளத்தைப் பார்வையிடச் சென்றேன். அங்கும் இராணுவம். சென்ற கிழமை ஈச்சிலவக்கை சென்றேன். அங்கும் இராணுவம். எங்கும் இராணுவம். இவர்கள் எம் மண்ணில் நீடித்து நிற்பதால் பல அவலங்களை நாம் எதிர் நோக்கி வருகின்றோம். நீர் பற்றாக்குறை, நீரில் அசுத்தம் கலத்தல் போன்றவை கூட படையினரின் பிரசன்னத்தால் ஏற்பட்டுவரும் விளைவுகளே என்று சென்ற சில நாட்களுக்கு முன்னர் கருத்துத் தெரிவிக்கப் பட்டது.
 
 
 
இங்கு 82 குடும்பங்களுக்கு ஒரு நடுத்தர வீடமைப்புத் திட்டத்தை வழங்குவதற்கான நிதி ஒதுக்கப்பட்டது. வீடுகள் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால் படையினர் இம்மக்களின் சொந்த இடங்களில் தொடர்ந்து குடிகொண்டிருப்பதால் மழை வந்து விட்ட இந்தக் கால கட்டத்தில் என்ன செய்வது என்று நாங்கள் கலந்தாலோசித்து அவர்கள் வெளியே போகும் வரை எம் மக்களின் பாடு என்னவாகும் என்பதைக் கருத்தில் கொண்டு இப்பகுதியில் தற்காலிக கொட்டில்களிலும் குடிசைகளிலும் அவர்கள் சொல்லொண்ணாத் துயரத்தை அனுபவித்து வருவதையும் பார்த்துத்தான் அவர்களின் நிம்மதியையும் பாதுகாப்பையும் உத்தேசித்து ஒரு தற்காலிக வீட்டுத் திட்டம் ஒன்றை வகுத்துள்ளோம்.
 
 
 
 
இவர்களுக்குத் தற்போது அமைக்கப்படுகின்ற இந்த நடுத்தர வகையான வீடுகளானது சீமெந்தினால் அமைக்கப்பட்ட தளத்தின் மீது இரண்டு வரிக்கற்களுடன் சுவர்கள் அமைத்து அதன் மேல் கிடுகு கூரை, தகரம் என 15 அடி தர 12 அடி அளவுப் பிரமாணத்தில் இரண்டு அறைகள் விறாந்தை என்ற அடிப்படையில் அமைக்கப் படுகின்றன.
 
 
 
மூன்று வாரங்களுக்குள் இந்தத் திட்டத்தைப் பூர்த்தியடையச் செய்யவிருக்கின்றோம்.
ஒவ்வொரு வீட்டுக்கும் 50,000 ரூபா செலவிடப்படும். 82 குடும்பங்களுக்கும் 82 வீடுகள் கட்டப்படுவன. இவ்வாறு செய்யாது விட்டிருந்தால் இராணுவமும் வெளியேறியிருக்காது எம் மக்களும் மழையில் நனைந்து பரிதவித்திருப்பார்கள்.
 
 
 
 
இன்று எம்மால் நேரடியாகவும் எம்பொருட்டு மறைமுகமாகவும் பல நன்மைகள் எம்மக்களுக்குக் கிடைத்து வருகின்றன. இன்று நடைபெறுவது எமது நேரடி உதவிகள். சென்ற கிழமை எம் நிமித்தம் மறைமுக உதவிகளை எமது மக்கள் பெற்றார்கள்.
நாம் பதவியில் இருப்பதால் நாங்கள் எதுவும் செய்யவில்லை தாங்களே எல்லாவற்றையும் செய்ய வல்லவர்கள் என்பதை எடுத்துக் காட்ட எமது மக்கள் 20,000 பேர்களுக்கு காணி அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டன.
 
 
 
மருத்துவமனைகள் திறந்து வைக்கப்பட்டன. புகையிரதப் பாதை திறந்து வைக்கப்பட்டது. மேலும் பல காரியங்கள் நடந்தேறியுள்ளன. வீரசிங்கம் மண்டபம் குறுகிய கால கட்டத்தினுள் புனருத்தாரணம் செய்யப்பட்டுள்ளது.
 
 
 
இவை யாவையும் எம் நிமித்தம் செய்யப்பட்ட அரசாங்கக் கைங்கரியங்கள் என்பதை மறந்து விடாதீர்கள். இரண்டு வருடங்களாக எம் மக்களுக்கு வழங்காது இடை நிறுத்தி வைக்கப்பட்ட அனுமதிப் பத்திரங்கள் 20,000 மும் திடீரென்று எம் மக்களுக்குப் போய்ச் சேர்கின்றது என்றால் அதற்குக் காரணம் என்ன? மக்களின் ஆபரணங்கள் 5 வருடங்களின் பின்னர் திடீரென்று வெளிக்கொண்டு வந்த தார்ப்பரீயம் என்ன? வடமாகாணத்தைத் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தன் வசம் வைத்திருக்கின்றது.
 
 
 
ஆனால் வடமாகாண மக்களின் வாக்குகளைப் புறக்கணித்து என்னால் ஜனாதிபதி பதவியை மூன்றாம் முறை எட்ட முடியாது. ஆகவே வடமாகாண மக்களை எப்படியாவது என் பக்கம் இழுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன்தான் எமது மாண்புமிகு ஜனாதிபதி தாராள சிந்தையுடைய கொடையாளியாக மாறி உள்ளார்.
 
 
 
ஆனால் எம் மக்களுக்கு நன்றாகத் தெரியும் புகையிரதப் பாதையை நிர்மாணித்துத் தந்தது இந்திய அரசாங்கம் என்று. வன்னியின் வைத்தியசாலையை அமைத்துக் கொடுத்தவர்கள் பசுபிக் பிராந்திய அமெரிக்கக் கடற்படையினர் என்று.
 
 
 
இவ்வாறு சுயநலங்கருதியே சும்மா இருந்த ஜனாதிபதி சுறுசுறுப்பாக வடக்கு வந்து சுற்றுலா மேற்கொண்டு விட்டு சென்றுள்ளார் என்பது சுற்று வட்டத்தார் யாவருக்குந் தெரியும். நாம் பதவியில் இருப்பது எந்தளவுக்கு அரசாங்கத்தை நிலை குலைய வைத்துள்ளது என்பது இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். நாம் வெறுமனே பதவியில் இருந்தாலே போதும் அரசாங்கம் உங்களுக்கு வாரித் தருவார்கள்.
 
 
 
படையினர் எதற்காக மக்களை வசீகரிக்கச் செயற்திட்டங்கள் வகுத்துச் செயலாற்றுகின்றார்கள். அவர்களை வெளியேறுமாறு வடமாகாணசபை கேட்டுள்ளது. தாம் தொடர்ந்து இங்கு இருக்க வேண்டும் என்றால் எம் மக்களின் மனத்தைக் குளிர வைக்க வேண்டும். பலதைக் கொடுத்தும் பயம் காட்டியுந் தேர்தலில் தமது பங்காளர்களை நிறுத்தியும் மக்கள் தங்களுக்கு வாக்களிக்காத படியினால் எப்படியாவது எம் மக்கள் மனதை மாற்ற வேண்டும் என்று மானியங்களை வழங்கி வருகின்றார்கள் படையினர்.
 
 
 
நாங்கள் பதவியில் இருக்கும் வரை அவர்கள் தொடர்ந்து பலதை உங்கள் நன்மைக்காகச் செய்து வருவார்கள். ஏனென்றால் அவர்களுக்கு எமது வாக்குகள் வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார்.
 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.