Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையிலும் ஒரு சோமாலியா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையிலும் ஒரு சோமாலியா

 

 

 

Picture-226-300x225.jpg

இந்து சமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்படுகின்ற இலங்கையை ஆசியாவின் ஆச்சரியம் மிக்க தேசமாகக் கட்டியயழுப்புவதற்கு அரசு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. விமானநிலையம் அமைத்தல், அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணிப்பு, மாடி வீட்டுத் திட்டம் என அந்தப் பட்டியலை நீடித்துக்கொண்டே செல்லலாம்.

திவிநெகும, மகநெகும என பல வேலைத்திட்டங்களை மஹிந்த சிந்தனையின் கீழ் அரசு முன்னெடுத்தாலும் அவை பின்தங்கிய பகுதிகளுக்கு உரிய வகையில் சென்றடையவில்லை என்பது கசப்பான உண்மையாகும்.

எனவே, அத்தகைய பிரதேசங்களில் நிலவும் பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டி அவற்றை அரசினதும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளினதும் கவனத்துக்குக் கொண்டுவந்து மக்கள் குறை தீர்க்கும் நோக்கில் “மக்கள் குறை தேடி’ என்ற பகுதியை ஆரம்பித்துள்ளோம்.

அந்தவகையில், எமது முதல் பயணம் வடகொழும்பை மையப்படுத்தியதாக அமைந்தது. வடகொழும்பில் கதிரானவத்தையிலுள்ள 3ஆம் பிரிவு தோட்டத்தில் வாழும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக ஆராய்ந்தோம்.

மட்டக்குளிய, கதிரானவத்தையிலுள்ள 3ஆம் பிரிவுத் தோட்டத்தில் சுமார் 600 குடும்பங்கள் வாழ்கின்றன. 1990ஆம் ஆண்டு முதல் இப்பகுதியில் குடியேற்றங்கள் இடம்பெற்று வந்துள்ளன. கிராண்ட்பாஸ் உட்பட கொழும்பைச் சூழவுள்ள பகுதிகளில் வாழ்ந்த மக்களுள் ஒரு தொகுதியினரே அங்கு குடியேறியுள்ளனர். மக்கள் தொகை சுமார் 4 ஆயிரத்தைத் தாண்டும் வகையில் அமைந்துள்ளது. மூவின மக்களும் இப்பகுதியில் வாழ்ந்தாலும் பெரும் பான்மையாகத் தமிழர்களே இருக்கின்றனர். ஒருசில வீடுகள் சொகுசாக வடிவமைக்கப்பட்டிருந்தாலும் ஏனையவை வறுமையின் கோரத்தாண்டவத்தை வெளிப்படுத்தும் வகையில் உள்ளன.

குடியிருப்பொன்று எவ்வாறு அமையவேண்டும் என்பதற்கு சில வரையறைகள் இருக்கின்றன. இவை இல்லாவிட்டால் அதை குடியிருப்பு என மதிப்பிட முடியாது. கதிரானவத்த 3ஆம் தோட்டத்திலுள்ள பல வீடுகள் உட்கட்டமைப்பு வசதிகள் இன்றியே அமைக்கப்பட்டுள்ளன. மனிதன் வாழ்வதற்குத் தேவையான குறைந்தபட்ச அம்சங்கள் கூட அங்கு பஞ்சமாகவே இருக்கின்றன. ஒரு அறையை மாத்திரம் கொண்ட வீட்டில் பலர் வாழ்வதையும் காணக்கூடியதாக இருந்தது.

இது குறித்து மக்களிடம் வினவியபோது, கண்ணீர் மல்க அவர்கள் பதிலளித்தனர். தமக்கும் விடிவு கிடைக்காதா என்ற ஏக்கம் அவர்களைச் சூழ்ந்துகொண்டுள்ளது. போராடி உரிமைகளை வெல்லும் மனோபாவமும் அவர்களிடம் இல்லை. இல்லை என்று கூறுவதைவிட உரிமைகள் பற்றியும், மனிதனுக்கு இருக்கவேண்டிய சுதந்திரம் பற்றியும் அவர்களுள் பலர் அறிந்துவைத்திருக்க வில்லை என்றே சொல்ல வேண்டும்.

மீன்பிடி, மணல் அகழ்வு, மேசன் வேலை, ஓட்டோ ஓட்டுதல் ஆகியவற்றிலேயே இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் தங்கியுள்ளது. படித்தவர்கள் இல்லையயனக் கூறுவ தற்குமில்லை. எனினும், மக்கள் மத்தியில் விழிப் புணர்வை ஏற்படுத்து வதற்கு எவரும் முன் வருவதில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும். 1990 இல் இருந்து அப்பகுதியில் அவலநிலை தொடர்வதால் சோமாலியாவத்தை, எதியோப்பியா, கொரியா தோட்டம் என்றெல்லாம் இப்பகுதிக்கு பலரும் பலகோணங்களில் பெயர் சூட்டுகின்றனர். இது அங்கு வாழும் மக்களுக்குத் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்துகின்றது.

Picture-257-225x300.jpg

இவ்வாறு பல பிரச்சினைகள் தலைவிரித்தாடும் கதிரானவத்த 3 ஆம் பிரிவு தோட்டத்தில், ஜனநாயக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் எஸ்.இராஜேந் திரனின் முயற்சியால் “கஜராஜ உதயம்’ என்ற பாடசாலை உதய மானது. கொழும்பு மாநகர சபையின் கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் மேற்படி பாலர் பாடசாலையைச் சூழவுள்ள பகுதி மிகவும் அசுத்தமாக இருக்கின்றது.

பாடசாலையைச் சூழ காடு மண்டியிருப்பதுடன், சுத்திகரிக்கப்படாத வடிகானொன்றும் உள்ளது. அதிலிருந்து துர்நாற்றம் வீசுகின்றது. இதனால், அங்கு பயிலும் சிறார்களுக்கு சுகாதார ரீதியில் பிரச்சினை ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கின்றது. ஆகவே, இப்பகுதியை சுத்தப்படுத்தி ஒரு சிறுவர் விளையாட்டுப் பூங்காவை அமைத்துக் கொடுக்குமாறு அரசியல்வாதிகளிடமும், அரசிடமும் சம்பந்தப்பட்ட சபைகளிடமும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

அடுத்ததாக, பலகை வீடுகளுக்கு முன்னால் அமைந்துள்ள வடிகான் மக்களை அச்சுறுத்தும் எமனாக இருக்கின்றது. குப்பைகளுக்கு மத்தியில் இலகுவாக நுளம்பு பெருகக்கூடிய வகையில் நீர் தேங்கியுள்ளது. இதனால், டெங்குநோய் பரவும் அபாயம் உச்சத்திலேயே இருக்கின்றது.இதற்கு முன்னரும் பலருக்கு டெங்குநோய் வந்துள்ளது. ஏன் பலர் மரணித்தும் உள்ளனர்.

அத்துடன், வடிகானை சூழவுள்ள பகுதிகளில் வாழும் மக்களின் கால்களில் ஒரு மாற்றம் தென்படுகின்றது.( சொறி பிடித்ததுபோல்) சிலருக்கு யானைக்கால் நோய் கூட ஏற்பட்டு அவர்கள் இன்றும் அவதிப்படுகின்றனர். மழைகாலங்களில் அழுக்குநீர் வீடுகளுக்குள் புகுவதால் அகதிகளாக இடம்பெயர்ந்து பொது இடங்களில் தங்கவேண்டிய அவலமும் அவர்களுக்கு இல்லாமல் இல்லை.

நீர் தேங்கும்போது கானிலுள்ள மண்ணை மாத்திரமே அகழ்கின்றனர். இதனால், வீடுகள் சரிகின்றன. ஆகவே, வடிகானின் இரு பகுதிகளிலும் சீமெந்து அணை கட்டவேண்டும் என நாம் பல தடவைகள் கோரிக்கை விடுத்தோம். பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்­ நேரடியாக விஜயம் செய்து எமது அவலத்தைப் பார்வையிட்டார். இன்னும் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கவில்லை என்று ஆதங்கத்துடன் கருத்து வெளியிட்டார் குறித்த பகுதியிலுள்ள மனித அபிவிருத்திச் சங்கத்தின் தலைவராகச் செயற்படும் நூர்ஜான். தமிழர்கள் கணிசமாக வாழ்வதன் காரணமாகவே இப்பகுதியை அரசு கண்டுகொள்வதில்லை எனவும் தமிழர் தரப்பால் குற்றச்சாட்டு முன்வைக் கப்படுகின்றது.

கதிரானவத்தை 3 ஆம் பிரிவில் இந்த வடிகான் இறுதியில் களனி ஆற்றுடன் கலக்கின்றது. வடிகானிலிருந்து கழிவுநீர் செல்வதால் களனி ஆற்றின் நீர் மாசடைகின்றது என்று சூழலியலாளர்கள் கவலை வெளியிடுகின்றனர். இதேநிலை அப்பகுதியில் தொடருமானால், அப்பகுதி மக்கள் பலர் தொற்றுநோய்களுக்கு உள்ளாகும் அபாயம் இருக்கின்றது.

ஆகவே, மக்கள் குறை தீர்க்கப்படும் என மார்தட்டும் அரசு, இவர்கள் குறித்தும் கவனம் செலுத்தவேண்டும். மக்கள் பிரதிநிதிகளும் இவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அரசின் கவனத்துக்குக் கொண்டுசென்று மக்களுக்கு விடிவைத் தேடித்தர முன்வரவேண்டும்.

அதேவேளை, மலசலகூடப் பிரச்சினையும மக்களை வாட்டி வதைக்கின்றது. பல குடும்பங்களின் கழிவுகள் ஒரு கழிவுக் குழிக்குள் வருவதால் அது விரைவில் நிரம்பிவழிகின்றது. இதை உரிய காலத்துக்குள் சுத்தப்படுத்துவதற்கு நடவடிக்கç எடுக்கப்படுவதில்லை. இதனால், துர்நாற்றம் வீசுவதுடன், தங்களால் சுவாசிக்க முடியவில்லை என்று மூக்கை மூடியவாறு எம்மிடம் கருத்து வெளியிட்டார் 1990முதல் அங்கு வாழும் ஆரியவதி என்ற வயோதிபப் பெண்மணி.

குறித்த பகுதியில் வாழும் மக்களிடம் ஒற்றுமை இல்லை. ஒற்றுமையாக வீதியில் இறங்கிப் போராடினால் பிரச்சினை குறித்து அரசு கவனம் செலுத்தும். ஆனால், எவரும் முன்வருவதில்லை என்று மக்கள் பக்கம் இருக்கும் குறைகளைப் பட்டியலிட்டார் எஸ்.சுமனதாஸ. தோட்ட மக்கள் கிழமைக்கு ஒரு தடவை சிரமதான நடவடிக்கையில் இறங்கினால், நோய்த் தாக்கங்களிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். இதற்கும் எவரும் முன்வருவதில்லை என்று அப்பகுதி இளைஞர் ஒருவர் கவலையுடன் தெரிவித்தார். கொட்டும் மழை காலத்திலும், கொளுத்தும் வெயில் காலத்திலும் என அனைத்து காலப்பகுதியிலும் தமக்குப் பிரச்சினைதான் என எம்மிடம் கருத்து வெளியிட்ட பலர் குறிப்பிட்டனர்.

குறிப்பாக, பலகை வீடுகளில் முறையற்ற விதத்திலே மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு குறைப்பாட்டால் தீ விபத்து ஏற்படுமாயின், அனைத்து வீடுகளும் தீக்கிரையாகும் அபாயம் இருக்கின்றது. அடுத்ததாக குறித்த பகுதியில் வாழும் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகுவது பற்றி மக்கள் எம்மிடம் கருத்து வெளியிட்டனர்.

பல சவால்களுக்கு மத்தியில் நாம் வாழ்கின்றோம். எனினும், எமது வருங்கால சந்ததி போதையால் அழிந்துவிடும்போல் தெரிகின்றது. யஹரோயின், கே.ஜி.குடு, கஞ்சா எனப் பல போதைப்பொருட்களுக்கு அவர்கள் அடிமையாகிவிட்டனர். இதனால், தவறான வழியில் அவர்கள் செல்கின்றனர். கொள்ளை முயற்சியிலும் ஈடுபடுகின்றனர். எனவே, இப்பகுதியில் முக்கிய பிரச்சினையாகத் தலைவிரித்தாடும் போதைப்பொருள் பிரச்சினைகள் கட்டுப்படுத்த பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். மாறாக, இலஞ்சம் வாங்கிக்கொண்டு போதைப்பொருள் விற்பனையை அவர்கள் ஊக்குவிக்கக் கூடாது என்று ராசையா என்ற சின்னதுரை சற்று ஆதங்கத்துடனும், போதைப் பாவனையிலிருந்து இளைஞர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்புடனும் எம்மிடம் கருத்து வெளியிட்டார்.

இவ்வாறு பல பிரச்சினைகளுக்கு மத்தியிலும் என்றாவது ஒருநாள் தமக்கு விடிவு கிடைக்கும் என்ற ஏக்கத்துடனும் வாழும் இந்த மக்கள் அரசிடம் மாட மாளிகை கேட்கவில்லை. சொகுசு வாகனங்கள் கோரவில்லை. மாறாக, அடிப்படை வசதிகளுடன் வாழக்கூடிய வகையில் ஒரு வீடு, வாகனம் வரக்கூடியளவு ஒரு வீதி, முறையான வடிகால் திட்டம் ஆகியவற்றையே பல வருடங்களாகக் கேட்டு வருகின்றனர்.

எனவே, இவற்றைப் பெற்றுக்கொடுத்து அவர்களின் வாழ்க்கையை கட்டியயழுப்புவதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். அப்போதுதான் “ஆசியாவின் ஆச்சரியம்’ என்ற இலக்கை அடையலாம்.

http://sudaroli.com/?p=4198

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.