Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்புக்கான அழைப்பை செயலில் காட்ட ஜனாதிபதி முன்வர வேண்டும்!

Featured Replies

sumanthiran%2014.10.29.jpg

 

"தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதிகள் யார் என்பதை தற்போது ஜனாதிபதி உணர்ந்திருக்கின்றார். எமக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி தனது உரையில் கூறியவற்றை செயலில் காட்டவேண்டும்" என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். "வெளிநாட்டுப் பிரஜாவுரிமையுடன் இலங்கை வரும் ஒருவர் வடக்கிற்கு செல்வதற்கும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
 
இது குறித்து அரசிடமிருந்து இதுவரை எந்தவொரு விளக்கமும் இல்லை. இவ்வாறு வடக்கு செல்லும் வெளிநாட்டுப் பிரஜைகளுக்குப் புதிய கட்டுப்பாடுகளை பின்பற்றுவதன் மூலம் அரசு வட பகுதியை பிறிதொரு நாடாகப் பார்க்கிகின்றதா?" நாடாளுமன்றில் நேற்று நடைபெற்ற வரவு - செலவுத் திட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றில் உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேற்படி விடயங்களைத் தெரிவித்தார்.
 
அவர் தனது உரையில் முக்கியமாகத் தெரிவித்த விடயங்கள் வருமாறு:-
 
"மாகாணசபைகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதில் தாம் எத்தகைய நியாயத்தையும் காண்பதாக இல்லை என்று ஜனாதிபதி கூறினார். இருந்த போதிலும் அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தல் மற்றும் 13 இற்கும் அப்பாலும் செல்வதாக இந்தியப் பிரதமர், ஐ.நா. செயலாளர் நாயகம் உட்பட சர்வதேச சமூகத்தினருக்குப் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் அவர் உறுதியளித்திருக்கிறார். ஆனால், தற்போது திடீர் ஞானம் பிறந்தது போன்று மாகாண சபைகளுக்குக் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களைப் பகிர்வதில் நியாயமான காரணங்களைக் காணவில்லை என்கிறார்.
 
ஆகவே, அவரது உறுதிமொழிகளின் மதிப்பு என்னவென்பதற்கு இதுதான் சிறந்த வழிகாட்டியாகும். அந்த வகையில் இந்த வரவு - செலவுத் திட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா என்பதும் சந்தேகமே. யாழ்ப்பாணத்துக்கான யாழ்தேவி ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டமையை வரவேற்கிறோம். அதற்கு நிதியுதவி அளித்த இந்தியாவுக்கும் எமது நன்றிகள்.
 
ஆனால், யாழ்தேவி யாழ்ப்பாணம் வரும்போதே வெளிநாட்டவர்கள் வடக்குக்குச் செல்வதற்கும் புதிய கட்டுப்பாடுகள் வந்துவிட்டன. இன்றைய நிலைமையில் வெளிநாட்டவர்கள் வடக்குக்குச் செல்வதற்கு இரு விசா அனுமதிகள் தேவை. ஒன்று இலங்கைக்கு வருவதற்கு. இன்னுமொன்று வடக்குக்குச் செல்வதற்கு. வடக்கு எதற்காக வேறு நாடொன்றைப்போன்று உபசரிக்கப்படவேண்டும்?
வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் நாட்டின் ஏனைய பகுதிகளுக்குச் சுதந்திரமாகச் செல்ல முடிந்தபோதும் வடக்குக்கு மட்டும் அப்படிச் செல்ல முடியாமல் இருக்கிறது. இந்தப் புதிய கட்டுப்பாடு எதற்காக விதிக்கப்பட்டது என்று அரசிடமிருந்து இதுவரை எந்தத் தெளிவான பதிலும் வழங்கப்படவில்லை.
 
இவ்வாறு சொந்தங்களை வெளிநாட்டிலிருந்து சந்திக்க வருவோரைத் தடுக்கின்றமை வடக்கை வேறுபடுத்தி பார்ப்பதாக உங்களுக்குத் தெரியவில்லையா? இவ்வாறான செயற்பாடுகள் மூலம் வடக்கில் ஆயுத நடவடிக்கைகள் இருக்கின்றன, பயங்கரவாதம் மீண்டும் உருவெடுக்கிறது போன்ற தோற்றப்பாட்டை உருவாக்கி தேர்தலுக்காக தெற்கு மக்களை ஏமாற்றப் பார்க்கிறீர்கள்.
 
இதனால் வடக்கு மக்கள் எவ்வளவு அசெளகரியங்களை அனுபவிப்பார்கள் என்று நீங்கள் சிந்திக்கவில்லை. ஏனெனில், அவர்களை உங்களது மக்களாக நீங்கள் நினைக்கவில்லை. 2015 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்ட உரையின் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரைக் குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, பேச்சுகளில் கலந்துகொள்ளுமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.
 
ஜனாதிபதியின் அழைப்பினை வரவேற்கிறோம். தமிழ் மக்களின் உண்மையான பிரதிநிதி யார் என்பதை தற்போது ஜனாதிபதி உணர்ந்திருக்கின்றார். எமக்கு அழைப்பு விடுத்துள்ள ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட்டுள்ளதை செயலில் காட்டவேண்டும் என்பதுடன் அரசுக்குள் உள்ள பிளவுகளை அவர் முதலில் சரி செய்யவேண்டும். மேலும், சமர்ப்பிக்கப்பட்டிருப்பது 2015ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டமல்ல. அது தேர்தல் விஞ்ஞாபனமாகவே இருக்கிறது" - என்றார். -
 
 
 
 
  • தொடங்கியவர்

பிரபாகரனுக்கு தேவையானதையே இந்த அரசாங்கம் செய்கின்றது – சுமந்திரன்

 

sumanthiran_CI.JPG


தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு தேவையானதையே இந்த அரசாங்கம் செய்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 
வரவு செலவுத்திட்ட விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


வெளிநாட்டவர்கள் வடக்கிற்கு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். வடக்கினை ஏன் வெளிநாடு ஒன்றாக அரசாங்கம் கருதுகின்றது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


இலங்கைக்கு விஜயம் செய்யும் வெளிநாட்டவர்கள் இரண்டு வீசா பெற்றுக்கொள்ள வேண்டியிருப்பதாகவும், ஒன்று நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கும் எனவும் மற்றையது வடக்கிற்குள் பிரவேசிப்பதற்கு எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இவ்வாறான ஓர் நிலைமை ஏற்பட வேண்டும் என்றே பிரபாகரன் விரும்பியதாகவும் அதனையே அரசாங்கம் செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


வடக்கிற்கு பயணம் செய்வதற்கு தனியான அனுமதி எதற்கு என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


தமிழ் மக்களின் மெய்யான பிரதிநிதிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் என்பதனை ஜனாதிபதி ஒப்புக்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.


எனினும் அதற்கு அப்பாலான எந்த நடவடிக்கைகளையும் எடுக்க அரசாங்கமும், எதிர்க்கட்சிகளும் முனைப்பு காட்டவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.


அரசாங்கத்தின் போலிப் பிரச்சாரங்களைக் கண்டு மக்கள் ஏமாற்றமடைந்து விட மாட்டார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் மக்களுக்கு என்ன தேவை என்பது அரசாங்கத்திற்கு தெரியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/113018/language/ta-IN/article.aspx

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.