Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லையில் கரைவலைப்பாடு அனுமதியிலும் இனஅழிப்பு; அன்ரனி ஜெகநாதன்

Featured Replies

NPC_CI.jpg

முல்லை. மாவட்டத்தில் கரைவலைப்பாடுகளுக்கு அனுமதி வழங்குவது தொடர்பிலும் அரசு இன அழிப்பையே செய்துள்ளது என்று வடக்கு மாகாண சபையின் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.

 

வடக்கு மாகாண சபை அமர்வு நேற்று நடைபெற்றது. அதன்போது உறுப்பினர் ரவிகரனின் பிரேரணை தொடர்பில் வழிமொழிந்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

அவர் மேலும் தெரிவிக்கையில், 

 

1984ஆம் ஆண்டு யுத்தம் என்று கூறி தமிழ் மக்களை வெளியேற்றி விட்டு பின்னர் குறித்த பகுதியை சூனியப்பிரதேசம் என அடையாளப்படுத்தியவர்கள் அந்தக் காலப்பகுதியில் சிங்கள மீனவர்களுக்கு கரைவலைப்பாட்டு அனுமதியை வழங்கி விட்டனர். 

 

ஒரு கரைவலைப்பாடானது பரம்பரை பரம்பரையாக வருவதே ஆகும். எனினும்  சட்ட உரிமைகளை மீறி 84ஆம் ஆண்டு மக்களை 24 மணித்தியாலயத்திற்குள் வெளியேற்றுமாறு கூறிவிட்டு அங்கு சிங்கள மக்களை குடியேற்றி விட்டு கரைவலைப்பாட்டிற்கு அனுமதியை வழங்கியுள்ளனர்.

 

எனினும் அவர்களுக்கான குடும்ப அட்டை இருப்பது நீர்கொழும்பில் இங்கு குடும்ப அட்டையும் இல்லை. குடும்பமும் இல்லை. ஆனால் அனுமதி வழங்கப்பட்டு தொழில் செய்கின்றனர்.

 

எனினும் இங்குள்ள கரைவலைப்பாட்டிற்கு சொந்தமானவர்களுக்கு வழங்காது எமக்குரிய கரைவலைப்பாடுகளை சிங்கள மீனவர்களுக்கு வழங்கி விட்டனர்.

 

கொக்கிளாயில் அவ்வாறு செய்வார்கள் என்றால் எமக்கும் புதிய அனுமதிகளை வழங்க முடியும். எனவே இதிலும் அரசு இன அழிப்பினையே கையாண்டுள்ளது. 

 

தற்காலிகமானவே வழங்குவது என்று கூறினாலும் 2013 ஆம் ஆண்டு நிரந்தரமாக வழங்கி விட்டனர். எனவே தமிழ் மக்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

 

இதேவேளை, உறுப்பினர் ரவிகரன் முல்லைத்தீவு மாவட்டத்தில் 1984 ஆம் ஆண்டு தமிழ் மக்களது இடப்பெயர்வுக்குப்பின்னர் சிங்கள மீனவர்கள் மீள்குடியேற்றப்பட்டு கொக்குளாய்ப்பகுதியில் தமிழ் மக்களுடைய கரைவலைப்பாடுகளுக்கான அனுமதி சிங்கள மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

 

இதனால் தமிழ் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்களுக்கு கரைவலைப்பாட்டுக்கு அனுமதி வழங்குமாறு நீரியல் வள அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பிரேரணையினை சபையில் முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/113032/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.