Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக மீனவர்களுக்கு மரண தண்டனை இலங்கை நீதிமன்றம் தீர்ப்பு இந்திய அரசு தலையிட வேண்டும்! வைகோ

Featured Replies

தமிழக மீனவர்கள் ஐந்து பேருக்குத் தூக்குத் தண்டனை வழங்கி இலங்கை நீதிமன்றம் இன்று (30.10.2014) வழங்கி உள்ள தீர்ப்பு மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றது.

2011, நவம்பர் 28-ஆம் தேதி இராமநாதபுரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் எமர்சன், வில்சன், அகஸ்டன், லாங்லெட் மற்றும் பிரசாந்த் ஆகிய ஐந்து பேரும் கச்சத்தீவு அருகில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அவர்கள் எல்லை தாண்டி வந்ததாகக் கூறி சிங்களக் கடற்படை கைது செய்தது. ஆனால், போதைப்பொருள் கடத்தியதாகப் பொய்வழக்குப் புனைந்து சிறையில் அடைத்தது.

மீனவர்களை விடுதலை செய்யக் கோரி இராமேஸ்வரம் மீனவர்கள் மூன்று ஆண்டுகளாகப் பல போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த கொழும்பில் உள்ள உயர் நீதிமன்றம் தமிழக மீனவர்கள் ஐவருக்கும் மரண தண்டனை விதித்து இன்று தீர்ப்பு அளித்து உள்ளது.

இலங்கையில் நீதித்துறை என்பது இராஜபக்சேவின் கைப்பாவையாகத்தான் செயற்பட்டு வருகின்றது. தமிழக மீனவர்கள் 578 பேரை சிங்களக் கடற்படை சுட்டுக் கொன்றுள்ளது. தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும், கைது செய்து சித்ரவதைகள் செய்து சிறையில் அடைத்து வைப்பதும், மீனவர்களின் உயிர் உடமைகளைப் பறிப்பதும் சிங்களக் கடற்படைக்குப் பொழுதுபோக்காக ஆகிவிட்டது. இதன் உச்சமாகத்தான் இப்போது, நீதிமன்றம் தூக்குத்தண்டனை விதித்துள்ளது.

1934-ஆம் ஆண்டில் இருந்து இலங்கையில் எந்த நீதிமன்றமும் தூக்குத்தண்டனை தீர்ப்பு அளித்தது இல்லை. தற்போது தமிழக மீனவர்கள் ஐந்து பேருக்கு மரண தண்டனை அளித்து இருப்பதற்கு, தமிழ் இனத்தின் மீது இராஜ பக்சே கொண்டு இருக்கின்ற வெறுப்பும் காழ்ப்புணர்ச்சியும்தான் காரணம்.

தமிழக மீனவர்கள் மீது பொய் வழக்கு போட்டு, தூக்குத்தண்டனை விதிக்கக் கூடிய அளவுக்கு இராஜபக்சே கூட்டத்திற்குத் திமிரும் நெஞ்சழுத்தமும் ஏற்பட்டுள்ளதற்கு இந்திய அரசுதான் காரணம். முந்தைய காங்கிரஸ் அரசைப் போலவே, ஏன் அதைவிட ஒருபடி மேலே சென்று பாரதிய ஜனதா அரசு தமிழர்களுக்கு எதிரான வன்மத்தைக் கடைபிடித்து வருகின்றது.

ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த கொலைகாரன் இராஜபக்சேவுடன் கை குலுக்குவதும், இலங்கை அரசியல் உறவு பற்றிச் சிலாகிப்பதும் பா.ஜ.க. சார்பில் சில முகவர்களை அனுப்பி இராஜபக்சேவுக்கு பாராட்டுப் பத்திரம் வாசிப்பதும் தொடர்கின்றது. இந்திய அரசின் சார்பில் இராணுவ அதிகாரிகளை இலங்கைக்கு அனுப்பி வைத்து சிங்கள இராஜபக்சே அரசைப் புகழ்ந்து உரைப்பதும், பொருளாதார ஒப்பந்தங்களை வலுப்படுத்துவதும் தமிழர்களின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகின்றன. இதன் எதிரொலியாகத்தான் இலங்கை நீதிமன்றம் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு தூக்குத் தண்டனை விதித்து இருக்கின்றது.

இந்திய அரசு உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு தூக்குத் தண்டனையை இரத்து செய்து ஐந்து தமிழக மீனவர்களைக் காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்.

சிங்கள இனவெறியனுக்கு அஞ்சல் தலையா?

தமிழர்களைப் பூண்டோடு கரு அறுக்கத் துடிக்கும் இராஜபக்சேவுக்கு மோடி அரசு ஆதரவாக இருப்பது மட்டும் அன்றி, சிங்கள பௌத்தத் துறவி அனகாரிகா தர்மபாலாவுக்கு சிறப்பு அஞ்சல் தலையும் வெளியிட்டு உள்ளது. அக்டோபர் 26 ஆம் தேதி, குடியரசுத் தலைவர் மாளிகையில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, இந்த அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளார். மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளார்.

சிங்கள இனவெறிக் கொள்கையை வாழ்நாளெல்லாம் பிரதிபலித்து வந்த பௌத்தத் துறவி தர்மபாலாவுக்கு இப்போது அஞ்சல் தலை வெளியிட வேண்டிய தேவை என்ன?

சிங்களர்களே இலங்கையை ஆளப்பிறந்த ஆரிய வம்சம், ஏனைய தமிழர்களும், முஸ்லிம், கிருத்தவ மக்களும் சிங்கள இனத்துக்கு அடிமைகள் என்று கொக்கரித்தவர் தர்மபாலா. இவருடைய இனவெறிக் கருத்துகள்தான் சிங்கள தேசிய வெறிகொண்ட பொதுபலசேனா போன்ற அமைப்புகளை வழி நடத்துகின்றன.

இலங்கையில் இந்து, முஸ்லிம் மற்றும் கிருத்தவ சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் நடத்துவதைக் கண்டிக்காத இந்திய அரசு, பௌத்தத் துறவி அனகரிகா தர்மபாலாவுக்கு சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டு புகழாரம் சூட்டுகின்றது. பா.ஜ.க. அரசின் இத்தகைய போக்கு தமிழர்களுக்கு எதிரானது என்று எச்சரிப்பதுடன், பௌத்தத் துறவி தர்மபாலாவுக்கு சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டதற்குக் கடும் கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

http://www.pathivu.com/news/34978/57//d,article_full.aspx

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

உடனே விடுதலை செய்யப்பட்டு, தமிழர்களின் மீதான இலங்கையின் வன்ம போக்கை வன்மையாக கண்டிக்கப்படவேண்டும்.

வை கோவின் கருத்தும், கண்டன்மும், ஆதங்கமும் நியாயமானதுதான்.. ஆனால் தமிழக மக்களே மீனவ சமுதாயத்தை தங்களின் ஒரு அங்கமாக நினைப்பதில்லை. இத்தீர்ப்புக்கு ராமேஸ்வரம் பகுதியில் மட்டுமே எதிர்ப்பு எழுந்துள்ளது. ஜெ ஊழல் வழக்கில் கைதானபோது ஆர்பரித்து எழுந்து சீறிய தொண்டர்கள், உச்சு கொட்டிய மக்கள் இவ்விடயத்தில் பராமுகமாக இருப்பது விநோதமான முரண்பாடு.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக மீனவர்கள் ஐந்து பேருக்கு தூக்குத் தண்டனைக்குக் காரணமான 

சிங்கள அரசைக் கண்டித்தும், 

பால் விலை உயர்வைத் தமிழக அரசு ரத்து செய்யக் கோரியும், 

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

வைகோ அறிக்கை!

தமிழக அரசு ஆவின் பால் விலையை உயர்த்தி இருப்பது, பொதுமக்கள் மீது குறிப்பாக நடுத்தர ஏழை எளிய மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள தாங்க முடியாத பாரம் ஆகும். பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்குவதற்காக நுகர்வோருக்கு விற்பனை விலையைக் கூட்டுகிறோம் என்ற முதல் அமைச்சரின் கருத்து ஏற்கத்தக்கது அல்ல; நியாயம் அல்ல.

சாதாரணக் குடும்பங்கள் ஒரு லிட்டர் பாலுக்குப் பத்து ரூபாய் அதிகச் செலவு என்றால், குறைந்தபட்சம் மாதம் 300 ரூபாய் செலவு அதிகமாகிறது. பால் வினியோகத்தில் தமிழ்நாட்டில் வரலாறு காணாத ஊழலில் ஆளுங்கட்சியினர் ஈடுபட்டனர். ஆவின் நிறுவனத்தின் நிர்வாகச் சீர்கேடுக்கு இந்த ஊழல் முக்கியமான காரணம் ஆகும்.

இலவசங்களுக்குக் கோடி கோடியாகக் கொட்டிக் கொடுக்கும் தமிழக அரசு, பால் உற்பத்தியாளர்களுக்கு மானியம் வழங்கி கொள்முதல் விலையை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். அறிவிக்கப்பட்ட பால் விலை உயர்வைத் தமிழக அரசு ரத்துச் செய்ய வேண்டும்.

இராமேÞவரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த வில்சன், எமர்சன், அகÞடÞ, பிரசாத், லாங்லெட் ஆகிய ஐந்து தமிழக மீனவர்களுக்கு இலங்கையில் கொழும்பில் உள்ள உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்த தூக்குத் தண்டனை பேரிடியாக நம்மைத் தாக்குகிறது. 2011 ஆம் ஆண்டில் இந்த மீனவர்களை ஐந்து பேரையும் தங்கள் கடல் எல்லைக்குள் வந்ததாகக் கூறி, சிங்களக் கடற்படை கைது செய்தது. பின்னர், அவர்கள் போதைப் பொருள் கடத்தினார்கள் என்று அபாண்டமான பொய் வழக்குப் போட்டு, சிங்கள அரசு சிறையில் அடைத்தது. வழக்கு யாழ்ப்பாண நீதிமன்றத்தில் நடந்து கொண்டு இருந்தபோதே, குற்றப் பத்திரிகையை நீதிக்கு விரோதமாக கொழும்பு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

தமிழ் இனத்தையே கரு அறுக்கும் கொடிய நோக்கத்தோடு, இலங்கையின் இராஜபக்சே அரசு, தமிழ் இனப்படுகொலையை நடத்தியது. இந்த அக்கிரமத்தைச் செய்த சிங்கள அரசின் கடற்படை, தமிழக மீனவர்களைத் தாக்குவதும், படகுகளை நாசம் செய்வதும், கைது செய்து சிறையில் அடைப்பதும், சுட்டுக் கொல்வதும் அன்றாட வாடிக்கையாகி விட்டது. இதுவரை தமிழக மீனவர்கள் 578 பேர் சிங்களக் கடற்படையால்சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளனர்.

முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும் சரி, இன்றைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும் சரி, தமிழக மீனவர்களைப் பாதுகாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கொலைகார இராஜபக்சேவை நரேந்திர மோடி பதவி ஏற்பு விழாவுக்கு வரவழைத்துக் கொண்டாடியதும், தொடர்ந்து சிங்கள அரசோடு கொஞ்சிக் குலாவுவதும் கொடுத்த ஊக்கத்தால்தான், இராஜபக்சே அரசு திமிரோடு தமிழர்களுக்கு விரோதமாகச் செயல்படுகிறது.

இலங்கையில் நீதித்துறையின் சுதந்திரம் பறிக்கப்பட்டு விட்டது என்றும், அதிபரின் தலையாட்டி எடுபிடிகளே நீதிபதிகள் ஆக்கப்படுகிறார்கள் என்றும், ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் முன்னாள் தலைவர் நவநீதம் பிள்ளை அறிக்கையில் சுட்டிக்காட்டி இருந்தார். இராஜபக்சேயின் இச்சைப்படி இலங்கையின் நீதித்துறை ஆட்டுவிக்கப்படுகிறது. தமிழக மீனவர்களை மிரட்டி அச்சுறுத்துவதற்காக இந்தத் தூக்குத்தண்டனையை அறிவிக்கச் செய்து உள்ளது.

எனவே, மரண தண்டனை அறிவிப்பு தமிழக மீனவர்களை மட்டும் அல்ல, தமிழ்நாட்டின் கோடானுகோடி மக்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கின்றது.

தமிழக மீனவர்களுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கக் காரணமான இராஜபக்சே அரசைக் கண்டித்தும், உயர்த்தப்பட்ட பால் விலையைத் தமிழக அரசு செய்யக் கோரியும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், நவம்பர் 4 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று, காலை 10 மணி அளவில், தலைநகர் சென்னை வள்ளுவர் கோட்டத்திற்கு அருகில், என்னுடைய தலைமையில், கழகப் பொருளாளர் டாக்டர் மாசிலாமணி, துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா முன்னிலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்த அறப்போரில் பெருமளவில் கழகக் கண்மணிகள் பங்கேற்க வேண்டுகிறேன்!

வைகோ

பொதுச் செயலாளர்,

மறுமலர்ச்சி தி.மு.க

‘தாயகம்’ 

சென்னை - 8 

31.10.2014

 

https://www.facebook.com/TheVaiko/posts/775162599210355

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.