Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் இடப்பெயர்வு ஒக்ரோபர் 30,1995 - 19 வருடங்கள்

Featured Replies

Jaff%20displacw_CI.jpg

 (அக்டோபர் 30உடன் யாழ்ப்பாண இடப்பெயர்வு நடந்து 19வருடங்கள் ஆகின்றனஈழத் தமிழர்களின் வாழ்வில்மறக்க முடியாத அந்த இடப்பெயர்வு அவலத்தை பற்றியஇந்தப் பதிவை குளோபல் தமிழ் செய்திகள்  மீள் பிரசுரம்செய்யப்படுகிறது)

 

 

அன்று கந்தசஷ்டி விரதத்தின் கடைசி நாள்விடிந்த போதுசாதாரணமாத்தான் விடிந்ததுபலாலி இராணுவ முகாமிலிருந்துயாழ்ப்பாணத்தினை கைப்பற்ற இராணுவத்தினர் தாக்குதலைநடாத்தி வருவதும்அன்றைக்கு சில நாட்கள் முன்பாக அந்தநடவடிக்கையை முறியடிக்க புலிகள் மேற்கொண்ட நடவடிக்கைவெற்றியைத் தராமல் போனதும் அப்போதைய பரபரக்கும்செய்திகள்.

 

யுத்த முனையில் இராணுவத்தினரின் கைகள் ஓங்கியிருப்பதுபலருக்கும் தெரிந்திருந்தாலும் புலிகளின் இராணுவ நகர்வுகள்பற்றி யாருக்கும் எதிர்வு கூற முடியாதென்கிற நிலையில் எந்தஒரு யாழ்ப்பாண குடிமகனும் தானும் உறவும்ஒட்டுமொத்தமாய் இந்த நிலத்தை விட்டுப் பிரிவோம் என்றுநினைத்திருக்க வில்லை.

 

காலையில் பாடசாலைக்கு புறப்படுகின்றவன் மாலையில்சிலவேளைகளில் நான் திரும்பி வராது இருக்க கூடும் என்றுநினைத்திருப்பான்குண்டு வீச்சு விமானங்களின் இரைச்சல்கேட்டவன் இந்த விமானங்கள் வீசும் ஏதாவது ஒரு குண்டில்நான் செத்துப் போகலாம் என்று நினைத்திருப்பான்ஷெல்வீச்சுக்கள் அதிகமாகும் போது ஏதாவது ஒரு ஷெல் என்தலையில் விழுந்து யாரேனும் என்னைக் கூட்டி அள்ளிச்செல்லக் கூடும் என நினைத்திருப்பான்ஆனால்ஒரே இரவில்ஒன்றாய்க் கூடி வாழ்ந்த மண்ணைவிட்டுதூக்கியெறியப்படுவோம் என எவரும் நினைத்திருக்கமாட்டார்கள்.

 

ஆனால் இன்றைய மாலை அத்தனைபேரும் தங்கள்வேர்களைப் பிடுங்கி நடந்தார்கள்எங்கே போவதுஎன்னசெய்வது என்னும் எந்தச் சிந்தனையும் இன்றி உயிர் பிழைக்கவேண்டும் என்ற நோக்கோடு மட்டும் நடந்தார்கள்.

இரவு நெருங்குகிறதுஇன்றைக்கும் புத்தூர்ப் பகுதிகளில்சண்டை நடந்தது என பேசிக்கொள்கிறார்கள்மின்சாரம்இல்லாத அந்தக் காலத்து யாழ்ப்பாணம் மிகச் சீக்கிரமாகநித்திரைக்கு சென்று விடும்.

மணியிருக்கும்பரவலாக எல்லா இடங்களிலும் ஒலிபெருக்கிகட்டிய வாகனங்களில் அறிவிப்பு செய்கிறார்கள் புலிகள்.

 

யாழ்ப்பாணத்தை கைப்பற்றி பாரிய இன அழிப்புநடவடிக்கையை இராணுவம் மேற்கொள்ள இருக்கின்றதனால்உடனடியாக பாதுகாப்பான பிரதேசங்களான தென்மராட்சிவடமராட்சி வன்னிப் பகுதிகளுக்கு சனத்தை இடம்பெயருமாறுகோரியது அந்த அறிவிப்பு.

 

யாழ்ப்பாண குடாநாட்டில் அப்போதிருந்த அண்ணளவானமக்கள் தொகை 5 லட்சம்யாழ் குடாநாட்டினை வடபகுதியின்மற்றைய பிரதேசங்களுடன் இணைத்திருந்த வெறும் இரண்டுவீதிகளினூடாக 5 லட்சம் மக்கள் ஓர் இரவு விடிவதற்குள்கடந்து செல்ல வேண்டும் என்பதனை கற்பனை செய்தும் பார்க்கமுடியாது.

ஆனால் மக்களுக்கு அதற்கெல்லாம் நேரமிருக்க வில்லை.மூட்டை முடிச்சுக்களை கட்டி எல்லோரும் வீதிகளில் இறங்கஇறுகிப்போனது வீதி.

 

இப்போது நினைத்துப்பார்த்தால்புலிகள் அந்தவெளியேற்றத்தை திட்டமிட்டு நடாத்தி முடித்திருக்கலாமோஎன தோன்றுகிறதுஏனெனில் அந்த இடப்பெயர்வு முடிந்துஅடுத்த இரண்டு மாதங்கள் வரை யாழ்ப்பாணம் புலிகளின்கைகளில் தான் இருந்ததுஇடப்பெயர்வின் பின்னர் ஒரு பத்துபதினைந்து நாட்கள் வரை இடம் பெயர்ந்தவர்கள் மீண்டும்யாழ்ப்பாணம் சென்று பொருட்கள் எடுத்துவரஅனுமதிக்கப்பட்டிருந்தார்கள். 

ஆனால் எந்த விதமான முன் தீர்மானமும் இன்றிநெருக்கடியான நிலையிலேயே புலிகளும் இந்த முடிவினைஎடுத்திருந்தார்கள் என்பதற்கு மக்களோடு மக்களாக இடம்பெயர்ந்த புலிகளின் படையணிகளும்காயமடைந்துவைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோராளிகளும் சான்று.

அந்த இரவு மிகப்பெரும் மனித அவலத்தை சுமந்ததுஇனி வீடுவருவோமோ என்று உடைந்து போனவர்கள்எங்கே போவதுஎன்ற திசை தெரியாதவர்கள்வயதான அம்மா அப்பாஇவர்களை வீட்டிலே விட்டு வந்தவர்கள்நிறைமாதகர்ப்பிணிகள்முதியவர்களைச் சுமந்தவர்கள் என வீதியில் ஒருஅடி எடுத்து வைப்பதற்கு ஒரு மணி நேரம் ஆயிற்று.

 

தண்ணி கேட்டு அழுத குழந்தைகளுக்கு பெய்த மழையைகுடையில் ஏந்தி பருக்கியவர்கள்லொறிகளில்றேடியேற்றருக்கென வாளிகளில் தொங்கும் தண்ணீரை எடுத்துகுடித்தவர்கள்வீதியில் இறந்த முதியவர்களை அந்த சதுப்புநிலத்தில் குழி தோண்டி புதைத்தவர்கள் – உலகம் என்ற ஒன்றுபார்த்து ‘உச்’ மட்டும் கொட்டியது.

அடுத்த காலையே வானுக்கு வந்து விட்ட விமானங்கள்,நிலமையை இன்னும் பதற்றப்படுத்தியதுஅந்த வீதிக்குஅண்மையாக எங்கு குண்டு வீசினாலும் ஆயிரக்கணக்கில்பலியாக மக்கள் தயாராயிருந்தனர்.

24 மணிநேரங்களிற்கும் மேலாக நடக்க வேண்டியிருந்தது.நடந்தும் தங்க இடமெதுவும் இன்றி ஆலயங்கள்,தேவாலயங்கள்பஸ் நிலையங்கள் என கண்ணில் பட்டஇடங்களில் மக்கள் தங்கள் வாழ்க்கையைத் தூக்கிப்போட்டனர்.

காலங்காலமாய் வாழ்ந்த மண்ணை விட்டு ஒரே நாளில்நிர்ப்பந்தங்களால் தூக்கியெறியப்படின் அந்த வலிஎப்படியிருக்கும் என்பது அன்றைய நாளுக்கு மிகச்சரியாக 5வருடங்களிற்கு முன்பு யாழ்ப்பாணத்தை விட்டு முஸ்லீம்மக்கள் வெளியேற்றப்பட்ட போது எனக்கு தெரியவில்லை.ஆனால் அன்று புரிந்தது.

குறிப்புமுஸ்லீம் மக்கள் யாழ்ப்பாணத்திலிருந்துவெளியேற்றப்பட்டு இன்று 15 ஆண்டுகளும் முஸ்லீம்கள்அல்லாத யாழ்ப்பாண மக்கள் யாழ்ப்பாணத்திலிருந்துவெளியேறி இன்று 10 ஆண்டுகளும் நிறைகின்றனமுஸ்லீம்கள்வெளியெற்றத்திற்கு காரணமாயிருந்த புலிகள் பின்னர் பகிரங்கமன்னிப்பும் கவலையும் தெரிவித்து முஸ்லீம்களை மீளவும்யாழ்ப்பாணத்தில் குடியெற தடையேதும் இல்லை எனசொல்லியிருக்கிறார்கள்

நன்றி   சாரல்

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/113082/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.