Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிற்கதியான அரசியற்கைதிகளும் தமிழரின் போராட்டத்தின் போக்கும்

Featured Replies

Jail%208_CI.png

 

 

நகைப்பிற்கிடமான இலங்கையின் நீதித்துறை பற்றி வெளிக்கொண்டு வருவது  கட்டாய பணியாக இதுவரை வெளியாகிய ஏழு பாகங்களிலும் தொடர்ச்சியாக பட்டவர்த்தனமாக சொல்லி வந்தோம். இந்த வாரம்,அரசியற்கைதிகள் விவகாரமும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் என்ற சாரத்தில் விடையங்களை உற்று நோக்குவோம்.

 

அரசியற்கைதிகள் விவகாரமும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பும்:-

2011ஆம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் மகசின் சிறைச்சாலைக்கு சென்று எமது அரசியற்கைதிகளை பார்வையிட்டு அவர்களது குறைகளை கேட்டறிந்து கொண்டார்கள். அப்போது அரசியற்கைதிகளால் தமிழ் தேசிய கூட்டமைப்பினிடம் சில விடயங்களை நிறைவேற்றுமாறு அதிக சிரத்தையுடன் சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. அவையாவன ;

 

 

·         வழக்குகளிற்கான செலவுகளை ஏற்படுத்திக் கொடுத்தல்

 

·         வழக்குரைஞர்களை ஒழுங்குபடுத்தி கொடுத்தல்

 

·    அவர்களின் நிற்கதியான குடும்பங்களிற்கான வாழ்வாதார  உதவி

 

·         விடுதலைக்கு பின்பான சமூக மீளிணைப்பு

 

·         சக சிங்கள கைதிகளினதும் சிறைச்சாலை நிர்வாகத்தினதும் இனவெறி தாக்குதலிலிருந்து தம்மை காப்பாற்றும் படியாக, அரசியற்கைதிகளிற்கான சிறையை வடக்கு கிழக்கிற்கு மாற்ற நடவடிக்கை எடுத்தல். இயலாத பட்சத்தில் எங்காவது தனியாக தடுத்து வைக்க நடவடிக்கை எடுத்தல். 

இதற்குரிய நடவடிக்கைகளை தாம் நிச்சயம் முன்னெடுப்பார்கள் என உறுதியளித்து சென்றார்கள் கூட்டமைப்பினர்.

 

 

பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தனது தனிப்பட்ட ரீதியிலான சொந்த செயற்பாடாக, வழக்குகளிற்கான வழக்குரைஞர்களை  ஏற்பாடு செய்து அதற்கான செலவீனங்களை தான் பொறுப்பெடுப்பதாக முன்வந்தார். இதனை செயற்படுத்துவதற்காக தனது பத்திரிகையில் முன்பு பணியாற்றிய ஒருவரை நியமித்தார்.

 

இதன்படி ஜனகன் என்ற வழக்குரைஞரால் முன்னெடுக்கப்பட்ட வழக்கிற்கான செலவீனங்களை பொறுப்பெடுத்த சரவணபவன், ஓரிரு தடவைகள் மட்டுமே வழக்குரைஞரிற்கான கட்டணத்தை செலுத்தி விட்டு மூன்று தவணைக்கு மேலாக வழக்குரைஞரிற்கான கட்டணத்தை செலுத்தவில்லை. இதனால் நீதிமன்றத்திற்கு சமூகமளித்த சட்டத்தரணி ஜனகன் குற்றவாளிக்கூண்டில் நின்ற அரசியற்கைதியிடம் சென்று தன்னால் கட்டணம் இல்லாமல் வழக்கில் ஆயராக முடியாது என்று கூறிவிட்டு, அந்த அப்பாவி அரசியற்கைதியை பரிதவிப்பு நிலையில் விட்டு சென்றுள்ளார்.

 

இப்படி கேவலமான அசிங்கமாக பல அப்புக்காத்தர்கள் தமிழர்களாக இருப்பது எமக்கு சகிக்க முடியாத வரலாற்று வேதனையை தந்தும் தந்துகொண்டும் இருக்கிறது.

 

இவ்வாறான நடவடிக்கைகள், உண்மையில் சரவணபவன் இதய சுத்தியுடன் அரசியற்கைதிகள் விடையத்தில் செயற்பட முன்வந்தாரா அல்லது இதனை தனக்கான வியாபாரமாகவும் அரசியல் முதலீடாகவும் பயன்படுத்த முயன்றாரா என்ற சந்தேகத்தை பலரிடத்தில் ஏற்படுத்தாமல் இல்லை.

 

சந்தித்து சென்ற ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள், தாம் வழங்கிய உறுதி மொழிகளை செல்லும் வழியிலேயோ அல்லது இந்தியா சென்று வரும் களைப்பிலேயோ மறந்துவிட்டனர். ஆனாலும் தேர்தல் காலங்களில் அரசியற்கைதிகள் விடையம் பற்றி பேசி, தமது வாக்கு வங்கியை வளப்படுத்தி கொள்கின்றனர்.

 

கௌரிசங்கரி தவராசா, ரெமீடியஸ் மற்றும் அன்ரன் புனித நாயகம் போன்ற சட்டத்தரணிகளை தவிர வேறு எந்த சட்டத்தரணியும் பெருமளவு முற்பணம் செலுத்தபாடாமல் வழக்கிற்கு ஆயராக மாட்டார்கள். இதில் சில சட்டத்தரணிகளோ பெருமளவு பணத்தை பெற்றுக்கொண்டும் வழக்கிற்கு ஆயராவதில்லை. கொழும்பிலுள்ள பிரபலமான, திறமையான பல சட்டத்தரணிகள் தமிழர்களாயிருந்தும் அவர்கள் அரசியற்கைதிகள் தொடர்பான வழக்குகளில் ஆயராவதில்லை என்ற ஒரு கொள்கையை வைத்துள்ளனர். ஆம் இவர்கள் அப்புக்காத்தர்கள் தான்.

 

ரெமீடியஸ் மற்றும் அன்ரன் புனித நாயகம் போன்ற சட்டத்தரணிகள் பலத்த அச்சுறுத்தல்களின் மத்தியிலும் எமது அரசியற்கைதிகள் விடையத்தில் முன்னுதாரணமாக செயற்பட்டமை நன்றியுடன் நோக்கப்பட வேண்டியது.

கூட்டமைப்பு தமிழருக்கு அரசியல் விடுதலையை பெற்றுத்தரக்கூடியதல்ல என்பதே நிதர்சனம். அவர்கள் மக்கள் மயப்பட்ட போராட்டங்களை முன்னெடுக்கும் திராணியற்றவர்கள்.

 

அவர்கள் போராளிகள் அல்ல. தமிழ் மேட்டுக்குடி அரசியலின் தொடர்நிலை தான் அவர்கள். எனவே மக்கள் விடுதலைக்காக போராடாமல், கூட்டமைப்பிற்கு வாக்களித்து விட்டு காத்திருப்பது தான் தவறு. மக்கள் மயப்பட்ட போராட்டத்தை முன்னெடுக்கும் ஒரு புதிய தலைமையின் வருகை இதுவரை சாத்தியமின்றி இருப்பதற்கு பூதாகரமான இராணுவ இயந்திரமும் அதனது புலனாய்வு கட்டமைப்பும் காரணமாய் இருக்கிறது. எனவே அடுத்த கட்ட தமிழரின் விடுதலை பாதையை இனி வரும் ஒரு புரட்சிகரமான தலைமையாலே முன்னெடுக்க முடியும். அதனை செயற்படுத்தும் களத்தில் குதிக்காமல், வெறுமனே எமது ஒட்டு மொத்த இனத்தின் இயலாமையை இயலாவாளியான கூட்டமைப்பின் மீதான விமர்சனமாக பதிவு செய்து விட்டு அரசியல் மேதாவித்தனமாக நினைத்துக் கொள்ளும் புத்திசீவிகளே தமிழ் மக்கள் மத்தியில் பெரும்பாலும் இருக்கின்றனர் என்பது இன்னும் பாரிய சோகம்.

 

கூட்டமைப்பு அரசியல் சுதந்திரத்தை தமிழ் மக்களிற்கு பெற்றுக் கொடுக்க முடியாத ஒரு அமைப்பு என்றும் அவர்களிடம் அவற்றினை எதிர்பார்ப்பது பயனற்ற ஒரு விடையம் என்ற நடைமுறை எதார்த்தத்தை நன்கு புரிந்தவர்களாக, நாம் கூட்டமைப்பினால் எந்தவொரு சட்ட சிக்கலும் இன்றி ஈடுபடக்கூடிய அரசியற்கைதிகள் விவாகாரம் சம்பந்தமாக, அவர்கள் எப்படி செயலாற்றலாம் என்ற திட்டத்துடன் முன்வைக்கின்றோம். தமிழ் மக்களின் அரசியல் வெற்றிடத்தை வாக்குகளாக்கும் இவர்கள், அரசியல் அனாதைகளான தமிழ் மக்களிற்காக அரசியற்கைதிகள் விவாகாரம் போன்றவற்றிலாவது திட்டமிட்டு அதனை முன்னிலைப்படுத்தி செயற்படுத்தியாக வேண்டும்.

 

அரசியற்கைதிகள் விவகாரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்யக்கூடிய, செய்தேயாக வேண்டிய விடையங்கள் வருமாறு;

 

அரசியற்கைதிகளினதும் அவர்களது குடும்பங்களினதும் நலவாழ்வை ஏற்படுத்த ஒரு நிதியம் ஒன்றை தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கி, அதன் மூலம் அரசியற்கைதிகள் சம்பந்தமான பல விடையங்களை திறம்பட செயற்படுத்தலாம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்தவர்களாக திறமையான சட்டவாளர்கள் பலர் உள்ளனர். ஆகவே இவர்கள் ஒரு வழக்குரைஞர்கள் குழாமை உருவாக்கி வழக்குகளிற்கு ஆயராகலாம்.

 

இவர்கள் அடிக்கடி இந்தியா சென்று வரும்போது, இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் தொடர்ச்சியாக அனைத்து அரசியற்கைதிகளும் விடுதலை செய்யப்பட்டமையை சுட்டிக்காட்டி, இன்றையை அரசியற்கைதிகளின் விடுதலையை முதன்மைப்படுத்தி, அதனை சாத்தியமாக்கலாம்.  

 

சிறந்த ஆன்மீகவாதியும், கணவன்-மனைவி உவமையை கையாளுவதில் முனைப்புக்காட்டுபவரும், முன்னால் உச்ச நீதிமன்ற நீதிபதியும், இந்நாள் வடமாகாண முதலமைச்சருமான விக்னேஸ்வரன் அவர்கள் அனைத்து சட்டங்களும் அக்கு வேறு ஆணி வேறாக கற்றுத்தேர்ந்த புலமையாளன் என்ற வகையில் அரசியற்கைதிகள் விவகாரத்தில் செயற்பட்டு, அவர்களின் விடுதலையை சாத்தியமானதாக்கலாம். அவ்வாறு அவர் செயற்படாது கள்ள மௌனம் காப்பதனை என்னவென்று சொல்லலாம்?  

 

அரசியற்கைதிகளிற்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் என்று போலி நம்பிக்கையூட்டி அவர்கள் விடுதலையாக முயலும் வீரியத்தை இல்லாது செய்து, அவர்களை நிரந்தரமாகவே சிறையில் வாடச்செய்யும் சிந்தை மங்கிய செயலை தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்வதை நிறுத்த வேண்டும். 

 

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/113139/language/ta-IN/article.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.