Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இம்முறையும் நாம் ஏமாற்றப்பட்டால் கிருமிநாசினிகளை அருந்தி தற்கொலை செய்வதைத் தவிர வேறுவழியில்லை

Featured Replies

மீரியபெத்த பெருந்­தோட்­டத்தில் இடம் பெற்ற பாரிய மண்­ச­ரிவில் பெரிதும் பாதிக்­கப்­பட்டுஇ பூனா­கலை தமிழ் மகா வித்­தி­யா­ல­யத்தில் தஞ்சம் அடைந்­தி­ருப்­பவர்கள். வட மாகாண சபை முதல்வர் சி.வி.விக்­கி னேஸ்­வ­ர­னிடம் தமக்கு வள­மான வாழ்­வினை ஏற்படுத்துவதற்கு துரித நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளும்­படி மன்­றாடிக் கேட்டுக் கொண்­டனர்.

CV.jpg

தஞ்சம் அடைந்­தி­ருக்கும் எம்மை எந்த உத­வி­களும் செய்­யாமல் இங்­கி­ருந்து வெளி­யேற்றி விடு­வார்கள் போல் தெரி­கின்­றது. நாம் நடுத்தெரு­விற்கு தள்­ளப்­பட்டு விடுவோமோ என்ற அச்சம் எம்­மிடம் இருந்து வரு­கின்­றது. நாம் ­படும் கஷ்டம் போன்று உயி­ருடன் இருந்து வரும் எமது பிள்­ளை­களும் எம்மைப் போன்று கஷ்­டப்­ப­டக்­கூ­டாது. அதற்­கான ஒழுங்­கு­களை நாங்கள் மேற்­கொள்ள வேண்­டியிருக்கிறது.

நீங்கள் எம்மை பார்க்க வரு­வதை கேள்­வி­யுற்ற நாம் உங்­களை எதிர்­பார்த்து காத்­தி­ருந்தோம். ஏற்­க­னவே நாம் ஏமாற்­றப்­பட்­டு­விட்டோம். இனி­மேலும் அந்­நிலை எமக்கு ஏற்­ப­டக்­கூ­டாது.

இம்­மு­றையும் நாம் ஏமாற்­றப்­பட்டு விடு­வோ­மானால் கிரு­மி­நா­சி­னி­களை அருந்தித் தற்­கொலை செய்து கொள்­வ­தை­விட வேறு வழி எமக்குத் தெரி­ய­வில்லை.

நாம் இங்­கி­ருந்து வெளி­யேறும் போது சொந்தக் காணியில் சொந்த வீட்டில் வாழும் நிலை­யினை ஏற்­ப­டுத்திக் கொடுக்க உங்­க­ளா­லான உத­வி­களை எமக்கு நல்கும் படி கேட்டுக் கொள்­கின்றோம் என்று முகாமில் தங்கியுள்ள எம்.சின்­னையாஇ என்.தங்­க­ராஜாஇவி.ஆண்டிஇ கே.தெய்­வானை உள்­ளிட்ட பலர் முதல்­வரின் கரங்­களை பற்றி மன்­றாடிக் கேட்டு கொண்­டனர்.

இதைக் கேட்ட வடக்கு முதல்வர் பெரும் வேத­னை­யுற்­றதை அவ­தா­னிக்க கூடி­ய­தாக இருந்­தது. அவர் அருகில் ஜன­நா­யக மக்கள் முன்­னணியின் தலைவர் மனோ­க­ணே­சனும் கவலை தோய்ந்த நிலையில் காணப்­பட்டார்.

வடக்கு முதல்வர் தம­து­ரையில் ;

இங்­கி­ருந்து மக்கள் வெளி­யேறும் போது அவர்­களின் விருப்­பின்­படி சொந்த வீட்டில் வாழக்­கூ­டிய சூழலில் வெளி­யேற வேண்டும். அத­னையே நாமும் விரும்­பு­கின்றோம்.

200 வருட கால வர­லாற்றைக் கொண்ட இம் மக்கள் தொடர்ந்தும் கண்­ணீரும் கம்­ப­லை­யுமாக இருந்து வரு­வது கண்டு வேத­னை­ய­டை­கின்றேன். இந்­நாட்டை வள­பப்­ப­டுத்­திய மலை­யக மக்கள் வள­மான வாழ்­வினை வாழ வேண்டும். அதற்­காக இந்­நாட்டின் அரசை வலி­யு­றுத்தி கூடிய அழுத்­தங்­களை கொடுப்போம்.

இம் மக்­களின் அவலம் தற்­போது இந்­நாட்டின் மூலை முடுக்­குகள் மட்­டு­மின்றி சர்­வ­தே­சத்­திற்கே தெரிந்­துள்­ளது. அத­னாலேயே சர்­வ­தேச அர­சுகள் இம் மக்­களின் மேம்­பாட்­டிற்கு பூரண ஒத்­து­ழைப்­புக்­க­ளையும் நிதி உத­வி­க­ளையும் வழங்க முன்­வந்­துள்­ளன.

அத்­துடன் எமது வட மாகாண சபையும் பாதிக்­கப்­பட்­டி­ருக்கும் மலை­யக மக்­களின் துயரில் பங்கு கொள்­கின்­றது. மலை­யக மக்கள் தனித்­து­வி­டப்­ப­ட­வில்லை. இம் மக்­க­ளுடன் நாமும் இருக்­கின்றோம்.

லயன் வாழ்க்கை முறை இனியும் வேண்டாம். சொந்த காணியில் சொந்த வீட்டில் அம் மக்கள் அனைத்து வச­தி­க­ளுடன் வாழ வேண்டும். எம்மால் முடிந்த உத­வி­களை இன்று வழங்­கு­கின்றோம். தொடர்ந்தும் உத­வி­களை வழங்க காத்­தி­ருக்­கின்றோம் என்றார்.

அடுத்து மனோ­க­ணேசன் பேசு­கையில்,

மீரியபெத்த சம்­பவம் முழு மலை­ய­கத்­திற்கும் விடி­வினை ஏற்­ப­டுத்­தக்­கூ­டி­ய­தா­கி­யுள்­ளது. இவ்­வி­டி­விற்கு மீரியபெத்த சம்­ப­வத்தில் இறந்­த­வர்கள் அனை­வரும் மலை­யகத் தியா­கி­க­ளா­கி­விட்­டனர்.

பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு இலங்கை அரசு பெரி­தாக எதையும் செய்ய தேவை­யில்லை. சர்­வ­தே­சத்­தி­லி­ருந்து கிடைக்கும் நிதியே அள­விற்கு மிஞ்­சி­யுள்­ளது.

எம் மக்களுக்கு சொந்தக் காணிஇ சொந்தவீடு வழங்குவதில் இனி எத்தாமதங்களும் இல்லை. எமது மக்களின் அவலம் புலம் பெயர்ந்தவர்களுக்கும் சர்வதேசத்திற்கும் தெரிவதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளேன். அதன் ஆரம்பக் கட்டம் வடக்கு முதல்வர் மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரை இங்கு கூட்டிவந்ததாகும் என்றார்.

 

http://virakesari.lk/articles/2014/11/05/%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0

  • தொடங்கியவர்

துக்கப் பகிர்வு...

 

1(274).jpg

கொஸ்லந்த, மீரியபெத்த பகுதியில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை வட மாகாண சபை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும், மேல் மாகாண சபை உறுப்பினருமான மனோ கணேசன், மத்திய மாகாண சபை உறுப்பினர் வேலு குமார் ஆகியோர் இன்று (04) பார்வையிட்டனர். அதனைத் தொடர்ந்து இவர்கள் அனைவரும் கொஸ்லாந்தை ஸ்ரீ கணேசா மகா வித்தியாலயத்திலும், பூனாகலை இல:01 மற்றும் இல:02 பாடசாலைகளிலும் தங்கியிருந்த பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்டனர். இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம். (படங்கள் - எஸ்.தியாகு)
2(148).jpg

 

3(109).jpg
4(63).jpg

 

5(31).jpg

 

6(27).jpg

 

7(8).jpg

 

 

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-11-11-34-08/131996-2014-11-04-09-29-55.html

  • தொடங்கியவர்

மலையக அரசியல்வாதிகள் சுயநல அரசியல் செயற்பாடுகளை கைவிட்டு மக்களுக்கு வீட்டுத்திட்டங்களை அமைத்துக் கொடுக்க முன்வரவேண்டுமென வடமாகாணசபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.   மண் சரிவில் பாதிக்கப்பட்ட மீரியபெத்த பகுதிக்கு நேற்று விஜயம் செய்த வட மாகான முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் தினக்குரலுக்கு தெரிவிக்கையில்: - See more at: local/ktxrtxmuxw174054f5f4071f9495kwno4aca32ad5285fef87b78646ttusi#sthash.STYfOeBR.dpuf

 

 

 

 


http://thinakkural.lk/article.php?local/ktxrtxmuxw174054f5f4071f9495kwno4aca32ad5285fef87b78646ttusi

Edited by Athavan CH

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.