Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்?: பேராசிரியர் ஏ.எஸ்.சூசையானந்தன்

Featured Replies

fishermen(1)(2).jpg-யோ.வித்தியா

இலங்கையில் இருந்து மீன் கொள்வனவை தடை செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் முறையற்ற அறிவிக்கப்படாத மற்றும் ஒழுங்கமைக்கப்படாத மீன்பிடி முறைகளுக்கு எதிரான அமைப்பு (ஐடடநபயடஇ ரசெநிழசவநன யனெ ரசெநபரடயவநன)  ஆகியன, இந்திய மீனவர்களின் அத்து மீறல்களையும் கண்டு மௌனமாக இருப்பது ஏன்? என யாழ். பல்கலைக்கழக புவியியல் துறை பேராசிரியர் ஏ.எஸ்.சூசையானந்தன் புதன்கிழமை (05) கேள்வியெழுப்பியுள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

இலங்கையிலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கான மீன் ஏற்றுமதி தடை செய்யப்பட்டமையால் இலங்கை அரசாங்கத்திற்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இலங்கை மீனவர்கள் மட்டுமன்றி இந்திய மீனவர்களும் தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் மற்றும் படகுகளை பயன்படுத்தி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுகின்றார்கள். இதனால் கடல் வளம் அழிக்கப்படுவதோடு மீன்வளமும் அழிக்கப்படுகிறது.

மன்னார், பள்ளிமுனை, வல்வெட்டித்துறை, குருநகர் ஆகிய இடங்களில் இன்று வரை றோலர் முறையை பயன்படுத்தியே மீன்பிடிக்கப்படுகிறது. யாழ் மாவட்டத்தில் 100 இழுவைமடி மீன்பிடி கருவிகள் தற்போது உள்ளன. 

அத்துடன் படுப்பு வலை, சிறகு வலை. டைனமற் போன்ற கடல் வளத்தை அழிக்கின்ற உபகரணங்களும் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் கடற் பாறைகள், கடற்தாவரங்கள் என்பவையும் அழிக்கப்படுவதோடு மீன் பெருக்கத்திற்குரிய சூழலையும் அழித்து விடுகிறது.

இந்த உபகரணங்களை பயன்படுத்தக்கூடாது என நாரா (ண்யுசுயு) நிறுவனம் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இருந்தும் மீனவர்கள் இவற்றை பயன்படுத்துகின்றனர். அது மட்டுமன்றி இந்திய மீனவர்களும் அத்துமீறி இந்த மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்துகின்றனர்.

இலங்கை மீனவர்கள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடுவதாலேயே தாம் இலங்கையிலிருந்து மீன்களை இறக்குமதி செய்வதை தடை செய்வதாக முறையற்ற அறிவிக்கப்படாத மற்றும் ஒழுங்கமைக்கப்படாத மீன்பிடி முறைகளுக்கு எதிரான அமைப்பு தெரிவித்துள்ளது. அத்துமீறும் இந்திய மீனவர்களுக்கு எதிராகவும் அந்த அமைப்பு செயற்படவேண்டும் எனவும் அவர் மேலும் கேட்டுக்கொண்டார். 

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/132126-2014-11-05-09-42-19.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.