Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்ரீலங்கா எதிர் இங்கிலாந்து ஒரு நாள் போட்டி தொடர் செய்திகள்

Featured Replies

  • தொடங்கியவர்

இலங்கைக்கு எதிரான 5 ஆவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்திற்கு ஆறுதல் வெற்றி
 

 

இலங்கை அணிக்கெதிரான 5 ஆவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளால் ஆறுதல் வெற்றிபெற்றுள்ளது.

கண்டி பள்ளேகலயில் நேற்று இடம்பெற்ற இலங்கை - இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 ஆவது ஒருநாள் போட்டி மழையால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று தொடர்ந்து இடம்பெற்றது.

நேற்று ஆரம்பமான இப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி இலங்கை அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 239 ஓட்டங்களைப் பெற்றது.

நேற்றைய தினம் மழை கொட்டியதால் ஆட்டத்தை தொடர முடியவில்லை. இதையடுத்து விதிமுறைப்படி இந்த ஆட்டம் மாற்று நாளுக்கு (அதாவது இன்று) தள்ளிவைக்கப்பட்டது.

 

இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஆரம்பித்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 240 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடியது.

இதேவேளை நேற்றைய தினம் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சார்பாக குமார் சங்கக்கார 91 ஓட்டங்களையும் அணித் தலைவர் மெத்யூஸ் 40 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

 

இங்கிலாந்து அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் 47 ஓட்டங்களைக் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்நிலையில் 240 என்ற வெற்றி இலக்கை நோக்கி இன்று துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி சார்பாக ஜோ ரூட் ஆட்டமிழக்காது 104 ஓட்டங்களையும் டெய்லர் 68 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க இங்கிலாந்து அணி வெற்றி இலக்கை அடைந்தது.
இரு அணிகளுக்குமிடையிலான 7 போட்டிகள் கொண்ட தொடரி;ல் இலங்கை அணி 3-2 என முன்னிலை பெற்றுள்ளது.

 

http://www.virakesari.lk/articles/2014/12/11/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-5-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF

  • தொடங்கியவர்

6,7 ஆவது ஒருநாள் போட்டிகளில் சந்திமல், கருணாரத்ன மற்றும் சீக்குகே
 

 

இங்கிலாந்து அணிக்கெதிரான 6 ஆவது மற்றும் 7 ஆவது ஒருநாள் போட்டிகளில் டினேஸ் சந்திமல், திமுத்து கருணாரத்ன மற்றும் சீக்குகே பிரசன்ன ஆகியோர் 11 பேர் கொண்ட பட்டியலில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

குசல் ஜனித் பெரேரா, அஜந்த மென்டிஸ் மற்றும் தம்மிக்க பிரசாத் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

 

அதன்படி இங்கிலாந்து அணிக்கெதிரான இரு ஒருநாள் போட்டிகளில் விளையாடும் வீரர்களின் விபரங்கள் வருமாறு:

அஞ்சலோ மெத்தியூஸ்( அணித் தலைவர்), டில்ஷான், மஹேல ஜெயவர்தன, குமார் சங்கக்கார, லகிரு திரிமன்னே, திமுத்து கருணாரத்ன, டினேஸ் சந்திமல், ஜீவன் மென்டிஸ், சச்சித்திர சேனாநாயக்க, சீக்குகே பிரசன்ன, திஸர பெரேரா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இரு  அணிகளுக்குமிடையிலான 6 ஆவது ஒருநாள் போட்டி எதிர்வரும்13 ஆம் திகதி பள்ளேகலயில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/articles/2014/12/12/67-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%87

  • தொடங்கியவர்

தீர்க்கமான போட்டியில் இலங்கை, இங்கிலாந்து மோதல்: ஆரம்ப துடுப்பாட் வீரராக மஹேல
 

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான தீர்க்கமான 6ஆவது ஒரு நாள் போட்டி தற்போது கண்டி பல்லேகல அரங்கில் இடம்பெற்று வருகின்றது. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடும் இலங்கை அணியில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக மஹேல ஜனயவர்தன, டில்சானுடன் களமிறங்கியுள்ளார்.

இரு அணிகளுக்குமிடையிலான 7 போட்டிகள் கொண்ட தொடரி;ல் இலங்கை அணி 3-2 என முன்னிலை பெற்றுள்ளது. எனவே இன்றை போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் மும்முரம் காட்டும் என்பதால் பரபரப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

http://www.virakesari.lk/articles/2014/12/13/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B9%E0%AF%87%E0%AE%B2


சங்காவின் 20ஆவது ஒருநாள் சதம்
சனிக்கிழமை, 13 டிசெம்பர் 2014 13:29

இலங்கை அணியின் குமார சங்கக்கார தனது 20ஆவது சர்வதேச ஒருநாள் சதத்தை பெற்றுக்கொண்டார்.

கண்டி பல்லேகலையில் நடைபெறும் இங்கிலாந்து அணிக்கெதிரான 6ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியிலேயே அவர் சதம் பெற்றுள்ளார்.

 

http://www.tamilmirror.lk/2010-08-12-10-42-03/2010-08-12-10-45-15/135865--20---.html

  • தொடங்கியவர்

4uw6q9.png

  • தொடங்கியவர்

குமார் சங்ககாரா உலகக்கிண்ண போட்டிகளின் பின்பு ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற இருப்பதால்

 தனது பிறந்த இடமான கண்டியில் சங்ககாரா விளையாடிய கடைசி போட்டி இதுவாகும்

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

அபார சதம் குவித்தார் சங்கக்கார ; தொடரின் வெற்றியை உறுதிப்படுத்தியது இலங்கை அணி
2014-12-13 17:38:56

 

இங்கிலாந்து அணியுடனான 6 ஆவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 90 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. இதன் மூலம், 7 போட்டிகள் கொண்ட இத்தொடரில் 4-2 விகிதத்தில் முன்னிலையில் உள்ள  இலங்கை அணி இத்தொடரின் வெற்றியையும் உறுதிப்படுத்தியுள்ளது.

3533yc0.jpg

பல்லேகலவில் இன்று நடைபெற்ற  இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில்  7 விக்கெட் இழப்புக்கு 292 ஓட்டங்களைப் பெற்றது.


குமார் சங்கக்கார 112 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 12 பௌண்டரிகள் உட்பட 112 ஓட்டங்களைக் குவித்தார். திலகரட்ன தில்ஷான் 68 ஓட்டங்களைப் பெற்றார்.

 

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 41.3 ஓவர்களில் 202 ஓட்டங்களுடன் சகல விக்கெட்களையும் இழந்தது.

2a5m007.jpg

இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களில் சுரங்க லக்மால் 30 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் சச்சித்ர சேனாநாயக்க 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும்  திலகரட்ன தில்ஷான் 55 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

 

http://www.metronews.lk/article.php?category=sports&news=8113

  • தொடங்கியவர்

சங்கா சதமடித்து அசத்த தொடரை தன்வசப்படுத்தியது இலங்கை
15rkx3k.jpg

 

இங்கிலாந்து அணிக்கு எதிரான 6 ஆவது ஒருநாள் போட்டியில் சங்கக்காரவின் சதம் கைகொடுக்க இலங்கை அணி, 90 ஓட்டங்களால் வெற்றிபெற்று தொடரை தன்வசப்படுத்தியது.


இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆறாவது ஒருநாள் போட்டி கண்டி பல்லேகலயில் இன்று நடைபெற்றது.

இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை  இழந்து 292 ஓட்டங்களைப் பெற்றது.
இலங்கை அணி சார்பாக துடுப்பாட்டத்தில் பிரகாசித்த குமார் சங்கக்கார 112 ஓட்டங்களையும் டில்ஷான் 68 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக பின், வோக்ஸ் மற்றும் ஜோர்டான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இந்நிலையில் 293 ஓட்டங்களை வெற்றி இலக்காகக்கொண்டு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 41.3 ஓவர்களில் 202 ஓட்டங்களைப்பெற்று 90 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

 

இதையடுத்து 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை அணி 4-2 என்ற அடிப்படையில் தன்வசப்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து அணி சார்பாக ஜோ ரூட் 55 ஓட்டங்களையும் வோக்ஸ் 41 ஓட்டங்களையும் மொயின் அலி 34 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இலங்கை அணி சார்பாக பந்துவீச்சில் லக்மல் 4 விக்கெட்டுகளையும் சேனாநாயக்க 3 விக்கெட்டுகளையும் டில்ஷான் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இத் தொடரில் துடுப்பாட்டத்தில் அசத்திய குமார் சங்கக்கார ஆட்டமிழக்காது 67 ஓட்டங்களையும் 63, 86, 91, 112 ஓட்டங்களையும் பெற்றுள்ளதுடன் இப் போட்டியின் ஆட்டநாயகனாகவும் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான 7 ஆவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி எதிர்வரும்16 ஆம் திகதி கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

 

http://www.virakesari.lk/articles/2014/12/13/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88

  • தொடங்கியவர்

 

Kumar Sangakkara 's 20th century at Pallekele

  • தொடங்கியவர்

  • தொடங்கியவர்

குமார் சங்கக்காரவுக்கு அபராதம்
 

இலங்கை அணியின் நட்சத்திர வீரரும் சாதனை நாயகனுமான குமார் சங்கக்காரவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில்  கடந்த சனிக்கிழமை கண்டி பல்லேகலேயில் இடம்பெற்ற 6 ஆவது ஒருநாள் போட்டியின் போது, 34ஆவது ஓவரில் பெட்டிங் பவர் பிளே எடுப்பது தொடர்பாக குமார் சங்கக்காரவுக்கு நடுவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் விளைவாகவே ஐ.சி.சி. குமார் சங்கக்காரவுக்கு போட்டி கட்டணத்தில் 15 வீதம் அபராதத்தை விதித்துள்ளது.

 

அன்றைய போட்டியில் குமார் சங்கக்கார  அதிரடியாக துடுப்பெடுத்தாடி ஒருநாள் அரங்கில் தனது 20 ஆவது சதத்தை கடந்தார். தாய் மண்ணில் இறுதியாக விளையாடிய அவர், 112 பந்துகளில் 12 பவுண்டரிகள் 2 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 112 ஓட்டங்களைப் பெற்று அணியின் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தார். மேலும் அன்றைய போட்டியின் ஆட்டநாயகனாகவும் தெரிவு செய்யப்பட்டார்.

 

இதையடுத்து 7 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இலங்கை அணி 4-2 என்ற அடிப்படையில் தன்வசப்படுத்தியது. மேலும் குமார் சங்கக்கார இத் தொடரில் 67, 63, 86, 91, 112 ஓட்டங்களையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.virakesari.lk/articles/2014/12/15/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D

  • தொடங்கியவர்

ஸ்ரீலங்கா 302/6

  • தொடங்கியவர்

215 allout இங்கிலாந்து

 

கடைசி விக்கெட்  மஹேல ஜயவர்த்தனவின் பந்து வீச்சில் குமார் சங்ககாராவினால் stump செய்யப்பட்டு விழுந்தது :)

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இலங்கை 5-2 என தொடரைக் கைப்பற்ற,வெற்றியுடன் சொந்த மண்ணில் விடைபெற்றனர் சங்கா, மஹேல : ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
 

 

இங்கிலாந்து அணிக் கெதிரான ஏழாவதும் இறுதியுமான போட்டியில் இலங்கை அணி 87 ஓட்டங்களால் வெற்றி பெற்று தொடரை 5-2 என கைப்பற்றிய நிலையில் சொந்த மண்ணில் இறுதி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற மஹேல ஜெயவர்த்தனவும், குமார் சங்கக்காரவும் வெற்றியுடன் விடைபெற்றுள்ளனர்.

sngamahela_zps60572f35.jpg
இப் போட்டியில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் திரண்டிருந்து இருவரையும் வழியனுப்பி வைத்தனர்.

200921_zps90184288.jpg
இரு அணிகளுக்கிடையிலுமான ஏழாவதும் இறுதியுமான ஒரு நாள் போட்டி ஆர். பிரேமதாஸ மைதானத்தில் நேற்று பிற்பகல் 2.30மணிக்கு ஆரம்பமானது.

200903_zpsa5df6451.jpg
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய மஹேல ஜெயவர்த்தன மற்றும் திலகரட்ன டில்ஷான் ஜோடி ஆரம்பம்முதலே அதிரடியை மேற்கொண்டது.

200907_zpsf48f49dd.jpg
ஏழாவது ஓவர் நிறைவில் 55 ஓட்டங்களை அணி பெற்றிருந்த போது மஹேல ஜெயவர்த்தன 5 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 28 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். மற்றொரு நட்சத்திர வீரரான குமார் சங்ககார நிதானமாக ஆடிய போதும் 33 ஓட்டங்களுடன் அரங்கு திரும்பினார்.

200891_zps7377e8e9.jpg
தொடர்ந்து அபாரமாகவும் நிதானமாகவும் ஆடிய திலகரட்ன டில்ஷான் 9 நான்கு ஓட்டங்கள் ஒரு ஆறு ஓட்டம் உள்ளடங்கலாக 101 ஓட்டங்களைப் பெற்று தனது 17ஆவது சதத்தைப் பூர்த்தி செய்ததுடன் 97ஓட்டங்களை எடுத்திருந்தபோது ஒரு நாள் அரங்கில் 9ஆயிரம் ஓட்டங்களை கடந்த வீரர் என்ற சாதனையையும் நிலைநாட்டினார்.

200897_zps18a64cfe.jpg
அணித்தலைவர் மெத்தியூஸ் (20) அரங்கு திரும்ப, தினேஷ் சந்திமல் ஆட்டமிழக்காது 55 ஓட்டங்களைப் பெற்று அணிக்கு வலுச்சேர்த்ததுடன் இறுதி நேரத்தில் அதிரடியை வெளிப்படுத்திய திஸரபெரேரா 26 பந்துகளில் 7நான்கு ஓட்டங்கள் ஒரு ஆறு ஓட்டம் உள்ளட ங்கலாக 54 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.

50ஓவர்கள் நிறைவில் இலங்கை அணி ஆறு விக்கெட்டுக்களை இழந்து 302 ஓட்டங்களைக் குவித்தது.

இங்கிலாந்து பந்து வீச்சில் கிறிஸ் ஜோர்டான் மற்றும் மொயின் அலி தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.


பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 45.5 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 215 ஓட்டங்களை மட்டுமே பெற்று 87ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
இங்கிலாந்து சார்பாக ஜோ ரூட் மட்டுமே அதிகபட்சமாக 80 ஓட்டங்களைப் பெற்றார். ஏனைய வீரர்கள் பிரகாசிக்கத் தவறியிருந்தனர்.

200901_zps6f8f763a.jpg
பந்துவீச்சில் திலகரட்ன டில்ஷான், பிரசன்ன தலா 3விக்கெட்டுக்களையும் சுரங்க லக்மால் 2 விக்கெட்டுக்களையும் மஹேல ஜெயவர்த்தன ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்ட நாயகனாக சகலதுறையிலும் பிரகாசித்த டில்ஷான் தெரிவானதோடு தொடரின் நாயகனாகவும் அவரே தெரிவாகியிருந்தார்.

200917_zps3468ba93.jpg

http://www.virakesari.lk/articles/2014/12/17/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-5-2-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B9%E0%AF%87%E0%AE%B2

  • தொடங்கியவர்

  • தொடங்கியவர்

http://youtu.be/r5WgDPCnCu4

 

Century for Tillakaratne Dilshan on his 300th ODI Match 101 SL vs Eng 2014 7th ODI

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.