Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மீனவர்கள் விடுதலை ராஜபட்சவின் சாமர்த்தியமான சகுனித்தன நாடகம்: தா.பாண்டியன்

Featured Replies

tha_pandiyan.jpg

 

தமிழக மீனவர்கள் 5 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து இலங்கை அதிபர் ராஜபட்சேவின் சமர்த்தியமான சகுனித்தன நாடகம் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
 
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 
இலங்கை அதிபர் ராஜபக்சே தமிழகமீனவர் ஐவருக்கு இலங்கையின் உயர்நீதிமன்றம் மரணதண்டனை விதித்ததை மன்னித்து, ரத்து செய்து, விடுதலை செய்ய உத்தரவிட்டுவிட்டதாக செய்தி வந்திருப்பது மகிழ்ச்சியை தருகின்றது. ஆனால் இதில் ஒரு சமர்த்தியமான சகுனித்தன நாடகம் இருப்பதை மக்களுக்கு விளக்க வேண்டியது எங்கள் கடமை எனக் கருதுகின்றேம்.
 
இலங்கையை பொறுத்தவரையில் 1976 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குக்கூட மரணதண்டனை விதிப்பதை அந்நாட்டு நீதிமன்றங்கள் தவிர்த்து வந்துள்ளன. தூக்குத்தண்டனையை கைவிட்டுவிட்ட நாடு என்றுகூட பெருமையாக உலக அரங்கில் அறிவித்தும் வந்தனர். ஆனால் 2014-ல் மீன்பிடிக்கச் சென்ற ஐந்து மீனவர்களை கைது செய்து அவர்கள் போதைப் பொருட்களை கடத்தியதாக குற்றம் சாட்டி, இலங்கை உயர்நீதிமன்றம் ஒரே நாளில் விசாரித்து மரணதண்டனை வழங்கியது இலங்கை மக்களையே வியப்படைய வைத்தது.
 
ஆனால் இது ஒரு திட்டமிட்ட நாடகச் செயல் என்பது இப்போது புரிகின்றது. போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், காணமல் போனவர்களைப் பற்றிய விபரங்கள் என உலக நாடுகளால் குற்றம் சாட்டப்பட்டு, ஐ.நா வின் மனித உரிமைக்குழு விசாரிக்க முற்பட்டுள்ள நேரத்தில் அதற்கு ஒத்துழைப்புத்தர மறுத்து ஒதுங்கியிருப்பதையும் இன்று வரை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வடகிழக்கு மாநில அரசிற்கு போதிய அதிகாரங்கள் வழங்காமல் இருப்பதும் இனப்போருக்குப்பின் முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த நான்கு லட்சம் தமிழர்களின் வீடுகள் நிலங்கள் சிங்கள ராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டுள்ளது என்பதையும் மூடிமறைப்பதற்காகவே மனிதபிமானத்தோடு, தமிழ்நாட்டு குற்றவாளிகளை கருணையுடன் மன்னித்துவிட்டது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்க ராஜபட்சே அரசு செய்துவருகின்றது என்பதை மத்திய அரசு உணர்ந்து, மனித உரிமைகளையும் சொத்துக்களையும் இழந்து பிறந்த நாட்டில் அகதிகளாக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களின் வாழ்வாதார உரிமைகளை, அரசியல் உரிமைகளை பெற்றுத்தர மத்திய அரசு முன்வர வேண்டுமாய் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுகொள்கின்றது.
 
கர்நாடக அரசு ஒக்கனேக்கல்லிற்கு அருகில் அணைகட்ட முடிவெடுத்திருப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்திருப்பதாக வந்துள்ள செய்தி அதிர்ச்சியை தருகின்றது. இருமாநிலங்களுக்கு பொதுவான காவிரி நதி நீர் பங்கீடு பிரச்சனை உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி நிறைவேற்றப்படாது இருக்கும் நிலையில் கர்நாடக அரசு, தமிழக அரசின் ஒப்புதலைப்பெறாமல் தன்னிச்சையாக அணைகட்டுவதை தடுத்து நிறுத்திட மத்திய அரசு முன்வர வேண்டுமாய் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கின்றது என்று கூறியுள்ளார்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.