Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேசியத் தலைவருக்குச் சொத்துக்கள் இருப்பதாகக் கூறி நிலங்களை அபகரிக்குமாறு சிவாஜிலிங்கம் அரசுக்கு ஆலோசனை…!

Featured Replies

 

Published on November 10, 2014-4:58 pm   ·   No Comments

கடந்த 29.10.2014 அன்று மிகப் பெரும் செலவில், யாழ்ப்பாணத்தில் ரில்கோ உல்லாச விடுதியில் சிவாஜிலிங்கம் நடத்திய பத்திரிகையாளர் மகாநாட்டில், வல்வெட்டித்துறை நெற் கொழு என்ற இடத்தில் உள்ள தனியாருக்குச் சொந்தமான  238 பரப்புக் காணியும் தேசியத் தலைவரினதும்,அவரது தந்தையார் வேலுப்பிள்ளையினதும் பூர்வீகச் சொத்துக்கள் என்ற ஒரு பொய்யான தகவலைக் கூறி,அரசாங்கத்தின் கொள்கைக்கு அமைய அவற்றை அரசுடைமையாக்க வேண்டும் என்ற ஆலோசனையை அரசுக்குத் தெரியப்படுத்தியுள்ளார். அவருடன்,வல்வெட்டித்துறையின் நகர சபையின் உப தலைவர் கந்தசாமி சதீசும் பங்கெடுத்த இப்பத்திரிகையாளர் மகாநாட்டில்,பெருந்தொகையான ஊடகவியலாளர் களை அழைத்திருந்த போதே,அவர் இவ்வாறான ஒரு அதிரச்சியூட்டும் தகவலை ஊடகங்களினூடாக அரசாங்கத்திற்குத் தெரியப்படுத்தியுள்ளார்.

 

வல்வெட்டித்துறை நகரசபை எல்லைக்குட்பட்ட நெற்கொழுவில் சுமார் 18 வரையான பொதுமக்களுக்கும்,வல்வெட்டித்துறை சிவன்கோயிலுக்கும் சொந்தமான 238 பரப்புள்ள காணி உள்ளது. க.சிவாஜிலிங்கம் 1999 ஆம் ஆண்டு வல்வெட்டித்துறை நகரசபை தலைவராக இருந்தபோது அங்குள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பனைகளை,காணி உரிமை யாளர்களுக்குத் தெரியாமலேயே தறித்து அவற்றை விற்றும், அங்குள்ள ஒரு நன்னீர்க் கிணற்றை மூடியும் தனது சகாவான கந்தசாமி தலைவராக இருக்கும் கழுகுகள் விளையாட்டுக் கழகத்திற்கு விளையாட்டு மைதானமாகப் பயன்படுத்துவதற்கு உருவாக்கிக் கொடுத்தார்.அதேவேளை மேலும் இந்த விளையாட்டு மைதானத்தை விஸ்தரித்துக் கொடுப்பதற்காக,சில தனியாரின்  காணிகளை அடாத்தாக அபகரித்ததுடன், அவற்றை விளயாட்டுக் கழகத்தின் பாவனைக்கும் வழங்கியிருந்தார். இதனால், இந்த ஆதனத்தில் 3 பரப்புக்கு உரிமையாளரான  50 வயதுடைய விக்னேஸ்வரன் என்ற  ஒரு ஏழை விவசாயி நஞ்சருந்தி தற்கொலை செய்ததால், கொம்மந்தறைப் பிரதேசத்தில், ஒரு பதட்டம் நிலவியது.ஆயினும் சிவாஜிலிங்கம் அந்தக் காலப்பகுதியில் ஆயுததாரியாகவும்,தன்னுடன் ஒரு ஆயுதக் குழுவையும் வைத்திருந்து, அதிகளவிலான அதிகாரங்களைக் கொண்டு தலைவர் என்ற பதவியைப் பயன்படுத்தி, தன்னிச்சையாகச் செயற்பட்டு வந்ததால், அச்சத்தின் காரணமாக கொம்மந்தறை மக்கள் தமது எதிர்ப்பைக் காட்டமுடியாது இருந்தனர். இந்தச் செய்தி 28.12.2000 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும், ‘உதயன்’ பத்திரிகையில் “காணிசுவீகரிப்பால் விரக்தியுற்ற விவசாயி நஞ்சருத்தித் தற்கொலை- வல்வை ஊரிக்காட்டுப்  பகுதியில் சம்பவம்” என்ற தலைப்பில், வெளியாகிய போது, க.சிவாஜிலிங்கம் பாதிக்கப்பட்ட அந்தக் குடும்பத்தைக் கேவலப்படுத்தும் வகையில் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார் இது தொடர்பாக அந்த விவசாயியின் தற்கொலைக்கு சிவாஜிலிங்கத்தின் நடவடிக்கையே காரணம் என்பதை, மரணவிசாரணை அறிக்கைகள் மற்றும் அந்தப் பிரதேச மக்களினதும் வாக்கு மூலங்கள் உட்பட முழுமையான ஆதாரங்களுடன் மீண்டும் 17.02.2001 ஆண்டு ‘உதயன்’ பத்திரிகை, “காணி சுவீகரிப்பு – விவசாயி மரணம்,வல்வை நகரசபை தலைவர் விளக்கம்” என்ற தலைப்பில் ஒரு செய்தியை வெளியிட்டு ஒட்டுக் குழுவைச் சேர்ந்த சிவாஜிலிங்கத்தின் அடாவடித் தனங்களை அம்பலப்படுத்திய பின்னர், சிவாஜிலிங்கம் மௌனமாக இருந்து விட்டார். இவரதுஅடாவடித் தனங்களால், பாதிக்கப்பட்ட இன்னுமொரு விவசாயியான கிருஸ்ணபிள்ளை வர்ணபாலசுந்தரம் என்பவர், கழுகு விளையாட்டுக் கழகத்தின் தலைவர்,செயலாளர் இருவரையும் 1ஆம்,2ஆம் எதிராளிகளாக,  ; பருத்தித்துறை நீதிமன்றத்தில் 2000 ஆம் ஆண்டில் வழக்குத் தாக்கல் செய்திருந்த நிலையில் கடந்த 13 வருடங்களாக இவ்வழக்கு நீண்டு கொண்டு செல்கின்றது.அந்த நிலையில் சிவாஜிலிங்கத்தின் அடாவடித் தனமான செயல்களுக்கு எதிராக,அவர் பிரதிதிநிதித் துவப்படுத்திய வல்வெட்டித்துறை நகர சபையை மூன்றாவது எதிரியாக மனுவில் குறிப்பிட்டதுடன் வழக்குக்கான செலவு தொகையை நகராட்சி மன்றமே செய்யவேண்டும் என்ற தீர்மானத்தையும் அவர், கொண்டு வந்ததற்கு அமைய கடந்த 13 வருடங்களாக நடைபெற்று வரும் இவ்வழக்குக்கான செலவு தொகையை நகரசபையே செலுத்தியும் வந்தது. இதனால்,நகரசபையில் மக்களிடம் இரந்து சேகரிக்கப்படுகின்ற வரிப்பணம், அநியாயமாக ஒரு விளையாட்டுக் கழகத்தின் தனிப்பட்ட வேவைக்காகவே செலவிடப் படுவதை நிறுத்துவதற்காக, சிவாஜிலிங்கத்தின் தனிப்பட்ட அடாவடித்தனங்கள் காரண மாக நடைபெற்று வரும் வழக்கில் இருந்து நகர சபையை விடுவிக்குமாறு வழக்காளி யான கி.வர்ணபாலசுந்தரத்திற்கு எழுதியதுடன், வழக்கு முடிந்தபின் வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்திற்கான விளையாட்டு மைதானம் ஒன்றை அமைப் பதற்காக, இக்காணி களைக் கொள்முதல் செய்ய உதவுமாறும், கேட்டு நகரசபைத் தலைவரால் கடிதம் அனுப்பப்பட்டது.ஆனால் வழமையாகவே பொய்களைக் கட்டவிழ்த்து தனது அரசியலை நடத்தி வரும் க.சிவாஜிலிங்கம்;, நகராட்சி மன்றத்திற்கு விளையாட்டு மைதானம் தேவையி;லலை என்று நகரசபை தலைவர் ந.அனந்தராஜ், நீதிமன்றத்திற்குக் கடிதம் எழுதியதாக ஒரு பொய்யான தகவலை ஊடகவியலாளர் களுக்குத் தெரிவித்துள்ளார். அதே வேளை மக்களைத் தவறான வழியில் தூண்டும் வகையில்,தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பூர்வீகச் சொத்துக் களைத் தனியாருக்குத் தாரை வார்த்துக் கொடுப்பதற்கு நகரசபை தலைவர் துரோகம் இழைத்துள்ளார் என்றவகையில் குறிப்பிட்டு அரசாங்கம் தமிழ் மக்களின் காணிகளைச் சுவீகரி;பபதற்கு வழிஏற்படுத்திக் கொடுத்துள்ளதால், வல்வெட்டித்துறை மக்கள் கொந்தளித்துப் போய் இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு மக்களின் அன்பைத் தவிர,தமிழீழத்திலோ அல்லது உலகின் எந்த ஒரு நாட்டிலுமோ ஒரு துண்டு நிலம் கூடச் சொந்தமாக இருக்கவில்லை என்பதை ஒட்டுக் குழுவான க.சிவாஜிலிங்கம் நன்கு அறிந்திருந்தும், இவ்வாறான பொய்hன தகவலைத் தெரிவித்து,  இராணுவமுகாம்களையும் பாதுகாப்பு வலயங்களையும் ராஜபக்சா அரசாங்கம் விஸ்தரிப்பதற்கான ஆலோசனைகளைத் தெரிவித்து வருகின்றார். போரின் பின்னர், விடுதலைப்புலிகளின் ஆதனங்களையோ அல்லது,அவர்களால் பயன்படுத்திவந்த  சொத்துக்களையோ அரசாங்கம், கையகப்படுத்தி வருவதால், இராஜபக்சாவின், வடமாகாண  முகவராகச் செயற்படும் க.சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறையிலும் கொம்மந்தறையிலும் உள்ள மக்களின் காணிகளை புலிகளின் ஆதனங்கள் என்று கூறிக் கையகப்படுத்த முயற்சிக்கும் அரசாங்கத்திற்குத் தகவல்களைத் தெரிவித்துத் துரோகம் இழைத்துவருவதால், பொது மக்களும் தேசியப் பற்றாளர்களும்  கண்டித்து வருகின்றனர்.

 

http://www.thinakkathir.com/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.