Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்கள் பாதிப்பும், அவற்றுக்கான தீர்வுகளும்

Featured Replies

 
2527-eyes2.jpg
 
கண் என்பது ஒளியை உணர்வதற்கு உதவும் ஒரு உறுப்பு ஆகும். கண்கள் காட்சிகளைப் பார்க்கும் திறன் அளிக்க வல்லவை. பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன, மீன்கள் உட்பட்ட பல உயிரினங்கள் இரு கண்களைக் கொண்டுள்ளன. இவ்விரு கண்களும் வெவ்வேறு விம்பங்களின் அமைந்து ஒரே முப்பரிமாணப் படிமத்தை காண உதவுகின்றன. இந்த வகையில் மனிதனின் கண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளும்  அவற்றுக்கான தீர்வுகளையும் பற்றி விளக்குகிறார்  கண் வைத்திய நிபுணர் வாசுகி குரு சாமி.
 
 
சிறு­வ­ய­தி­லேயே கண் பார்வை குறை­வ­டைந்து போவ­தற்­கான காரணம் என்ன?
 
தாய் வயிற்றில் சிசு இருக்­கையில் ஏதா­வது நோய் வந்தால் அது சிசுவின் கண்ணை பாதிக்க வாய்ப்­புள்­ளது.  அதில் (TORCH)  என சொல்லப்படும் நோய்கள் சின்­னம்மை, ருபெல்லா போன்றவை தாய் கரு­த­ரித்து மூன்று மாதங்களுக்குள்  நோய் தொற்று ஏற்பட்டால் பிள்­ளையின் கண் பாதிக்க வாய்ப்­புள்­ளது. தாயும் தந்­தையும் நெருங்­கிய உறவில் திரு­மணம் செய்­தி­ருந்தால்  குழந்தைகளுக்கு கண்பார்வை பிறப்பிலேயே குறைய வாய்ப்புள்ளது. 
 
பெற்றோர் சிறுவயதில் கண்ணாடி பாவித்தவர்களாக இருந்தால் குழந்தை களும் பாவிக்கவேண்டியுள்ளது. சில வேளையில் தாய் கர்ப்பம் தரித்­தி­ருக்­கையில், முதல் மூன்று மாதங்­களில் அதிக மது அருந்­துதல் (அல்­கக்கோல்) புகை­பி­டித்தல் மூலம் குழந்­தையின் கண் ­பார்வை இழக்க நேரி­டலாம். விற்­றமின் குறை­பாட்­டி­னாலும் கண்ணின் வளர்ச்சி பாதிப்ப­டைய வாய்ப்­புள்­ளது. அத்­தோடு குழந்தை தாய் வயிற்­றி­லி­ருந்து வெளி­யேறும் போது பிறப்பு உறுப்­புக்­களில் கிருமி தொற்று காரணமாக தாக்­கு­த­லாலும் குழந்தை பிறந்த பிறகு கண்கள் சிவந்து பார்வை இழக்க வாய்ப்­புண்டு.
 
பிள்­ளை­களின் பழக்க வழக்கம், பிள்­ளைகள் தொடர்ச்­சியாக கிட்ட பார்­வைக்கு இசை­வாக்கப்படுதல் பாதிப்பு நேரிடலாம். மயோ பியா என்ற பார்வை குறை­பாடு வர­வாய்ப்­புள்­ளது. வாக்கு கண் என்­பது ஒரு கண்ணின் பார்­வையை குறைக்கும். வாக்கு கண் உள்­ள­வர்­களை செல்­ல­வாக்கு என்று எண்­ணாது வைத்­தி­யரை நாட­வேண்டும். ஏனென்றால் சிறுவர்களிடையே தலை சரிந்துப் பார்ப்பது போன்ற குறைபாடுகள் இருக்கலாம். இந்த கண்­ணுள்­ள­வர்­க­ளுக்கு கட்­டா­ய­மாக கண்­பா­திக்க வாய்­ப்புள்­ளது.         
கண்­களில் வெள்ளை படர்­வ­தற்­கான         காரணம் என்ன? 
 
பிரதான காரணம் வயது போகப் போக கண்­களில் உள்ள லென்ஸி­லுள்ள செல் தொடர்ந்து வளர்ந்து கொண்டே செல்­கி­றது.  செல்ஸ் தள்­ளு­பட்­டு கொண்­டி­ருக்­கையில், பின்­பக்கம் நார்­க­ளாக வளர்ந்து கண்­களில் படர்­கி­றது. அல்ட்டா வைலட் கதிர்கள் கண்­களில் பட கண்­களில் நிற­மாற வாய்ப்­புள்­ளது. steroid மருந்து வகை­களை பாவிப்­ப­த­னாலும் கெட் ரெக் வர­வாய்ப்­புள்­ளது.
 
மின்னல் தாக்­குதல் சடுதியாக குளுக்­கோமா காரணமாகவும் தாய்மார் வயிற்றில் குழந்­தைகள் இருக்கும் போது ஏதா­வது தொற்றுநோய் கார­ண­மாக கெட் ரெக் வர வாய்ப்­புள்­ளது. அதி­க­மாக 55  மேற்பட்ட வய­தி­ன­ருக்கே  உடல் அமைப்புக்கு ஏற்­ற­வகையில் ஏற்­ப­டலாம். சிறு­வ­ய­திலே steroid  மருந்­து­களை பாவிக்கும் போதும், சிறுநீரக நோய்க்­கான மருந்­து­களை பாவிக்கும்  போது கெட் ரெக் வரவாய்ப்புள்­ளது. கெமிக்கல் கண்­க­ளுக்கு படு­வதால் கெட் ரெக் சிறு­வ­ய­திலே வர­வாய்ப்­புள்­ளது. பிறக்கும் சிறு குழந்­தை­க­ளுக்கும் கெட் ரெக் வரலாம். 
 
கண்­களைச் சுற்றி கரு­வ­ளையம் தோன்­று­வ­தற்கும் கண்­ணுக்கும் தொடர்பு உண்டா?
 
கண் பகு­தியை சுற்றி உள்ள தோல் பகுதி மிகவும் மென்­மை­யா­னது. உடலில் உள்ள ஏனை­ய ப­கு­தி­களை போல தடிப்­பா­னது இல்லை. இது மிகவும் மென்­மை­தன்மை ஒளி உட்செல்லவிடும்  தன்மை கொண்­டது.
 
உட­லி­லுள்ள இரத்­தோட்­டத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்­துள்­ளது. உதா­ர­ண­மாக சொன்னால், கண்­களில் ஏற்­படும் கரு­வ­ளை­ய­மானது தெரிவது  இது பரம்­ப­ரை­யா­கும். ஒவ்­வொ­ரு­வரின் எலும்பின் அமைப்பை பொறுத்து அதா­வது கற்குழியைப் பொறுத்து அதன் தோற்­ற­­மைப்பு மாறு­படும். கண்ணில் அழற்சி மற்­றது கண்கடி ஏற்­ப­டுதல், கண்கள் வறட்சி அடைதல், கண்­களில் அழற்சி ஏற்­ப­டு­வதால்  அடிக்­கடி கண்­களை கச­க்­கு­வதால் இதன் காரணமாக கண்­களில் தடிப்பு ஏற்­பட்டு கண்­களில் கரு­வ­ளையம் ஏற்­பட வாய்ப்­புள்­ளது. கண்­ணுக்கு கண்­ணாடி தேவை­யேற்­படும் போது கண்­ணாடி பாவிக்­காமை,  தூக்­க­மின்மை, உடம்பில் இரத்த ஓட்டம் குறை­வ­டைதல், உடம்பில் நீர்த்­தன்மை குறை­வ­டைதல்,  மருந்­துகள் (குளுக்­கோமா), தொடர்ந்து கணினி முன் நின்று வேலை செய்தல், நித்திரை குறை­வ­டை­தல் போன்ற கார­ணங்­க­ளினால் கண்­களில் கரு­வ­ளையம் தோன்ற கார­ண­மாக அமை­யலாம். 
 
கண் மஞ்சள் நிற­மாகத் தோன்­று­வ­தற்­கான காரணம் என்ன?
 
மஞ்சள் காமாலை, செங்­க­ன்மாரி இருப்­பதை அறிந்து கொள்­ளலாம். அத்­தோடு நோயுள்ளவர் கழிக்கும் சிறுநீர் மஞ்சள் நிற­மாக இருந்தால் உட­ன­டி­யாக வைத்­தி­யரை நாட­வேண்டும். பொது­வாக கண்­களில் வெள்­ளை­ நிறமான மையப் ­ப­கு­தியில் மஞ்சள் நிற­மாக இருப்­ப­தற்கு காரணம் சூரிய ஒளியின் அல்டா வைலட் காரண­மாக மஞ்சள் நிற­மாக வரவாய்ப்­புள்­ளது. கண்­களின் வெள்ளைப்­ப­கு­தியில் கரு திட்­டுகள் இருப்­பதால் மஞ்சள் நிற தோற்­ற­ம­ளிக்­கி­றது. எல்லா இடங்­க­ளிலும் சுத்­த­மான மஞ்­ச­ளாக இருந்தால் உட­ன­டி­யாக வைத்­தி­யரை நாட­வேண்டும். அல்டா வைலட் பாதிப்பாக இருந்தால் பொது­வாக சன்­கிளாஸ், தொப்பி, குடை பாவித்தல் மூலம் இதனை கட்­டு­ப்ப­டுத்­தலாம். 
 
கண் சிவப்­ப­தற்­கான காரணம் என்ன?
 
கண் சிவப்­பாக மாற பல கார­ணங்கள் உண்டு. ஆனால் அதில் முக்­கி­ய­மாக கவனிக்க வேண்­டி­யது,   கண் சிவப்­பாக இருந்து கண்ணில் வேதனை இருக்­குமா என்­பதை கவ­னிக்க­வேண்டும். அதோடு பார்வை குறைபாடு உண்டா என்­பதை முக்­கி­ய­மாக கவ­னிக்­க­வேண்டும்.  கண் சிவப்­பாக இருப்­பது என்­பது அசா­தரண நிலை­யாகும். ஒரு கண் சிவந்து இருந்தால் கட்­டாயம் வைத்­தி­யரை நாட­வேண்டும்.
இரண்டு கண்­களும் சிவந்து இருந்தால் அது அவ்­வ­ள­வுக்கு பார­தூரமா­னது என்று சொல்­ல­மு­டி­யாது. ஒரு கண்ணில் ஒரு பக்­கத்தில் சிவந்து காணப்­பட்டு கடும் வலி, பார்வை குறை­பாடு காணப்­பட்டால் வைத்­தி­யரை உட­ன­டி­யாக நாட­வேண்டும்.
 
இப்படியான சந்தர்ப்பத்தில் ஒவ்­வொரு மணித்­தி­யா­லமும் அதன் பாதிப்பு அதி­க­ரித்து செல்­வதால் உட­ன­டி­யாக வைத்­தி­யரை நாட­வேண்டும். இப்­ப­டி­பட்ட வேதனை இருக்­கு­மானால் இக்                கு­ளு­மி­யா­வாக இருக்­கலாம். சாதா­ர­ண­மாக கண் சிவப்­பது தொற்றுநோய் அல்­லது நோயா­கவும் இருக்­கலாம்.  இது கடு­மை­யான வேதனை வந்தால் உட­ன­டி­யாக வைத்­தி­யரை நாடவேண்டும். புரை தள்ளி தண்ணீர் வந்­த­து என்றால், அது கண்­நோ­யாகத் தான் இருக்கும். அதை­வி­டவும் கண்ணில் இரத்த கசிவு கார­ண­மா­கவும் கண் சிவக்கலாம் அல்­லது அது சடு­தி­யாக அல்டா வைலட் கதிர்­வீச்சு கண்ணில் படு­வதால் கண்­களின் இரு பக்­கமும் நடுவில் கோடு­க­ளாக தெரியும்.
 
மாலைக்கண் நோய்க்­கான காரணம் என்ன?
 
இரவு பார்வை குறை­வாக இருப்­பது மாலைக்கண் நோய் இதை plterygium என்று சொல்லாம். குளுக்­கோமாவுக்கு போடும் மருந்துகளால் சில சமயம் இரவு பார்வை பாதிக்கலாம். இரவு பார்­வைக்கு பொது­வான காரணம் ரெகி நை பிக்மன்ட் டோசா. விழித்­தி­ரையில் பிறப்பால் அல்­லது பரம்­ப­ரையால் கண்ணில் சில மாறு­பா­டுகள் வரு­வதால் இது பெற்­றோர்­களால் பிள்­ளை­க­ளுக்கு வர­வாய்ப்­புள்­ளது இது பரம்­பரை நோயாக அமை­யும். இந்நோய் வரும்­போது காது கேட்­காமல் போகவும் வாய்­ப் புள்­ளது. 
 
50-–55 வய­தின­ருக்கு வெள்ளை படி­வதால் இரவு பார்­வையை பாதிக்­கி­றது.  இரவு நேரங்­களில் வாக­னங்கள் செலுத்தும் போது கெட் ரெக் இரவு கண்­பார்வை பாதிப்­ப­டைய செய்­கி­றது.
 
மயோ­பியா திருத்­த­ப்ப­டாமல் இருக்­கையில், தூர பார்­வை தெரி­யாமல் இருக்­கலாம். இதனால் இரவில் பார்வை குறை­வாக இருக்­கலாம். குளுக்­கோ­மா­வுக்கு போடப்­படும் மருந்­துகள் கண்ணின் கரு­ம­ணியை பாதிக்கலாம். 
 
லென்ஸ் போடு­வதால் கண்­க­ளுக்கு ஏதா­வது பாதிப்­பு ஏற்படுமா-?
 
லென்ஸ் பல வகை­யா­னது. இதில் முக்­கி­ய­மா­னது இரண்டு. கென்டேக் லென்ஸ் Intra ocular lens கென்டேக் லென்ஸ் என்­பது கண்  கருமணியில் கண்­ணுக்கு மேலே போட்டு கழற்று­வது.
 
கெட் ரெக் அறுவைச் சிகிச்சை செய்த பின் Intra ocular lens கண்­ணுக்குள் நிரந்­த­ர­மாக போடப்­ப­டு­கின்­றது. கெட் ரெக் அறுவைச் சிகிச்சை செய்த பின் தடித்த கிளாசை முன்பு போட்­டார்கள் ஆனால் இப்­போது Intra ocular lens கண்­ணுக்குள் போடு­கி­றார்கள். கண்­களை அறுவைச் சிகிச்சை செய்த பின் கண்­க­ளுக்குள்ளே லென்ஸ்களை மடித்து போடப்­ப­டு­கின்­றன. இன்­றைய காலத்தின் தேவையை பொறுத்து அமை­கி­றது. நாம் போடும் லென்ஸின்  தரத்தை பொறுத்து சிறு சிறு பிரச்­சி­னைகள் வரலாம். 
 
ஒரு­பி­ரச்­சி­னையும் இல்­லாதவர்களுக்கு  அறு­வைச் ­கிச்சை செய்தால் மறு­நாளே சரி­யா­கிவிடும். ஏதா­வது பிரச்­சி­னைகள் இருப்பின் நாட்கள் தள்ளி போக வாய்ப்­புள்­ளது.  சாதாரண நிலைக்கு  வர ஒரு மாத­காலம் தேவைப்­படும். கெட் ரெக் லென்ஸ் என்­பது கண்­ம­ணிக்கு மேலே போடு­வது. கண் கரு­ம­ணிக்கு கடத்­தப்­ப­டு­கின்ற ஒக்­சிசன் பாதிக்க வாய்ப்­புள்­ளது. இது குறிப்­பிட்ட மணித்­தி­யாலங்­க­ளுக்கு மாத்­திரம் பாவிக்க வேண்டும். உதா­ர­ண­மாக ஒரு லென்ஸ் எட்டு மணித்­தி­யாலம் மாத்­திரம் பாவிக்கவேண்டும் என்ற கால­வ­ரைக்­குட்­ப­டுத்­தப்­பட்­டி­ருந்தால் அதை கருத்­தி­ல்கொள்­ளாது.  சோம்பல் கார­ணமாக லென்ஸைக் நீக்­காமல்  நித்­திரை செய்தால் கண்­க­ளுக்கு பாதிப்பு வர­வாய்ப்­புள்­ளது. அதற்கு சுத்தம் செய்வதற்கான திரவங்கள் உள்­ளது. அந்த திரவியத்தை கவ­ன­மாக பாவிக்­க­வேண்டும். அதை கவனக் குறை­வாக பாவித்தால் கண்­களில் தொற்று நோய் வர­வாய்ப்­புள்­ளது. அதை தவி­ரவும், கண்­களில் பொருத்தப்பட்ட லென்ஸ் நாளாக நாளாக ஒரு மாதத்தில் அல்­லது மூன்று மாத்­திற்கு பாவிக்­கலாம். இது நாட்­பட பாதிப்பு ஏற்­பட வாய்­ப்புள்­ளது. நாம் போடும் லென்ஸுக்கு திரவங்கள் போடு­வதால் கண்­களில் அழற்சி வர கார­ண­மாக அமை­கின்­றது, ஒரு சில­ருக்கு லென்ஸ் போடு­வதால் நல்ல பார்வை வரும் என்­பதை அறிந்த பின் அந்த நோயா­ளிக்கு Intra ocular lendலென்ஸ் பாவிப்­பது நல்­லது.
லென்ஸுக்கு பின்னால் ஒரு­ படல் மாதிரி பட­ர­ வாய்­புள்­ளது. இதை ஒரு லெசரால் குணப்­ப­டுத்­த­ மு­டியும். இள­மை­யாக உள்­ள­வர்­க­ளுக்கு அடிக்­கடி லெசரால் குணப்­ப­டுத்த வேண்டும். வயது போன­வர்­க­ளுக்கு குறை­வாக படர வாய்ப்­புள்­ளது. 
 
கண்­களுக்கு மேக்­கப்போ­டு­வதால் கண்கள் பாதிக்கப்படுமா-?
 
கண்­க­ளுக்­கு­ தொ­டர்ந்து  மேக்கப் போடு­வதால் வறட்­சி­தன்மை கூடி­ய­வர்­க­ளுக்கும்,  கண்­களில் எண்ணெய் தன்­மை­கூ­டி­ய­வர்­க­ளுக்கும் பிரச்­சினை அதிகம் ஏற்­பட வாய்ப்­புள்­ளது. 
 
 கணி­னியில் அதிக நேரம் இருப்­பவர்­க­ளுக்கும், கண்­களில் கட்­டி­யுள்­ள­வர்களும் மேக்­கப்­ போ­டு­வதை தவிர்க்­க­வேண்டும்.  இரவு நேரத்தில் மேக்­கப்பை கட்­டா­ய­மாக நீக்­க­வேண்டும். அத்­தோடு கண்­களில் அழற்சி உள்­ளவர்கள் பாவிப்­பதை தவிர்ப்­பது நல்­லது. மேலும் கால­தா­ம­த­மான கொஸ்­மட்டிக் பொருட்­களையும் தரம் குறைந்த பொருட்­களையும் பாவிப்­பதால் பாதிப்பு வர­வாய்ப்­புள்­ளது. கென்டேக் லென்ஸ் போடு­ப­வர்கள் இதை தவிர்ப்­பது நல்­லது. அவ­சியம் ஏற்­படின் மாத்­திரம் மேக்­கப்­போ­டுவது நல்லது. 
 
25roxy-in-red_8-frames-for-specs-appeal.
 
 
 
தலைக்கு நிறச்­சாயம் (டை) பாவிப்­பதால் பாதிப்பு ஏற்­ப­டுமா?
நிறச்சாயம் என்பது இரசாயன பொருட்கள் சேர்ந்த கலவையாகும். தவிரவும், இது தலைக்கு போட்டு சற்று நேரத்தின் பின்னரே கழுவப்படுகிறது.
 
எந்தவிதமான இரசாயனப் பதார்த்தங்களும் கண்ணுக்குள் செல்லும்  போது பாதிப்பை ஏற்படுத்தும். தலைச்சாயம் என்ற வகையில் இது கண்ணில் அழற்சி, கடி, சிவந்து போதல் ஒவ்வாமை போன்ற குணங்களை ஏற்படுத்தலாம்.
 
முடிந்தவரை டை பாவிக்கும் போது தோல் அழற்சி பரிசோதனை செய்த பின்னரே நிச்சயமாக பாவிக்க வேண்டும். கூடுமானவரை தலையை கழுவும் போது கண்களுக்குள் போகாமல் கழுவவேண்டும். ஏதாவது தவறுதலாக கண்களுக்குள் இந்த டை செல்லுமாயின், உடனடியாக தூய்மையான தண்ணீரால் கண்களை நன்கு அலசிய பிறகு வைத்தியரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
 
தலை­வ­லிக்கும் கண்­க­ளுக்கும் தொடர்பு உண்டா?  
ஆம் நிச்சயமாக. கண்கள் நெடுநேரமாக கிட்டிய தூரத்தில் தொடர்ந்து வேலை செய்வதால் தலைவலி வர வாய்ப்புண்டு. உதாரணமாக நுணுக்கமான தையல் வேலை, பரீட்சைக்காக மன அழுத்தத்துடன் கூடிய நேரம் வாசித்தல், நெடுநேரம் அசாதாரணமான உடலமைப்புடன் கணினியில் வேலை செய்தல் போன்றவை.
 
இது தவிர, ஒருவருக்கு கண்ணாடி போடவேண்டிய பார்வை குறைபாடு இருக்குமாயின் அல்லது கண்கள் கிட்டப்பார்வைக்காக சரியாக குவியாமல் விட்டாலோ, வாக்குத்தன்மை இருந்தாலோ தலைவலி வரக் காரணமாகலாம். வெள்ௌழுத்து குறைபாடு 40 வயதிற்கு பின் ஏற்படும் போது ஒருவர் கண்ணாடியை பாவிப்பதனை தவிர்த்து வந்தாலும் தலைவலி ஏற்படலாம்.
 
இது தவிர, சிவந்த கண்களுடன் கூடிய தலைவலி சடுதியான குளோக்கோமா காரணமாகவும் இருக்கலாம். இந்த நிலை ஏற்படும் போது ஒரு நாளும் அலட்சியமாக இருக்கக் கூடாது.
 
கண் நோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
கண் நோய் உள்­ள­வ­ர்கள் பாவித்த அழ­கு­ சா­தனப் பொருட்­க­ளையும் அவர்கள் பாவிக்கும் டவல்­களையும் பாவிப்­பதை தவிர்க்க வேண்­டும். கண்­நோ­யா­ளி­களின் கண்­களில்  வடியும் நீரை தொடுதல் அல்லது சுவா­சித்தல் இருமல், தும்மல் மூலம் வெளியேறும் துணிக்கைகளை சுவாசித்தல் போன்ற கார­ணி­களால் கண்நோய் வர­ வாய்ப்­புள்­ளது. மேலும் நாங்கள் பொது இடங்­க­ளுக்கு செல்லும் போது அங்கு கண்நோயினால் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் இருப்­பார்கள். இவர்களுக்கு  அண்மையில் செல்வதை தவிர்த்தல் நல்லது. 
 
மேலும், கண்நோய் உள்ளவர்கள் தொடும் பொருட்­களை மற்­ற­வர்கள் பாவிப்­பதை தவிர்க்க வேண்டும். தவிர்க்க­ மு­டி­யாமல்  கண்நோயாளிகளை  நாம் பராமரிக்க வேண்டியிருந்தால் தகுந்த முறையில் கைகளை கழுவிட்டு முகமூடியை (Mask) பாவிப்பது நல்லது. 
 
கண்நோய் உள்­ள­வர்கள் அலு­வ­ல­கத்தில் வேலை செய்ப­வ­ராக இருந்தால் அவரை வீட்­டி­லி­ருந்து குணமடைந்த பின் வேலைக்கு வர அனு­மதிக்கவேண்டும். மேலும் பொது வாகனங்­களில் செல்லும் போது வீட்­டுக்கு வந்த உடனே சவர்க்­காரம்  அல்லது தொற்று நீக்கியை பாவித்து கைகளை கழுவ­வேண்டும். பொது இடங்­களை சுத்­த­மாக வைத்­தி­ருக்­க­ வேண்டும்.  பொது­வாக சன நெருக்­க­டி­யான இடங்­களை தவிர்ப்­பது பல­வ­கை­யான தொற்று நோய்­களில் இருந்து எங்­களை பாது­காக்­க ­வல்­லது. அத்­துடன் நாங்கள் வேலை செய்யும் இடத்­திலோ, வீட்­டிலோ, ஈக்கள் இருந்தால் அவற்றை அகற்றும் வழி­ மு­றை­களை கடை­பி­டிக்­க­வேண்டும்.
 
வாசித்­தலின் போது கண்­களில் நீர்­ வ­டி­வ­தற்­கான காரணம் என்ன?
பொது­வாக கண்­ காய்ந்து போய் இருத்தல் கண்­களில் நீர் ­வ­டி­வ­தற்கு கார­ண­மாக அமை­கி­றது. கணி­னியில் நீண்ட நேரம் அமர்ந்து வேலை­ செய்தாலும், எயா கண்­டிசன்  அறையில் இருந்தாலும்  கண்ணில்  வரட்­சித்­தன்­மையை உண்­டு­பண்ணி நீர் ­வ­டிய கார­ண­மாக அமை­கி­றது. இது மிகவும் பொது­வான காரணம்.
 
இது தவிர, கண்­களில் சாதா­ர­ண­மாக கண்ணீர் மூக்கு துவா­ரத்­தினுள் தான் வெளி­யேற்­றப்­ப­டு­கின்­றது. கண்­ணீ­ரா­னது சுரக்கப்­பட்டு நாசிக் குழாய் வழி­யாக  கடத்­தப்­ப­டு­கின்­றது. அந்த பாதையில் ஏதா­வது அடைப்­புகள் இருந்­தால் கண்­களில் நீர் வடிதல் ஏற்­ப­டு­கி­றது. இத்­த­கைய அடைப்பு சிலவேளை பிறப்பின் போதே அல்­லது வயது போன­வர்­க­ளுக்கும் இது வர­ வாய்ப்­புள்­ளது.  இப்­படி  அடைப்பு கார­ண­மாக கண்­களில் தண்ணீர் வந்தால் வைத்­தியரை நாடி சத்­திர சிகிச்­சை செய்­ய­வேண்டும். இது தவிர மூக்­கில் அழற்சி  ஏற்பட்டு வீங்கு­வதால் கண்ணீர் போகிற ­பாதை தடைப்பட வாய்­ப்புள்­ளது இச்­சந்­தர்­ப் பத்தில் தகுந்த சொட்டு மருந்­துகள் பாவிக்­க­ வேண்­டி­வரும். அத்­துடன் உடம்பில் ஒவ்­வாமை ஏற்­ப­டு­வ­தையும் தவிர்க்­க­வேண்டும். 
 
 
கண்­க­ளுக்கு கண்­ணாடி பாவிக்கும் போது எதைக் கருத்தில் கொள்­ள­வேண்டும்?
கண்­ணாடி என்­பது தகுந்த கண் ­வைத்­தியர் மூல­மா­கவோ அல்­லது பயிற்சி பெற்ற கண்­ணாடி பரி­சோ­தகர் மூல­மா­க­வோதான் பரீட்­சிக்­கப்­பட்டு எடுக்­கப்­ப­ட­வேண்டும்.
 
மேலும் ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் தேவை­யான கிட்­டப்­பார்வை வில்­லை­களின் அளவும் தூரப் பார்­வையின் அளவும் மாறு­ப­டக்­கூ­டி­ய­ன. ஆகவே ஒருவர் பாவிக்கும் கண்­ணாடி மற்­ற­வர்­க­ளுக்கு பொருத்­த­மா­ன­தாக அமை­யாது. வளரும் குழந்­தை­களும், 40 வய­துக்­குமேல் வயது ஏற ஏற கண்­ணா­டியில் அல­குகள் ஏறிக்­கொண்டு போகும். ஆகவே அதனை சொல்­லப்­பட்ட கால இடை­வெ­ளி­களில் பரீட்­சித்து கண்­ணா­டியை மாற்­ற­வேண்டும். கண்­ணா­டிகள் வடி­வ­மைக்­கப்­படும் போது கண்ணின் கரு­ம­ணி­களின் இடை­வெளி (Interpupillary distance) அளக்­கப்­பட்டு அதன்­ப­டியே செய்­யப்­ப­ட­வேண்டும். அத்­துடன் கீறல்­ வி­ழுந்த கண்­ணா­டிகள், படி­வு­க­ளுடன் பழு­தா­கிய கண்­ணா­டிகள், சரி­யாக பொருந்தி நிற்­காமல் தளர்­வாக மூக்கில் நிற்கும் கண்­ணா­டிகள் போடு­வதை தவிர்க்­கவேண்டும்.
 
சில­வே­ளை­க­ளில கண்­களின் பாது­காப்­புக்­கா­கவும் கணி­னியின் பாதிப்­பதை தவிர்ப்­ப­தற்கும் சாதாரண கண்­ணா­டி­களும் சிபா­ரிசு செய்­யப்­ப­டு­வ­துண்டு. இதில் தவ­றில்லை.
 
கண்ணுக்கு அணியும் கண்ணாடியை குறைந்தது எவ்வளவு காலம் பாவிக்கலாம்?
எவ்­வ­ளவு கவ­ன­மாக பாவிக்­கிறோம் என்பதை பொறுத்து அமை­கி­றது. சிறு குழந்­தை­களை பொறுத்­த­வ­ரையில் கண்­ணா­டி­களை பாவிப்­பதில் மிக கவ­னக்­கு­றை­வாக இருப்­பதால்  அடிக்­கடி உடைத்­து­வி­டு­வதால் அடிக்­கடி மாற்­ற­வேண்டி ஏற்­ப­டு­கின்­றது.
 
கண்­ணா­டியை கவனமாக பாவித்தால் ஒருவருடத்திற்கு ஒருமுறை மாற்றவேண்டும். வெள்ளை எழுத்துகாரர்களை பொறுத்தவரையில் ஒன்றரை வருடத்திற்கு ஒருமுறை இவர்கள் மாற்றவேண்டும். சிறுவயதினரை பொறுத்தவரையில் கண் வளர்ந்து கொண்டிருப்பதால் அடிக்கடி மாற்றவேண்டும். இவர்களுக்கு ஆறு மாதத்திற்கு ஒருமுறை கண்ணாடியை மாற்றவேண்டிய தேவையேற்பட வாய்ப்புள்ளது. 
 
அடிக்­கடி வைத்­தி­யரை மாற்­று­வ­தனால் பாதிப்பு ஏற்­பட வாய்ப்­புண்டா?
இலங்­கையை பொறுத்­த­மட்டில்  ஒரு நோயாளி வைத்­தி­யசா­லைக்கு செல்லும் போது தங்­களின் வைத்­திய விப­ரங்­களை சரி­யாக வைத்­தி­ருப்­பதிலை. உதா­ர­ண­மாக, ஒரு வைத்­தி­ய­ரிடம் சென்­று­விட்டு பிரி­தொ­ரு­ வைத்­தி­ய­ரிடம் செல்லும் போது அந்த நோயா­ளியின் விப­ரங்­களை தொலைத்து விட்டு செல்­வதால் இந்த நோயா­ளியின் நிலை என்ன என்­பதை அறிய வைத்­தி­யர்கள் சிர­மத்­துக்­குள்­ளாக வேண்­டிவரும். ஒரு வைத்­தி­ய­ரிடம் தொடர்ந்து செல்­வது சாலச்­சி­றந்­தது. இருப்­பினும், பிரிதொரு வைத்­தி­ய­ரிடம் அவ­சியம் ஏற்­படும் பட்­சத்தில் செல்லலாம். அதில் தவ­றில்லை.
 
எந்த வயதில் கண்­ணுக்கு கண்­ணாடி உப­யோ­கிக்க வேண்டும்?
சில சம­யங்­களில் ஆகக் குறைந்தது பிறந்த குழந்தைக்கு கூட கண்­ணா­டி பாவிக்க வேண்­டிய தேவை ஏற்­ப­டலாம். சிறு குழந்­தை­க­ளுக்கு கண்பார்வை   பல­வீ­ன­மாக காணப்­ப­ட்டால் வைத்­திய ஆலோ­சனையின் படி கண் நரம்­புகள் சரி­யாக வளர்ச்சி பெற கண்ணாடி பாவிக்க வேண்டி ஏற்­ப­டலாம். இது தவிர, பாட­சாலை செல்லும் பிள்ளைகள் தூர  பார்வை தெரி­யாமல் இருக்கும் போதோ, அல்­லது வாக்­கு ­கா­ர­ண­மா­கவோ கண்­ணாடி பாவிக்­க­ வேண்­டி­வரும். 
 
ஒரு முறை கண்­பார்வை இழந்தால் மறு­ப­டியும் பெற­லாமா?
கண்­பார்வை எவ்­வாறு இழக்­கப்­பட்­டது என்பதை பொறுத்து, கண்­பார்வை வர­வாய்ப்­புகள் உண்டு. கண்­களில்  ஏற்­படும் இரத்த கசிவு கார­ண­மாகவும் இருக்­கலாம். அல்லது நீரி­ழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் கண்பார்வை இழக்கின்றமை ஒரு பொது­வான காரணமாகும். சடு­தி­யாக இரத்த கசிவு கார­ண­மாக கண்­பார்­வையை இழந்தால் கண் ­பார்வை வர­ வாய்ப்­புகள் உண்டு.
 
கெட்ரெக் சம்­பந்­த­மாக கண் ­பார்­வையை ஒருவர் இழந்தால் கூட அது பொது­வான பிரச்­சினை. இது நோய் முற்றி போய் பார்­வையை இழந்தால் குணப்­ப­டுத்த 100-–99 வீதம் வாய்ப்­புள்­ளது. இதனை யாரும் கருத்தில் கொள்­வ­தில்லை. இந்த பாதிப்­பி­லி­ருந்து குருட்டு தன்­மையை முற்­றாக  குணப்­ப­டுத்த முடியும்.
 
குளுக்­கோமாவினால் ஏற்­படும் குருட்­டுத்­தன்­மையை பின்­போ­டலாம். இது சரி­யான வைத்­திய பரி­சோ­த­னையின் மூலம் தவிர்த்­துக்­கொள்­ளலாம்.  
 
கண் நரம்பு சம்­பந்­த­மாக ஏதா­வது பிரச்­சினை ஏற்­பட்டால் இதனை சரி­செய்­ய ­மு­டி­யாது. மூளையில் பார்­வையின் பகுதி செய­லி­ழந்தாலும், நரம்பு செய­லி­ழந்தாலும் சரி­ செய்­ய மு­டி­யாது. பார்வை திரும்பி வருவது கஷ்டம். அத்­துடன் விழித்­திரை சம்­பந்­தப்­பட்ட பிரச்­சினை ஏற்­பட்டால் இதற்கு சிகிச்சை வழங்­கு­வதன் மூலம் மீண்டும் பார்­வையை பெற வாய்ப்­புள்­ளது.  
(தொடரும்....)
 
26Photo-401.jpg
 
மேலதிக விபரங்களுக்கு
 011 - 2693911
 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.