Jump to content

தமிழ் ஊடகங்களின் நடத்தையில் அவசர மாற்றம் வேண்டும்.


Recommended Posts

பதியப்பட்டது

அவசரம்: தமிழ் ஊடகங்கள் எப்போ திருந்தப் போகுதுகள்?

"A pro-rebel website reported that two Tiger boats successfully went ashore and militants carried out rocket-propelled grenade attacks against the harbour while the suicide bombing was underway."

http://news.yahoo.com/s/afp/20061019/ts_af...ck_061019073303

சிறீலங்கா படைத்துறை பேச்சாளர்கள், சிறீலங்கா காவல்துறையினர், சிறீலங்கா அமைச்சர்கள் தான் இதுவரை 5 படகில் வந்தார்கள், 15 பேர் இருந்தார்கள், அவற்றில் 2...3 படகுகள் மோதி வெடித்த தற்கொலைப்படகுகள் என்று சம்பவம் நடந்த சொற்ப மணத்தியாலங்களிற்குள்ளே கதை கட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.

பிபிசி போன்ற ஊடகங்களில் வந்த சில பொதுமக்களின் சாட்சியங்களான படகுகள் வெடித்து சிதறுவதை கண்டோம் எத்தனை பாரிய குண்டுச்சத்தங்கள் கேட்டது, புகை தெரிகிறது போன்றவற்றை தவிர இந்த சம்பவம் தொடர்பாக ஊடகங்களில் வந்த அனைத்து தகவல்களும் சிறீலங்காவின் பிரச்சாரங்கள்.

தமிழ் ஊடகங்களோ உடனே சிறீலங்காவின் இந்த பிரச்சாரத்தில் இருக்கிற பலவீனங்களை தமது கற்பனையால் நிவர்த்தி செய்து தமிழர் தரப்பில் இருந்து வரும் செய்தி என்ற ஒரு மறைமுக அங்கீகாரத்தோடு எல்லாருடைய முகத்திலும் வாந்தி எடுக்கிறார்கள்.

சிறீலங்காவின் பிரச்சாரத்தை உரிய முறையில் (வசன நடையில்) போடாது தமக்கு தாக்குதல் நடக்கு களங்களில் விசேட நிருபர்கள் இருக்கிறார்கள் ஏன்று வேறு மேலதிகமாக சோடிச்சு சிறீலங்காவின் பிரச்சாரத்திற்கு வலுச்சேர்கிறார்கள் தமிழ் ஊடகங்கள். அதாவது தமது கன்றுக் குட்டித்தனத்தால் சிறீலங்காவின் நம்பிக்கைக்குரிய மிகவும் பெறுமதிமிக்க ஊதுகுழலாக மாறிவிடுகிறார்கள் ஏதாவது சம்பவங்கள் நடக்கும் பொழுது.

சர்வதேச ஊடகங்களும்; இவற்றை புலி ஆதரவு ஊடகங்கள் புலிகள் தரப்பிடம் இருந்து ஏதோ மறைமுகமாகவேனும் உத்தியோகபூர்வமற்ற முறையிலேனும் உள் தொடர்புகளை வைத்து தகவல்களை உறுதி செய்து போடுவதான ஒரு பாணியில் நடந்த சம்பவத்திற்கு தமது முடிவுரையை எழுதிவிடுகிறார்கள்.

இங்கு தொடர்ந்து தவறிழைப்பது நிதர்சனம் மாத்திரம் அல்ல, பதிவு, புதினம் மற்றும் சங்கதியும் தான்.

இது நடந்தது முதல் முறையும் அல்ல இது பற்றி பலரால் பல தடவை பல வழிகளில் சுட்டிக்காட்டப்பட்டுவிட்டத

Posted

இந்த விடயம் பற்றி பலமுறை இக்களத்தில் பல்வேறு இடங்களில் சொல்லியாகிவிட்டது. ஆனால் எந்த இணையத்தளத்தவரும் கணக்கில் எடுத்ததாக இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.