Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்களுக்கு தெரியவே தெரியாது; பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லுங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

f2a7a97756deb36000ccc2528280a636.jpg

ஐஸ்கிறீம் உற்பத்தியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டம் நடைபெற்றமை குறித்து தங்களுக்கு எவ்வித தகவலும் இன்றுவரை தெரியாது என யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் யாழ்ப்பாண  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் தெரிவித்துள்ளனர். 

பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் செய்தியாளர் ஒருவர் ஐஸ்கிறீம் உற்பத்தியாளர்களின் ஆர்ப்பாட்டம் தொடர்பில் கேள்வியெழுப்பி இருந்தார் .அதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார். 

அண்மையில் யாழ்.மாவட்ட ஐஸ்கிறீம் உற்பத்தியாளர்கள் தங்களை மீண்டும் தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும்  உதயன் பத்திரிகை செய்தியை பிரசுரமாக்கியதால்  தங்களுடைய  பொருளாதாரம் பாதிக்கப்பட்டு விட்டது என்று கூறியும் திடீர் மரண விசாரணை அதிகாரி உதயசிறி தலைமையில் ஆர்ப்பாட்டம்  ஒன்று நடைபெற்றதுடன் உதயன் பணிமனைக்கு முன்பாகவும் கொடும்பாவி எரிக்கப்பட்டது. 

குறித்த ஆர்ப்பாட்டம் முனியப்பர் ஆலய முன்றலில் இருந்து ஆரம்பித்து மணிக்கூட்டு கோபுர வீதி , வேம்படி சந்தி, வைத்தியசாலை வீதி வழியாக காங்கேசன்துறை வீதி , நாவலர் வீதி என வந்தவர்கள் உதயன் நிறுவன வாயிலில் கொடும்பாவியினையும் எரித்துச் சென்றனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் 50ற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர் .  எனினும் இவ்வாறு பெரும் எடுப்பில் நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி தொடர்பில் பொலிஸாருக்கு தெரியவில்லை என்பது அதிசயம் தான். 

இது தொடர்பில் எஸ்.எஸ்.பி மேலும்  தெரிவிக்கையில், 

ஐஸ்கிறீம் உற்பத்தியாளர்கள் மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்திற்கு எம்மிடம் எவ்வித அனுமதியும் அவர்கள் பெற்றுக் கொள்ளவில்லை. எங்களுக்கு அவ்வாறானதொரு ஆர்ப்பாட்டம் நடைபெற்றதே தெரியாது. இன்று நீங்கள் சொல்லும் போது தான்  எங்களுக்கு தெரியும். 

அத்துடன் நீங்கள் கூறுவது போல ஒலி பெருக்கிப் பாவிப்பினை மேற்கொள்வது எனின் பொலிஸாரிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். பாடசாலை மற்றும் வைத்தியசாலை வீதியில் செல்லும்  போது ஒலி பெருக்கிப் பாவனையினை நிறுத்திச் செல்ல வேண்டும். 

அவ்வாறு செல்லவில்லை எனின் அது குற்றம். இருப்பினும் குறித்த விடயம் குறித்து தாம் சௌகரியத்திற்கு உள்ளாகியதாக எமக்கு முறைப்பாடுசெய்யவில்லை. எங்களுக்கு தெரியாது போய்விட்டது.

எனவே எதிர்வரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள்  நடைபெற்றால்  உடனடியாக பொலிஸாருக்கு  தெரியப்படுத்துங்கள் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

இதில் என்ன விசித்திரம் உள்ளது எனின், குறித்த குழுவின் ஆர்ப்பாட்டம் முனியப்பர் ஆலயத்தில் இருந்து ஆரம்பித்து புல்லுக்குளம் வழியாக வந்து மணிக்கூட்டு கோபுரத்தை சுற்றி வேம்படி சந்தியை நோக்கிச் சென்றது. 

அதன்போதும் ஒலிபெருக்கிப் பாவனையும் இருந்துள்ளது. எனவே பொலிஸ் நிலையத்திற்கு பக்கத்தால் சென்றவர்களை எப்படி பொலிஸார் காணாது இருக்க  முடியும்? 

ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் கூட காணாமல் இருந்திருப்பாரா? மேலும் குறித்த வீதியில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தின் பிரிவு ஒன்றும் உள்ளது. அவர்கள் கூட கண்டிருக்க மாட்டார்களா? 

இவ்வாறான பொலிஸாரின் பொறுப்பற்ற பேச்சு மக்கள் பிரதிநிதிகளாக இருக்கும் பொலிஸாரின் நடவடிக்கைகளில் சந்தேகம்  கொள்ள வைக்கின்றது. பாரியளவில் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டத்தை கூட அறிந்திராத பொலிஸ் எவ்வாறு பாரிய குற்றங்களை மேற்கொள்பவர்களை கைது செய்யும்? அவர்கள் குறித்த தகவல்களை எவ்வாறு அறியும் என்ற சந்தேகமும்  எழுந்துள்ளது. 

இந்த நிலையில் கூட்டமைப்பினரோ மற்றும்  தமிழர் நலன் மீது அக்கறையுள்ள குழுக்களோ   சிறிய அளவிலானவர்கள் யாழ். நகரில் ஒரு ஓரமாக நின்று மேற்கொள்ளும்  கவனயீர்ப்புப் போராட்டங்கள் மட்டும் எவ்வாறு உடனடியாக பொலிஸாருக்கு தெரிய வருகின்றது? 

சம்பவ இடத்தில் பொலிஸார் குவிக்கப்படுவதும் , புலனாய்வாளர்களும்  சூழ்ந்து கொள்கின்றனர் ? தடை செய்கின்றார்கள் ? இவ்வாறு மோப்பம் பிடிப்பவர்களுக்கு ஏன் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது தெரியாது போய்விட்டது?

எது எவ்வாறாயினும்  குறித்த விடயத்தில் பொலிஸார் பக்கச் சார்புடனேயே செயற்பட்டுள்ளனர் என்பது அவர்களது பேச்சுக்களில் இருந்தும் செயற்பாட்டிலும் வெளிப்படையாக தெரிகின்றது. இனிமேலாவது பொறுப்பு வாய்ந்த பொலிஸார் பொறுப்புடன் நடந்து கொள்வதுடன் பக்கச் சார்பின்றியும் செயற்பட வேண்டும். 

 

 

http://onlineuthayan.com/News_More.php?id=221463683129600920

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.