Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு மாகாணசபையின் வரவுசெலவுத் திட்டத்தில், 2222.4 மில்லியன் ரூபா பற்றாக்குறை

Featured Replies

வடக்கு மாகாணசபையின் வரவுசெலவுத் திட்டத்தில், 2222.4 மில்லியன் ரூபா பற்றாக்குறை DEC 05, 2014 | 1:21by யாழ்ப்பாணச் செய்தியாளர்in செய்திகள்

northern-provincial-council-300x200.jpgவடக்கு மாகாணசபையின் அடுத்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில், 2222.4 மில்லியன் ரூபா பற்றாக்குறை இருப்பதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணசபையின் நேற்றைய அமர்வின் போது, 2015ம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் தொடர்பான நிதிக்கூற்று அறிக்கையை அவர் சமர்ப்பித்தார்.

இதன்படி, வடக்கு மாகாணசபையின் 2015ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நடைமுறை மற்றும் மீண்டெழும் செலவுகள் 15,122.4 மில்லியன் ரூபாவாக இருக்கும்.

இதனை ஈடுசெய்வதற்கு, மத்திய அரசிடமிருந்து 12,800 மில்லியன் ரூபா கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, பற்றாக்குறையை ஈடுசெய்ய மாகாணசபை வருமானம் மூலம் 347.4 மில்லியன் ரூபா கிடைக்குமென எதிர்பார்ப்பதாகவும், மத்திய அரசிடம் இருந்து, 1,975 மில்லியன் ரூபாவைத் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

இந்த நிதிக்கூற்றை சபையில் அங்கீகரிக்கும்படி கோரி வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானத்திடம் முதலமைச்சர் கையளித்தார்.

அமைச்சர்களுடன் மாத்திரம் கலந்துரையாடி மூலதன செலவுகள் விபரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் இதுதொடர்பாக முழு விளக்கம் தங்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா மற்றும் ஆளுங்கட்சி உறுப்பினர் அன்ரனி ஜெகநாதன் ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, முழு அறிக்கை தருமாறும் முதலமைச்சரிடம் கோரிய அவைத் தலைவர், 2015ஆம் ஆண்டுக்கான நிதிக்கூற்றை ஏற்றுக்கொள்வதாக கூறியதுடன், வரவு செலவுத் திட்டம் தொடர்பில் கலந்துரையாடலொன்று இன்று முதலமைச்சர் செயலகத்தில் நடைபெறவுள்ளதாகவும் கூறினார்.

http://www.puthinappalakai.net/2014/12/05/news/1452

இவ்வளவு பணத்தையும் என்ன செய்ய போறீங்க , என்ன கட்டுமானங்கள் , முன்னாள் போராளிகளின் பராமரிப்பு , இப்படி ஏதாவது இருக்கா ?

நீர்பாசன  திட்டம், மழை  நீர் சேகரிப்பு மற்றும் கடல் நீரை உடபுகமுடியாதவாறு ஏதாவது திட்டம் , நகர வடிகாலமைப்பு , இப்படி ஏதாவது  நல்ல திட்டங்கள் இருக்கா முதலமைச்சரே ,
 
முதலில் எங்கள் தேசியதலைவர் ஓர் தீர்க்கதரிசி என்பதை உணர்ந்து கொள்ளுங்கள் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.