Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீண்டுமொரு ஆயுதப் போராட்டத்திற்கு முயற்சி! கோட்டபாயவின் கண்டுபிடிப்பு

Featured Replies

 

gotabhaya_press.jpgஇலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலை விடுக்கக்கூடிய பயங்கரவாதம் மீள் எழுச்சிப்பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் எழுந்துள்ளதாக பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பு தொழில்சார்நிபுணர்களின் சம்மேளனம் இன்றைய தினம் நடத்திய செயலமர்வில் தேசிய பாதுகாப்பு என்ற தலைப்பில் ஆற்றிய உரையின் போதே கோட்டாபய இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

போர் முடிவூக்கு கொண்டுவரப்பட்டு ஐந்து வருடங்கள் கடந்துள்ள நிலையிலும்இ இலங்கையின் தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளது.

பயங்கரவாதம் மீள எழுச்சிபெறக்கூடிய சாத்தியப்பாடுகள் அதிகமாக இருப்பதாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளாகவோ அல்லது வேறு ஒரு அமைப்பாகவே இது இருக்கலாம். குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் மத்தியில் இருக்கும் கடும்போக்காளர்கள், எஞ்சியுள்ள எவிடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்புடன் இணைந்து தமது குறிக்கோளை அடைவதில் தீவிரம்காட்டி வருகின்றனர்.

அரசியல் கட்சிகளுக்கு தொடர்ந்து நிதி உதவிகளை வழங்கி பிரிவிணைவாத கொள்கைகளை மக்கள் மத்தியில் பரப்பவும், மீண்டும் ஆயுதப்போராட்டத்தை ஆரம்பித்து இலங்கையில் வன்முறைகளை தூண்டிவிடவும் இந்த சக்திகள் தருணம் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.

விடுதலைப் புலிகளை மீளக்கட்டியெழுப்பும் முயற்சிகள் பலவற்றை அரசாங்கம் வெற்றிகரமாக முறியடித்துள்ளது. எனினும் சர்வதேச அரங்கில் விடுதலைப் புலிகளை மீளக்கட்டியெழுப்பும் சில முயற்சிகள் வெற்றியடைந்துள்ளன என்பதையூம் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். இந்த நிலையில் இராணுவ பிரசன்னம் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது.

முக்கியமான இடங்களில் மாத்திரமே இராணுவ முகாம்கள் தொடர்ந்தும் பேணப்பட்டு வருகின்றன.

அதேவேளை விடுதலைப் புலிகள் மீள எழுச்சிபெறுவதை தடுப்பதற்காக உளவுத்துறையினர் தொடர்ந்தும் அவதானமாக இருக்க வேண்டியது அவசியமாக இருக்கின்றது என்றும் கோட்டாபய தெரிவித்துள்ளார்.http://www.pathivu.com/news/35887/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்
புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீண்டுமொரு ஆயுதப் போராட்டத்திற்கு முயற்சி! கோட்டபாயவின் கண்டுபிடிப்பு
Started by sudaravanToday, 06:12 PM
 
 
முதலில்
எமது மண்ணை  பறிப்பதையும்

                எமது மக்களை துன்பத்தில் ஆழ்த்துதலையும்  நிறுத்து..

               அதன் பின் இந்த அச்சம் உனக்கு இல்லாது போகலாம்

             அதுவரை............... :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்
மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கக் கூடிய அபாயம் காணப்படுவதாக கோத்தாபய அறிவிப்பு :
07 டிசம்பர் 2014

மீண்டும் நாட்டில் பயங்கரவாதம் தலைதூக்கக் கூடிய அபாயம் காணப்படுவதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்ட போதிலும் தொடர்ந்தும் தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் நீடித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு தொடர்ந்தும் செயற்பட்டு வருவதாகவும், கடும்போக்கு அமைப்புக்களுடன் தொடர்பு பேணப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

சில அரசியல் சக்திகள் தொடர்ந்தும் பிரிவினைவாத கொள்கைகளை முன்னெடுத்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.


சில தரப்பினர் நாட்டில் மீண்டும் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்க முயற்சித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயகக் கட்டமைப்பில் இருந்து கொண்டே பிரிவினைவாத கொள்கைகள் கோட்பாடுகளை சில தரப்பினர் முன்னெடுத்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் பிரிவினைவாதத்தை கைவிட்டுள்ளதாகவும், புனர்வாழ்வு அளிக்கப்படாத போராளிகள் தொடர்ந்தும் பிரிவினையை போசிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க பேராசிரியர்கள் நடத்திய ஆய்வின் மூலம் இந்த தகவல் கிடைக்கப்பெற்றது என அவர் தெரிவித்துள்ளார்.

புனர்;வாழ்வு அளிக்கப்படாத புலி உறுப்பினர்கள் சர்வதேச அமைப்புக்களுடன் இணைந்து பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட முயற்சிப்பதாகத் தெரிவித்துள்ளார்.http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/114230/language/ta-IN/article.aspx

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.