Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டயஸ்போராவுக்கு வாக்குரிமை பெற்றுக் கொடுக்கப் போகிறாராம் பொதுவேட்பாளர்! – டளஸ் அழஹப்பெருமவின் கற்பனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
dullas-alahapperuma-200-news1.jpg

தீவிரவாதத்தை ஆதரிக்கும் டயஸ்போராவுக்கு ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கும் சந்தர்ப்பத்தைப் பெற்றுக்கொடுக்க எதிரணியின் பொதுவேட்பாளர் முயற்சித்து வருவதாக அமைச்சர் டளஸ் அழஹப்பெரும தெரிவித்துள்ளார். இதற்கான சூழல்நிலையை உருவாக்கும் விதத்தில் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முழு மூச்சுடன் களத்தில் நின்று செயற்படுவதாக தெரியவந்துள்ளது.

   

டயஸ்போரா, எதிரணியிடம் முன்வைத்துள்ள பிரதான மூன்று கோரிக்கைகளில், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமக்கு வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்க வேண்டுமென்பதும் ஒரு கோரிக்கையாகும். இது தீர்க்கமாக ஆராயப்பட வேண்டிய விடயமென்பதனால் நாட்டு மக்களே இது குறித்து உறுதியான நிலைப்பாட்டிற்கு வரவேண்டும்.

எமது நாட்டிலிருந்து இடம்பெயர்ந்து இன்னுமொரு நாட்டில் தஞ்சமடைந்தபடி இலங்கைக்குள் தீவிரவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் வளர்க்க ஆசைப்படும் டயஸ்போராவின் வாக்குகள் பாரதூரமான மாற்றத்தை மீண்டும் நாட்டில் ஏற்படுத்துமென அவர்கள் நம்புகின்றனர். அதன் காரணமாகவே முன்னொருபோதும் இல்லாத வகையில் இப்பொழுது ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க தமக்கு சந்தர்ப்பம் பெற்றுத் தருமாறு அவர்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

இந்தக் கோரிக்கையை எதிரணியின் பல கட்சிகள் ஏற்க மறுத்துள்ள போதும் டயஸ்போராவின் ஒப்பந்தங்களுக்கு கட்டுப்பட்டுள்ள எதிரணி பொதுவேட்பாளர் அவர்களின் மனதை குளிர்விப்பதற்காக பல முயற்சிகளை மேற்கொள்வதாக தெரிய வருகிறது. க்ளோபல் தமிழ் போரம் என்னும் அமைப்பு இதற்காக முன்னின்று உழைக்கிறது.

அரசியல் கலாசாரத்தில் மேடைகளில் ஒருவரையொருவர் குறைகூறுவது, உண்மைகளை அம்பலப்படுதுவது, பொய் பேசுவது, சேறு பூசுவது, பெயரை கொச்சைப்படுத்துவது ஆகியன வழமையானவை. யார் எதை கூறினாலும் அதனை நன்றாக செவிமடுங்கள், ஆனால் இறுதியாக நாட்டின் தேசிய பாதுகாப்பு, அரசியல் ஸ்திரத்தன்மை, பொருளாதார அபிவிருத்தி என்பவற்றை ஏற்படுத்தக் கூடியவர்கள் யாவர்? தற்போது நாட்டில் உருவாகியுள்ள நிலைமையை தொடர்ந்தும் இவர்களால் தக்கவைத்துக்கொள்ள முடியுமா என்பதனை மாத்திரம் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டுமென தான் பொதுமக்களை கேட்டுக்கொகிறோம்.

ஜெனீவா விசாரணை, சர்வதேச நீதிமன்ற பொறிமுறை ஆகியவற்றுக்கு உடந்தையாக செயற்படமாட்டோமெனவும் வடக்கு, கிழக்கிலிருந்து இராணுவத்தை வாபஸ் பெறமாட்டோமெனவும் எதிரணியின் பொதுவேட்பாளர் அளித்துள்ள வாக்குறுதி நம்பகத்தன்மையற்றது. பலாலி விமானப்படை முகாமை மூடுமாறு உண்ணாவிரதமிருந்த எதிர்க் கட்சித் தலைவர், சனல் 04 போலி குறும்படத்தை பார்த்ததும் தன்னையொரு இலங்கையரென்று கூறிக்கொள்வதில் வெட்கப்படுவதாக தெரிவித்த சந்திரிக்கா பண்டாரநாயக்க அதிகாரப் பகிர்வைக் கோரும் மனோ கணேசன் ஆகியோருடன் கூட்டுச் சேர்ந்திருக்கையில் எவ்வளவு தூரம் எதிரணியின் பொதுவேட்பாளரால் வாக்குறுதியை நிறைவேற்ற முடியுமெனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

http://seithy.com/breifNews.php?newsID=122253&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.