Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மத்தியதரவர்க்கம் மைத்திரியின் பக்கம் ஆயினும் கிரமப்புறங்களை வெல்வதில் எதிரணியினர் பலவீனமாக உள்ளனரா?

Featured Replies

UNP1_CI.jpg
 
மத்தியதரவர்க்கம் மைத்திரியின் பக்கம் ஆயினும் கிரமப்புறங்களை வெல்வதில் எதிரணியினர் பலவீனமாக உள்ளனரா?
 
எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பிரச்சாரம் எவ்வாறாக அமைந்துள்ளது என்பது குறித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் வீட்டில் நாளாந்தம் ஆய்வுக்கூட்டங்கள் இடம்பெறுகின்றன,
 
குறிப்பிட்ட கூட்டங்களுடன் புள்ளிவிபரங்களுடன் தற்போதைய நிலை குறித்து ஆராயப்படுவதாகவும், கடந்த தேர்தலுடன் ஒப்பீடுகள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
 
இந்த கூட்டங்களில் கலந்துகொள்ளும் எதிர்கட்சி தலைவர் உட்பட முக்கிய தலைவர்கள் மைத்திரிக்கு இம்முறை வாய்ப்புள்ளதாக கருதுகின்றனர்.
 
2010 இல் சரத்பொன்சேகாவிற்கு காணப்பட்டதை விட சிறிசேனவிற்கு அதிகளவு ஆதரவுள்ளதாக அவர்கள் கருதுகின்றனர். கடந்த சில வாரங்களில் மைத்ததிரிபால சிறிசேனாவிற்கு அர்த்த பூர்வமாக உரையாற்றகூடியவர் என்ற பெயர் கிடைத்துள்ளதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு எதிரான கடும் போட்டியில் இறங்கியுள்ள மைத்திரிக்கு இவை சாதகமான விடயங்களா அமைந்துள்ளன.
 
பிரச்சார யுத்தத்தின் ஆரம்ப வெற்றியை எதிரணி பெற்றிருந்த போதிலும், கடந்த வாரம் திஸ்ஸ அத்தநாயக்காவின் பதவி விலகல் காரணமாக அரசாங்கம், ஊடகங்களில் முக்கியத்துவத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது. அதற்கு சில நாட்களுக்கு பின்னர் அரசாங்கம் உதயகம்மன்விலவை தன் பக்கம் இழுத்து இன்னொரு ஆச்சரியத்தை நிகழ்த்தி காட்டியது. இதன் காரணமாக செய்திதலைப்புகளில், முதற்பக்கங்களில் எதிரணியினருக்கு கிடைத்த முக்கியத்துவத்தால் ஏற்பட்ட பாதிப்பை அரசாங்கம் ஒரளவிற்கு சரிசெய்தது.
 
இதேவளை அரசியல் நிலவரம் எதிர்பாரத திருப்பங்கள் நிறைந்ததாக மாறிவருவதால்,கட்சி மாற்றங்கள் முக்கியத்துவத்தை இழந்துள்ளன.
தற்போதைய நிலையில் எதிர்கட்சி வேட்பாளருக்கு உள்ள முக்கிய நம்பிக்கையாகவும்,ஆயுதமாகவும் அவரது பொது கூட்டங்களுக்கு திரளும் பொதுமக்கள் உள்ளனர். இது எதிரணி தலைவர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.
 
அதேவேளை இந்த நம்பிக்கை சில நேரங்களில் பலவீனமாகவும் அமைந்துவிடும், வாக்களார்கள் மத்தியில் காணப்படும் ஆதரவை முழுமையான தேர்தல்வெற்றியாக மாற்றுவதற்கான அரசியல்திட்டம் அவசியம்.
 
பொதுகூட்டங்களுக்கு மக்கள் பெருமளவு வருவது மாத்திரம் தேர்தல்வெற்றியை கொண்டுவருவதில்லை,மைத்திரியின் பொதுகூட்டங்களுக்கு பொதுமக்கள் வருவது நல்ல விடயம், ஆனால் அவர்கள் தேர்தலில் அவருக்கு வாக்களிப்பதையும் உறுதிசெய்யவேண்டும்,பலர் என்ன நடக்கிறது என பார்ப்பதற்காக கூட்டங்களுக்கு வருவார்கள் அவர்களையும்உள்ளே ஈர்க்கும் திட்டமொன்று அவசியம்இந்த விடயத்திலேயே வீடுவீடாக பிரச்சாரத்தை மேற்கொள்வது முக்கியமானது என ஆய்வாளர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
இதேவேளை வெறுமனே நகரப்பகுதிகளில் கவனம் செலுத்தாமல் மைத்திரி கிராமபுறங்களை இலக்குவைத்து பிரச்சாரத்தினை முன்னெடுப்பதும் சிறந்த விடயம்.எனினும் வீடுவீடாக சென்று பிரச்சாரத்தை முன்னெடுப்பதற்கான திட்டமொன்று எதிரணியினரிடம் இல்லாதது அவர்களது பலவீனமாகவுள்ளது.
 
பொதுவேட்பாளருக்கு ஆதரவாக கிராமப்பகுதிகளில் வீடுவீடாக சென்று பிரச்சாரம்செய்வதற்கான முழுமையான திட்டம் எதிரணியினரிடம் இல்லாததால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சிறிதளவு முன்னணில் உள்ளார்.
 
திஸ்ஸ அத்தநாயக்க இல்லாதது இந்த ஒருவிடயத்தில் மாத்திரம் பாதிப்பை ஏற்படுத்தும்,ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்களில் அதன் கிராமப்புற கட்டமைப்புகள் குறித்து நன்கு அறிந்தவர் அவர்.
 
மத்திய வர்க்கம் மைத்திரிபாலவிற்கு ஆதரவாக மாறியுள்ளதை ஐக்கிய தேசிய கட்சியின் மூத்ததலைவர்கள் உணர்ந்துள்ளனர்.
 
எனினும் அவர்கள் மகிந்த ராஜபக்சவின் பலமாகவுள்ள கிராமப்புற வாக்களார்களை கவருவதன் அவசியம் குறித்து அவர்கள் உணரவில்லை.
 
அவர்களை தனிப்பட்ட ரீதியில் அணுகும் பிரச்சாரத்திற்கு மாத்திரமே கிராமப்பகுதிகளை சேர்ந்த வாக்களர்கள் ஆதரவளிப்பார்கள்.
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.