Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கண்களைக் கலங்க வைக்கும் சாட்சியங்கள்...

Featured Replies

கோடரியால் கதவை கொத்தி திறந்து அப்பாவை இராணுவம் பிடித்து சென்றது! 13 வயது மகன் உருக்கம் (வீடியோ)

 

13%20years%20boy%2055f.jpg

 

செட்டிகுளம், மெனிக்பாம் பகுதியில் உள்ள எமது வீட்டின் கதவை கோடரியால் கொத்தித் திறந்த இராணுவம் அப்பாவை பிடித்துச் சென்றது என 13 வயது மகன் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தார்.
 
வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலகத்தில் இரண்டாவது நாளாக இன்று இடம்பெற்ற ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையின் போதே குணராசா டிலக்சன் என்ற 13 வயது சிறுவன் இவ்வாறு சாட்சியமளித்தார். அவர் தொடர்ந்து சாட்சியமளிக்கையில் - "எனக்கு அப்ப 7 வயது. 2008 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 28 ஆம் திகதி இரவு 8 மணியளவில் எமது வீட்டுக்கு வந்த இராணுவம் கதவைத் தட்டியது. நாங்கள் திறக்கவில்லை.
 
கோடரியால் கதவை கொத்தி அப்பாவை பிடித்துச் சென்றனர். அம்மா போய் மறிக்க மறிக்க எங்கள விட்டுட்டு ட்ரக் ஒன்றில அப்பாவை ஏத்தி கொண்டு போட்டாங்க. ஆமி உடுப்புடன் தான் வந்து கொண்டு போனாங்க." "இதற்கு முதல் ஒருக்கா எங்கட அப்பாவை ஆண்டியாபுளியங்குளம் இராணுவம் சுற்றிவளைத்து சந்தேகத்தில் பிடித்து சென்றவங்க. பிறகு பிணையில் விட்டு அப்பா காம்பில போய் அடிக்கடி சைன் வைக்கிறவர். அப்படி செய்த நிலையிலேயே பிறகு என்ர அப்பாவா கொண்டு போட்டாங்க. அம்மாவும் வெளிநாட்டுக்கு வேலைக்கு போட்டா. நானும் தங்கையும் தான் உறவினர்களுடன் இருக்கிறோம்" - என்றார். குறித்த சிறுவன் தனது உறவினர் ஒருவருடன் சாட்சியமளிக்க வந்தமை குறிப்பிடத்தக்கது.
 
 
 
 
 

Edited by Athavan CH

  • தொடங்கியவர்
முள்ளிவாய்க்காலிலிருந்து ஓமந்தை வரை வந்த எனது மகள் எங்கே? தாயார் ஆணைக்குழு முன் ஆதங்கம் 
 
cheddikulam%202%20555460.jpg
 
 
முள்ளிவாய்க்காலிலிருந்து ஓமந்தைவரை வந்து இராணுவத்திடம் பதிவுசெய்துகொண்ட எனது 14 வயது மகள் இன்று வரை எங்கே என்று தெரியாது என ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் தாய் ஒருவர் சாட்சியமளித்துள்ளார்.
 
வவுனியா, செட்டிகுளம் பிரதேச செயலகத்தில் இன்று இடம்பெற்ற ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாம் நாள் விசாரணையின் போதே அவர் இவ்வாறு சாட்சியமளித்தார். தாயாராகிய விக்கினேஸ்வரன் ரஞ்சினி தொடர்ந்து சாட்சியமளிக்கையில்,
 
நான் செட்டிகுளம், தட்டான் குளத்தில் இருக்கின்றேன். மகள் லக்சி முள்ளியவாய்காலில் எனது அம்மாவுடன் தங்கி நின்று படித்தவள். அங்கு வைத்து 2008 ஆம் ஆண்டு எனது மகளை புலிகள் பிடித்துச் சென்றுவிட்டார்கள். இறுதி யுத்தம் நடைபெற்று மக்கள் இராணுவத்திடம் வந்த போது எனது மகளும் வந்துள்ளாள். அவளை ஓமந்தையில் எமக்கு தெரிந்த ஒருவர் கண்டு கதைத்துள்ளார். எனது மகளை அவர் தன்னுடன் வருமாறு அவர் கேட்டபோது, 'எனது தலை முடி வெட்டப்பட்டுள்ளது. நான் வந்தா உங்களுக்கு தான் பிரச்சினை. நான் இராணுவத்திடம் பதிகிறேன் என மகள் கூறினார் என்று அவர் என்னிடம் சொன்னார்.'
 
அதன் பின் எனது மகளை பல இடங்களில் தேடியும் இன்று வரை கிடைக்கவில்லை. மனித உரிமை ஆணைக்குழுவிடமும், எனது மகள் ஓமந்தையில் நின்றது தொடர்பான பதிவுகள் உள்ளன. ஆனால் அவர்களும் எனது மகள் இபோது எங்கே இருக்கிறாள் என்று தெரியாது என்கிறார்கள். எப்படியாவது என் பிள்ளையை கண்டுபிடித்து தாருங்கள்.- என்றார் அந்தத் தாயார். -
 
 
 

 

  • தொடங்கியவர்

எமது கிராமத்தை இராணுவத்தினர் சுற்றிவளைத்த நிலையில் சிவில் உடையில் வந்தவர்கள் கணவரை அழைத்து சென்றனர்

 

இராணுவத்தினரே கடத்தினர் - தயாபரன் நளினாதேவி சாட்சியம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வவுனியா:-

V%20wife_CI.jpg


எமது கிராமத்தை இராணுவம் சுற்றிவளைத்திருந்த நிலையில் சிவில் உடையில் வந்தவர்கள் எனது கணவரை விசாரித்து விடுவதாக அழைத்துச் சென்றனர் என காணாமல் போனவரின் மனைவியான தயாபரன் நளினாதேவி ஆணைக்குழுவிற்கு சாட்சியமளித்தார்.
தொடர்ந்தும் சாட்சியமளித்த அவர்,


எங்கள் இடங்களை ஆமி சுற்றிவளைத்து நின்ற போது சிவில் உடையில் வந்த ஆறுபேர் வீட்டு வாசலில் நின்று கூப்பிடார்கள். எனது கணவர் வெளியில் வந்ததும் அவருடன் கதைத்தார்கள். அப்பொழுது நான் அவர்கள் நின்ற இடத்திற்கு சென்ற போது, விசாரித்து விட்டு விடுகிறோம். நீங்கள் உள்ளுக்கு போங்கோ என்றார்கள். அன்றில் இருந்து எனது கணவர் காணாமல் போயுள்ளார்.


யார் கடத்தினார்கள் என்று தெரியுமா எனக் ஆணைக்குழு கேட்ட போது, அவரைப் பிடிக்கும் போது எங்கட இடத்தில ஆமி சுற்றி நின்றாங்க. அவர்களே கடத்தினார்கள். விடிந்ததும் வெளியில் வந்து பார்த்த போது எல்லா இடமும் ஆமியின் சப்பாத்து அடையாளமும் இருந்தது. அடுத்த நாள் செட்டிகுளம் புகையிரத நிலையப்பகுதியில் உள்ள இராணுவத்திடம் சென்று கேட்ட போது தாங்கள் பிடிக்கவில்லை என்றனர்.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/114492/language/ta-IN/article.aspx

 

  • தொடங்கியவர்

காணாமல் போன எனது மகனுக்கு ஏன் மரணச் சான்றிதழ் பெற வேண்டும்? ஆணைக்குழுவிடம் தந்தையொருவர் கேள்வி

 

கருணா குழுவினரே கடத்தியிருக்க வேண்டும் - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வவுனியா:-

V%20father_CI.jpg

 

காணாமல் போன் எனது மகனுக்கு ஏன் மரணச்சான்றிதழ் பெற வேண்டும் என கந்தையா சங்கரப்பிள்ளை என்ற காணாமல் போன ஒருவரின் தந்தை ஆணைக்குழுவிடம் இன்று (15.12) கேள்வியொழுப்பினார்.


காணாமல் போனோh தொடர்பாக விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாம் நாள் அமர்வு இன்று வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்று வரும் நிலையில் சாட்சியமளித்த கந்தையா சங்கரப்பிள்ளை என்ற தந்தையே இவ்வாறு கேள்வி யொழுப்பினார்.


காணாமல் போன மகனுக்கு மரணச்சான்றிதழ் பெற விரும்புகிறீர்களா என ஆணைக்குழுவினால் கேட்டபோதே அவர் இவ்வாறு கேள்வியெழுப்பினார்.


அங்கு சாட்சியமளித்த அவர் மேலும் சாட்சியமளிக்கையில்


எனது மகன் கடந்த 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அக்கரைப்பற்றில் காணாமல் போனார். அப்போது அந்தப் பகுதி முழுவதும் கருணாவின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. எனவே எனது மகனை அவர்களே கடத்தியிருக்க வேண்டும்.


நான் செட்டிகுளம் மெனிக்பாமில் கிராமத்தில் தான் வசித்து வருகின்றேன்.  எனது மகன் வேலைவாய்ப்புக்காக அக்கரைப்பற்றில் தங்கியிருந்த சமயம் கடந்த 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் காணாமல் போயிருந்தார்.


இதன்போது 'அக்கரைப்பற்று யாருடைய கட்டுப்பாட்டில் இருந்தது' என்று ஆணைக்குழுவினர் கேள்வி எழுப்பினர். அதற்கு கருணா அம்மானின் கட்டுப்பாட்டில் இருந்தது என தெரிவித்திருந்தார்.


இதனை தொடர்ந்து ஆணைக்குழுவின் தலைவர் கருணா வடபகுதியில் தானே இருந்தார் என கேட்க, இல்லை அவர் கிழக்கு மாகாணத்தில் இருந்தார்.  அங்கு முகாம்களை அமைத்து அவர்கள் தங்கியிருந்தனர். அந்தக் காலப்பகுதியில் எனது மகன் காணாமல் போனார்.


எனவே, கருணா குழுவினரே எனது மகனைக் கடத்தியிருக்க வேண்டும் என தெரிவித்த அவர் காணாமல் போன எனது மகனுக்கு எப்படி மரணச் சான்றிதழைப் பெற முடியும் எனவும் தெரிவித்தார்.
 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/114491/language/ta-IN/article.aspx

 

  • தொடங்கியவர்

எனது கணவரை இராணுவம் பேரூந்தில் ஏற்றியதை சிலர் கண்டுள்ளனர் - எனினும் காணாமல் போயுள்ளார்

 

தளபதி ராகுலனின் மனைவி - குளோபல் தமிழ்ச்செய்தியாளர் வவுனியா

vavu%20comm%2016_CI.JPG


எனது கணவரை இராணுவம் பேரூந்தில் ஏற்றியதை சிலர் கண்டுள்ளனர். எனினும் பிரான்சிஸ் பாதிரியாருடன் வந்த  அவரை இதுவரை காணவில்லை என விடுதலைப்புலிகளின் தளபதியாக இருந்த ராகுலன் மாமா எனப்படும் தேவதாசன் ரூபனின் மனைவி சாட்சியமளித்தார்.

வவுனியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்று வரும் காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் மூன்றாம் நாள் அமர்விலேயே அவரின் மனைவியான ரூபன் ஸ்ரீமீனலோஜினி இவ்வாறு சாட்சியமளித்தார்.தொடர்ந்தும் அங்கு சாட்சியமளித்த அவர்,

எனது கணவர் ஆரம்பத்தில் விடுதலைப்புலிகளில் இருந்து பின்னர் 1995 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து விலகி திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் இறுதி யுத்தத்தின் போது அனைவரையும் மீண்டும் இணையுமாறு விடுதலைப்புலிகள் கூறியதற்கு அமைய மீண்டும் இணைந்து கொண்டார்.

இந் நிலையில் இறுதி யுத்தத்தின் போது நாங்கள் முள்ளிவாய்க்காலில் இருந்தபோது பிள்ளைகளுக்கு வருத்தம் காரணமாக 17 ஆம் திகதி நாங்கள் இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு வந்தோம். அப்போது எனது கணவரான தேவதாசன் ரூபன் எங்களுடன் வரவில்லை. அங்குள்ள தேவாலயம் ஒன்றில் அவரது நண்பரான பிரேமதாசாவின் குடும்பத்துடன் தஞ்சம் அடைந்திருந்தார்.

அப்போது முள்ளிவாய்காகல் நோக்கி இராணுவம் செல் தாக்குதலை நடத்திக்கொண்டிருந்தது. அப்போது என்னிடம் 10000 ரூபாவை கொடுக்குமாறு தெரிந்தவர் ஒருவர் மூலமாக கொடுத்து அனுப்பியிருந்தார். நாங்கள் அதனை வாங்கியவாறே இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்திற்குள் வந்துவிட்டோம்.

அதன் பின்னர் எனது கணவரும் தேவாலயத்தில் தங்கியிருந்த நண்பர் குடும்பம் உட்பட பலர் அங்கிருந்த அருட்தந்தை பிரான்சிசுடன் இராணுவத்திடம் சரணடைந்திருந்தனர்.அதன் பின்னர் அவர்கள் பேரூந்து ஒன்றில் ஏற்றப்பட்டதை சிலர் கண்டு என்னிடம் தெரிவித்திருந்தனர். ஆனால் அதன் பின்னர் அவர் காணாமல் போயுள்ளார். இன்று நாங்கள் இருந்த நகைகளை விற்று மிகவும் கஸ்டத்தில் நான்கு பெண் பிள்ளைகளைகளுடன் வாழந்து வருகின்றேன். நாங்கள் எந்த நஸ்ட்ட ஈட்டையும் பெறுவதற்கு செல்வதில்லை என அவர் தெரிவித்தார்.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/114509/language/ta-IN/article.aspx

 

  • தொடங்கியவர்


இராணுவம் அழைத்துச் சென்ற எனது மகள் எங்கே?

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.