Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களின் முதுகில் புலி முத்திரை குத்தி ஏமாற்றும் சிங்களப் பெண்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தமிழர்களின் முதுகில் புலி முத்திரை குத்தி ஏமாற்றும் சிங்களப் பெண்!  
[Tuesday 2014-12-16 09:00]
tiger-tatoo-2161214-200-news.jpg
தமிழர்களின் முதுகில் புலி என முத்திரை பதித்து, பணம் சம்பாதிக்க முயற்சித்த சிங்களப் பெண் ஒருவர் பற்றி தகவல்கள் அம்பலமாகியுள்ளன. நேபாளத்தில் உள்ள ஐ.நாவின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தில் காண்பிப்பதற்காக சிங்கள பெண்ணொருவர், தமிழர்களுக்கு மதுபானத்தை கொடுத்து பலவந்தமாக அவர்களின் முதுகில் சூட்டு காயம் மூலம் சிங்களத்தில் கொட்டி (புலி) என முத்திரை பதித்துள்ளார்.
தமிழர்களின் முதுகில் புலி என முத்திரை பதித்து, பணம் சம்பாதிக்க முயற்சித்த சிங்களப் பெண் ஒருவர் பற்றி தகவல்கள் அம்பலமாகியுள்ளன. நேபாளத்தில் உள்ள ஐ.நாவின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தில் காண்பிப்பதற்காக சிங்கள பெண்ணொருவர், தமிழர்களுக்கு மதுபானத்தை கொடுத்து பலவந்தமாக அவர்களின் முதுகில் சூட்டு காயம் மூலம் சிங்களத்தில் கொட்டி (புலி) என முத்திரை பதித்துள்ளார்.
 
மூன்று பிள்ளைகளின் தாயான சுஜீவா வணிகசிங்க என்ற பெண்ணே இவ்வாறு தமிழர்களின் முதுகில் புலி முத்திரை பதித்துள்ளார். வென்னப்புவ பிரதேசத்தை சேர்ந்த அவர் குடும்பத்துடன் நேபாளத்தில் வசித்து வருகிறார். இந்த பெண்ணின் இந்த கொடூரச் செயலை புவநேசன் என்ற தமிழர் அனுபவித்துள்ளார். நேபாளத்தில் உள்ள அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தில் பதிவு செய்து 28 நாட்களுக்குள் ஐரோப்பிய நாடொன்றுக்கு அனுப்பி வைப்பதாக கூறி, புவநேசனை இந்த பெண் நேபாளத்திற்கு வரவழைத்துள்ளார்.
 
தான் உட்பட 5 தமிழர்களை வணிகசிங்க என்ற பெண் நேபாளத்திற்கு வரவழைத்துள்ளதாகவும் ஒருவரின் செலவுக்கென தலா இரண்டு லட்சம் ரூபாவை பெற்றுக்கொண்டதாகவும் புவநேசன் கூறியுள்ளார். குறித்த பெண்ணுக்கு பணத்தை கொடுப்பதற்காக தமது வீடுகளை அடகு வைத்தும், முச்சக்கர வண்டிகளை விற்றும் வட்டிக்கும் பணத்தை பெற நேர்ந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நேபாளத்திற்கு வரவழைக்கப்பட்ட இந்த தமிழர்களுக்கு தினமும் ஒரு வேளை மாத்திரமே இந்த பெண் உணவை வழங்கியுள்ளார். கொடுத்த பணத்தை திருப்பி தருமாறு கேட்ட போது நீங்கள் எல்லாம் தமிழர்கள் உங்களை பொலிஸில் பிடித்து கொடுக்க போகிறேன் எனக் கூறி அந்த பெண் அச்சுறுத்தியுள்ளார்.
 
அத்துடன் இலங்கைக்கு செல்ல முயற்சித்தால், முதுகில் புலி என முத்திரை பதித்துள்ளதால், புலி உறுப்பினர் ஒருவர் நாட்டுக்கு வருகிறார் என விமான நிலையத்தில் இருக்கும் பயங்கரவாத விசாரணைப் பிரிவில் தனக்கு தெரிந்தவர்களுக்கு தொலைபேசியில் தெரியப்படுத்துவேன் என்றும் இந்த பெண் மிரட்டியதாக சுரேஷ் என்பவர் கூறியுள்ளார். தமக்கு நேர்ந்த அநீதி சம்பந்தமாக நேபாளத்தில் உள்ள அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து இவர்கள் இலங்கை வர ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
 
வணிகசிங்க என்ற இந்த பெண், கடந்த ஜூலை மாதம் 8 ஆம் திகதி 41 பேரை படகு மூலம் நியூசிலாந்து அனுப்பியிருந்ததுடன் அவர்கள் அவுஸ்திரேலிய கடற்படையினரால் கைது செய்யப்பட்ட பின்னர் இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். நாட்டின் வடக்கு, கிழக்கில் போர் நடைபெற்ற போது இலங்கை இராணுவத்தில் உள்ள சிலர், தமிழர்கள் உடம்பில் புலி என முத்திரை பதித்ததாக செய்திகள் வெளியாகி இருந்தன.
 
அதேவேளை தமக்கு ஏற்பட்டுள்ள உயிர் அச்சுறுத்தல் காரணமாக பலர் நாட்டை விட்டு வெளியேறி அரசியல் தஞ்சம் கோருவதற்காக நேபாளத்தில் உள்ள அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்திற்கு சென்றனர். நேபாளத்தில் உள்ள ஐ.நாவின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் மூலம் ஐரோப்பிய நாடுகளில் பலர் அரசியல் தஞ்சம் பெற்றுள்ளனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சிங்கள மற்றும் தமிழர்களை ஏமாற்றி பணத்தை பெற்று அகதிகளாக ஐரோப்பாவுக்கு அனுப்புவதாக தெரிவித்து, நேபாளத்திற்கு அழைத்துச் சென்ற கைவிடப்பட்ட நிலையில் உள்ளனர். இவ்வாறான பலர் நேபாளத்தில் தற்போது இருக்கின்றனர்.
 
சிலர் செய்து வரும் இவ்வாறான மோசடியான நடவடிக்கைகள் காரணமாக உண்மையில் நாட்டில் அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியுள்ள அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு ஐ.நாவின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தில் அரசியல் தஞ்சம் பெற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது என த இண்டிபெண்டன் இணையத்தளம் சுட்டிக்காட்டியுள்ளது.http://www.seithy.com/breifNews.php?newsID=122759&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.