Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கில் மூன்று மாவட்டங்களிலும் பெருவெள்ளம்! – இலட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் மூன்று மாவட்டங்களிலும் பெருவெள்ளம்! – இலட்சக்கணக்கான மக்கள் பாதிப்பு. photo.png

[Monday 2014-12-22 10:00]
eastern-flood-350-news.jpg

கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 2,919 குடும்பங்களைச் சேர்ந்த 9,942 பேரும்; திருகோணமலை மாவட்டத்தில் 1,122 குடும்பங்களைச் சேர்ந்த 3,980 இடம்பெயர்ந்தனர். வெள்ளம் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமுள்ள 214 கிராம அலுவலர் பிரிவுகளிலிருந்து 64,984 குடும்பங்களைச் சேர்ந்த 241,133 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்தார்.

  

இடம்பெயர்ந்தவர்கள் பாடசாலைகள், பொதுக்கட்டடங்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளிலும் தங்கியுள்ளனர். பாடசாலைகள் மற்றும் பொதுக்கட்டடங்களில் தங்கியுள்ளவர்களுக்கு சமைத்த உணவு வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார். இந்த மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 30,253 குடும்பங்களைச் சேர்ந்த 56,099 பேர் தங்களது வாழ்வாதாரங்களை இழந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், உன்னிச்சைக்குளத்தின் 03 வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நீர்ப்பாசனப் பணிப்பாளர் எஸ்.மோகனராஜா தெரிவித்தார். நவகிரிக்குளத்தின் 02 வான்கதவுகளும் றூகரம் குளத்தின் 02 வான்கதவுகளும்; திறந்துவிடப்பட்டுள்ளன.

இதேவேளை, திருகோணமலை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த அடை மழையைத் தொடர்ந்து, 1,122 குடும்பங்களைச் சேர்ந்த 3,980 பேர் சனிக்கிழமை இடம்பெயர்ந்ததாக அந்த மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இடம்பெயர்ந்தவர்கள் நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், 874 குடும்பங்களைச் சேர்ந்த 3,190 பேர் ஞாயிற்றுக்கிழமை (21) தங்களது இருப்பிடங்களுக்கு திரும்பினர். ஏனையோர் தொடர்ந்தும் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளனர். இவர்களுக்கு சமைத்த உணவு வழங்கப்படுகின்றன.

மேலும், கந்தளாய்க்குளத்தின் 10 அவசர வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. வெள்ளிக்கிழமை (19) 02 அடிக்கு திறந்துவிடப்பட்ட இந்த வான்கதவுகள், சனிக்கிழமை (20) மாலை 08 அடிக்கு திறந்துவிடப்பட்டன. பின்னர், ஞாயிற்றுக்கிழமை (21) 05 வான்கதவுகள் 08 அடிக்கும் 05 வான்கதவுகள் 06 அடிக்கும் திறந்துவிடப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை, நாவிதன்வெளி, காரைதீவு, நிந்தவூர், ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, திருக்கோவில் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக மாவட்டச் செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதன் தெரிவித்தார்.

அம்பாறை கடந்த மூன்று நாட்களாக அடை மழை பெய்துவந்த நிலையிலேயே மேற்படி பிரதேச செயலகப் பிரிவுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால், ஆயிரக்கணக்கான வீடுகளும் வெள்ளநீரில் மூழ்கியுள்ளதாகவும் அவர் கூறினார். மீண்டும் மழை பெய்யத் தொடங்குமானால், வெள்ளம் அதிகரிக்கக்கூடும். எனவே, பொதுமக்களை அவதானமாக இருக்குமாறும் மேலதிக அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

eastern-flood-221214-seithy%20%281%29.jp

 

eastern-flood-221214-seithy%20%282%29.jp

 

eastern-flood-221214-seithy%20%283%29.JP

 

eastern-flood-221214-seithy%20%284%29.JP

 

eastern-flood-221214-seithy%20%285%29.JP

http://www.seithy.com/breifNews.php?newsID=123151&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.