Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாருக்கு ஆதரவு? - ரிஷாத் பதியுதீன் கட்சி இன்று முடிவு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்கு ஆதரவு? - ரிஷாத் பதியுதீன் கட்சி இன்று முடிவு!

[Monday 2014-12-22 09:00]
Rishad-baduyudeen-150.JPG

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் இன்று முடிவு செய்யப்படும் என்று அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் கங்கிரஸ் அறிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக கட்சியின் செயலாளர் வை.எல்.எஸ் ஹமீட் கருத்து வெளியிடுகையில், "நாம் இந்த நிமிடம் வரையில் எந்தவொரு தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை. நேற்று எமது கட்சியின் உயர்பீடம் கூடியிருந்தது.

  

இதன் போது நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது தொடர்பாக பல்வேறு மட்டங்களில் நாம் கலந்துரையாடினோம். அத்துடன் எமது கட்சியின் ஏனைய பிரதிநிதிகளின் கருத்துக்கள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தியிருந்தோம். அதனடிப்படையில் இன்று எமது கட்சியின் அரசியல் உயர்பீடம் மீண்டும் கூடவுள்ளது. இக் கூட்டத்தில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது" என்றார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=123138&category=TamilNews&language=tamil

ரிசாத் பதியுதீன் பொதுவேட்பாளருக்கு ஆதரவு
394eb05008b5bb27158fe380ad711941.jpg
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகித்த அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அரசிலிருந்து விலகியுள்ளது.
 
ஜனாதிபதி தேர்தலில் எதிரணிகளின் பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்க அந்தக் கட்சி தீர்மானித்துள்ளது.
 
அமைச்சர் ரிசாத் பதியுதீன், அக்கட்சியின் சார்பில் அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற அமீர் அலி சகிதம் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டார்.
 
இந்தச் சந்திப்பில் எதிரணிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன , எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.
 
தமது கட்சியை சேர்ந்த 7 மாகாணசபை உறுப்பினர்களும் 69 உள்ளூராட்சி சபை உறுப்பினர்களும் தமது புதிய அரசியல் பயணத்தில் இணைந்து கொண்டுள்ளதாக ரிசாத் பதியுதீன்  தெரிவித்துள்ளார்.
 
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினரான துணையமைச்சர் எம். எல்.ஏ. எம். ஹிஸ்புல்லா ஏற்கனவே ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு தனது ஆதரவை வழங்கி வருகின்றார்.
 
அரச தரப்பினருக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பலனாகவே, இம்மாத முற்பகுதியில் அரச கூட்டணியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான எச்.எம். அஸ்வர் தனது பதவியை இராஜினமா செய்திருந்தார். அந்த வெற்றிடத்திற்கு எஸ். எச். அமீர் அலி நியமனம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
 
பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு வழங்கியமையினைத் தொடர்ந்து இதுவரை காலமும்  ரிசாத் பதியுதீனுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
 
 
 
B5cqultCYAAVluf.jpg
 
B5ctIwfCUAEjhE1.jpg
 
B5cxgXnCUAApoCW.jpg
- See more at: http://www.onlineuthayan.com/News_More.php?id=184583744022503474#sthash.5hGkgOeB.dpuf

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.