Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொய்யான கருத்துக்கணிப்புகளை வெளியிடுகின்றதாம் எதிரணி! – குற்றம்சாட்டுகிறது அரசதரப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொய்யான கருத்துக்கணிப்புகளை வெளியிடுகின்றதாம் எதிரணி! – குற்றம்சாட்டுகிறது அரசதரப்பு

[Monday 2014-12-22 09:00]
dullas-alahapperuma-200-news1.jpg

பொது எதிரணியினர் ஆதாரமற்ற பொய்யான கருத்துக்கணிப்பு முடிவுகளைக் கூறி மக்களை ஏமாற்றி வருவதாக அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஐ.ம.சு.மு ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், போலிப் பிரசாரங்கள் மூலமே தமது தேர்தல் நடவடிக்கைகளை அவர்கள் முன்கொண்டு செல்கின்றனர். பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் ஊடகங்களை மாத்திரம் வைத்துக் கொண்டே பிரசாரங்களை முன்னெடுக்கிறார்.

  

சேறுபூசும் வகையிலான பிரசாரங்க ளும், பொய்யான உறுதிமொழிகளை வழங்கும் பிரசாரங்களுமே அவர்களால் முன்னெடுக்கப்படுகின்றன.களனி பல்கலைக்கழகம், அரசசார்பற்ற நிறுவனங்கள் உள்ளிட்ட சுயாதீன அமைப்புக்கள் நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளுக்கு அமைய ஜனாதிபதியின் வெற்றியும், மைத்திரிபால சிறிசேனவின் தோல்வியும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த காலத் தேர்தல்கள் தொடர்பாக நாம் நடத்திய கருத்துக் கணிப்புக்கள் 99 வீதம் சரியாகவே அமைந்துள்ளன. அதேபோல ஜனாதிபதித் தேர்தல் குறித்த கருத்துக்கணிப்புக்களும் சரியாகவே அமையும்.

பொது எதிரணியின் வேட்பாளர் மற்றும் அவருடன் இணைந்துள்ளவர்கள் தொடர்ந்தும் பொய்களையே கூறி வருகின்றனர். பொய்களைக் கூறி இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலம் சேறு பூசும் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.அதேநேரம், எதிரணியில் பொய் மலிந்துள்ளது. மணித்தியாலப் பொய், நாள் பொய், வாரப்பொய், மாதப்பொய் என பொய்கள் அதிகரித்தே செல்கின்றன.

மைத்திரிபால சிறிசேன தனது முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பில் அர சாங்கத்திலிருந்து 30 பேரைக் கூட்டிவருவேன் எனக் கூறியிருந்தார். ஆனால் இதுவரை எவரும் வரவில்லை. பெரும் எண்ணிக்கையானவர்கள் இன்று வருகின்றனர், நாளை வருகின்றனர் எனப் பொய்யுரைத்தே தனது பிரசாரங்களை மேற்கொண்டுவருகிறார். இவ்வாறானதொரு கீழ் மட்டமான பிரசாரமே மைத்திரிபால சிறிசேன தரப்பில் முன்னெடுக்கப்படுகிறது.

பகிரங்க விவாதமொன்றுக்கு வருமாறு மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். எனினும் அவருடன் அவ்வாறானதொரு விவாதத்தில் ஜனாதிபதி கலந்து கொள்ள முடியாது என்பதற்கு சில காரணங்கள் உண்டு. சுதந்திரக் கட்சியில் இருந்து ஒழுங்கற்ற முறையில் பிரிந்து சென்றவர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் எனக் கூறியே தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் மைத்திரிபால கையொப்பமிட்டுள்ளார். அவ்வாறாயின் கட்சியின் தலைவருக்கும், செயலா ளருக்குமிடையில் விவாதமொன்றை நடத்துவது நடைமுறைச் சாத்தியமற்றது. அவ்வாறு விவாதம் நடத்துவதாயினும் அது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திலேயே நடத்தப்பட வேண்டும்.

அதேநேரம், சமூகப் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தியிருக்கும் மைத்திரிபால சிறிசேன, சுதந்திரக் கட்சியின் மத்தியகுழுக் கூட்டத்தில் ஒருதடவையேனும் கேள்வியெழுப்பியிருக்கவில்லை. தேர்தல்முறை மாற்றம் தொடர்பாக ஜனாதிபதியால் நியமிக்கப் பட்ட குழுவின் அறிக்கை வெளி யிடப்பட்டபோது அதற்கு எதிராகக் குரல் எழுப்பியவர்களில் முக்கியமானவர் இந்த மைத்திரிபால சிறிசேன. இப்போது சமூகமாற்றம் தொடர்பாக அவர் பேசுகிறார் என்றார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=123141&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.