Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர் வரும் ஐனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்லது தமிழ் அரசியல் தலைமை எடுக்க வேண்டிய நிலைப்பாடு பற்றி சில கருத்துகள்

Featured Replies

எதிர் வரும் ஐனாதிபதித் தேர்தல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்லது தமிழ் அரசியல் தலைமை எடுக்க வேண்டிய நிலைப்பாடு பற்றி சில கருத்துகள்

எடுக்க வேண்டிய நிலைப்பாடு பற்றி ஆராய முன் இன்றய அரசியல் கள நிலைமை பற்றிய சரியான கணிப்பீடு ஒன்று அவசியம்.

1. கடந்த 5 வருடங்களாக தமிழ் மக்களின் அடையாளத்தை அழிப்பதிலும் தமிழர் பிரதேசத்தில் குடிசனப்பரம்பலை துரிதமாக மாற்றுவதன் மூலம் திம்புவில் தமிழர் தரப்பால் முன்வைக்கப்பட்ட தமிழர் தாயகத்திற்கான, தர்க்க ரீதியாக சர்வதேச சமூகத்தின் முன்னால் மறுக்கப்பட முடியாத, அடிப்படைக் கோட்பாடுகளை வலுவிழக்கச் செய்வதற்கான சகலமுயற்சிகளையும் மகிந்த அரசு துரித கதியில் முன் எடுத்து வருகின்றது.

இப்போக்கு இன்னும் ஒர் பத்து ஆண்டுகளுக்குத் தொடருமேயானால் ஈழத்தமிழர்கள் ஒர் தேசிய இனம் என்பதில் இருந்து ஒரு சிறுபான்மை இனக்குழுமமாக தரம் இறக்கப்பட்டுவிடுவர். இதை சர்வதேச சமூகமும் ஏற்றுக் கொள்ளும் துர்ப்பாக்கிய சூழல் ஏற்படும். இந்தியாவிற்கு அதனது புவிசார் அரசியல் நலன்களுக்கும் ஒரு சௌகரியமான சூழலாகவே கணிக்கப்படும். மொத்தத்தில் இன்று திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கு நேர்ந்ததே முழு வடகிழக்கிற்கும் நேரும் நிலைமையே ஏற்படும்.


2. இவ் அபாயகரமான சூழ்நிலைபற்றி தமிழர் தரப்பு குறிப்பாக தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு நன்றாக அறிந்திருந்தும் கூட மகிந்த அரசின் இப்போக்கினைக் அவர்களால் கட்டுப் படுத்த முடியவில்லை என்பதையே இன்று நடைபெறும் காணி சுவீகரிப்புகள், குடிடீயற்றங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இவ் இயலாமைக்கு பல நியாயமான காரணங்கள் , சாட்டுகள் இருந்தாலும் தமிழர் தரப்பு இதுவரை கடைப்பிடித்த அரசியல் அணுகு முறை, இவ் அவலநிலையை மாற்றுவதற்கு எவ்வித பங்கையும் ஆற்றவில்லை என்கின்ற கசப்பான யதார்த்தத்தையும் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும்.


3. இது வரை தமிழர் தரப்பு கடைப்பிடித்த அரசியல் அணுகுமுறையை “ வெளியாருக்காக காத்திருத்தல் அல்லது சம்பவங்களுக்காக காத்திருத்தல்” என சுருக்கமாக விபரிக்கலாம் ஆறுமாத சுழற்சியில் ஜெனிவாவுக்காக காத்திருத்தல், இந்தியத் தேர்தலுக்காக தமிழ்நாட்டுத் தேர்தலுக்காக காத்திருத்தல் எனக் காத்திருத்தலிலேயே காலம் கழிந்து விட்டது. ஆனால் இக்காலத்தில் மகிந்த அரசு எமது இருப்பை, அடையாளத்தை இல்லாது ஒழிக்கும் தனது நிகழ்ச்சி நிரலை கச்சிதமாக முன்னெடுத்துச் செல்கின்றது.


4. மகிந்தாவோ ரணிலோ யார் ஜனாதிபதியாக வந்தாலும் தமிழ் மக்களின் நியாயமான அபிலாஷைகளைத் திருப்தி செய்யம் எந்தத் தீர்வையும் சுயமாகவோ அல்லது சர்வதேசத்தின் அழுத்தத்தின் அல்லது காரணமாகவோ அல்லது இந்தியாவின் வேண்டுகோளுக்கு இணங்கவோ கொண்டுவரப்போதில்லை. அவ்வாறு செய்வது அவர்கள் அரசியல் தற்கொலை செய்வதற்கு சமமானது அதனைச் செய்வதற்கு அவர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. இக்கசப்பான யதார்த்தத்தின் பின்னணியில் தான் ஜனாதிபதிக்கான தேர்தல் அறிவிக்கப்படவுள்ளது.

இத்தேர்தல்கள் தமிழ்மக்களைப் பொறுத்த மட்டில் ஓர் அந்நிய தேசத்து தேர்தலுக்க நிகரானது என்றாலும் ஒரு சுயமான அரசியல் காய் நகர்த்தலுக்கான வாய்ப்புகளை தமிழர் தலைமைக்கு திறந்து விடுகின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் அரசியல் தலைமை நான்கு விதமான நிலைப்பாடுகளை எடுக்க முடியும்.

ஒன்று

மகிந்தாவை ஆதரிப்பது- இது நடைமுறைக்கு ஒவ்வாதது மட்டுமல்ல தார்மீக ரீதியிலும் பிழையானதும் கூட. அத்துடன் இது தமிழ்மக்காளால் ஏற்றுக் கொள்ளப் படக்கூடியதும் அல்ல.


இரண்டு

ரணிலை ஆதரிப்பது. ஓர் ஆட்சிமாற்றத்தை விரும்பும் உள்ளுர் மற்றும் வெளிச் சக்திகள் இத்தெரிவினையே விரும்புவர். தமிழர் தலைமைக்கு இந்த நிலைப்பாட்டை எடுக்கும் படி ஆலோசனைகள, நட்பு ரீதியான வலியுறுத்தல்கள் அல்லது அழுத்தங்கள் கொடுக்க்கூடும். ஆட்சிமாற்றம் ஏற்படின் அரசியல் தீர்விற்கான புதிய வாய்புகள் திறக்கப்படும் தமிழர்களுக்கு இன்று சிறிது அனுதாபத்தைக் காட்டும் மேற்குலக நாடுகளுக்கு ரணிலின் மீது கணிசமான ஆளுமை உண்டு. அதன் நிமித்தம் ஒரு தீர்வை நோக்கி நகரலாம் எனப் பல நியாயங்கள் கூறப்படலாம்.

ஆனால் இலங்கையில் ஆட்சிமாற்றம் என்கின்ற பெயரில் ஆள் மாற்றம் ஏற்பட்டதையே எமது பட்டறிவு எமக்கு உணர்த்துகின்றது. ஆள் மாற்றம் மேறகு உலகிற்கும் புது டில்லிக்கும் அனுகூலமாக இருக்கலாம். ஆனால் எமது பிரச்சினை அபிலாஷைகள் பாதுகாப்பு அடையாளம் மற்றும் இருப்பு போன்றவற்றில் எந்தவிதமாற்றத்தையும் ஏற்படுத்தாது. ஏனெனில் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் வரலாம், பொருளாதாரக் கொள்கைகளில் மாற்றம் வரலாம், ஆனால் இனப்பிரச்சினை தொடர்பில் நிர்ணயிக்கப்போவது மகாவம்ச மனோநிலைதான். ஆகவேதான் ரணிலுக்கு ஆதரவு என்கின்ற நிலைப்பாட்னால் சகல இனங்களுக்கும் பொதுவான சில சாதகங்கள் ஏற்படலாம் ஆனால் தமிழ்மக்களின் பிரத்தியேகப் பிரச்சினைக்கு தீர்வ கிட்டப் போவதில்லை.



மூன்றாவது மனச்சாட்சியின் படி மக்களை வாக்களிக்க கோருவது. இது ஆற்றல் மிக்க சாதுர்யமான தலைமையின் பண்பாக இருக்க முடியாது . நெருக்கடியான காலகட்டங்களில் தீர்க்கான முடிவினை எடுத்து தர்க்கரிதியாக மக்கள் முன்வைத்து வழிநடத்திச் செலவதுதான் சிறந்த தலைமைக்கு அடையாளம். நெருக்கடியான கட்டத்தில் மக்களை முடிவெடுக்கச் சொல்வது கோழைத்தனம் மட்டும் அல்ல அயோக்கியத்தனமும் கூட.

நான்காவது –

தமிழர்தரப்பில் ஒருவரை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடச் செய்வது. இதன் நோக்கம் அவர் வெற்றி பெற்று ஜனாதிபதி ஆவதல்ல. ஆனால் வடகிழக்கில் நடாத்தப்படும் வாக்களிப்பை ஓர் சர்வஜன வாக்கெடுப்பாக ( Referendum) ஆக மாற்றுவது. பிரிந்து செல்வதற்கான ஒரு வாக்கெடுப்பாக கணிக்கவேண்டும் என்பதை கூட்டமைப்ப ஆணித்தரமாகவம் தெளிவாகவும் பிரச்சாரத்தின் போது நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும்.

பிரிந்து செல்வதற்கான வாக்கெடுப்பு ஒன்றும் சர்வதேச சமூகத்திற்க ஒவ்வாத விடயம் அல்ல. அண்மையில் ஸ்கொட்லாந்தில் முன்னர் கனடாவில் எதிர்காலத்தில் ஸ்பெயினலில் பெல்ஜியத்தில் நடை பற்ற நடைபெறப் போகின்றவிடயங்கள் தான். இவ்வாறான ஒரு நிலைப்பாட்டை கூட்டமைப்பு எடுக்கும் பட்சத்தில் எமது மக்களின் உண்மையான நிலைப்பாட்டை சர்வதேச சமூகத்தின் முன் தெளிவாக வைக்க ஓர் சந்தர்ப்பம் கிடைக்கும். பிரிந்து போவதுதான் எமது மக்களின் நிலைப்பாடு என்றால் சர்வதேச சமூகம் இதனை ஏற்றுக் கொள்ள வேண்டும். எமது மக்களின உண்மையான அபிலாஷையை சர்வதேச சுமூகம் அறிந்து கொள்ள சந்தர்ப்பம் ஏற்படும் .

இது தொடர்பாக விரிவாக பின்னர் விவதிக்கலாம்

 

(ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்க முன்பே கூட்டணியின் கையில் வெளி நாட்டுத்தமிழர்களால் கையளிக்கப்பட்ட ஆவணம்)


நியானி: பாமினி எழுத்துருவில் இருந்து ஒருங்குறிக்கு மாற்றப்பட்டுள்ளது.

Edited by நியானி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.