Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீதி, நியாயமான எதிர்காலத்துக்காக தமிழ்பேசும் மக்கள் மைத்திரியின் அன்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்

Featured Replies

sampanthan%20gyyty5.jpg

 

"தமிழ் பேசும் மக்களுக்கு நீதி, நியாயம் கிடைக்கக்கூடிய வகையில் எதிர்காலம் அமைவதற்கு ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை நாம் ஆதரிக்கின்றோம். எனவே, ஜனவரி 8ஆம் திகதி மைத்திரிபாலவின் சின்னமான அன்னத்திற்கு தவறாமல் தமிழ் பேசும் மக்கள் வாக்களிக்கவேண்டும்." -
 
இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "ஜனவரி 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் விசேடமாக வடக்கு, கிழக்கில் வாழும் மக்கள் வாக்களிப்பது மிகவும் அவசியமாகும். கடந்த பல வருடங்களில் நாம் பட்ட துன்பங்கள் தமிழ் பேசும் மக்களுக்கு நன்றாகத் தெரியும். இந்நிலைமை தொடரக்கூடாது என்பதில் எமது மக்கள் உறுதியாக இருந்து வருகின்றனர்.
 
எனவே, இந்நிலைமை தொடராமல் இருப்பதற்கு அதிகாரத்தில் இருப்பவர்களில் ஒரு மாற்றம் ஏற்படவேண்டும். அவ்விதமான மாற்றம் இந்த ஜனாதிபதித் தேர்தல் ஊடாகத்தான் ஏற்படலாம். தற்போது அதிகாரத்தில் உள்ளவர்கள் தொடர்ந்து அதிகாரத்தில் இருப்பவர்களாக இருந்தால் தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு விமோசனம் கிடைக்கப்போவதுமில்லை; ஒரு தீர்வை அவர்கள் பெறப்போவதுமில்லை. அதனால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த இந்தத் தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் தவறாமல் வாக்களிப்பது அவர்களின் புனித கடமையாகும். தவறாமல் ஒவ்வொரு வாக்காளர்களும் தமது வாக்கைப் பயன்படுத்தவேண்டும். எதிர்காலத்தைப் பக்குவமான முறையில் வழிநடத்துவதற்கு - எமது மக்களுக்கு நீதி, நியாயம் கிடைக்கக்கூடிய வகையில் எதிர்காலம் அமைவதற்கு எமது மக்களின் வாக்களிப்பு இந்தத் தேர்தலில் எட்டப்படுகின்ற முடிவில் ஒரு முக்கியமான அங்கமாக அமையவேண்டும்.
 
இது அத்திவாசியம். இன்று பல்வேறு காரணங்களின் நிமித்தம் பெரும்பான்மையாக உள்ளவர்கள்கூட ஒரு மாற்றத்தை விரும்புகின்றார்கள். அவர்களுடன் ஒத்துழைத்து எங்களுடைய நலனும் கருதி ஆட்சி மாற்றத்தை நாங்கள் ஏற்படுத்தவேண்டும். மக்களின் மிகவும் பலமான ஆயுதம் அவர்களுடைய ஜனநாயக உரிமையான வாக்குரிமை. இதனைப் பயன்படுத்துவதற்கு சந்தர்ப்பம் வருகின்றபோது அதை முழுமையாகப் பயன்படுத்தவேண்டும். எனவே, தமிழ் பேசும் மக்கள் தமது ஜனநாயக உரிமையான வாக்குரிமையை பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் சின்னமான அன்னம் சார்பாகப் பயன்படுத்தவேண்டும் என்று நாம் மிகவும் விநயமாகக் கேட்டுக்கொள்கிறோம்" - என்றார் சம்பந்தன்.
 
 
http://www.malarum.com/article/tam/2015/01/03/7864/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-.html#sthash.9QUWlVMt.dpuf
 
 
  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் யார்.. இதைச் சொல்ல..??!

 

விடுதலைப்புலிகள் சொல்லலாம். காரணம் அவர்கள் தமிழ் மக்கள் வாழும் பிராந்தியத்தை ஆண்டவர்கள். தமக்கென நிர்வாக முறைமையை.. தனிநாட்டுக்குரிய அம்சங்களை கொண்டிருந்தவர்கள். அந்த நிலப்பகுதியை நோக்கி ஓர் தேர்தல் திணிக்கப்படும் போது மக்களை அறிவுறுத்தும் தேவை அவர்களுக்கு அங்கு கட்டாயம்.

 

இன்று நிலைமை என்ன..??!

 

சம்பந்தன் ஜனாதிபதி தேர்தலில் நிற்கிறாரா..??! அவரது கட்சியில் யாரேனும் நிற்கிறாரா..??! இல்ல.. இவர் சட்ட ரீதியாக.. கூட்டணி வைத்து ஆதரிக்கிற கட்சியில் யாராவது நிற்கினமா..???!

 

இவரா.. தனிப்பட்ட சிலரோடு கலந்தாலோசிச்சு முடிவெடுப்பாராம்.. அதனையே தமிழ் மக்கள் செயற்படுத்தனுமாம்..??!

 

ஏன் தமிழ் மக்களுக்கு சொந்தமா சிந்திக்கவாரோதோ..??! 40,000 மாவீரர்களை பிரசவித்த மக்களுக்கு சொந்தமா எவனுக்கு வாக்கு போடனும் என்று தெரியாதோ..???!

 

சம்பந்தன் தமிழ் மக்களின் வாக்குரிமை ஜனநாயகத்தில் தலையிடாமல்.. ஒதுங்கி ஓரமா இருந்து விடுப்புப் பார்ப்பது தான்.. அவருக்கு நல்ல ஜனநாயகம்.

 

மக்களை அவர்களின் சிந்தனையின் பால் செயற்பட விடுங்கள். உங்களின் சுயலாப அரசியல் எண்ணங்களை பூர்த்தி செய்ய அவர்களை கட்டாயப்படுத்த வேண்டாம்.

 

விடுதலைப்புலிகள் வேறு. சிங்கள அரசியல் ஜாப்பில் நம்பிக்கை வைத்து அதற்காக உழைக்கும் சம்பந்தன் போன்றவர்களை தமிழ் மக்களை யாருக்கு வாக்குப் போடுன்னு கேட்பது வேறு.

 

ஒரு வேட்பாளர் கேட்கலாம். இவர்கள் யார் 3ம் தரப்பு.. மக்களை கேட்க.. சொல்ல..???! :icon_idea::)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.