Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மோகனின் கவிதை தொகுப்பு

Featured Replies

போர் வெறி ________________________________________

எழுத்து: மோகன் கிருட்டிணமூர்த்தி

பிணம் தின்னி கழுகுளாக மாறிய மனிதர்கள்

மதம் என்ற மதம் பிடித்த மடையர்கள்

நிலம் கேட்காத நிலத்திற்கு நீட்டிய வாள்கள்

தன்னவரையும் எதிரியையும் துளைக்கும் குண்டுகள்

கொன்று கூவித்துவிட்டு கூச்சலிடும் பீரங்கிகள்

அலைந்து பறந்து மரணத்தை அடித்த உலோகப் பறவைகள்

கால்களை காகிதமாய் துண்டித்த கண்ணி வெடிகள்

ஆடவரை இழந்து விதவையான பெண்களின் ஒப்பாரிகள்

தந்தையை இழந்து அனாதையான பிஞ்சுகளின் கூக்குரல்கள்

காதலியை தொலைத்து நாட்டிற்காக உயிர்தொலைத்த வீரர்கள்

மரணத்தை விட கொடுமையான ஊனங்கள்

அந்த ஊனத்தை குறைக்க மருந்தை விற்கும் வியாபாரிகள்

நீர் போல ஓடிய ரத்த ஆறுகள்

குருதியை குடித்து குளித்த மானிட ராட்சதர்கள்

கன்னிகளின் கற்பை சூறையாடிய கயவர்கள்

தாயின் பாலை வற்ற வைத்த நயவஞ்சகர்கள்

தாயையும் சேயையும் பிரித்த பித்தர்கள்

மண்ணிற்காக மனதை அடகு வைத்த வீணர்கள்

வெறுப்பை வளர்த்து அதில் குளிர்காணும் கோழைகள்

பெற்றவளுக்கும் மத்தவளுக்கும் வித்தியாசமறியாத கடயர்கள்

சினத்திற்கு மடை வைக்க அறியாத சிறியர்கள்

தீவுக்கும் தீர்வுக்கும் பேதம் அறியாத பேடிகள்

காட்டுக்கும் நாட்டுக்கும் நன்மை செய்யாத துரோகிகள்

வீட்;டிற்கும் வீதிக்கும் உண்மையில்லா உலோபிகள்

கண்ணீரை காசாக்கி மனித தோலையும் செருப்பாக்கும் சொறிநாய்கள்

ஓதுவரையும் ஆண்டவனைத் தேடுபவரையும் வதைக்கும் ஓநாய்கள்

செத்தவரின் சிதையிலிருந்து வரும் புகைகள்

அந்த புகை எடுத்து வரும் துர்நாற்றங்கள்

செங்குத்தாய் வெட்டுப்பட்டு கிடக்கும் மனித உடல்கள்

அதிலிருந்த கொட்டி தீர்த்த ரத்தங்கள்

குடல்களை மாலையாய் திரித்த தீயவர்கள்

அவர் மேல் வீசும் மந்த வாசனைகள்

பயத்தால் பறவைகள் செய்த இடமாற்றங்கள்

விலங்குகள் தன்னிடத்தைவிட்டு எடுத்த ஓட்டங்கள்

சிகையெரிந்து புன்னகையெரிந்து கிடந்த நேற்றைய மனிதர்கள்

அறிவிழந்து அறிவு தரும் ஆற்றல் இழந்த அயோக்கியர்கள்

சோறிழந்து சொந்தம் இழந்து போர்முனையில் தவிக்கும் ஆடவர்கள்

அவர் தரும் சுகத்தை இழந்து பரிதவிக்கும் பெண்கள்

தமக்கை இழந்த தமையன்கள் தமையனை இழந்த தமக்கைகள்

பொட்டிழந்து பூவிழந்த மங்கையர்கள்

பூ தரும் வாசம் மறந்த அவர் கேசங்கள்

அலட்ச்சியப்படுத்தப்பட்ட 'போர்வேண்டாம்" எனும் கோ~ங்கள்

"போர் அவசியம்" என்று அரசியல்வாதிகள் போடும் வே~ங்கள்

அதனால் பொய்யால் அவர் பரப்பும் துவே~ங்கள்

பலர் பல நாட்களாய் அறியாத பாசங்கள்

போர் முடிந்தும் போர் செய்யும் சிலரின் வீண் ரோ~ங்கள்

அவர் மறந்துவிட்ட மனித நேசங்கள்

கட்டிவைத்திருக்கும் மனித நேய கரங்கள்

கடவுள் இந்த ஈனப்பிறப்பிற்கு தர மறுத்த வரங்கள்

இன்று முடிந்துவிடும் போர் என்ற பொய் "இன்னும் பொறுங்கள்"

தீபாவளியைப் போல போர்முனையில் வெடிக்கும் ஆயிரம் சரங்கள்

வீடு திரும்பும் நாள் வருமா என்று வீரர்களின் ஏக்கங்கள்

நாட்டில் அவர் செய்ய காத்திருக்கும் பல ஆக்கங்கள்

எப்போது வெடிக்குமோ என்று விழித்திருந்து விட்ட தூக்கங்கள்

அதனால் அவர் உடலில் ஏற்பட்ட பல தாக்கங்கள்

நிறைவேறாமல் போன பல நல்ல உள்ளங்களின் நோக்கங்கள்

அதற்காக ஏங்கித் தவிக்கும் உள்ளங்கள்

உள்ளக் கூக்குரல் கேட்காமல் சண்டையிடும் செவுடுகள்

கத்திப் பேசினாலும் யாரும் கேட்காமல் காய்ந்த உதடுகள்

இனிமேலும் அழ சக்தியில்லாமல் ஓய்ந்து கண்கள்

அந்த கண்களின் தாரையால் தடித்த தாடைகள்

கணவனுக்காக கதவைநோக்கி காத்திருந்து சுளக்கெடுத்த கழுத்துகள்

சுவாசம் மறந்த சம்பிரதாயத்திற்கு காற்றை விட்ட மூக்குகள்

சேதி கேட்டு ஊர் மத்திக்கு ஓடி தேய்ந்த கால்கள்

நல்ல செய்தி சொல்லுங்கள் என்று ஏங்கி கைகூப்பிய கைகள்

வீரர்களின் தந்தையர் ஒடுங்கின போன முதுகுகள்

விரல் விட்டு எண்ணக் கூடிய எலும்புகள்

ஏழ்மையில் சுருங்கிப் போன தோல்கள்

இருந்தும் ஓயவில்லை சண்டையிடும் செங்கோல்கள்!

  • தொடங்கியவர்

போர் முடிந்ததின் அறிகுறி

________________________________________

கவிதை: மோகன் கிருட்டிணமூர்த்தி

கருணையுள்ளம் கொண்ட மானிடர்

மதத்தை மனித வாழ்வின் மார்க்கமாக ஏற்றவர்

கானி நிலத்தில் கடமை காணும் உழவர்

எதிரியையும் நட்புடன் அணைக்கும் நல்லவர்

பீரங்கிகளை வரலாற்று பாடத்தில் மட்டும் காணும் மாணவர்

விமானங்கள் கடல் கடந்து மனதிர்களை இணைக்க

கப்பல்கள் களிப்போடு வாணிகத்தை பெருக்க

ஆடவரும் அவர் மனையுடன் சுற்றுலா செல்ல

தந்தைகளிடமிருந்து பிள்ளைகள் மகிச்சியுடன் களிக்க

காதலில் உயிர்விடுவோரே ஓழிய போரில் காதலர் உயிர் விடாமல் இருக்க

ஊனங்கள் உடலிலோ உள்ளத்திலோ இல்லாத மக்கள்

மருந்தை மருந்துக்காகவே பயன்படுத்தும் ஆரோக்கியர்கள்

ஆறுகளில் பாலும் தேனும் ஓடாவிட்டாலும் நீர் ஓட தடைபோடாதவர்கள்

ராட்சதன் என்றொருவர் உண்டென்று கதைகளில் மட்டுமே கேட்பவர்கள்

கன்னிகளின் மதிப்பை அறிந்து பாதுகாக்கும் பொதுமக்கள்

தாய்க்கு தனி இடம் அவளுக்கு ஓர் உயர்விடம்

சேய் பாதுப்பாக இருக்கும் அதன் பிறப்பிடம்

மண்ணில் மனிதனுக்கு ஒரு தனியிடம்

வெறுப்பறியாத வாழ்கையில் அனைவருக்கும் சிறப்பிடம்

பெற்றவளையும் மற்றவளையும் இவ்வுலகம் கும்பிடும்

சினத்தை சிறிதே பயன்படுத்தும் பக்குவம்

பேச்சால் பிரச்சனைகளை தீர்க்கும் தீர்க்கம்

காட்டை அழிக்காமல் நாட்டை வளர்க்கும் நோக்கம்

வீட்டை வாழவைத்து வீதிக்கும் மானிடம் உழைக்கும்

கண்ணீர் சொட்டுகள் காண்பதே ஒருநாள் அறிதாகும்

திருவாசகமும் தேவாரமும் தேனாய் கோவில்களில் ஓலிக்கும்

செத்தவரின் ஆன்மா முறையுடன் ஆசீர்வதிக்கும்

மானிடர் செய்யும் யாகத்திலிருந்தே புகை வளர்க்கும்

மறைந்த மனிதனுக்கும் மரியாதை கிடைக்கும்

ரத்தங்கள் தானம் செய்யவே கொட்டித் தீர்க்கும்

மலர்களால் மாலை அணிந்து அணிவித்து

குளித்து முடித்து தினமும் எளிமையாய் அலங்கரித்து

காக்கை குருவி எங்கள் ஜாதி என்று எண்ணவைத்து

விலங்குகளாய் மாறாமல் விலங்கை நண்பனாக வளர்த்து

புன்னகை என்றும் எல்லோர் வாழ்விலும் நிலைத்து

அறிவைத்தேடி அது அளிக்கும் சுகத்தைத் தேடி

போர்முனை எனும் ஓர் முனை அறியாமல் அமைதியை நாடி

பெண்களும் துணையோடு அவர் வாழ்வில் இன்பம் புறையோடி

தமக்கையரும் தமையரும் மகிழ்ந்து விளையாடி

எதுவும் வேண்டும் நிலை இங்கு இல்லையே

பொதுவாழ்வே என்றதனால் அரசியல்வாதிகளால் இல்லை தொல்லையே

உண்மையும் அதன் உயர்வையும் பேசுவதில் இல்லை எல்லையே

இனி ஒருவரும் ஒருவரையும் பிரியவில்லையே

மனித நேசத்தை யாரும் இங்கு மறக்கவில்லை

தந்தையறியா குழந்தைகள் இனி பிறப்பதில்லை

கடவுள் விண்னைவிட்டு மண்ணிற்கு வந்ததில்லை

ஆனாலும் அமைதியெனும் வடிவில் பிறந்த நல்ல பிள்ளை

அதனால் தினமும் இப்புவியில் தீபாவளியின் இன்பக் கொள்ளை

போர்முனைகள் உடைந்துவிட்டன எல்லைகள் அகன்றுவிட்டன

துப்பாக்கிகள் தொலைந்துவிட்டன குண்டுகள் நொறுங்கிவிட்டன

ஒப்பந்தமில்லாமல் வார்த்தைகளுக்கு மதிப்பு வரும் நாள் வந்தன

ராணுவம் எனும் ஸ்தாபனம் சம்பிரதாயமாயின

உடலும் உள்ளமும் நிம்மதியில் ஆரோக்கியமாயின

இனி யாருக்கும் இல்லை ஏது தவிப்பு

உள்ளம் கேட்டு நடக்கும் மனிதரின் துடிப்பு

காயவில்லை உதடுகள் இங்கு ஏதும் இல்லை நடிப்பு

கண்கள் கருணையால் மட்டுமே நீர் கொள்வது இயல்பு

மதங்களுக்கும் இனங்களுக்கும் காணலாம் அதில் சகிப்பு

இந்த அமைதிப்பூங்காவில் இல்லை கழுத்தின் சுளுக்கு

சுவாசம் நேர்மையில் நாணயத்தில் அதனால் இல்லை இழுக்கு

நல்ல சேதி மட்டுமே கொண்டுவரும் தபால்காரனின் வழக்கு

நன்றிக்கு மட்டுமே சொல்ல தூக்கும் வேலை கைகளுக்கு

உயர்ந்தன முதுகுகள் உயர்ந்து நிற்கும் பணி தோள்களுக்கு

போர் முடிந்து ஆகிவிட்டது பல காலம்

ஓய்ந்துவிட்டது வலியில் மக்கள் எடுத்த ஓலம்

எலும்புகளில் தேசப்பற்று எனும் இரும்பு பலம்

ஏழ்மை தோற்றுவிட்டு விட்டது இக்களம்

செங்கோல்கள் இனி காக்கும் மக்களின் நலம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பலருடைய ஏக்கங்களை கவிதையாக ஆக்கித்தந்த மேகனுக்கும் இணைத்த இவனுக்கும் நன்றி.

சுயநலவாதிகளும், ஜனநாயக வாதிகளாக தம்மைக் காட்டிக்கொண்டு சர்வாதிகளாக ஆட்சி நடாத்துபவர்களும், தமது இனமும் நாடும் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று எண்ணும் இனவாதிகளும் இருக்கும்வரை இப்படி "போர் முடிந்ததின் அறிகுறி" தென்படுமா என்பது சந்தேகம்தான்.

இப்படி அமைதி வந்து அனைவரும் இன்பமாக வாழவேண்டும் என்பதே என்னுடையதும், என்னைப் போன்ற பலரதும் பலநாள் ஆசைகள். அந்த வாழ்க்கை விரைவில் வரவேண்டும்.

நல்ல கவிதைக்கு எனது பாரட்டுக்கள்!

  • தொடங்கியவர்

மிக்க நன்றி செல்வமுத்து

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.