Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வீழ்ந்தால் மஹிந்த உட்பட அனைவரும் பருப்பு சாப்பிட வேண்டியேற்படும்: கலகொட

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

D10_845.jpg

நாட்டை பிரிப்பதற்கே எதிரணி உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டை காப்பாற்றுவது அனைத்து மக்களதும்  கடமையாகும். எனவே, ஜனாதிபதித் தேர்தலில்  நாட்டு மக்கள் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என்ற வேறுபாடின்றி ஒன்றிணைய வேண்டும். மஹிந்த ராஜபக் ஷவை வீழ்த்தி விடக்கூடாது. அவ்வாறான சூழ்நிலை உருவானால் மஹிந்த ராஜபக் ஷ உட்பட அனைவரும் பருப்பு சாப்பிட வேண்டியேற்படும்  என பொதுபலசேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.

கொழும்பு கிருலப்பனையில் அமைந்துள்ள பௌத்த மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் தெரிவித்ததாவது;

பொது எதிரணியினர் நாட்டை மீண்டும்  பழைய நிலைக்கு ஒரு பயங்கரவாத சூழ்நிலைக்கு கொண்டு செல்லவே திட்டமிட்டுள்ளனர். எனவே, மக்கள் தமது அரசியல் கட்சிகளையும் நிறங்களையும் மறந்து பாதுகாப்பான வளமான எதிர்காலத்துக்காக தமது வாக்குகளை பயன்படுத்த வேண்டும்.

மேற்கத்தேய தூதுவராலயங்கள் சிலவும் அரச சார்பற்ற  நிறுவனங்களும் இணைந்து ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்தவை தோற்கடிக்க சதித்திட்டம் தீட்டி செயற்பட்டு வருகின்றன. நாட்டை துண்டாட வேண்டுமென்பதே சர்வதேசத்தின் இலக்காகும். நாட்டின் தலைவரையும் குடும்பத்தையும் குடும்பத்தையும் அவரது பிள்ளைகளையும் மிக மோசமாக தூஷித்து வைராக்கியத்தை உருவாக்கி தேர்தல் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இது தவறு.

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் முச்சக்கரவண்டி தரிப்பிடங்களில் முச்சக்கரவண்டி சாரதிகள் சிலர் மூலம் கட்டுக்கதைகள் பரப்பப்பட்டு வருகின்றன. மஹிந்த ராஜபக் ஷவை  தோற்கடிக்க முடியாது என்பதனை உணர்ந்த இவர்கள் ஜனாதிபதியின் மீது சேறு பூசும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

நாம் முஸ்லிம்களின் எதிரிகளல்ல

பொதுபலசேனா முஸ்லிம்களின் எதிரிகளல்ல. முஸ்லிம் சமூகத்துக்குள் செயற்பட்டு வரும் அடிப்படைவாதிகளையும் அவர்களின் கொள்கைகளையுமே நாம் எதிர்க்கின்றோம். அடிப்படை வாதிகளை காட்டிக்கொடுத்து பெரும்பான்மை சமூகத்துக்கும் முஸ்லிம் சமூகத்துக்குமிடையில் உறவுப்பாலத்தை உருவாக்கவே முயற்சித்தோம். இம்முயற்சிகள் அடிப்படைவாதிகளால் தவறாக சித்தரிக்கப்பட்டன. முஸ்லிம்களிடம் நாம் கோரிக்கை விடுக்கின்றோம். பிரச்சினைகளை நாம் கலந்துரையாடுவோம். வாதங்கள் செய்து அடிப்படை வாதத்தை களைவோம். எமக்குள் நிலவும் பிரச்சினைகளை நாம் சுமுகமாக தீர்த்துக்கொள்வோம்.

நாட்டுக்கு இப்போதைக்கு மாற்றம் ஒன்று தேவையில்லை என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். மாற்றம் ஒன்றிகொ வலியுறுத்துபவர்கள் நாட்டின் நாட்டை பிரிக்கும் மாற்றத்தையே கருத்தில் கொண்டுள்ளார்கள் என்றார்.

பொதுபலசேனாவின் நிறைவேற்றுப்பணிப்பாளர் டிலன்த விதானகே

டிலன்த விதானகே உரையாற்றுகையில்;

நிவ்யோர்க் டைம்ஸ் பத்திரிகையில் பொது பலசேனாவை மிகவும் மோசமாக சித்தரித்து தவறான கருத்துக்களுடன் கட்டுரையொன்று பிரசுரிக்கப்பட்டுள்ளது. அதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

பொதுபலசேனா உக்கிரமாக இனவாதத்தை கையிலெடுத்து தமிழ் முஸ்லிம் சமூகத்தை தூரமாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அந்த கட்டுரை கூறுகின்றது. முஸ்லிம் பள்ளிவாசல்களை எமது அமைப்பு அழித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

நாம் தமிழ், முஸ்லிம் சமூகத்தை ஒருபோதும் ஓரம் கட்டவில்லை. எந்தவோர் இனத்திலும் அடிப்படைவாதத்தையே நாம் எதிர்க்கின்றோம். ரவூப் ஹக்கீம் ஜெனீவாவுக்கு இவ்வாறான குற்றச்சாட்டுக்களையே முன்வைத்தார். பாக்கியசோதி இவ்வாறான குற்றச்சாட்டுக்களை உள்ளடக்கியே எழுதினார். இவையனைத்தும் சர்வதேச நிகழ்ச்சி நிரலின்  கீழேயே நடைபெற்றுள்ளன.

கலகொட அத்தே ஞானசார தேரரே அளுத்கம சம்பவத்தின் பின்னணியில் இருந்துள்ளதாகவும் அவரை கைது செய்வதற்கு பதிலாக அரசு முஸ்லிம்களை சமாதானமாக வாழுமாறு கூறியுள்ளதாக நிவ்யோர்க் டைம்ஸ் கட்டுரை தெரிவித்துள்ளது. இவ்வாறான பிரசுரங்கள் தேர்தல் காலத்தில் வெளிவந்துள்ளமை பற்றி நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.

மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றால் பொது பலசேனாவை தடை செய்வதற்கும் ஞானசார தேரரை கைது செய்வதற்கும் திட்டம் வகுத்துள்ளார். ஆனால் இது அவர்களின் பகற்கனவே. மைத்திரி ஒரு போதும்வெற்றி பெறப்போவதில்லை.

கூரகல முஸ்லிம் பிரதேசத்தில் பௌத்த தூபி

கூரகல ஜெய்லானியில் மலைக்குகையில் முஸ்லிம்களுக்கு உரித்தான பகுதியில் பௌத்த தூபி அமைக்கப்பட்டுள்ளதாகவும் கலாசார அமைச்சின் அனுமதியுடன் நிறுவப்பட்டுள்ளதாகவும் நிவ்யோர்க் டைம்ஸ் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பகுதி பௌத்தர்களுக்கு சொந்தமான பகுதியாகும்.

இலங்கை அரசு இதன் மூலம் புதிய வரலாறு எழுதுகின்றது எனவும் கட்டுரை குற்றம் சுமத்தியுள்ளது. இந்த குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக ஆட்சேபித்து அமெரிக்க தூதுவராலயம் முன்னால் நாம் ஆர்ப்பாட்டம்  செய்ய வேண்டும் என்றார்.

http://www.virakesari.lk/

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.