Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நலத்திட்டங்களில் புறக்கணிப்பு! கிளிநொச்சி மக்கள் மகஜர் கையளித்தனர்….

Featured Replies

நலத்திட்டங்களில் புறக்கணிப்பு! கிளிநொச்சி மக்கள் மகஜர் கையளித்தனர்….
 

கிளிநொச்சி மாவட்டத்தின் நகரப் பகுதி மக்கள் கடந்த காலத்தில், மகிந்த ராஜபக்சவின் ஆட்சியின் கீழ் அரசாங்க அதிகாரிகளால் பல்வேறு நலத்திட்டங்களில் புறக்கணிக்கப்பட்டுள்ளமையை கண்டித்து (28.01.2015) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி அரச செயலகம், கரைச்சி பிரதேச செயலகம் என்பவற்றின் முன்பாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

அத்துடன், ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றை அனுப்பிள்ளதுடன் பிரமதர், வடமாகாண முதலமைச்சர், ஆகியோருக்கும் பிரதிகளை கையளித்துள்ளனர். அத்துடன் என்னிடமும் தமது மகஜரின் பிரதிகளை எமது அலுவலகமான அறிவகத்தில் கையளித்துள்ளனர். இவ் விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளேன்.

இன்று கிளிநொச்சி நகர மக்கள் கையளித்த மகஜரின் விபரங்கள் வருமாறு,

கிளிநகர் மக்கள்,

கிளிநகரம்.

கிளிநொச்சி.

அரசாங்கஅதிபர்,

மாவட்டச்செயலகம்,

கிளிநொச்சி.

அரச அதிகாரிகளின் துஸ்பிரயோகங்களால் கிராமத்தின் அபிவிருத்தி புறக்கணிக்கப்படுகின்றமை தொடர்பானது.

அரச அதிகாரிகளின் துஸ்பிரயோகங்களாலும், அசமந்தப் போக்குகளாலும் கிளிநொச்சி நகரத்தில் நிரந்தர குடியிருப்பாளர்களாக இருக்கும் மக்களும், வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மக்களும் பாதிப்படைந்து வருவதைத் தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டுவருவதுடன்,

இவ்விடயம் தொடர்பாக எங்களால் சுட்டிக்காட்டப்படும் தங்களின் கீழ் பணியாற்றும் அரசஉயர் அதிகாரிகளின் அதிகாரத் துஸ்பிரயோகங்களைத் தங்களிடம் நேரடியாக எழுத்து மூலம் சமர்ப்பிக்கின்றோம்.

கரைச்சிப் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் திரு.நாகேஸ்வரன் அவர்கள் எமது கிளிநொச்சி பகுதிக்கு வரும் உதவித் திட்டங்களை எங்களுக்குப் பெற்றுத்தர எந்த விதத்திலும் முயற்சி எடுக்காமல் இருந்து வருகிறார்.

கிளிநொச்சி மாவட்டத்திற்கு வரும் உதவித் திட்டத்தில் எமது கிராமம் முற்று முழுதாகப் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இப்புறக்கணிப்பை பல தடவை பிரதேச செயலாளர், அரச அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என பலவேறு மட்டத்தினரிடமும் நாம் எடுத்துக் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கீழ்க்குறிப்பிடப்படும் விடங்களைத் தங்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம். 2010ம் ஆண்டு மக்கள் எமது கிராமத்தில் மீள்குடியேற்றப்பட்டபோதும் அந்த மக்களுக்கு ஒதுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்களை உரியமுறையில் நடைமுறைப்படுத் தவறியமை.

2010ம் ஆண்டு மீள்குடியேற்றத்திலிருந்து அரச காணிக்கான காணி அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டபோதிலும் நாங்கள் புறக்கணிக்கப்பட்டோம்.

கிராம சேவையாளர், காணி உத்தியோகத்தர், பிரதேச செயலாளர் ஆகியோர் காணி உரிமை உறுதிப்படுத்தல் படிவத்தை உறுதிப்படுத்தி ஒப்பமிட்டபின் பல கிராமங்களுக்கு வீட்டுத்திட்டம் கொடுக்கப்பட்டது. அந்த நடவடிக்கை எமது கிராமத்துக்கு மட்டும் புறக்கணிக்கப்பட்டு வீட்டுத்திட்டம் ஒரு சிலருக்கு மட்டும் கிடைக்கப்பெற்றும் பல மக்களுக்கு கிடைக்கப் பெறாமலும் உள்ளது.

இதில் காணி தொடர்பான ஆவணங்கள் உள்ளவர்களுக்கும் வழங்கப்படாமை குறிப்பிடத்தக்கது. எமது கிராமத்தின் அனைத்து சமூக கட்டமைப்புக்களையும் உள்ளடக்கிய அலுவலகக் கட்டடம் கட்டுவதற்கு, எமது கிராம அபிவிருத்திச் சங்கத்தால் முன்மொழியப்பட்ட பிரதேச செயலகத்திற்கு எதிரேயுள்ள காணியை எமக்குத் தருவதாக உறுதிமொழி கூறிய பிரதேச செயலாளர் அதன் பின் அக்காணியின் ஒரு பகுதியை சமுர்த்தி வங்கிக்கு கொடுத்து விட்டு மீண்டும் எமக்கு உறுதிமொழி வழங்கினார்.

அந்தக்காணி வரைபடம் வரையப்பட்டுள்ளதாகவும், அந்தக்காணி எமக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, எம்மை இரண்டு வருடகாலமாக ஏமாற்றி வந்த பிரதேச செயலாளர், தற்போது நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் பின் இக்காணியை எமக்குத் தரமறுக்கின்றார்.

தற்போது UNHABITED நிறுவனத்தினர் எமக்கான கட்டிடம் கட்டுவதற்கு முன்வந்தபோது இக்காணி தொடர்பாக பிரதேச செயலாளருக்குத் தெரியப்படுத்தியும் பொறுப்பற்ற விதத்தில் கிண்டல் கதைகளைக் கதைத்து வருகின்றார்.

ஆரம்பத்தில் தனது சொந்தத் தேவைகளுக்கு இக்காணியை ஆக்கிரமிக்கும் நடவடிக்கைகள் மேற்கொண்டு, மக்களின் எதிர்ப்பால் கைவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வேறு மாவட்டங்களில் இருந்து வேலைபெற்று வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டமை, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டமை.

பொதுமக்கள், பொது அமைப்புக்கள், பிரதேச செயலாளரைச் சந்திக்கச் சென்றால்,கதவைப் பூட்டிக்கொண்டு,தான் இல்லை என்று கூறுமாறு அங்குள்ள அலுவலர்களுக்கு உத்தரவிடுதல்.

கிளிநொச்சி ஐந்து வீட்டுத்திட்ட குடியிருப்புக்கு உரிய பொதுப்பாதையை ஒருவர் கைப்பற்றி வைத்துள்ளார் என்பதை பிரதேச செயலாளருக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியபோது, விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகக் கூறப்பட்டபோதும் மீண்டும் பாதையைப் பிடித்து அடைப்பதற்கு பெந்தகொஸ்தே சபைக்கு அனுமதி கொடுத்துள்ளார்.

இன்னும் பல பிரச்சினைகளை எமது மக்கள் தெரியப்படுத்துகின்றபோதும் அவற்றை உதாசீனம் செய்து வருகிறார். எமது கிராமத்தின் எங்களுடையவாழ்வியல் அபிவிருத்தி, கிராம அடிப்படை வசதிகளுக்கான அபிவிருத்தி என்பன இல்லாமல் செய்யப்பட்டுள்ளது.

மேலே கூறப்பட்ட செயலாளரின் பொறுப்பற்ற செயல்களால் எமது கிராம அபிவிருத்தி புறக்கணிக்கப்பட்டுள்ளதால் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து, தன்னலமற்ற, பாரபட்சமற்ற மக்கள் சேவையாளர் ஒருவரை பிரதேச செயலாளராக நியமித்து எமது மக்களதும், கிராமத்தினதும் அபிவிருத்திக்கு உதவுமாறு தங்களைத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

வீட்டுத்திட்ட விடயம் தொடர்பாக எமது மக்கள் இவரிடம் சென்றால் அவர்களுடன் உரிய முறையில் உரையாடாமல் பொறுப்பற்ற விதத்தில் கடுமையான வார்த்தைகளைப் பிரயோகித்துத் திருப்பி அனுப்புதல், பண்பற்ற விதத்தில் நடந்து கொள்ளல்.

கடமை நேரத்தில் கடமையில் இருப்பதில்லை என்பது உட்பட பல குற்றச்சாட்டுக்கள் உண்டு.

காணி அற்றவர்களுக்கும் விதை தானியம், மரக்கன்றுகள் வழங்குகின்றமை.

எனவே மேற்கூறப்பட்ட விடயங்கள் அனைத்தையும் கருத்தில் கொண்டு பிரதேச செயலாளரையும், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தரையும் இடமாற்றம் செய்வதோடு, உடனடியாக எமது காணி உரிமைப் பத்திரத்தையும் எமக்கான வீட்டுத்திட்ட வசதியையும் பொது அமைப்புக்களுக்கான காணியையும் பெற்றுத் தருவதோடு, ஏனைய கிராமங்களைப் போன்று எங்களுடைய கிராமத்தின் அபிவிருத்தி செயற்திட்டங்களுக்கும் எங்களுடைய வாழ்வாதார அபிவிருத்திக்கும் ஆவன செய்யுமாறு தங்களைப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DSC_0021.jpgDSC_00251.jpgDSC_00281.jpgDSC_00311.jpgDSC_00441.jpgDSC_00501.jpgDSC_00621.jpg

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.