Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

டுபாயில் இருந்து திரும்பிய மட்டு. இளைஞர் விமான நிலையத்தில் கைது! - ஆட்சி மாறியும் தொடரும் கெடுபிடி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
airport-200-news.jpg

புலம்பெயர் தமிழர்களை நாட்டுக்கு திரும்புமாறு அழைக்கும் புதிய அரசாங்கம் மறுபக்கம் அவர்களை இரகசியமாக கைது செய்வதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் குற்றம்சாட்டியுள்ளார். மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டது தொடர்பாக வெளியிட்டுள்ள அவர்-

   

நேற்றுக்காலை டுபாயில் இருந்து இலங்கைக்கு திரும்பிய மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை இலங்கை புலனாய்வு துறையினர் கைது செய்துள்ளனர். கொக்கட்டிச்சோலை 9ம் வட்டாரத்தை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான தாமோதரம் பாஸ்கரன் (வயது 29)என்பவரையே இவ்வாறு கைது செய்துள்ளதாக அவரின் தாயார் என்னிடம் தெரிவித்துள்ளார்.

டுபாய் நாட்டில் இருந்து இலங்கைக்கு வந்த இவர், மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் பல தடவைகள் நாட்டுக்கு வந்து சென்றுள்ளார். இருந்தும் இன்று இவர் என்ன காரணத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார் என்பது புரியவில்லை. ஒருபுறம் புலம்பெயர் தமிழர்களை நாட்டுக்கு வருமாறு அழைக்கும் அரசாங்கம், மறுபுறம் அவர்களை விமான நிலையத்தில் கைது செய்கின்றது.

எனவே சமாதானம் வந்துவிட்டது என்று கூறி யாரும் நாட்டுக்கு வரவேண்டாம். அவ்வாறு நாட்டுக்கு வருபவர்களை எந்தவித காரணமும் இன்றி கைது செய்வார்கள் என்பதற்கு இன்று நடந்த விடயமே ஒரு உதாரணம். எனவே நாட்டுக்கு திரும்பும் தமிழர்கள் அவதானம் செலுத்த வேண்டும். ஆட்சி மாறியிருக்கின்றதே தவிர தமிழர்கள் மீதான அட்டூழியம் குறையவில்லை. எனவே சுதந்திரம் கிடைத்து விட்டது என்று கூறி யாரும் நாட்டுக்கு வரவேண்டாம் எனக் கூறினார்.

http://seithy.com/breifNews.php?newsID=125912&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.