Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காக்க காக்க (திரைவிமர்சனம் அல்ல)

Featured Replies

பைக்குகளின் மேல் எனக்கு எப்போது காதல் ஏற்பட்டது என்பதை கொஞ்சம் ரீவைண்ட் செய்து பார்த்தால் சகலகலா வல்லவன் படத்தில் தலைவரின் "இளமை இதோ இதோ"வில் ஆரம்பித்தது என்று நினைக்கிறேன். சென்னையில் வசிக்கும் இளைஞர்களை பலநேரங்களில் காக்கும் கடவுள் அவர்களது பைக்குகள் தான்.

சொன்னால் நம்பமாட்டீர்கள் என் பைக் நான் சொல்லும் பேச்சை கேட்கும். என்னுடனும் திரும்ப பேசும். "மச்சி இன்னைக்கு பவுர்ணமி. மகாபலிபுரம் போகணும். அப் அண்டு டவுன் 100 கி.மீ. பத்திரமா போயிட்டு வந்துரலாமா" என்று கேட்டால் "பட்டையக் கிளப்பிடலாம் மாமு" என்று பதில் சொல்லும். அஃறிணைகளோடு பேசும் பழக்கம் எனக்கு எப்போது வந்தது என்று நினைவில்லை. தினமும் வீட்டுக்குள் நுழையும்போது கழட்டி விடும் என் செருப்புக்கோ அல்லது ஷூவுக்கோ மனதுக்குள் நன்றி சொல்வதும் என் வழக்கம்.

எனக்கு பைக் ஓட்ட சொல்லிக் கொடுத்த நண்பர் ஜாகீர். மடிப்பாக்கத்தில் இப்போதைய ஹேமமாலினியின் கன்னம் மாதிரி மேடு பள்ளமாக இருந்த ஒரு சாலையில் ஓட்டக் கற்றுக் கொண்டேன். நண்பர் "வண்டி ஓட்டுவியா" என்று கேட்டார். அது ஒரு ஹீரோ ஹோண்டா CD100. அதற்கு முன்னால் என் மாமா, அண்ணன் போன்றோரின் மொபெட்களை மட்டுமே ஓட்டப் பழகியிருந்தேன். சரி என்று சொன்னவன் "எத்தனை கீர்" என்று கேட்டேன். அவரும் சமர்த்தாக "நாலு கீர், பின்னாலே போடணும். க்ளட்சைப் புடிச்சி கீர் போட்டுட்டு கிளட்சை விட்டுடணும்" என்றார். நானும் மனசில் திக் அடித்து அப்புறமாய் கிக் அடித்து ஸ்டார்ட் செய்தேன். கிளட்சை இறுகப் பற்றினேன். பில்லியனின் அமர்ந்த நண்பர் ஒரு கோல்டு பிளேக் பில்டர் பற்ற வைத்தார். கீர் போட்ட வேகத்தில் முழு த்ராட்டில் கொடுத்து க்ளட்சை அப்படியே விட....

விருட்டென்று கிளம்பிய வண்டி ஒரு பத்தடி தூரம் ஒளிவேகத்தில் பயணித்து ஒரு வீட்டு வாசலில் இருந்த பெரிய இரும்பு கேட்டின் மீது மோதி வெடிகுண்டு வெடித்ததை போன்ற ஒரு ஒலி எபெக்டை கொடுத்தது. மழை பெய்து சேறும், சகதியுமான சாலையில் நானும், நண்பரும்... எங்கள் மீது வண்டி. இந்த நிலையில் கூட நண்பரின் வாயில் இருந்த "தம்" கீழே விழவில்லை என்பது உலக சாதனை.

அதன்பின்னர் அதே நண்பருடன் ஒரு KB100ல் அவருடைய சொந்த ஊரான மதுரைக்கு சென்று வந்தேன். சென்னையில் இருந்து 450 கி.மீ. திருச்சியில் மட்டும் அரை மணிநேரம் ரெஸ்ட். மறுநாளே அதே பைக்கில் திரும்பி வந்தோம். ஆளுக்கு பாதிதூரம் விரட்டி ஓட்டியதில் அவ்வளவாக அலுப்பில்லை.

நான் முதன்முதலில் ஆசைப்பட்டு வாங்கிய வண்டி ஒரு சில்வர் ப்ளஸ். ஹேண்ட் கீர். 2 கீராக இருந்த வண்டியில் ஆல்டர் செய்து பிக்கப்புக்காக 3 கீர் ஆக்கினேன். என்னுடைய அப்போதைய பொருளாதார நிலைமை செகண்ட் ஹேண்டில் வண்டி வாங்கும் அளவுக்கே இருந்தது. அந்த வண்டியை எனக்கு முன்னால் வைத்திருந்தவர் நடிகை ஜிகினாஸ்ரீ அல்ல. ஒரு ஆசிரியை. வண்டியை வாங்கினவன் பந்தாவுக்காக சில மாற்றங்கள் செய்தேன். சைலன்ஸர் வாயைக் கொஞ்சம் லூசாக்கினேன். சவுண்டு தூள் கிளப்பியது. க்ரே கலர் என்னை அவ்வளவாக கவரவில்லை. மொத்தமாக கருப்பு பெயிண்டை என் மெக்கானிக் நண்பன் கனி துணையோடு அடித்தேன்.

கறுப்பு பேண்ட், கறுப்பு சட்டையோடு கறுப்பு வண்டியைக் கிளப்பிக் கொண்டு முதன் முதலில் சென்றதும் மகாபலிபுரம் தான். வண்டி தூரத்தில் வரும்போது "டர்ர்ர்ர்ரென்று...." ரேஸ் பைக் எபக்டோடு சவுண்ட் வரும். அந்த ஒலியைக் கேட்டு பிகர்கள் எல்லாம் "யாரோ டாம் க்ரூஸ் வருகிறார் போல" என ஒரு எதிர்ப்பார்ப்போடு காத்திருந்தால் சொத்தை சில்வர் ப்ளஸ்ஸில் ஒல்லியான உருவத்தோடு மொக்கையாய் நான் வருவேன். பிகர்கள் வெறுத்துப் போகும்.

வண்டி கன்னங்கரேலென்று இருந்ததால் (வீலுக்கு கூட கறுப்பு பெயிண்டு) என் நண்பர்கள் மத்தியில் அந்த வண்டிக்கு "அமரர் ஊர்தி" என்று வேறு பெயர் வந்து விட்டது. இந்தியன் படத்தில் கமல் ஓட்டி வரும் அமரர் ஊர்தி அப்போ ரொம்பவும் பேமஸ்... சொத்தையான வண்டியாக இருந்தாலும் எனக்கு நன்றாகவே ஒத்துழைத்தது. நல்ல மழை அடிக்கும்போது கூட ஒரே கிக்கில் ஸ்டார்ட் ஆகி ஆச்சரியப் படுத்தும். அந்த வண்டிக்கு "கீ" என்றெல்லாம் ஏதும் இல்லை. ஒரு வயரை எடுத்து ஒரு ஓட்டையில் செருகி விட்டு ஸ்டார்ட் செய்தால் ஸ்டார்ட் ஆகிவிடும். ஒயரை பிடுங்கி விட்டால் ஆப் ஆகிவிடும். அந்த கயிலாத்து வண்டியை சில காலம் வைத்திருந்தேன். வாங்கிய ரேட்டுக்கும் மேலே ஒரு ஆபர் கிடைத்ததால் விற்று விட்டேன். வண்டியை வாங்கியவர் இந்த வண்டி தான் வேண்டும் என்று அடம்பிடித்து வாங்கியது செம காமெடி.

அதன்பிறகு நான் வைத்திருந்தது ஒரு டிவிஎஸ் சேம்ப். இந்த வாகனமும் க்ரே கலராகவே அமைந்திருந்தது. எனக்கு க்ரே அவ்வளவாகப் பிடிக்காது என்றபோதிலும் இந்த வண்டிக்கு கருப்பு எல்லாம் அடித்து கேவலப்படுத்தவில்லை. மாதாமாதம் சுமார் 300 ரூபாய் அளவுக்கு என் பர்ஸைக் கொள்ளையடித்ததை தவிர இந்த வாகனம் வேறு எந்த சாதனையும் செய்யவில்லை. இதை ஓட்டிக் கொண்டு சென்ற நாட்களை விட தள்ளிக் கொண்டு சென்ற நாட்களே அதிகம். மழை வந்தால் இந்த வண்டிக்கு ஜலதோஷம் பிடித்துக் கொள்ளும். வெயில் அடித்தால் மஞ்சக்காமாலை வந்துவிடும்.

நான் வண்டி ஓட்ட ஆரம்பித்து 10 வருடம் ஆனாலும் கூட லைசென்ஸ் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இப்போதைய ஹீரோ ஹோண்டா வாங்கிய பின்பே எடுத்தேன். லைசென்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டும் த்ரில்லே தனி. இப்போது அந்த த்ரில் இல்லாமல் "சவ, சவ" என்றிருக்கிறது. இப்போதும் பல நேரங்களில் வேண்டுமென்றே இன்சூரன்ஸ் பேப்பர் இல்லாமல் போலிஸ்காரரை டபாய்த்து வண்டி ஓட்டுகிறேன். எல்லா பேப்பரும் இருந்தால் கூட போலிஸ்காரரிடம் மாட்டினால் கூட ஏதோ ஒரு வகையில் "ஆப்பு" வைத்து விடுகிறார்கள்.

இந்த ஹீரோ ஹோண்டா வாங்க முடிவெடுத்தபோது கறுப்பு கலர் தான் என்று தீவிரமாக இருந்தேன். "ப்ளாக் இல்லே ரெட் மட்டும் இருக்கு, உடனே எடுத்துக்கங்க" என்று ஷோரூமில் சொன்னபோது கூட ப்ளாக் தான் வேண்டும் என்று அடம்பிடித்து 15 நாள் காத்திருந்தேன்.

பொதுவாக சாப்டாக செல்லும் என் வாகனம் சர்வீஸ் விடும் நேரம் வந்தால் மட்டும் புதுப்பொண்டாட்டி மாதிரி சிணுங்க ஆரம்பிக்கும். 2 மாதத்துக்கு ஒரு முறை கண்டிப்பாக சர்வீஸ் விட்டு விடுவேன். எப்போதும் ஆத்தரைஸ்டு சர்வீஸ் சென்டரில் வண்டியை விடுவது தான் என் வழக்கம். மெக்கானிக்குகள் நிறைய பேர் நண்பர்களாக இருப்பதால், வண்டியை விட்டால் அவர்கள் என்னவெல்லாம் "கும்மாளம்" போடுவார்கள் என்று தெரிந்திருப்பதால் மெக்கானிக்குகளிடம் வண்டியை விடும் அப்பாவித்தனம் எல்லாம் எனக்கு இல்லை.

என் வண்டியில் ஏறி உட்காரும்போதே ஒரு பெருமிதம் வரும். Lucky Lukeக்கு ஜாலிஜம்பர் எப்படியோ, வந்தியத்தேவனுக்கு அவருடைய குதிரை எப்படியோ அதுமாதிரி தான் என் பைக்கும் எனக்கு. சுமார் 30,000 கி.மீக்கு மேல் ஓட்டியும் கூட வண்டி இன்னமும் "கிண்ணென்று" இருக்கிறது. பிகர்களுக்கு லிப்ட் கொடுக்கும் போது "கெத்" ஆக இருக்கவேண்டும் என்பதற்காக சீட்டு மட்டும் கொஞ்சம் ஆல்டர் செய்திருக்கிறேன். கொஞ்சநாள் முன்னாடி கவிஞர் பாலபாரதி என் வண்டியில் ஏறி அமர்ந்தபோது கூட கொஞ்சம் அஞ்சினார். "அண்ணே என் பைக்கு என்னை கைவிடாது, காப்பாற்றும்" என்று நம்பிக்கையோடு சொன்னேன். அவ்வளவு நம்பிக்கை என் வண்டிமீது எனக்கு.

இதுவரை சொந்தமாக எனக்கு மூன்று வாகனங்கள் மட்டுமே இருந்திருந்தாலும் நண்பர்களின் தயவில் Mofaவிலிருந்து Thunderbird வரை ஓட்டியிருக்கிறேன். நான் ஓட்டிய வாகனங்களில் என்னை ரொம்பவும் கவர்ந்தது Yamaha RX 100 தான்.

மெல்ல மெல்ல என் பொருளாதார வளர்ச்சி உயர்ந்து வந்தாலும் கார் வாங்குவதில் எந்த ஆர்வமும் எனக்கில்லை. காரணம் மழைக்காலங்களில் கார் ஓட்டும் போது சில்லென்று சிறுசிறுத் துளிகளாக மழைச்சாரல் நம் முகத்தில் விழாது. ஒரு என்பீல்டு புல்லட் வாங்க வேண்டும் என்பது என் கனவு. என் உடல்வாகுக்கு அது ஒத்துவராது என்று நண்பர்கள் கிண்டலடித்தாலும் இப்போது வைத்திருக்கும் பைக்கை மாற்றும்போது என்பீல்டு தான் வாங்கவேண்டும் என உத்தேசித்திருக்கிறேன்.

சுமார் பத்து ஆண்டுகளாக இருசக்கர வாகனம் ஓட்டுகிறேன். இதுவரை பெரிதாக எங்கும் விழுந்து வாரி சில்லறை பொறுக்கியதில்லை. ஓரிரு சிறு விபத்துகளோடு என்னைக் காக்கும் கடவுளர்கள் என் உயிரைக் காப்பாற்றியிருக்கிறார்கள். மடிப்பாக்கம் மாதிரி ஒரு ஏரியாவின் கேடுகெட்ட சாலைகளில் தினமும் 30 கி.மீ. பயணித்தாலும் கூட இதுவரை என் உயிருக்கோ அல்லது உடலுக்கோ எந்த சேதாரமும் விளைவிக்காமல் பாடிகார்டு மாதிரி காக்கும் என் பைக்குக்கு இந்த பதிவு சமர்ப்பணம்.

(http://madippakkam.blogspot.com)

இதனைப்படிக்க என் சின்ன வயது சம்பவம் நினைவுக்கு வருகிறது.

முதன்முதலாக மோட்டரபைக் ஓட நினைத்து..

சார்லி பைக் ரொம்ப சிறியது..

அண்ணா இது ..இது இப்பிடி என்றவர்..இது பிறேக்..நிற்பாட்ட டக்கென்னு அமத்தணும் என்றார்..

சரியென்னு முத்தத்தில் இருந்த புறப்பட்டு.. எதிரேஇருந்த நந்தியாவட்டை மரம் முன்னே..

பிறேக் பிடித்த நான்..

நின்றவுடன் பிறேக் எடுத்துவிட்டேன்..

நான் சுதாகரிப்பதற்குள்..

சார்லி ரெட்டை நந்தியாவட்டைக்கிடையாக புகுந்துவிட்டது..

எனக்கொன்றுமில்லை..

சார்லியின் ரெண்டுபக்கறெக்கைகளும் உடைந்துவிட்டது..

சண்டைக்கு வந்த அண்ணாவிடம்..

பிறேக் பிடிக்கசொன்னீர்கள் பிடித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று சொன்னீர்களா..அச்சிலேட்டரைக் குறைக்க சொன்னீர்களா..

என வாதம் செய்ய..அம்மாவும்..

அததானே..ஒழுங்கா சொல்லிக்குடுத்தியா..அப்பாடா எம்பிள்ளைக்கு

ஒன்றுமில்லை எனச்சொன்னதும்..எனக்கு நினைவுக்கு வந்தது..

நன்றி லக்கிலுகி

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

லக்கிலுக்குவினதும் விகடகவியினதும் பழைய அனுபவங்கள் வாசிக்க எனக்கும் பழைய யாபகங்கள் வருகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.