Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர் விடயத்தில் மைத்திரி அரசு ஆக்கபூர்வமாக எதையும் செய்யவில்லை! - பேராசிரியர் சிற்றம்பலம் குற்றச்சாட்டு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
prof.sittampalam-200-news.jpg

தமிழர் விடயத்தில் மைத்திரிபால சிறிசேன அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கை எதனையும் இதுவரை எடுக்கவில்லை என தமிழரசுக் கட்சியின் துணைத்தலைவர் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் குற்றம்சாட்டியுள்ளார். கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சர் நியமனம் தொடர்பாக கருத்து வெளியிடுள்ள அவர், ஜனாதிபதி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு அரசாங்கம் கிழக்கிலங்கையில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஒருவர் முதலமைச்சராக வருவதற்கு தமது பூரண் ஆதரவை வழங்கியுள்ளது.

   

இம் மாகாணத்தில் 11 உறுப்பினர்களையும், சனத்தொகையில் முஸ்லிம்களை விட கூடிய விகிதாசாரத்தை கொண்டதுமான தமிழ் மக்களை பிரதிநிதிபடுத்தும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஆட்சி அமைக்க மத்தியில் உள்ள ஜனாதிபதியுடனும் பிரதமருடனும் பலவாறு பேசியும் பலன் கிடைக்கவில்லை. இதனால் கிடைத்தது பலத்த ஏமாற்றமேயாகும். இச் சந்தர்ப்பத்திலேயே, நல்லிணக்க சமிக்ஞையை வெளிக்காட்டுவதற்காத தாம் 67 ஆவது சுதந்திரதின விழாவில் கலந்துகொண்டோம் என இரா.சம்பந்தனதும் எம். ஏ.சுமந்திரனதும் கூறியிருப்பது சிந்திக்க வேண்டிய விடயமாகியுள்ளது.

தமிழ் மக்கள் விடயத்தில் மைத்திரி அரசு இதுவரை ஆக்கபூர்வமான எச் செயற்பாடையும் எடுக்கவில்லை என தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கூறுகின்றார். ஆதலால் நல்லிணக்க சமிக்ஞையை வெளிக்காட்ட சென்றோருக்கு மைத்திரி அரசு பரிசாக அளித்த நல்லிணக்க பரிசுகள் பல. அந்த பரிசுகளில் சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்று வந்த சில மணி நேரத்தில் ஓமந்தை சோதனை சாவடியில் மீண்டும் சோதனை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டமையும் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் முதலமைச்சரை தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கோரிக்கையை புறக்கணித்து நியமித்தமையும் உள்ளடங்குகின்றன.

இது மட்டுமன்றி முஸ்லிம்களோடு நல்லிணக்கம் பேண வேண்டும் எனவும் வடக்கு கிழக்கில் இருந்து முஸ்லிம்களை விடுதலைப் புலிகள் வெளியேற்றியமை இனச்சுத்திகரிப்பே எனவும் சட்டவாதம் பேசிவந்த சுமந்திரனுக்கு கிடைத்த பலத்த அடியாகும். 2009 இல் முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற போரின் போது இனச் சுத்திகரிப்பு நடைபெற்றதை மறுக்கும் சுமந்திரன், முஸ்லிம்களுக்கு எதுவித தீங்கும் இழைக்காது வெளியேற்றியமையை இனச்சுத்திகரிப்பு என வாதிடுவது விதண்டாவாதமாகும். இவ்வாறு நான் தெரிவிப்பது முஸ்லிம்களை விடுதலைப்புலிகள் வெளியேற்றியமை சரி என்று கூறுவதற்கல்ல.

நல்லிணக்க சமிக்ஞையை வெளிக்காட்ட குடும்பத்துடன் சென்று கலந்து கொண்டமை மிக மிக வேடிக்கையானதாகும். இந் நிகழ்வுகளில் கலந்து கூடிக்குலாவியவர்களுக்கு எமது போராட்டத்தின் வடுக்களோ அன்றி பல்லாண்டு காலமாக சிறையில் வாடும் நம்மவர் பற்றியோ அங்கவீனமானவர்கள் பற்றியோ விதவைகள் பற்றியோ இற்றைவரை எவ்விதமான முன்னேற்றகரமான நடவடிக்கையும் எடுக்காத அரசின் அக்கறையின்மையை விளங்கி கொள்ளாதது வேதனையளிக்கின்றது. இவர்கள் எமது போராட்ட காலத்தில் மக்களோடு வாழாது அதன் வடுக்களை சுமக்காது இருந்தவாகள். தற்போது சர்வதேச விசாரணையையும் மழுங்கடிக்க செய்துள்ளார்கள் என அவர் தெரிவித்தார்.

http://seithy.com/breifNews.php?newsID=126227&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.