Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

8ஆவது ஐ.பி.எல். செய்திகளும் கருத்துகளும்

Featured Replies

  • தொடங்கியவர்

இந்த மழையிலும் உங்களுக்கு ஆட்டம் கேட்குதா.. நடுவர் தர்மசேனாவிடம் பாய்ந்த கோஹ்லி

 

ஹைதராபாத்: ஐபிஎல் போட்டியில் நேற்று இலங்கை நடுவர் குமார்தர்மசேனாவுடன், விராட் கோஹ்லி மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மழை காரணமாக சுமார் இரண்டே முக்கால் மணி நேரத்துக்கு பிறகுதான் நேற்று, ஆட்டம் தொடங்கியது. 11 ஓவர்கள் கொண்ட போட்டியாக இது மாற்றப்பட்டது.

 

  ஹைதராபாத் முதலில் பேட் செய்த நிலையில், 10வது ஓவரில் மீண்டும் மழை அதிகமாக கொட்ட தொடங்கியது. அந்த ஓவரின் 4வது பந்து கோஹ்லியை நோக்கி சென்றபோது, மழை ஈரத்தால், கோஹ்லியின் கையை விட்டு பந்து நழுவி ஓடியது. இதனால் ஆத்திரமடைந்த கோஹ்லி, நடுவர் குமார் தர்மசேனாவிடம் சென்று, மழை பெய்யும்போது போட்டியை நிறுத்த வேண்டியதுதானே.. என்று வாக்குவாதம் செய்தார்.

 

மற்றொரு களநடுவரான அனில் சவுத்திரி, கோஹ்லியை சமாதானம் செய்த நிலையில், குமார்தர்மசேனாவிடம் பெங்களூர் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் வாக்குவாதத்தை தொடர்ந்தார். இந்த சம்பவத்தால் தர்மசேனா, அப்செட்டாக காணப்பட்டார்.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/ipl-2015-virat-kohli-gets-into-heated-argument-with-umpire-226900.html

  • Replies 449
  • Views 23.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

சென்னை எதிரான போட்டியில் பஞ்சாப் முதலில் துடுப்பெடுத்தாடுகிறது.

  • தொடங்கியவர்

எனது அதிரடியைவிட போலார்டின் கடைசி ஓவர் மிக முக்கியமானது: ஹார்டிக் பாண்டியா பேட்டி
 

 

கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் நான் அதிரடியாக ரன் குவித்திருந்தாலும், போலார்ட் வீசிய கடைசி ஓவர்தான் மிக முக்கியமானது என மும்பை ஆல்ரவுண்டர் ஹார்டிக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

 

மும்பையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை தோற்கடித்த மும்பை இண்டியன்ஸ் அணி, பிளே ஆப் வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது. முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் குவித்தது. மும்பை தரப்பில் அதிகபட்சமாக ஹார்டிக் பாண்டியா 31 பந்துகளில் 2 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 61 ரன்கள் குவித்தார்.

 

பின்னர் ஆடிய கொல்கத்தா அணியில் யூசுப் பதான் 37 பந்துகளில் 52 ரன்கள் குவித்தபோதும், 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் மட்டுமே எடுத்தது. போலார்ட் வீசிய கடைசி ஓவரின் கடைசி 3 பந்துகளில் கொல்கத்தா வெற்றி பெற 6 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. ஆனால் அந்த 3 பந்துகளையும் போலார்ட் அசத்தலாக வீச, பியூஷ் சாவ்லா வால் ஒரு ரன்கூட எடுக்க முடிய வில்லை.

 

போட்டி முடிந்த பிறகு இது தொடர்பாக பேசிய ஆட்டநாயகன் ஹார்டிக் பாண்டியா மேலும் கூறியதாவது: வெற்றிக்கு முக்கியக் காரணம் போலார்ட் பந்துவீச்சுதான். கடைசி ஓவரை வீசிய அவர், முதல் பந்திலேயே யூசுப் பதானை வீழ்த்தியதோடு, சிக்ஸர் எதையும் கொடுக்காமல் கட்டுக்கோப்பாக பந்துவீசினார். அவர் அப்படி பந்துவீசாவிட்டால் கொல்கத்தா வென்றிருக்கும். எனவே நான் அதிரடியாக ரன் குவித்ததைவிட போலார்ட் வீசிய கடைசி ஓவரே மிக முக்கியமானது. போட்டியின் முடிவை அந்த ஓவர்தான் தீர்மானித்தது என்றார்.

 

மும்பை அணி, சன்ரை ஸர்ஸுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அது தொடர்பாக பேசிய பாண்டியா, “கொல்கத்தாவுக்கு எதிராக வென்றதன் மூலம் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.

நல்ல சூழல் ஏற்பட்டுள்ளது. அடுத்த போட்டியில் வென்றால் நாங்கள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறலாம். கொல்கத்தாவுக்கு எதிரான இந்த ஆட்டம் மிக முக்கியமானது. இதில் வெற்றி பெற வேண்டும் என்பதை அனைவருமே அறிந்திருந்தோம்” என்றார்.

 

போலார்டுடன் இணைந்து 5-வது விக்கெட்டுக்கு 92 ரன்கள் குவித்தது குறித்துப் பேசிய பாண்டியா, “நான் களமிறங்கியபோது இது உங்களுக்கான நேரம். நீங்கள் என்னைப் போன்று ஆடலாம் என போலார்ட் கூறினார். அவர் என்னை பாராட்டியதோடு, நீங்கள் சிறப்பாக ஆடுகிறீர்கள் என்றார்.

போலார்ட் கடைசி வரை களத்தில் நிற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டதால் நான் அதிரடியாக ஆடினேன். நான் எப்போதுமே அதிரடியாக ஆடவே விரும்புவேன். அதேபோன்று ஆடுவதுதான் என்னுடைய இயல்பு. எனது கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் இதேபோன்று ஆடவே விரும்புகிறேன்” என்றார்.

 

கொல்கத்தாவுக்கு எதிராக 171 ரன்கள் மட்டுமே எடுத்திருந்ததால் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை இருந்ததா என பாண்டியாவிடம் கேட்டபோது, “பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி கண்டதை மறந்துவிட்டோம். கொல்கத்தாவுக்கு எதிராக நாங்கள் பந்துவீசிய விதத்தை வைத்துப் பார்க்கும்போது நிச்சயம் எங்களால் வெற்றி பெற முடியும் என்று நினைத்தேன். நாங்கள் மிகுந்த நம்பிக்கையோடு இருந்தோம். நாங்கள் மிகத்துல்லியமாக பந்துவீசியது எல்லோருக்கும் தெரியும்” என்றார்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/article7213418.ece

  • தொடங்கியவர்

ஐ.பி.எல். 2015: பஞ்சாப் 20 ஓவர்கள் முடிவில் 130/7 ; சென்னை அணி தடுமாற்றம்!

 

மொகாலி: நடப்பு 8-வது ஐ.பி.எல். போட்டியின் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 130 ரன்களை எடுத்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் பெய்லி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார்.

 

 பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக சகாவும் வோராவும் களமிறங்கினர். சகா 12 பந்துகளில் 15 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். வோராவுடன் பெய்லி இணைந்தார். ஆனால் அவர் 7 பந்துகளில் 12 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதேபோல் அடுத்தடுத்து பஞ்சாப் அணி வீரர்கள் வந்த வேகத்தில் நடையைக் கட்டுவதிலே கவனமாக இருந்தனர்.. சென்னை அணியின் அனைத்து பந்து வீச்சாளர்களிடமும் பஞ்சாப் அணி வீரர்கள் சிக்கி சின்னாபின்னமாகினர். 15 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 86 ரன்களை எடுத்து பரிதாப நிலையில் இருந்தது.

 

ஆனால் பின்வரிசை வீரர்களான பட்டேலும் தவானும் நிலைத்து நின்று பஞ்சாப் அணி கவுரவமான ஸ்கோரை எட்ட உதவினர். 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 130 ரன்கள் எடுத்தது. 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. அதன் தொடக்க வீரர்களாக ஹஸ்ஸியும் மெக்கல்லமும் விளையாடத் தொடங்கினர். ஆனால் ஹஸ்ஸி முதல் ஓவரின் கடைசி பந்திலும் மெக்கல்லம் அடுத்த ஓவரிலும் அடுத்தடுத்து அவுட் ஆகி அதிர்ச்சியளித்தனர். சென்னை அணி 10 ரன்களை எட்டுவதற்குள் 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/ipl-2015-match-53-kings-xi-punjab-vs-chennai-super-kings-226892.html

  • தொடங்கியவர்

Kings XI Punjab 130/7 (20/20 ov)
Chennai Super Kings 134/3 (16.5/20 ov)
Chennai Super Kings won by 7 wickets (with 19 balls remaining)

  • தொடங்கியவர்

சென்னை அணி வெற்றி
 

மொகாலி: பஞ்சாப் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியாவில் எட்டாவது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. மொகாலியில் இன்று நடந்த லீக் போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் பெய்லி பேட்டிங் தேர்வு செய்தார். சென்னை அணியில் டுவைன் ஸ்மித், மோகித் சர்மா நீக்கப்பட்டு மைக்கேல் ஹசி, நெஹ்ரா இடம்பிடித்தனர்.

 

பஞ்சாப் அணிக்கு சகா (15) ஏமாற்றினார். நெஹ்ரா பந்தில் பெய்லி (12) சிக்கினார். வோரா (4), குர்கீரத் சிங் (15) நிலைக்கவில்லை. மேக்ஸ்வெல் (6), மில்லர் (11) விரைவில் கிளம்பினர். அக்சர் படேல் 32 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 130 ரன்கள் எடுத்தது. ரிஷி தவான் (25), ஹென்டிரிக்ஸ் (1) அவுட்டாகாமல் இருந்தார்.

 

எட்டி விடும் இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு மைக்கேல் ஹசி (1), பிரண்டன் மெக்கலம் (6) விரைவில் திரும்பினர். சிறப்பாக செயல்பட்ட டுபிளசி அரை (55) சதம் அடித்தார். சென்னை அணி 16.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 134 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரெய்னா (41), தோனி (25) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

http://www.dinamalar.com/ipl2015/detail.php?id=1253676

  • தொடங்கியவர்

வாட்சன் சதம்: ராஜஸ்தான் அபாரம்

 

மும்பை: கோல்கட்டாவுக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் ஷேன் வாட்சன் சதம் அடித்து கைகொடுக்க ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 199 ரன்கள் குவித்தது.

மும்பையில் நடக்கும் ஐ.பி.எல்., லீக் போட்டியில் ராஜஸ்தான், கோல்கட்டா அணிகள் விளையாடுகின்றன. ‘டாஸ்’ வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், ‘பேட்டிங்’ தேர்வு செய்தார்.

 

 

ராஜஸ்தான் அணிக்கு அஜின்கியா ரகானே, ஷேன் வாட்சன் ஜோடி நல்ல துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்த போது ரகானே (37) அவுட்டானார். அடுத்து வந்த கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் (14), சஞ்சு சாம்சன் (8), ஜேம்ஸ் பால்க்னர் (6), கருண் நாயர் (16) சொற்ப ரன்னில் அவுட்டாகினர். அபாரமாக ஆடிய வாட்சன், சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். உமேஷ் யாதவ் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய வாட்சன், ஐ.பி.எல்., அரங்கில் தனது 2வது சதத்தை பதிவு செய்தார். கிறிஸ் மோரிஸ் (4) ‘ரன்–அவுட்’ ஆனார்.

 

 

ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 199 ரன்கள் குவித்தது. வாட்சன் (104 ரன், 59 பந்து, 5 சிக்சர், 9 பவுண்டரி) அவுட்டாகாமல் இருந்தார். கோல்கட்டா அணி சார்பில் ரசல் 3, உமேஷ் யாதவ் ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

 

http://sports.dinamalar.com/2015/05/1431708651/stevensmith.html

  • தொடங்கியவர்

வாட்சன் சதம்: ராஜஸ்தான் வெற்றி: பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி மே 17,2015

 

மும்பை: ஐ.பி.எல்., லீக் போட்டியில் வாட்சம் சதம் விளாச, ராஜஸ்தான் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 16 புள்ளியுடன் 'பிளே -ஆப்' சுற்றுக்கு முன்னேறியது. 'நடப்பு சாம்பியன்' கோல்கட்டா அணி பரிதாபமாக நடையை கட்டுகிறது.

 

இந்தியாவில் எட்டாவது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. நேற்று மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' கோல்கட்டா, ராஜஸ்தான் அணிகள் மோதின.

'டாஸ்' வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் ஸ்மித், பேட்டிங் தேர்வு செய்தார். ராஜஸ்தான் அணியில் பிரவிண் டாம்பேவுக்குப் பதில் பரிந்தர் ஷ்ரண் (அரியானா) அறிமுகம் ஆனார். கோல்கட்டா அணியில் சுனில் நரைன் நீக்கப்பட்டு, அசார் மகமூது சேர்க்கப்பட்டார்.
வாட்சன் அசத்தல்: ராஜஸ்தான் அணிக்கு வாட்சன், ரகானே இணைந்து நல்ல துவக்கம் கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 80 ரன் சேர்த்த நிலையில், ரகானே (37) ரன் அவுட்டானார். 9.2 வது ஓவரில் 100 ரன்களை கடந்த ராஜஸ்தான் அணிக்கு அடுத்து வந்த ஸ்மித் (14), சாம்சன் (8), பால்க்னர் (6), கருண் நாயர் (16) என, ஒருவரும் கைகொடுக்கவில்லை.

 

மனம் தளராத வாட்சன், 57 வது பந்தில் சதம் அடித்தார். ஐ.பி.எல்., அரங்கில் இது இவரது இரண்டாவது (2013, எதிர்-சென்னை) சதம். மோரிஸ் (4) ரன் அவுட்டானார். ராஜஸ்தான் அணி 20 ஓவரில், 6 விக்கெட்டுக்கு 199 ரன்கள் குவித்தது. வாட்சன் (104 ரன், 59 பந்து) அவுட்டாகாமல் இருந்தார்.
காம்பிர் 'அவுட்': கடின இலக்கைத் துரத்திய கோல்கட்டா அணிக்கு கேப்டன் காம்பிர் (1), உத்தப்பா (14), மணிஷ் பாண்டே (21) அதிர்ச்சி கொடுத்தவர்.பின் இணைந்த யூசுப் பதான், ரசல் ஜோடி சீரான ரன்குவிப்பை வெளிப்படுத்த, ஒரு கட்டத்தில் கோல்கட்டா அணி வெற்றியை நோக்கச் சென்றது. இதற்கேற்ப, குல்கர்னி ஓவரில் 2 பவுண்டரி அடித்த ரசல், பரிந்தர் பந்தை மைதானத்துக்கு வெளியே அனுப்பினார்.

 

சபாஷ் மோரிஸ்: மோரிஸ் வீசிய போட்டியின் 14வது ஓவரில் அதிரடி ரசல் (37 ரன், 20 பந்து), சூர்ய குமார் 'டக்' அவுட்டாக, சற்று திருப்பம் ஏற்பட்டது. இதனிடையே, யூசுப் பதான் (44), அசார் மகமூது (6), பியுஸ் சாவ்லா (0) சீரான இடைவெளியில் அவுட்டாக, கோல்கட்டா அணியின் தோல்வி உறுதியானது. 19வது ஓவரில் உமேஷ் 3 பவுண்டரி, 1 சிக்சர் உட்பட 20 ரன் எடுத்த போதும், கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன் தேவைப்பட்டன. மோரிஸ் வீசிய இந்த ஓவரின் முதல் பந்தில் சாகிப் (13) அவுட்டானார். அடுத்த 2 பந்தில் உமேஷ் 1, மார்னே மார்கல் 2 என, 3 ரன் எடுத்தனர். கடைசி 3 பந்தையும் மோரிஸ் துல்லியமாக வீச, 3 ரன் மட்டும் கிடைத்தன.

 

கோல்கட்டா அணி 20 ஓவரில், 9 விக்கெட்டுக்கு 190 ரன்கள் எடுத்து, 9 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. மார்னே மார்கல் (4), உமேஷ் (24) அவுட்டாகாமல் இருந்தனர்.
கோல்கட்டா அணியின் (15) வாய்ப்பு அனேகமாக முடிவுக்கு வந்தது.

 

8
கடந்த 2013 தொடரில் சென்னை அணிக்கு எதிராக அசத்திய (101) வாட்சன், நேற்று 104 ரன் எடுத்தார். இதையடுத்து, ஐ.பி.எல்., அரங்கில் 2 அல்லது அதற்கு மேல் சதம் அடித்த 8வது வீரர் ஆனார். இவ்வரிசையில் கெய்ல் முதலிடத்தில் (5 சதம்) உள்ளார்.

 

3000
கோல்கட்டா அணிக்கு எதிராக ரகானே 16 ரன் எடுத்த போது, 'டுவென்டி-20' போட்டி வரலாற்றில் 3000 ரன்கள் என்ற இலக்கை எட்டினார். இதுவரை 119 போட்டிகளில் 3021 ரன்கள் எடுத்துள்ளார்.

 

4000
நேற்று 15 ரன் எடுத்த போது, 'டுவென்டி-20' போட்டி வரலாற்றில் 4000 ரன்கள் எடுத்த வீரர் ஆனார் வாட்சன். ஆஸ்திரேலியா, சிட்னி சிக்சர்ஸ், ராஜஸ்தான் உட்பட 8 அணிகளுக்காக 152 போட்டியில் விளையாடிய வாட்சன், மொத்தம் 4089 ரன்கள் எடுத்தார்.

 

பவுலிங் சொதப்பல்
ராஜஸ்தான் அணியினரின் பவுலிங் நேற்று மிகவும் மோசமாக இருந்தது. 18 'வைடு', 5 'நோ பால்' என்ற வகையில் மட்டும் உதிரிகளாக 23 ரன்கள் விட்டுத்தந்தனர். இதனால், கோல்கட்டா அணிக்கு இலக்கு எளிதாக இருந்தது. இருப்பினும், கோல்கட்டா அணி கிடைத்த வாய்ப்பை கோட்டை விட்டது.

 

பெங்களூருவுக்கு வாய்ப்பு
ஐ.பி.எல்., தொடரில் 'பிளே ஆப்' சுற்றுக்கு சென்னை (18 புள்ளி), ராஜஸ்தான் (16 புள்ளி) அணிகள் தகுதி பெற்றன.
* இன்று இரவு நடக்கும் போட்டியில் மும்பை (14), ஐதராபாத் (14) அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி, 16 புள்ளியுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

* இன்று மாலை நடக்கும் போட்டியில் டில்லி வெற்றி பெற்றால், பெங்களூரு (+1.037), கோல்கட்டா (+0.253) அணிகள் தலா 15 புள்ளி பெற்றிருக்கும்.

அப்போது ரன் ரேட் அடிப்படையில் பெங்களூருவுக்கு வாய்ப்பு கிடைக்கும். கோல்கட்டா அணி தொடரில் இருந்து வெளியேற நேரிடும்.

* ஒருவேளை மும்பை, ஐதராபாத் போட்டி மழையால் ரத்தானால் அல்லது பெங்களூரு மிக மோசமாக தோற்றால் மட்டுமே, கோல்கட்டா அணிக்கு 'பிளே ஆப்' வாய்ப்பு கிடைக்கும். மொத்தத்தில் 'நடப்பு சாம்பியன்' கோல்கட்டா அணி, நடையை கட்டுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.

 

http://www.dinamalar.com/ipl2015/detail.php?id=1253675

  • தொடங்கியவர்

4rrcw9.png

  • தொடங்கியவர்

ஐபிஎல் தோல்வி: ஷாரூக் கானின் சுய கலாய்ப்புக்கு வரவேற்பு
 

23sc11u.jpg

 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நேற்று அடைந்த தோல்வி குறித்து ஷாரூக் கான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தன்னை தானே கிண்டல் செய்து பதிவு ஒன்றை பக்ரிந்துள்ளார்.

 

நேற்று பெற்ற வெற்றியின் மூலம் ராஜஸ்தான் அணி ப்ளேஆப் சுற்றுக்குத் தகுதி பெற்றது. ஹைதராபாத் - மும்பை அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தின் முடிவைப் பொருத்தே கொல்கத்தாவின் ப்ளேஆப் வாய்ப்பு இருக்கிறது. நிர்ணயித்த 200 ரன்கள் இலக்கை கொல்கத்தா சிறப்பாக விரட்டினாலும், கடைசியில் வெறும் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.

 

இது குறித்து தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள கொல்கத்தா அணியின் உரிமையாளர் நடிகர் ஷாரூக்கான், "கொல்கத்தாவின் முயற்சி சிறப்பாக இருந்தது. ராஜஸ்தான் அணி பிரமாதமாக விளையாடினார்கள். வெற்றிக்கு உரியவர்கள் அவர்களே. ஆனால் எனது கொல்கத்தா அணி வீரர்களே, பரவாயில்லை. சிறிது சோகம் தவறில்லை. ஒவ்வொருவரும் சிறப்பாக விளையாடினீர்கள். ஆனால் சில நேரங்களில் நமது சிறப்பான ஆட்டம் கூட போதுமானதாக இருப்பதில்லை" என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து தனது மகன் தன்னுடன் பேசுவது போன்ற புகைப்படத்துடன் ஒரு நகைச்சுவைப் பதிவையும் ஷாரூக் பகிர்ந்துள்ளார். அதில் அவரது மகன் "நாம் வெற்றி பெற்றோமா?" எனக் கேட்கிறார், ஷாரூக் "இல்லை சன்" என்கிறார். "ஏன் அப்பா?" என அவர் கேட்க, ஷாரூக் "வாட் சன்" என பதிலளிக்கிறார்.

 

 

ராஜஸ்தான் வீரர் ஷேன் வாட்சன் அடித்த சதம், அந்த அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தது. அதையே இவ்வாறு நகைச்சுவையாக பகிர்ந்துள்ளார் ஷாரூக். இந்தப் பதிவுக்கு பலமான வரவேற்பு கிடைத்துள்ளது. பலர் ஷாரூக்கின் விளையாட்டு உணர்வை பாராட்டியுள்ளனர்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article7216342.ece

  • தொடங்கியவர்

ஐ.பி.எல்., லீக் போட்டி: மழையால் ரத்து

 

பெங்களூரு: டில்லி, பெங்களூரு அணிகள் மோதிய ஐ.பி.எல்., லீக் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து பெங்களூரு அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. பெங்களூருவில் இன்று நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் பெங்களூரு, டில்லி அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் கோஹ்லி பவுலிங் தேர்வு செய்தார். டில்லி அணியில் உடல் நிலை சரியில்லாத ஆல்பி மார்கல் நீக்கப்பட்டு மாத்யூஸ் இடம்பிடித்தார்.

 

டில்லி அணிக்கு ஸ்ரேயாஸ் 20 ரன்கள் மட்டும் எடுத்தார். சிறப்பாக விளையாடிய குயின்டன் அரை (69) சதம் விளாசினார். யுவராஜ் சிங் (11), ஜாதவ் (0) ஏமாற்றினர். கேப்டன் டுமினி அரை சதம் அடித்தார். டில்லி அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 187 ரன்கள் எடுத்தது. டுமினி (67), சவுரப் திவாரி (13) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

கடின இலக்கை விரட்டிய பெங்களூரு அணி 1.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 2 ரன்கள் எடுத்திருந்தபோது, மழை குறுக்கிட்டது. இதன் பின் சுமார் 1.30 மணி நேரம் மழை தொடர, போட்டி ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது. கோஹ்லி (1), கெய்ல் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

இதன் மூலம் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது. இதனையடுத்து பெங்களூரு அணி (16 புள்ளி) 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறியது.

 

http://www.dinamalar.com/ipl2015/detail.php?id=1254234

  • தொடங்கியவர்

பிரிமியர் கிரிக்கெட்: மும்பை அணி வெற்றி
 

மும்பை: பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 56வது லீக் போட்டி ஐதராபாத் நகரில் நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது.

 

 

தொடர்ந்து களமிறங்கிய அந்த அணி 20 ஓவரில் 113 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. சுலப இலக்கை துரத்திய மும்பை அணி 13.5 ஓவரில் 1 விக்கெட்டுக்கு 114 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

 

இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி புள்ளிப்பட்டியலில் 16 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது. 15 புள்ளிகளுடன் இருந்த கோல்கட்டா அணி பரிதாபமாக தொடரில் இருந்து வெளியேறியது.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1255029

  • தொடங்கியவர்

m9bodw.png


33vc9ic.png

  • தொடங்கியவர்

மழை விளையாடியதால் போட்டி கைவிடப்பட்டது: ‘பிளே ஆப்’ சுற்றில் பெங்களூரு அணி
 

2pzl4e9.jpg

 

போட்டி இடைவேளையின்போது தனது தோழி அனுஷ்கா சர்மாவுடன் பேசிக் கொண்டிருந்த பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி. படம் - பிடிஐ

 

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு அணியும் ‘பிளே ஆப்’ சுற்றில் விளையாட தகுதி பெற்றது.

 

பெங்களூருவில் நேற்று நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு டெல்லி டேர்டெ வில்ஸ் அணிக்கு இடையிலான ஆட்டம் மழையால் முடிவு எதுவும் தெரியாமல் கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

 

இதையடுத்து பெங்களூரு அணி 16 புள்ளிகளுடன் ‘பிளே ஆப்’ சுற்றில் விளையாடுவதற்கு தகுதி பெற்றது. டெல்லி அணி ஏற்கெனவே போட்டியில் இருந்து வெளியேறிவிட்டது.

14 லீக் ஆட்டங்களை முடித்துள்ள பெங்களூரு அணி 7 வெற்றி 5 தோல்வி, 2 போட்டிகளில் முடிவு இல்லை என்ற நிலையில் 16 புள்ளிகளை பெற்றுள்ளது.

 

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பேட்டிங் செய்த தீர்மானித்தது. தொடக்க வீரர்கள் டி காக், ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் அதிரடியாக விளையாட தொடங்கினர். ஸ்ரேயாஸ் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கேப்டன் டுமினியும் அதிரடி ஆட்டத்தில் இறங்கினார். இதனால் டெல்லியின் ஸ்கோர் வேக மாக உயர்ந்தது. 11-வது ஓவரில் 100 ரன்களை எட்டிய அந்த அணி 17-வது ஓவரில் 150 ரன்களை கடந்தது.

 

டி காக் 39 பந்துகளில் 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். யுவராஜ் சிங் 11 ரன்கள் எடுத்தார். டுமினி 43 பந்துகளில் 67 ரன்களும் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது.

 

அடுத்து பெங்களூரு அணியில் கோலி, கெயில் ஆகியோர் ஆட்டத்தை தொடங்கினர். 1.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 2 ரன்கள் எடுத்திருந்தபோது, மழை பெய்யத் தொடங்கியது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. தொடந்து மழை பெய்ததால் மீண்டும் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF/article7218561.ece

  • தொடங்கியவர்

போட்டி முடிவதற்குள் அனுஷ்காவை பார்த்து பேசுவதா?: கோஹ்லி மீது விதிமீறல் புகார் 

2pzl4e9.jpg

பெங்களூர்: டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிராக பெங்களூர் அணி விளையாடிய போட்டியின் இடையே விராட் கோஹ்லி விதிகளை மீறி தனது காதலி அனுஷ்கா சர்மாவை சந்தித்ததாக புகார் எழுந்துள்ளது. ஐபிஎல் போட்டிகளில் டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிய ஆட்டம் நேற்று பெங்களூரில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய பெங்களூர் அணி 2 ரன்கள் எடுத்த நிலையில் கனமழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் அளிக்கப்பட்டது.

 

அனுஷ்கா போட்டியை காண கோஹ்லியின் காதலியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா வந்திருந்தார். அவர் விஐபிகள் இருக்கையில் அருகே அமர்ந்து போட்டியை கண்டு ரசித்தார்.

2z5m1e9.jpg

கோஹ்லி மழை பெய்து ஆட்டம் நிறுத்தப்பட்டதும் கோஹ்லி நேராக பார்வையாளர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று தனது காதலி அனுஷ்காவை சந்தித்து கட்டிப்பிடித்து சிரித்துப் பேசி மகிழ்ந்தார். இதை ஸ்டேடியத்தின் பெரிய திரையிலும் காண்பித்தனர்.

 

விதிமீறல் போட்டி முடியும் வரை அதாவது கடைசி பந்து வீசி முடியும் வரை வீரர்கள் பார்வையாளர்களை சந்திக்க அனுமதி கிடையாது. அப்படி இருக்கையில் கோஹ்லி ஊழல் தடுப்பு பாதுகாப்பு விதிகளை மீறி அனுஷ்காவை சந்தித்து பேசியுள்ளார் என்று ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு பிரிவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

 

கேப்டன் போட்டி முடியும் வரை பார்வையாளர்களை சந்திக்கக் கூடாது என்பது வீரர்கள் அனைவருக்கும் தெரியும். அது கேப்டன் கோஹ்லிக்கும் நன்றாகத் தெரியும். தெரிந்தும் விதிகளை மீறிய கோஹ்லி மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திடமும் தெரிவிக்கப்படும் என்று அந்த மூத்த அதிகாரி கூறியுள்ளார்.

 

ஐபிஎல் ஊழல் தடுப்பு பாதுகாப்பு விதிகளை கோஹ்லி மீறியதாக எங்களுக்கு புகார் வரவில்லை. வந்தால் அவரை எச்சரிப்போம் என்று நேற்றைய போட்டியை நேரில் பார்த்த ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/virat-kohli-flouts-rules-again-after-being-seen-with-anushka-226992.html

  • தொடங்கியவர்

காலை வாரிய காஸ்ட்லி வீரர்.. யுவராஜ்சிங்கின் சிங்கிள் ரன்னுக்கு டெல்லி கொட்டியது ரூ.6.5 லட்சம்!

 

சென்னை: ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட யுவராஜ்சிங் சொதப்பலாக ஆடி நடப்பு சீசனை நிறைவு செய்தார். கடந்த சீசனில் பெங்களூர் அணிக்காக ரூ.14 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார் யுவராஜ்சிங். அப்போது, ஐபிஎல் அணிகளிலேயே அதிக ஏலத்தொகைக்கு பெறப்பட்டவர் யுவராஜ் என்ற சாதனையை அவர் படைத்தார். நடப்பு ஐபிஎல் சீசனுக்கான ஏலத்தில், பெங்களூர் அணியில் இருந்து கழற்றிவிடப்பட்ட யுவராஜ்சிங்கை, ரூ.16 கோடிக்கு வாங்கியது டெல்லி. இதன்மூலம், அதிக தொகை வீரர்களில் தனது சாதனையை தானே தகர்த்தார் யுவராஜ்சிங்.

 

சாதனையில்லை, சோதனை ஆனால், விலையில்தான் சாதனைகள் படைக்கப்பட்டதே தவிர, ரன்களில் எந்த சாதனையும் இல்லை. சொல்லப்போனால், முக்கிய மேட்சுகளில் கூட யுவராஜ்சிங்கால், டெல்லி அணிக்கு சோதனைதான் மிஞ்சியதே தவிர, எதிர்பார்த்த ஆட்டம் வெளிப்படவில்லை.

 

மொத்தம் 248 ரன்கள் யுவராஜ்சிங் நடப்பு சீசனில் மொத்தம், 13 இன்னிங்சுகளில் பேட் செய்துள்ளார். மொத்தம் சேர்த்த ரன்கள் 248. இதில் இரு அரை சதங்கள் அடங்கும். அதிகபட்ச ரன் என்பது 57. பேட்டிங் ஸ்டிரைக் ரேட் 118. மொத்தம் சேர்த்த பவுண்டரிகள் 23, சிக்சர்கள் 10. ஒரு போட்டியில் டக் அவுட்டும் ஆனார்.

 

யுவராஜ் எடுத்த ரன்கள் சென்னைக்கு-9, ராஜஸ்தான்-27, பஞ்சாப்-54, ஹைதராபாத்-9, கொல்கத்தா-21, மும்பை-2, பெங்களூர்-2, ராஜஸ்தான்-22, மும்பை-57, கொல்கத்தா-0, ஹைதராபாத்-2, சென்னை-32, பெங்களூர்-11.

 

பந்து வீச்சிலும் சொதப்பல் யுவராஜ்சிங் பந்து வீச்சிலும் சொல்லிக்கொள்ளும்படி சாதிக்கவில்லை. 9 ஓவர்கள் வீசிய யுவராஜ்சிங், 72 ரன்களை விட்டுக்கொடுத்ததோடு, ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தினார். இந்திய அணியில் ஆல்ரவுண்டராக ஜொலித்த யுவராஜ்சிங், டி20 உலக கோப்பை இறுதிபோட்டியின் சொதப்பல் ஆட்டத்துக்கு பிறகு அணியில் சேர்க்கப்படவேயில்லை.

 

ஒரு ரன் விலை ரூ.6.5 லட்சம் யுவராஜ்சிங்கிற்கு டெல்லி கொடுத்த தொகையையையும், நடப்பு சீசனில் யுவராஜ் எடுத்த 248 ரன்களை வகுத்து பார்த்தால், யுவராஜ்சிங்கின் ஒரு சிங்கிள் ரன்னுக்கு டெல்லி கொடுத்த விலை எவ்வளவு தெரியுமா. ரூ.6.5 லட்சம். சரியாக சொன்னால், ரூ.6 லட்சத்து 45 ஆயிரத்து, 161. இந்த தொகையை வளர்ந்து வரும் ஒரு வீரருக்கு கொட்டி கொடுத்திருந்தாலும், வாங்கிய காசுக்கு மேல் விளாசியிருப்பார்.

 

கடைசி போட்டியிலும்.. ஐபிஎல் நடப்பு சீசனில் இருந்து லீக் சுற்றிலேயே டெல்லி வெளியேறிவிட்டது. நேற்று பெங்களூருக்கு எதிராக கடைசி லீக் ஆட்டம் நடந்தது. அதிலாவது கற்ற வித்தை மொத்தத்தையும் யுவராஜ் இறக்கி ஆடுவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு 11 ரன்களை மட்டுமே பரிசாக அளித்து நடையை கட்டினார் யுவராஜ்சிங்.

 

ஆட்டத்தை மாற்றினார் டெல்லி கேப்டன் டுமினி, ஐபிஎல் சீசன் தொடங்கும் முன்பு அளித்த பேட்டியில், யுவராஜ்சிங் தனியாளாக போட்டியையே மாற்றுவார் என்று கூறியிருந்தார். ஆனால், எந்த அணிக்கு சாதகமாக போட்டியை மாற்றுவார் என்று டுமினி கூறாததன் மர்மம் இப்போதுதான் விடுபட்டுள்ளது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/ipl-2015-how-many-lakhs-did-each-run-yuvraj-singh-cost-227000.html

  • தொடங்கியவர்

அதிரடி மெக்கல்லம் ஆப்சென்ட்.. மும்பைக்கு எதிராக, சென்னைக்கு காத்திருக்கு 'ஒப்பனிங்' சவால்! 

 

மும்பை: அதிரடி தொடக்க வீரர் பிரெண்டன் மெக்கல்லம், நடப்பு ஐபிஎல் சீசனில் இனி ஆடப்போவதில்லை என்பது சென்னை சூப்பர் கிங்ஸ் குழுவுக்கு பெரும் பின்னடைவாகும். நியூசிலாந்தின் அதிரடி தொடக்க வீரரான பிரெண்டன் மெக்கல்லம், உலக கோப்பை கிரிக்கெட்டில் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதே ஃபார்மில், ஐபிஎல் தொடரில் சென்னைக்காக களமிறங்கிய மெக்கல்லம், இங்கும், தொடக்க வீரராக களம் கண்டு பிச்சி உதறிவிட்டார்.

9qgtpi.jpg

சதம் அடித்த மெக்கல்லம் மொத்தம் 14 போட்டிகளில், மெக்கல்லம் குவித்தது 436 ரன்களாகும். ரன் சராசரி 33.53. இதில் 2 அரை சதங்கள், ஒரு சதமும் அடங்கும். பிற போட்டிகளிலும், அதிரடியாக ரன்களை குவித்துவிட்டு வலுவான அடித்தளம் போட்டுகொடுத்துவிட்டுதான் நடையை கட்டினார் மெக்கல்லம்.

 

ஸ்மித்துடன் டக்கர் ஆட்டம் மெக்கல்லம் மற்றும் ட்வைன் ஸ்மித் ஆகியோரின் தொடக்க ஆட்டம்தான் பல போட்டிகளில் சென்னையை வெற்றிப்பாதைக்கு அழைத்து வந்துள்ளது. ட்வைன் ஸ்மித் 325 ரன்களை குவித்துள்ளார். லீக் ஆட்டங்களில் சென்னை புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்து பிளேஆப்புக்கு தகுதி பெற்றுள்ளது.

 

மெக்கல்லம் ஆப்சென்ட் நாளை நடைபெறும் பிளேஆப் சுற்றில், மும்பையை எதிர்த்து சென்னை ஆடுகிறது. ஆனால், இதில் மெக்கல்லம் ஆடப்போவதில்லை என்பது சென்னைக்கு பின்னடைவான செய்திதான். ஏனெனில், 21ம் தேதி முதல் தொடங்க உள்ள இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் ஆடுவதற்காக மெக்கல்லம் தாய் நாட்டு அணியுடன் சென்று சேர்ந்து கொண்டார்.

 

மைக்கேல் ஹசி எனவே, நாளைய பிளேஆப்பில், ட்வைன் ஸ்மித் மற்றும் ஆஸி. முன்னாள் வீரர் மைக்கேல் ஹசி ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள். மைக்கேல் ஹசியை, பஞ்சாப்புக்கு எதிரான லீக் ஆட்டத்தில் களமிறக்கி சோதித்து பார்த்தது அணி நிர்வாகம். அப்போட்டியில் 6 பந்துகளில் 1 ரன் எடுத்து அவுட் ஆனார் ஹஸ்சி. ஆனால், அவர் பழைய ஃபார்மில் அடித்து ஆடுவார் என்று நம்புகிறது சென்னை.

 

மலிங்கா கூட்டணி அதேநேரம், மும்பை பவுலிங் பலமானதாக உள்ளது. மலிங்கா மற்றும் நியூசிலாந்தின் மெக்லெனாகன் ஆகியோர், தொடக்க பந்து வீச்சில் அசத்துகிறார்கள். மலிங்காவின் வரைட்டி, மெக்லெனாகனின் ஸ்விங் பந்து வீச்சால், எதிரணி பேட்ஸ்மேன்கள் ரன் எடுக்க திணறுகிறார்கள். இதில் மெக்லானாகன், இங்கிலாந்துக்கு எதிரான நியூசிலாந்து டெஸ்ட் அணியில் சேர்க்கப்படவில்லை, ஒருநாள் போட்டியில்தான் ஆடுகிறார். இதனால் மும்பைக்காக அவர் தொடர்ந்து ஆடுவதில் சிக்கல் இல்லை.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/ipl-2015-mccullum-s-absence-could-hit-csk-hard-against-mi-227004.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

இறுதிக்கு நேரடியாக முன்னேறும் முயற்சியில் சென்னை சூப்பர் கிங்ஸ்

 

ஐபிஎல் முதல் பிளே ஆஃப் சுற்றுப் போட்டியில் ரோஹித் சர்மா தலைமை மும்பை இண்டியன்ஸ் அணியும் தோனி தலைமை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் செவ்வாய் கிழமை மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகின்றன.

 

இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறும் அதே வேளையில் தோல்வியுறும் அணிக்கு இன்னொரு பிளே ஆஃப் போட்டி வாய்ப்பு உள்ளது. அதாவது புதன்கிழமையன்று ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மற்றொரு பிளே ஆஃப் சுற்றில் மோதுகிறது.

 

இதில் வெற்றி பெறும் அணியுடன் நாளைய போட்டியில் தோல்வியடையும் அணி இரண்டாவது பிளே ஆஃப் சுற்றில் மோதவேண்டும்.

 

இறுதிப் போட்டி மே 24-ம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸில் நடைபெறுகிறது.

 

மும்பையும் சென்னையும் இந்த ஐபிஎல் தொடரில் இருமுறை மோதி தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ளன. முதலில் ஏப்ரல் 17-ம் தேதி மும்பையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பையை வீழ்த்தியது. அதாவது மும்பை 183/4 என்று பெரிய இலக்கை எட்ட, துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் 16.4 ஓவர்களில் 189/4 என்று அபார வெற்றியை ஈட்டியது.

மீண்டும் சென்னையில் மே-8ல் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் சென்னையை வீழ்த்தி, இந்த சீசனில் சென்னையை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய பெருமையை பெற்றது.

 

 

2010, 2011 ஐபிஎல் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் நாளைய பிளே ஆஃப் போட்டியில் புதிய தொடக்க வீரரை களமிறக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. காரணம் அதிரடி வீரர் பிரெண்டன் மெக்கல்லம் இங்கிலாந்துக்கு எதிரான நியூஸிலாந்தின் டெஸ்ட் தொடருக்காக சென்று விட்டார்.

பிரெண்டன் மெக்கல்லம் 14 ஆட்டங்களில் 436 ரன்களை எடுத்துள்ளார். எனவே மைக் ஹஸ்ஸியும், டிவைன் ஸ்மித்தும் தொடக்கத்தில் இறங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையின் மற்றொரு முக்கிய வீரர் ஃபா டூ பிளெஸ்ஸிஸ் 14 ஆட்டங்களில் 313 ரன்களை இதுவரை எடுத்துள்ளார். சுரேஷ் ரெய்னா 14 ஆட்டங்களில் 321 ரன்களை பெற்றுள்ளார். தோனி 14 ஆட்டங்களில் 328 ரன்கள் எடுத்துள்ளார். இதனால் சென்னை அணியின் பேட்டிங் மெக்கல்லம் இல்லாவிட்டாலும் ஒரு வலுவான அணியாகவே தெரிகிறது. ஆனால் மெக்கல்லத்தின் தீப்பொறி பேட்டிங்கை பார்க்க வாய்ப்பில்லாமல் போயுள்ளது.

 

 

பந்து வீச்சிலும் ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய டிவைன் பிராவோ (20 விக்கெட்டுகள்), ஆஷிஷ் நெஹ்ரா (18 விக்கெட்டுகள்), ஆகியோரின் நல்ல பார்மை நம்பியுள்ளது. மேலும் அஸ்வின், ஜடேஜா, வளரும் நட்சத்திரம் பவன் நெகி ஆகியோரும் சென்னை அணியை வலுப்பெறச் செய்கின்றனர்.

மும்பை இண்டியன்ஸ் அணி தொடக்கத்தில் சொதப்பினாலும் பிற்பாடு வெற்றிகளைக் குவித்தது, குறிப்பாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக நேற்று 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றி, சென்னைக்கு கொஞ்சம் கலக்கத்தை ஏற்படுத்தலாம்.

 

 

நேற்று, மெக்லீனாகன் (3/16), லஷித் மலிங்கா (2/17), ஜகதீசா சுசித் (2/14) ஆகியோரின் பந்து வீச்சுக்கு சன் ரைசர்ஸ் 113 ரன்களுக்கு சுருண்டது.

தொடர்ந்து ஆடிய மும்பை இண்டியன்ஸ் தொடக்க வீரர்களான லெண்டில் சிம்மன்ஸ், மற்றும் பார்த்தீவ் படேல் ஆகியோர் 100 ரன்களுக்கான தொடக்க பார்ட்னர்ஷிப் கண்டனர். 13.5 ஓவர்களில் மும்பை இண்டியன்ஸ் வெற்றி பெற்று ஐபிஎல் அட்டவணையில் 2-ம் இடம் பெற்றது.

 

பந்துவீச்சில் மெக்லீனாகன், லஷித் மலிங்கா இந்தத் தொடரில் தங்களிடையே 33 விக்கெட்டுகளை பகிர்ந்து கொண்டுள்ளனர். இவர்கள் நினைத்தால் சென்னையின் வலுவான பேட்டிங் வரிசையை குலைக்க முடியும்.

 

அதே போல் மும்பை இண்டியன்ஸ் அணியின் லெண்டில் சிம்மன்ஸ், பார்த்திவ் படேல் தொடக்கத்துடன், நடுவரிசையில் ரோஹித் சர்மா, ராயுடு, கெய்ரன் போலார்ட், பிறகு புதுமுக அதிரடி மன்னன் ஹர்திக் பாண்டியா ஆகியோர் உள்ளனர்.

 

இலக்கைத் துரத்துவதில் மும்பை இண்டியன்ஸ் அணி சிறந்து விளங்குகிறது. மேலும் மும்பையில் விளையாடுவது அந்த அணிக்கு வெற்றி வாய்ப்புகளைக் கூட்டியுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் குறைந்த இலக்குகளையும் அபாரமாக தடுத்து இந்தத் தொடரில் வெற்றி கண்டுள்ளது. எனவே மீண்டும் ஒரு விறுவிறுப்பான ஆட்டத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.

 

சென்னை உத்தேச அணி வருமாறு: மைக் ஹஸ்ஸி, டிவைன் ஸ்மித், ரெய்னா, டு பிளெஸ்ஸிஸ், தோனி, ஜடேஜா, அஸ்வின், பவன் நேகி, பிராவோ, நெஹ்ரா, மோஹித் சர்மா/ஈஷ்வர் பாண்டே.

 

மும்பை உத்தேச அணி வருமாறு: சிம்மன்ஸ், பார்த்தீவ் படேல், ரோஹித் சர்மா, ராயுடு, போலார்ட், பாண்டியா, ஹர்பஜன் சிங், சுசித், மெக்லினாகன், வினய் குமார், மலிங்கா

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/article7219348.ece?homepage=true

 

  • தொடங்கியவர்

சிக்கினார் தினேஷ் கார்த்திக்

 

ஐதராபாத்: அம்பயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெங்களூரு அணியின் தினேஷ் கார்த்திக்கிற்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ஐதராபாத்தில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் பெங்களூரு அணி, ஐதராபாத் அணியை வீழ்த்தியது. மழையால் தாமதமாக துவங்கிய இப்போட்டி தலா 11 ஓவர்களாக குறைக்கப்பட்டது. ஆட்டத்தின் 10வது ஓவரில் மீண்டும் மழை பெய்ய துவங்கியது. கடைசி ஓவரில் (11வது) மழையின் வேகம் அதிகரித்த போதும் அம்பயர்கள் போட்டியை நிறுத்தாமல் தொடர்ந்து நடத்தினர். இதனால் ஆத்திரமடைந்த கோஹ்லி, கடைசி ஓவர் முடிந்ததும் அம்பயர் தர்மசேனாவிடம் இதுகுறித்து கேட்டார். இவரை தொடர்ந்து, விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கும் தர்மசேனாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது மற்றொரு அம்பயர் அனில் சவுத்தரி சமாதானம் செய்தார்.

 

ஐ.பி.எல்., 2.1.8 விதிமுறைப்படி போட்டியின் போது அம்பயருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவது குற்றம். இதனால் 'மேட்ச் ரெப்ரி' ரோஷன் மகானமா, தினேஷ் கார்த்திக்கிற்கு போட்டி சம்பளத்தில் இருந்து 20 சதவீதம் அபராதமாக விதித்தார்.

 

http://www.dinamalar.com/ipl2015/detail.php?id=1255034

  • தொடங்கியவர்

பிளே ஆஃப் போட்டியில் அச்சமற்ற அதிரடி ஆட்டம் ஆடுவோம்: ரோஹித் சர்மா
 

 

ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றில் அச்சமற்ற ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்று மும்பை கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 9 விக்கெட்டுகளில் அபார வெற்றி பெற்றதையடுத்து மும்பை கேப்டன் ரோஹித் சர்மா உற்சாகமான மனநிலையில் இருக்கிறார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான பிளே ஆஃப் போட்டியில் நாளை ‘அச்சமற்ற அதிரடி அணுகுமுறையை’ கடைபிடிக்கப் போவதாக அவர் சூளுரைத்துள்ளார்.

"ஐபிஎல் அட்டவணையில் முதல் 2 இடங்களில் வந்திருப்பது, பயமில்லாமல் அதிரடி கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்த வாய்ப்பு வழங்கியுள்ளது. இதுவரை அப்படித்தான் ஆடி வந்துள்ளோம்.

 

 

பிளே ஆஃப் என்பது வேறு ஒரு அணுகுமுறையை வலியுறுத்துவது, இதில் தவறுகளை அதிகம் இழைக்கக் கூடாது. ஆனால் தோற்றாலும் இறுதிக்கு முன்னேற இன்னொரு வாய்ப்பு உள்ளது எனும் போது பயமற்ற முறையில் அதிரடியாக விளையாடலாம்.

 

2013-லும் இப்படியான நிலைமை இருந்தது.

மும்பை இண்டியன்ஸ் அணியின் உறுதியை நேற்றைய வெற்றி காண்பிக்கிறது. எந்த ஒரு சூழ்நிலையிலும் தன்னம்பிக்கை இழந்து தலையைத் தொங்கப் போடும் நிலை எங்கள் ஓய்வறையில் அறவே இல்லாத சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளோம்.

 

நாங்கள் தொடக்கத்தில் 4 போட்டிகளில் தொடர் தோல்விகளைச் சந்தித்த போது ஒருவரும் எங்கள் அணி தகுதி பெறும் என்று நினைக்கவில்லை. இப்போது பாருங்கள் டாப் 2-வில் இருக்கிறோம், இது மகிழ்ச்சியை அளிக்கிறது."

 

இவ்வாறு ஐபிஎல் டி20 இணையதளத்தில் மும்பை கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்தார்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE/article7219469.ece

  • தொடங்கியவர்

பேஸ்புக்’ ஆதரவு யாருக்கு

புதுடில்லி: நாடு முழுவதும் உள்ள ரசிகர்களிடம், சென்னை அணிக்குத் தான் அதிக ஆதரவு உள்ளது தெரியவந்தது.

 

 

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) தொடரில் சென்னை, மும்பை, கோல்கட்டா, பெங்களூரு உட்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. இதில் அந்தந்த மாநிலங்களில் உள்ள ரசிகர்கள், அவர்களது அணிக்கு அதிக ஆதரவு தருகின்றனர்.

 

 

அதேநேரம், அணிகள் இல்லாத ஆமதாபாத், ஒடிசா, மத்திய பிரதேசம், காஷ்மீர் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் சென்னை அணிக்குத் தான் அதிக ஆதரவு உள்ளது.

பேஸ்புக்கில் ரசிகர்கள் தெரிவித்த ஆதரவு அடிப்படையில் வெளியான இந்திய வரைபடத்தில், பெரும்பாலான இடங்களை சென்னை அணி பிடித்துள்ளது. டில்லியில் உள்ள பெரும்பாலனவர்கள் சென்னையைத் தான் தங்கள் சொந்த அணியாக நினைக்கின்றனர். டில்லி அணிக்கு எந்த இடத்திலும் ஆதரவு இல்லை.

 

இந்த ஆண்டு நடக்கும் ஐ.பி.எல்., தொடர் குறித்து மொத்தம் 2.6 கோடி பேர், தங்கள் கருத்துக்களை ‘பேஸ்புக்கில்’ பகிர்ந்து கொண்டனர்.

 

http://sports.dinamalar.com/2015/05/1431963507/TabletoppersChennaiSuperKingsdominateonFacebooklikes.html

  • தொடங்கியவர்

கடந்து வந்த பாதை: ஐபிஎல் கிரிக்கெட்டில் முதல் நான்கு இடங்களை பிடித்த அணிகள்
 

 

ஒன்றரை மாதமாக நடைபெற்று வந்த ஐபிஎல் போட்டி பரபரப்பான இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இண்டியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய நான்கு அணிகள் புள்ளிகள் பட்டியலில் முறையே முதல் நான்கு இடங்களைப் பிடித்து

‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இன்னும் 4 போட்டிகளின் முடிவில் வரும் 24-ம் தேதி இந்த ஐபிஎல் சீசனின் சாம்பியன் யார் என்பது தெரியவரும்.

இப்போட்டியில் இந்த 4 அணிகள் கடந்த வந்த பாதையை சுருக்கமாக பார்க்கலாம்.

 

 

சூப்பர் கிங்ஸ்

இந்த ஐபிஎல் சீசனில் மட்டு மல்லாது இதற்கு முன்பு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளிலும் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் அணி தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ். இந்தமுறை ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்து, ‘பிளே ஆப்’ சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது.

14 லீக் ஆட்டங்களில் 9-ல் வெற்றி பெற்று எவ்வித தடுமாற்றமும் இன்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. வழக்கமாக பேட்டிங்கில் மட்டும் அசத்தி வரும் சூப்பர் கிங்ஸ் அணி, இந்த முறை பந்து வீச்சிலும் தன்னை நிலை நிறுத்தியுள்ளது. நெஹ்ரா, அஸ்வின், பிராவோ ஆகியோர் சிறப்பாக பந்து வீசி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளதன் மூலம் சூப்பர் கிங்ஸ் அணிக்கு இறுதிப் போட்டியில் நுழைய 2 வாய்ப்புகள் உள்ளன.

 

 

மும்பை இண்டியன்ஸ்

ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இண்டியன்ஸ் அணி தொடக்கத்தில் 4 ஆட்டத்தில் தொடர்ச்சியாக தோற்று துவண்டு போனது. எனினும், அதில் இருந்து மீண்டு தொடர்ச்சியாக 5 போட்டியில் வெற்றி பெற்றது. கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை அதிரடியாக வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் 2-வது இடம் பிடித்து ‘பிளேஆப்’ சுற்றுக்கு முன்னேறியது. இதன் மூலம் இறுதிச் சுற்றுக்கு முன்னேற 2 வாய்ப்புகளை பெற்றுள்ளது.

மொத்தமுள்ள 14 லீக் ஆட்டங்களில் 8 வெற்றி, 6 தோல்விகளுடன் 16 புள்ளிகளை பெற்றுள்ளது. ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எப்போதுமே சவாலாக விளங்கும் அணி மும்பை இண்டியன்ஸ் மட்டுமே.

2011-ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்றுள்ள மும்பை இண்டி யன்ஸ் அணி சென்னையை போலவே 5 வது முறையாக ‘பிளேஆப்’ சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

 

 

ராயல் சேலஞ்சர்ஸ்

கோலி, டிவில்லியர்ஸ், கிறிஸ் கெயில் போன்ற அதிரடி பேட்ஸ்மேன் களை கொண்டுள்ள பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி தடுமாற்றத் துடன் விளையாடியே ‘பிளே ஆப்’ சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

சிறந்த சர்வதேச வீரர்களை கொண்டுள்ள போதிலும் பெங்களூர் அணி இதுவரை ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது இல்லை. 2011 ம் ஆண்டுக்கு பிறகு தற்போது தான்‘பிளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்று உள்ளது. 2 முறை இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த அந்த அணி தற்போது புள்ளிகள் பட்டியலில் 3 வது இடத்தை பிடித்து

‘பிளே ஆப்’ சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்த முறை முதல் ஆட்டத்தில் வென்றது. பிறகு தொடர்ந்து 3 ஆட்டங்களில் தோல்வியைத் தழுவியது. அதன் பிறகு சுதாரித்து விளையாடி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. கெயில் எந்த அளவுக்கு களத்தில் நின்று விளையாடுகிறார் என்பதே பெங்களூரு அணியின் வெற்றியை தீர்மானிக்கும் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது.

வெளியேற்றும் சுற்றில் விளை யாடுவதால் அதில் தோல்வியடைந் தாலே போட்டியில் இருந்து வெளியேற்றப்படும்.

 

 

ராஜஸ்தான் ராயல்ஸ்

இந்த ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸுக்கு அடுத்த படியாக சிறப்பாக விளையாடி வரும் அணி ராஜஸ்தான் ராயல்ஸ், முதல் 5 போட்டிகளில் வென்று அசத்தியது. அதன் பிறகு நடைபெற்ற 9 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வெற்றி பெற்றது. ரஹானே, வாட்சன், ஸ்டீவ் ஸ்மித், பாக்னர், கிறிஸ் மோரீஸ் போன்ற தலை சிறந்த வீரர்கள் அணிக்கு பலம் சேர்க்கின்றனர். மேலும் அணியின் பயிற்சியாளர் ராகுல் திராவிட் பின்னணியில் இருந்து வெற்றியில் முக்கியப் பங்காற்றி வருகிறார்.

கடந்த முறை நூலிழையில் ‘பிளேஆப்’ வாய்ப்பை இழந்த ராஜஸ்தான் ராயல்ஸ் இந்த முறை இறுதி லீக் ஆட்டத்தில் கொல்கத்தாவை அதிரடியாக வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் 4 வது இடத்தை பிடித்து

‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றது நினைவுகூரத்தக்கது.

 

சென்னை மும்பை இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், 2-வது இடத்தில் உள்ள மும்பை இண்டியன்ஸ் அணியும் பலப் பரீட்சை நடத்துகின்றன.

மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இதில் வென்றால் இறுதிப் போட்டிக்கு நேரடியாக முன்னேற முடியும் என்பதால் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும்.

 

இரு அணிகளும் சமபலம் வாய்ந்தது என்பதால் இப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும். மும்பையில் போட்டி நடைபெறுவது அந்த அணிக்கு கூடுதல் பலமாகும்.

லீக் ஆட்டத்தை பொறுத்தவரையில் இரு அணிகளும் தலா ஒரு முறை வென்றுள்ளன. அதிலும் முறையே 6 விக்கெட் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றன. ஆனால் மும்பையில் நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் சூப்பர் கிங்ஸ் அணி 183 ரன்களை என்ற இலக்கை 16.4 ஓவர்களில் எட்டிப்பிடித்து அபார வெற்றி பெற்றது. அந்த போட்டியில் ஸ்மித், மெக்கல்லம், ரெய்னா ஆகியோர் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். அதுபோன்ற ஆட்டம் தொடர்ந்தால் சென்னை எளிதாக வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு உள்ளது.

 

இரு அணிகளும் இதுவரை 20 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இரு அணிகளும் தலா 10 முறை வென்றுள்ளன.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article7222502.ece

 

  • தொடங்கியவர்

ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றும் சுரேஷ் ரெய்னாவும்
 

 

சர்வதேச கிரிக்கெட்டில் சுரேஷ் ரெய்னாவின் ஃபார்ம் அவ்வளவு சீராக இல்லாவிட்டாலும் ஐபிஎல் கிரிக்கெட்டில் அவரது ஃபார்ம் சீரான முறையில் இருந்து வந்துள்ளது.

இன்று இரவு 8 மணிக்கு பிளே ஆப் சுற்றில் சென்னை-மும்பை அணிகள் மோதுகின்றன.

 

இந்நிலையில், குறிப்பாக ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுகளில் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக குறிப்பிடத்தகுந்த பங்களிப்பைச் செய்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இதுவரை 3500க்கும் மேல் ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை ரெய்னா தன் வசம் வைத்துள்ளார்.

 

அதிக ஐபிஎல் அரைசதங்கள், அதிக கேட்ச்கள், ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் 400க்கும் அதிகமான ரன்கள், அதிக சிக்சர்கள் பட்டியலில் 2-வது இடம் என்று ரெய்னா ஐபிஎல் ஜாம்பவனாகத் திகழ்கிறார்.

 

இந்த தொடரில் 2 அரைசதங்கள் மட்டுமே எடுத்துள்ளார் சுரேஷ் ரெய்னா, இரண்டு அரைசதங்களும் பெங்களூரு அணிக்கு எதிராக எடுக்கப்பட்டது. இரண்டு போட்டிகளிலும் அவர் ஆட்ட நாயகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

2008-ம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டித் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 34 பந்துகளில் 55 ரன்கள் விளாசினார் ரெய்னா, இதனால் இறுதிக்குள் நுழைந்தது சென்னை.

 

2010-ம் ஆண்டு ஐபிஎல் தொடர் இறுதிப் போட்டியில் மும்பைக்கு எதிராக 35 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.

 

2011-ம் ஆண்டு பிளே ஆஃப் சுற்றில் பெங்களூரு அணிக்கு எதிராக 50 பந்துகளில் 73 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத்திகழ்ந்தார்.

 

2012 இறுதிப் போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிராக 38 பந்துகளில் 73 ரன்கள் விளாசித்தள்ளினார்.

 

2013 இறுதிப் போட்டியில் மும்பை அணிக்கு எதிராக 42 பந்துகளில் 82 நாட் அவுட் என்று விளாசினார்.

 

கடந்த 2014 தொடரில் மும்பைக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் 33 பந்துகளில் 54 ரன்களை எடுத்த சுரேஷ் ரெய்னா, பஞ்சாபுக்கு எதிராக 25 பந்துகளில் 87 ரன்கள் விளாசி ஏறக்குறைய கிங்ஸ் லெவன் பஞ்சாபின் மிகப்பெரிய இலக்கை துரத்தி வெற்றி பெறச் செய்யும் அளவுக்குச் சென்றார். ஆனால் முடியவில்லை.

 

இந்தப் போட்டியில்தான் பஞ்சாபின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் பர்வீந்தர் அவானாவின் ஒரே ஓவரில் 33 ரன்கள் விளாசியதும் அப்போதுதான்.

 

எனவே பிளே ஆஃப் சுற்றில் ரெய்னா ஒரு அபாய வீரர். இன்று மும்பை இந்தியன்ஸ் இவரை கட்டுப்படுத்த நிச்சயம் உத்திகளை வகுத்திருக்கும்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article7223462.ece

  • தொடங்கியவர்

பிரிமியர் கிரிக்கெட்: மும்பை அணி 'பேட்டிங்'

 

மும்பை: சென்னை அணிக்கு எதிரான பிரிமியர் கிரிக்கெட் தொடரின் (ஐ.பி.எல்.,), 'ப்ளே-ஆப்' சுற்றின் முதல் போட்டியில் 'டாஸ்' வென்ற மும்பை அணி 'பேட்டிங்' தேர்வு செய்துள்ளது.

 

 

இந்தியாவில் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடக்கிறது. இதன் லீக் சுற்று போட்டிகளின் முடிவில், சென்னை, மும்பை, பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் 'ப்ளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறியது.

 

'ப்ளே-ஆப்' சுற்றின் முதல் போட்டி இன்று மும்பையில் துவங்கியது. இதில் சென்னை, மும்பை அணிகள் மோதுகின்றன. 'டாஸ்' வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா, முதலில் 'பேட்டிங்' தேர்வு செய்தார்.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1256525

  • தொடங்கியவர்

 கிரிக்கெட்: சென்னை அணிக்கு 188 ரன்கள் இலக்கு

 

 

மும்பை: இந்தியாவில் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடக்கிறது. இதன் லீக் சுற்று போட்டிகளின் முடிவில், சென்னை, மும்பை, பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் 'ப்ளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறியது.

 

'ப்ளே-ஆப்' சுற்றின் முதல் போட்டி இன்று மும்பையில் துவங்கியது. இதில் சென்னை, மும்பை அணிகள் மோதுகின்றன. 'டாஸ்' வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா, முதலில் 'பேட்டிங்' தேர்வு செய்தார். இதையவுடுத்து களமிறங்கிய மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 187 ரன்கள் எடுத்துள்ளது.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1256526

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.