Jump to content

ஆணிவேர் எங்களுக்கான அத்திவாரம


Recommended Posts

பதியப்பட்டது

தமிழீழத்தின் முதலாவது திரைப்படம் எனும் முத்திரையோடு வெளியாகி தமிழர் புலம்பெயர்ந்துள்ள நாடுகளில் எல்லாம் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது. தேசியப் இனப்பிரச்சனையைக் கருப்பொருளாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் அவர்கள் மூன்று திரைப்படங்களை இயக்கியிருந்தார். அவற்றுள் ஒன்றுதான் எங்கள் ஈழப் பிரச்சனையை கருவாகக் கொண்டு உருவாக்கப்பட்ட 'கன்னத்தில் முத்தமிட்டால்" திரைப்படம்.

இந்தத் திரைப்படத்திற்கு முதல் வெளியான 'தெனாலி"யோ அல்லது 'நந்தா" போன்ற திரைப்படங்கள் இயல்பான கருத்தியல் விவாதங்களின் அடிப்படையில் எங்கள் பிரச்சனையை கையாளவில்லை. அதிக திரைப்பட அறிவும் கருத்துத் தெளிவும் உள்ள இப்படைப்பாளிகள் எங்கள் வாழ்வின் வலிகளை அல்லது போரியல் வாழ்வை வியாபார நோக்கத்தோடு மட்டுமே பதிவு செய்திருந்தார்கள் என்ற விமர்சனங்களே மேலோங்கியிருந்தது. இவற்றை எல்லாம் நிவர்த்தி செய்யும் வகையிலும், உலகத் தமிழர்கள் உள்ளம் குளிரும் வகையிலும் உண்மை நிலையினை எடுத்துரைக்க ஒரு காத்திரமான படைப்பாக வெளிவந்திருக்கிறது ஆணிவேர்.

ஒரு ஆவணப் படத்திற்குரிய பாணியில் உள்ளது எனச் சில ரசிகர்கள் கருதிநின்றாலும் இது ஒரு முழுமையான தமிழீழத் திரைப்படம் என்பதை அனைவரும் தெளிவாக புரிந்துகொள்ளலாம். இத்திரைப்படத்தை நேர்த்தியாக இயக்கியிருக்கும் திரு.ஐhன் மகேந்திரன் அவர்கள் நல்லதொரு அத்திவாரத்தை எங்களுக்காகவே அமைத்துக் கொடுத்தது ஓர் வரலாற்றுப் பதிவாகிவிட்டது.

ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் திரையிட்ட இடங்களில் எல்லாம் திருவிழாக் கூட்டம். கண்ணுக்கு விருந்தாக தாயக தரிசனம் கிடைத்தாலும் கண்களில் உற்றெடுத்து கொண்டேயிருக்கிறது கண்ணீர்த் துளிகள். தமிழீழத்துக் கலைஞர்களும் தமிழகத்துக் கலைஞர்களும் முதல் முறையாக இணைந்து எங்கள் மண்ணில் உருவாக்கியிருக்கும் இத்திரைப்படம் தொடர்பாக ஏற்கனவே பல ஆக்கபுூர்வமான விமர்சனங்கள் வந்திருக்கலாம். ஆனால் அந்த விமர்சனங்கள் தொடாத சில பக்கங்களைத் தொட்டுக்கொண்டு அடுத்து நாங்கள் என்ன செய்யலாம்? என்பது பற்றி அலசுவதே என்னுடைய விமர்சனப் பார்வையின் நோக்கமாகும்.

இத்திரைப்படம் வெறுமனே பார்த்துவிட்டு பாரட்டுக்களை அள்ளி வழங்கிவிட்டுப் போகவேண்டிய படம் மட்டுமில்லை என்பதை நாங்கள் ஒவ்வொருவரும் மிகவும் தெளிவாக கவனிக்க வேண்டிய கடமையும் உள்ளது. தமிழகத்தில் இருந்து வெளிவருகின்ற சாதாரன திரைப்படங்களைப் போல் அல்லாமல் இத்திரைப்படத்தில் இருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்றது.

நவீன வசதிகள் உள்ள இக்கால கட்டத்தில் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட உபகரணங்களைக் கொண்டு பொருளாதாரச் சுருக்கத்தோடு தயாரிக்கப்பட்ட பிரமாண்டமான படமாகவே கணிக்;கத் தோன்றுகிறது. அது மட்டுமில்லாமல் எங்கள் தாயகத்திலேயே தரமான முறையில் தயாரிக்கப்பட்ட ஓர் முழுமையான திரைப்படமும் கூட. தொழில்நுட்ப வேலைகள் சில தமிழகத்திலும் வெளிநாடுகளிலும் செய்யப்பட்டாலும், இது உருவான தளம் நமது தாயகம் என்பதை மனதில் ஆணித்தரமாகப் பதிவு செய்யவேண்டும்.

எங்களை பொறுத்தமட்டில் ஏதாவது ஒரு படைப்பு பெயர் சொல்லும்படியாக வெளிவந்துவிட்டால் அதைப் பாராட்டி, உணர்ச்சி வசப்பட்ட நிலையில் வார்த்தைகளை அள்ளி வழங்கிவிட்டுப் போய்விடுவதுதான் நடைமுறை. அதற்கு மாறாக அத்திரைப்படம் பற்றி ஆழமான விமர்சனங்களை வைப்பதோ அன்றி அது பற்றிய விவாதங்களை நிகழ்த்துவதோ மிகக்குறைவு.

இது திரைப்படத்திற்கு மட்டுமே ஏற்படுகின்ற ஒரு பிரச்சனை மட்டும் அல்ல. இது எந்த கலைப்படைப்பாக இருந்தாலும் அது பற்றிய நியாயமான விமர்சனங்களை முன்வைத்து கலைஞர்களை ஊக்கப்படுத்தி, அவர்களை மேலும் பல புதிய படைப்புகளை படைப்பதற்கான ஆக்கபுூர்வமான சூழ்நிலைகளை ஏற்படுத்தவேண்டுமென்ற நோக்கமில்லை. அதைவிடுத்து 'தம்பி" படம் எப்பிடியாம் என்றால் ஒன்றில் அந்தமாதிரி அல்லது பரவாயில்லை என்ற பதில்கள் மட்டுமே கூடுதலாக எம்மவர் வாய்களில் இருந்து வெளிவரும். அல்லது ஒரு புன்னகை மட்டும் பதிலாகத் தருவார்கள். எங்கள் மத்தியில் தரமான கலைப்படைப்புகள் உருவாக்கப்படாமைக்கு இதுவும் ஒரு காரணமாகிறது.

எம்மவர் படைப்புகளை எம்மவர்களே இலவசமாகவும் நுகரத் துடிப்பதும், சந்தைப்படுத்துவதற்;குரிய நல்ல தளம் இல்லாமல் இருப்பதும் முக்கிய காரணங்களாகும். ஆனால் இதை எல்லாவற்றையும் முறியடித்து வெற்றிகரமாக வெளிவந்ததுதான் இந்த 'ஆணிவேர்" திரைப்படம். இத்திரைப்படத்தை தயாரித்தவரால் இந்த முறியடிப்பு எப்படி சாத்தியமானது?

நாங்கள் எல்லாத்துறைகளிலும் எங்கள் எல்லைகளை விரிவடையச் செய்திருக்கிறோம். ஆனால் இந்தத் திரைப்படத்துறையில் முப்பது வருடங்கள் பின்தங்கியே நிற்கிறோம். அதாவது இந்தப் புலம்பெயர் நாடுகளுக்கு நாங்கள் தாயகத்தைப் பிரிந்து வந்து கிட்டத்தட்ட மூன்று தசாப்த்தங்கள் கடந்துவிட்டது. இன்னமும் தமிழகத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டும், அவர்களைக் குறைகூறிக்கொண்டும்தான் இருக்கிறோம்.

எங்களை வைத்து அவர்கள் வியாபாரம் செய்கிறார்கள் என்று சொல்லிக்கொண்டே அவர்களுடைய திரைப்படங்களையும் சின்னத்திரைகளிலேயும்தானே பார்த்து மகிழ்ந்து கொண்டிருக்கிறோம். பலதரப்பட்ட முறைப்பாடுகளை வேறு அவர்கள் மேல் இலகுவாக அள்ளிக் கொட்டிவிட்டு மீண்டும் அங்கலாய்த்து நிற்பதும் அவர்களிடம்தான். இந்த நிலை மாறவேண்டும் என்றால் தரமான, ஆழமான, காத்திரமான நிறையப் படைப்புகளை தயாரிக்க நாங்கள் முன்வரவேண்டும்.

திரைத்துறையென்று சொன்னால் அனுபவம் உள்ள தமிழகக் கலைஞர்களை அணுகி அவர்களோடு இணைந்து திரைப்படங்களைத் தயாரிக்கலாம். அதில் எந்தவிதமான தவறுமில்லை.

இங்கு முக்கியமான ஒரு கருத்தை இத்தருணத்தில் சொல்ல விரும்புகிறேன். எங்களோடு இணைந்து பணியாற்ற முன்வருபவர்களை தடுப்பதற்கு தமிழகத் தமிழர், ஈழத் தமிழர் என்ற தரப்படுத்தலுக்கு உட்படுத்துகின்ற சிலர் எங்கள் மத்தியில் வாழ்கின்றார்கள். என்றுமே எங்களோடு இணைந்து பணியாற்ற முன்வருகின்ற தமிழகக் கலைஞர்கள் மனதை புண்படச்செய்யக்கூடாது. இதுபோன்ற சில விமர்சனங்கள் இணையத்தளங்களில் உலவுவதாக இத்திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் மிகவும் கவலையோடு என்னிடம் தெரிவித்தார். தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்ற நாடுகளில் இருந்து முதலில் நாட்டுக்கு ஒரு திரைப்படம்; எனும் அடிப்படையில் தரமான முறையில் தயாரிக்கப்படுமானால் வருடத்தின் நிறைவில் எத்தனை திரைப்படங்கள் எங்கள் கைகளுக்கு கிடைக்கும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். அதைவிட்டு விட்டு எங்களுக்கென ஒரு திரைப்படமாக ஆணிவேர் வந்துவிட்டதுதானே என்ற ஆனந்தத்தில் மயங்கக்கூடாது. மாலை நேரத்து மயக்கங்களில் இருந்து முதலில் விடுபடவேண்டும். கலைத் தேடுதல்கள் கடின உழைப்புக்கு மத்தியிலும் தொடர்ந்து கொண்டே இருக்கவேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் சினிமா என்கிற ஊடகம் ஒர் அற்புதமான கலைவடிவமாக எமக்குக் கிடைத்திருக்கிறது. இந்த வடிவத்தையும் நாங்கள் முழுமையாக கையாளப்பழகிக் கொள்வோமே ஆனால் எங்களுடைய விடுதலைப் போராட்டத்தின் வெற்றிக்கு வழிவகுக்க இதுவும் பலவழிகளில் உதவும் என்பது நிதர்சனம். அது மட்டுமில்லாமல் எங்கள் மொழி, கலை கலச்சார வாழ்வின் விழுமியங்களை சர்வதேசத்தோடு பகிர்ந்து கொள்ள பலவழிகளிலும் உதவும் என்பதும் உண்மை. ஈரானியத் திரைப்படங்களைப் போல் பல நிஐங்களை வெளிப்படுத்தக்கூடிய பல உண்மைக் கதைகள் எங்கள் வாழ்விற்குள் புதைந்து கிடக்கின்றது.

'ஆணிவேர்" திரைப்படம் மூலம் நமது திரைப்படத்துறை வளர்ச்சி பெறப்போகிறது என்ற ஒரு கருத்து பரவலாக பலராலும் முன்வைக்கப்பட்டிருக்கிறது. இந்த கருத்தை புலம்பெயர்நாடுகளில் வாழும் எத்தனை திரைப்படத்துறை சார்ந்த கலைஞர்கள் உள்வாங்கியிருக்கிறார்கள்? அப்படி உள்வாங்கியிருந்தால் அவர்கள் செய்கின்ற முயற்சிதான் என்ன? சுவிஸ் நாட்டில் இருந்து ஒரு தயாரிப்பாளர் முன்வந்தது போல ஏனைய நாடுகளில் இருந்து எத்தனை தயாரிப்பாளர்கள் முன்வரப்போகிறார்கள். அவர்களுடைய திரைப்படத் தயாரிப்பின் திட்டமிடல் எப்படி அமையப்போகிறது? எங்கள் மத்தியில் உள்ள பெரும்பாலான தயாரிப்பாளர்கள் நிறையப் பணம் வைத்திருந்தாலும் யாரை நம்பி பெரும்தொகைப் பணத்தை முதலீடு செய்வது என்ற சந்தேகத்துடனும், மனப் பயத்துடனும்தான் இருக்கின்றார்கள்.

'ஆணிவேர்" திரைப்படத்தை திரையரங்குகளில் பார்த்தவர்களில் எத்தனை பேருக்கு நாங்களும் இப்படி ஒரு திரைப்படத்தைத் தயாரித்தால் என்ன என்று தோன்றியிருக்கும். ஆனால் எவரிடம் போவது அல்லது குறித்த இயக்குனரை எப்படி நாடுவது போன்ற தயக்கங்களோடு எத்தனை ஆர்வலர்கள் காத்திருப்பீர்கள்?;; எனக்குப் பரிட்சயமான சில இயக்குனர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள். அவர்களுடனான தொடர்புகளை ஏற்படுத்தித்தரக் காத்திருக்கிறேன். இந்த விமர்சனத்திற்கு உங்கள் கருத்துகளை வழங்குவதன் மூலம் என்னோடு தொடர்பு கொள்ளலாம்.

இது வரையில் தாயகத்தை தவிர்த்துப் பார்க்கையில் இரண்டு அல்லது நான்கு படங்கள்தான் புலம்பெயர்நாடுகளில் வெளிவந்திருக்கும். இவை பெரும்பாலும் தமிழகத்திரைப்படங்களைத் தழுவிய திரைப்படம் என்ற வட்டத்திற்குள் அகப்பட்டே திரைப்படமாக்கப்பட்டிருக்கி

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஏற்கனவே மோகன் அவர்களினால் சினிமாப்பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது.

http://www.yarl.com/forum3/viewtopic.php?p...p=235917#235917

Posted

ஏற்கனவே மோகன் அவர்களினால் சினிமாப்பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது.http://www.yarl.com/forum3/viewtopic.php?p=235917#235917

இங்கு முக்கியமான ஒரு கருத்தை இத்தருணத்தில் சொல்ல விரும்புகிறேன். எங்களோடு இணைந்து பணியாற்ற முன்வருபவர்களை தடுப்பதற்கு தமிழகத் தமிழர், ஈழத் தமிழர் என்ற தரப்படுத்தலுக்கு உட்படுத்துகின்ற சிலர் எங்கள் மத்தியில் வாழ்கின்றார்கள். என்றுமே எங்களோடு இணைந்து பணியாற்ற முன்வருகின்ற தமிழகக் கலைஞர்கள் மனதை புண்படச்செய்யக்கூடாது. இதுபோன்ற சில விமர்சனங்கள் இணையத்தளங்களில் உலவுவதாக இத்திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் மிகவும் கவலையோடு என்னிடம் தெரிவித்தார்

இந்த வசனத்துக்காகத்தான் ஒரு விவாத பொருளாக இருக்கும் என்ற நோக்கில் இணைத்தேன் கந்தப்பு

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் ஹிந்தியும் படித்தால் இன்னும் முன்னுக்கு வரலாம் ...என்பது எனது கருத்து ...பிராந்திய வல்லரசின் ஆட்சி மொழி தெரிந்திருந்தால் அதனுடாக‌ தமிழ் மக்களுக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கும்  ...சிறிலங்கா இறையாண்மை உள்ள நாடு (ஹிந்தி மொழி தெரியாத காரணத்தால் தான்)  இந்திய அரசுடன்  அடிக்கடி மீன்பிடி பிரச்சனை வருகின்றது ... சிறிலங்கன் கடற்படையினர் இந்திய‌ மீனவர்களை கைது செய்கின்றனர் ...வடக்கு கிழக்கில் அமைச்சராக இருப்பவர்கள் நிச்சயமாக ஹிந்தி படிக்கவேண்டும்...வடக்கு மாகாண‌ ஆளுனர் நாலு மொழிகளில் திறைமையுடையவராக இருந்தால்   ....பிராந்திய வல்லரசை இலகுவாக சமாளிக்க  முடியும்..மீனவர் பிரச்சனையும் .. அவர் என்ன முற்றும் துறந்த புத்தரே... சிங்களவர் தானே ..தங்கள் மொழியை தாண்டி சிந்திக்க முடியவில்லை 
    • பொருளாதர பிரச்சனை இருப்ப‌வன் புலம்பெயர்ந்து தனது பொருளாதாரத்தை ஈட்டிக்கொள்வான் ....அந்த புலம் பெயர்ந்தவனை கொண்டே தாயகத்தின் பொருளாதாரத்தை உயர்ந்த ஒர் மாகாண சுயாட்சி தேவை.... இது சிறிலன்கன் என்ற நாட்டுக்கு நல்லது ...இந்தியவை பார்த்தாவது திருந்த வேண்டும் ....புதுச்சேரிக்கே மாகாண சுயாட்சி உண்டு ... நான் மாற மாட்டேன் பனங்காட்டு நரி...நம்ம டக்கியரின் விசிறி...மத்தியில் கூட்டாச்சி மாகாணத்தில் சுயாட்சி😅
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • கொஞ்சம் அழ இரண்டு ரீல்ஸ் ....... சரமாரி முத்தம் பெறவேண்டிய வயசில் தாயை இழந்துவிட்டது, அவள் கல்லறைக்கு முத்தம் கொடுத்து தன் கவலையை மறக்கிறது.   மகவை இழந்த சின்ன தாயை மகனாகி ஆறுதல் சொல்லி தேற்றுகிறது. கொஞ்சம் சிரிக்க மூண்டு ரீல்ஸ் ...................... திமிர் புடிச்ச குழந்தை   எனக்கு அடிவிழும்வரைதான் இன்னொருவனுக்கு எப்படி கவனமாய்  இருக்கவேண்டுமென்று அட்வைஸ் பண்ணலாம்.   இரு மம்மி, இந்த குண்டாவால போடு அந்த  குல்பி ஐஸ் விக்குறவனுக்கு      பொறுப்புணர்வுக்கு இரண்டு ரீல்ஸ் ......... வீட்டில் மொப் அடிக்கும்போது மனிசனே கொஞ்சம் நகர்ந்து நிக்கோணும் எண்டு நினைப்பதில்லை   ஐந்து பெரிதா ஆறு பெரிதா? அறிவு என்று வரும்போது ஆறைவிட ஐந்துதான் பெரிது.  
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.