Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் எந்த நேரத்திலும் துப்பாக்கிகள் மீண்டும் வெடிக்கலாம்! விமல்

Featured Replies

 
9bdc2481e2ceb26bfd5eb52f9576d31d_L.jpg
 
தற்போதைய ஆட்சியின் கீழ் வடக்கில் எந்த நேரத்திலும் துப்பாக்கிகள் மீண்டும் வெடிக்கலாம் என தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவங்க தெரிவித்தார்.
 
நுகேகொடையில் இன்று நடைபெறும் மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தும் பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
 
அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
இந்தியாவில் இருந்து தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரைப்பில் மீன்பிடிக்கின்றனர். இருந்தாலும் இலங்கைக் கடற்படையினர் அவர்களைக் கைதுசெய்வதில்லை.
 
பலாலி அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆயிரம் ஏக்கரில் இந்தியாவில் இருந்து நாடு திரும்பவுள்ள அகதிகள் குடியமர்த்தப்படவுள்ளனர். இவர்களில் அகதிகள் மாத்திரம் வருவதில்லை இந்திய றோவினால் இந்தியாவில் பயிற்சி அளிக்கப்பட்ட புலனாய்வாளர்களும் குடியேற்றப்படுவர். இதன்பின்னர் வடக்கில் எந்த நேரத்திலும் மீண்டும் துப்பாக்கிகள் வெடிக்கக்கூடும். 
 
தற்போது மௌமான இருந்த வடக்கு முதலமைச்சர் தற்போது இலங்கை இராணுவத்தினருக்கெதிராக வட மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். இன அழிப்பு இடம்பெற்றதாகக் கூறி இராணுவத்தைக் குற்றச்சாட்டி சர்வதேச விசாரணைக்கு கொண்டுசெல்ல முயற்சிக்கின்றனர். எனினும், மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இதனை அவர்களுக்கு செய்துகொள்ள முடியாது போனது.
 
அத்துடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்த பதவியில் இருந்தாலும் உண்மையில் ரணில் விக்ரமசிங்கவே ஜனாதிபதியாக செயல்படுகிறார். நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி அமரும் ஆசனத்திலேயே பிரதமர் ரணில் விக்ரமசிங்க அமர்கிறார்.  இதன் மூலம் தானோ ஜனாதிபதி என்பதை ரணில் விக்ரமசிங்க காட்டியுள்ளார்.
 
இதனால், இது சிறிசேனவின் ஆட்சியல்ல, ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சி. மைத்திரிபாலவிற்குள் ஒழிந்து ரணில் பிரதமர் பதவியை பெற்றுக்கொண்டாலும் அவர் மகிந்த பிரதமரான பின்னர், ரணில் வேறு ஒருவரை தேட வேண்டும். மகிந்த ராஜபக்சவை சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவிக்க வேண்டும். ரணிலை விட மகிந்த மேலானவர் என்பதை தற்போதைய ஜனாதிபதி அறிவார் எனவும் விமல் வீரவன்ஸ கூறினார்.
 
ஆட்சி அமைக்க உதவிய இந்தியாவிற்கு ரணில் தலைமையிலான அரசாங்கம் சலுகைகளை வழங்கி வருவதுடன் மாருதி போன்ற இந்திய உற்பத்தி வாகனங்களுக்கு வரிகளை குறைத்து லஞ்சம் வழங்கியுள்ளதாக விமல் வீரவன்ஸ கூறியுள்ளார்.
 
 

வாஸ்தவமான கருத்து.இலங்கையில் அமைதி திரும்புவதை எக்காலத்திலும் "றோ" ஏற்றுக்கொள்ளாது.இதை ஒரு சிங்களவன் புரிந்துள்ள நிலையில் விடுதலைப்புலிகள் மற்றும் ஒரு சில புலம் பெயர் அமைப்பும் தான் இதை ஏற்றுக்கொண்டுள்ளன

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.