Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வெளிவராத ஜெனீவா அறிக்கையும் மறைக்கப்பட்ட முக்கியமான உண்மைகளும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Geneva-300-seithycom-news.jpg

ஜெனீவா அறிக்கை விவகாரம் ..

 

ஜெனீவா அறிக்கை பல ஆயிரக்கனைகானோரின் படுகொலை மறும் காயப்படுத்தல் தொடர்பான வழக்கு . படுகொலையை மனிக்கவும் படுகொலைகளை நேரில் பார்த்தவர்களின் வாக்கு மூலங்களை நேரடியாகப் பதிவு செய்யாமல், அந்த கொலைகளின் பொழுது காயப்பட்டவர்களின் சாட்சியங்களின் வாக்கு மூலங்களை நேரடியாகப் பதிவு செய்யாமல் , கொலையின் பொழுது எற்பட்ட பொருட்சேதங்களை நேரடியாகப் பதிவு செய்யாமல் வழக்கு நடத்த வேண்டும் என்று கோருபவன் முழு முட்டாளாக அல்லது பாதிக்கப்பட்ட மக்களின் உணர்ச்சிகளை மூலதனமாக்கி அரசியல் செய்யும் நபராக அல்லது விபரம் அறியாத நபராக மட்டுமே இருக்க முடியும் .

   

மக்களின் உணர்ச்சிகளை மூலதனமாக்கி அரசியல் செய்வது தமிழ் அரசியல்வாதிகளின் வழக்கமாக இருந்ததாலேயே எமது பிரச்சனை 60 வருட காலம் நீடித்தது . இனியும் அது தேவையா? உலகம் வெறுக்கும் காரியங்களில் நாம் ஈடுபட வேண்டுமா ? சர்வதேச விசாரணை அறிக்கை செப்டம்பர் மாதம் வரை பின் போடப்பட்டுள்ளது . அதன் பின்னால் உள்ள இரகசியங்கள் என்ன ? பின் போடப்படுவது நல்லதா ? கூடாதா ? பின் போடப்படுவது சர்வதேச விசாரணைக்குப் பலம் சேர்க்குமா ? இல்லையா ? என்ற கேள்விகளுக்கு பதில் தேடும் நோக்கம் கொண்ட இந்தக் கட்டுரை. பல்வேறு ஊடகங்களிலும் , முகனூலிலும் வெளியாகும் தவறான கருத்துக்களுக்கு பதில் தரும் நோக்கம் கொண்டது இந்த பதிவு .

 

UN விடுத்த உத்தியோகபூர்வ அறிக்கையில் உள்வரிகளைக் கவனமாக கீழே ஆராய்வோம் .

 

ஜெனீவா மனித உரிமைச் சபையின் உத்தியோக பூர்வ அறிக்கையை படிக்காதவர்கள் பலர் மிகத் தவறான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர் . இங்கே குறிக்கப்படும் விடயங்கள் மனித உரிமைச் சபை ஆணையாளரின் உத்தியோக பூர்வ அறிக்கையை ஆதாரமாகக் கொண்ட கருத்துக்கள் ஆகும் . இங்கே கற்பனைகள் ஊகங்கள் இல்லை .

 

ஒருமுறை மட்டுமே இந்த பின்போடல் !!!

 

வெளிவராத ஜெனீவா அறிக்கை தொடர்பாக 16.02.2015 இல் வெளியிடப்பட்ட உத்தியோக பூர்வ அறிவிப்பின் முதல் வரி பின் வருமாறு தெரிவிக்கின்றது .

1) deferral of the report was “for one time only,” and guaranteed that the report would be published by September.“There should be no misunderstanding,” Mr. Zeid said. “I give my personal, absolute and unshakable commitment that the report will be published by September.”

ஒருமுறை மட்டுமே பின் போடப்படும் இந்த அறிக்கை செப்டம்பர் மாதம் வெளியிடப்படும் என்பதில் உறுதியானதும் அசைக்க முடியாததுமான தனிப்பட்ட உத்தரவாதத்தை நான் தருகின்றேன் என மனித உரிமை ஆணையாளர் தெரிவித்துள்ளார் .

2) மேலும் புதிய தகவல்களை இணைத்து கனதியான அறிக்கை வெளியாக வாய்ப்பு !

மேலும் மனித உரிமைச் சபை வெளியிட்ட உத்தியோக பூர்வ அறிக்கையின்முக்கியமான ஒரு வரி பின்வருமாறு தெரிவிக்கின்றது ,

He said that there are good arguments for sticking to the original timetable, and there are also strong arguments for deferring the report's consideration a bit longer, given the changing context in Sri Lanka, and the possibility that important new information may emerge which will strengthen the report.”

"எல்லா தரப்பு கருத்துக்களையும் கவனத்தில் எடுத்த பின் , மேலும் நேரம் எடுத்தும் , மேலும் கனதியான விபரமான அறிக்கையை வெளியிடலாம் என்பதால் 6 மாதம் தாமதிப்பது என நான் முடிவெடுக்கின்றேன் என மனித உரிமை ஆணையாளர் அறிக்கை தெரிவிக்கின்றது .

3)High Commissioner said he has received clear commitments from the new Government of Sri Lanka indicating it is prepared to cooperate with my Office on a whole range of important human rights issues – which the previous Government had absolutely refused to do – and I need to engage with them to ensure those commitments translate into reality.”

மேலும் முன்னைய அரசு போலல்லாது மனித உரிமை ஆணையகத்துடன் இணைந்து செயல்பட புதிய அரசு சந்தேகம் அற்ற உறுதியை வழங்கி உள்ளது ......

4) He said that there are good arguments for sticking to the original timetable, and there are also strong arguments for deferring the report's consideration a bit longer, given the changing context in Sri Lanka, and the possibility that important new information may emerge which will strengthen the report.”

உடனடியாக வெளியிட வேண்டும் என்பதற்குரிய நல்ல காரணக்கள் போல பின் போடுவதற்கும் நல்ல காரணங்கள் இருக்கின்றன , சிறீலங்காவில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் , இந்த அறிக்கையை பலப்படுத்தக் கூடிய முக்கியமான புதிய தகவல்கள் வெளியாக வாய்ப்புக்களைக் கொண்டிருக்கின்றது .

5) அரைகுறையான தகவல்களுடன் அறிக்கை வெளியாக இருந்தது ! காணாமல் போனோர் , கொலை செய்யப்பட்டோர் தொடர்பாகவும் முள்ளிவாய்க்கால் உட்பட 2002 முதல் இடம் பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சிறீலாங்கா சென்று பாதிக்கப்பட்டோரை சந்தித்து அறிக்கை சமர்பிக்க மனித உரிமைச் சபை ஜெனீவா தீர்மானம் கோரியது .

ஆனால் விசாரணை அதிகாரிகள் சிறீலங்கா செல்ல ராஜபக்சே அரசு அனுமதியளிக்கவில்லை .

இதனால் , பாதிக்கப் பட்ட இடங்களைப் சென்று பார்க்காமல் , பாதிக்கப்பட்டோரை நேரடியாகச் சந்தித்து வாக்கு மூலம் பெறப்படாமல் இந்த அறிக்கை அரை குறையான தகவல்களுடன் வெளியாக இருந்தது 6) மகிந்த கும்பலுக்கு எதிரானவர்களின் சாட்சியங்கள் பெறப்பட வாய்ப்பு !மறைக்கப்பட்ட பல உண்மைகள் வெளியாகும் வாய்ப்பு !! மேலும் பலமான முக்கியமான தகவல்கள் செப்டம்பர் அறிக்கையில் வெளியாகும் .

சமூக நீதிக்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் மதிப்பளிக்கும் நோக்கம் கொண்ட பலமான சக்திகளின் பின்னணியில் ஆட்சிக்கு வந்த மைத்திரி அரசு மனித உரிமச் சபையுடன் ஒத்துழைக்க சர்வதேச நாடுகளுக்கு உத்தரவாதம் வழங்கி இருக்கின்றது .

மகிந்த கும்பலுக்கு எதிரானவர்கள் கொலைகள் கடத்தல்கள் மனித உரிமை மீறல்களைப் புரிந்தவர்கள் தொடர்பாக பல உண்மைகள் வெளியிட ஆரம்பித்துள்ளார்கள்.

வெள்ளைக் கொடியுடன் சரணடைபர்களை எல்லோரையும் சுட்டுக் கொல்லுமாறு கோத்தபாயா உத்தரவிட்டார். அதனை எந்த விசாரனையிலும் சாட்சியம் அளிக்க தயார் என்ற சரத் பொன்சேகாவின் அறிக்கை உண்மைகள் உட்பட பல இல்லாமல்யே வெளியாக இருந்த ஜெனீவா அறிக்கை செப்டம்பர் வரை தாமதப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பல புதிய தகவல்கள் செப்டம்பர் அறிக்கையில் வெளியாகும் .

எனவே , அறிக்கை வெளிவராது எனச் சொல்வோர் பொய் சொல்கின்றார்கள். அறிக்கை செப்டம்பர் மாதம் வெளியாகும். 6)அறிக்கை தாமதம் ஆனது தோல்வி என குழம்புபவர்கள் உணர்ச்சிவசப்பட்டு பேசுகின்றார்கள் . தாமதம் ஆனதால் புதிய தகவல்களுடன் மேலும் உறுதியாக அறிக்கை வெளியாகும் . எனவே தாமதமானது நல்லது .

தடைக்கற்றகளை படிக்கற்களாக மாற்றத் தெரிந்தால் அதாவது தோல்விகளை வாழ்வின் படிப்பினைகள் அனுபவங்கள் ஆக்கி உறுதியுடன் முன்னகரத் தெரிந்தவனுக்கு தோல்வி என்பது கிடையாது .

அடுத்த ஆறுமாதத்துள் ஜெனிவா அதிகாரிகள் சிறீலங்கா செலவார்கள் , பாதிக்கப்பட்ட இடங்களையும் மக்களையும் சந்திப்பார்கள் வாக்கு மூலம் பெறுவார்கள் . முன்னர் நடை பெற்றுக்க வேண்டிய இவை நடை பெறவில்லை . இந்த சந்தர்ப்பங்களை சரியாக பாவித்தால் அறிக்கை தாமதமானதை நாம் வெற்றித் திசையில் திருப்பலாம் .

இறுதியாக , மேலே சொன்ன ஆறு விடயங்களையும் சரியாக புரிந்து கொண்டால் , 60 வருட போராட்டத்தின் தலைவிதியை தீர்மானிக்கும் முக்கியமான அறிக்கை மேலும் பலமாகும் வாய்ப்பு இருப்பதால் 60 வருடம் இருந்தனாங்கள் ஒரு 6 மாதம் காத்திருப்பது மிகவும் புத்திசாலித் தனமானது.

 

சி.சந்திரமௌலீசன்

 

 

http://seithy.com/breifArticle.php?newsID=127078&category=Article&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.