Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் பல்கலைக்கழகத்துடன் ஒன்றிணைவோம் - தமிழ் இளையோர் அமைப்பு: - சுவிட்சர்லாந்து

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
tyo_logo-150news.jpg

யாழ் பல்கலைக்கழகத்துடன் ஒன்றிணைவோம்>

''சீற்றங்கொண்ட பூகம்பத்தின் குமுறலாக எழும் எமது இனத்தின் எழுச்சி குரலை சிங்கள தேசமும், சர்வதேச சமூகமும் அசட்டைசெய்ய முடியாது'' -தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன். இலங்கை தேசமென 1948 ஆம் ஆண்டிலிருந்து இணைக்கப்பட்ட இருத்தனி தேசங்களை சிங்கள பயங்கர வாதத்தின் கைகளில் விற்று விட்டு சென்றது அன்றைய பிரிதானியா அரசு. ஆம்; தனித் தேசங்களில் வாழ்ந்த தார்மிக தமிழர்கள் ஒரு பெரும் ஆதிக்க சக்திகளால் அன்றிலிருந்து அழிக்கபட்டும், இலங்கை தேசம் என்பது தனி சிங்களவர்களின் தேசமாக மாற்றி வரும் சிங்கள இனவாத அரச பயங்கரவாதத்தின் கொள்கைகளின் அடிப்படையில் அழித்தொழிக்கப்பட்டுக் கொண்டு வருகின்றமை யாவரும் அறிந்ததே.

   

காலம்காலமாக மிகப்பெரிய வாழ்வாதார போரை எதிர்கொண்ட ஈழத்தமிழர்கள் நாம் , மீண்டும் 2009 ஆம் ஆண்டு உலகில் எங்கும் நடைபெற்றிராத ஒரு இன அழிப்பு போரில் சிக்குண்டு முற்றாக தமிழ் என்ற அடையாளத்தை இழந்து நிற்கின்றோம். ஏதிலிகளாக உலக சமூகத்திடம் கையேந்தி நீதி கேட்டு நிற்கின்றோம். எமது வாழ்வியல் உரிமையை ஐநா மனித உரிமை நாடுகள் மீள பெற்று எமக்கான நிம்மதியான, சுதந்திரமான தீர்ப்பு தரும்படி ஐநா முன் நிற்கின்றோம்.

''இலங்கையில் நடைபெற்றது தமிழ் இன அழிப்புத்தான்'' என நம் குரல்கள் ஐக்கிய நாடுகள் அவையில் ஒலித்தது , எமது அகிம்சை போரை உற்று நோக்கியது. மாற்றம் ''நடந்ததை கண்டறியும் குழு'' நியமனம் ஆகியது. சதிகார இலகை அரசு மீண்டும் பொய் நாடகம் ஆட தொடங்கிவிட்டது. ''அந்த நேரத்துக்கு ஏதாவது செய்யணும்'' என்றவாறு இனவாத சிங்கள அரசின் போக்கு இருந்தது. சர்வதேசத்தின் கண்களை மூடசெய்ய மனித உரிமை மீறல்களை விசாரிப்பதாக அறிவித்தது. ஐநா மனித உரிமை அமைப்பை ஏமாற்றி கொண்டது அந்த நேரம்.

2012 இலங்கை மனித உரிமை தொடர்பாக ஒரு பிரேரணையை அமெரிக்க சமர்பித்தது. ராஜபட்ஷ அரசு சர்வதேச பார்வையை மறைக்க அல்லது திசை திருப்ப முற்பட்டது. 2002 ஆம் ஆண்டில் இடம்பெற்ற சம்பங்களை பற்றி விசாரணை செய்யும் வகையில் தான் நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றை நியமித்து விட்டு சர்வதேசத்தின் பார்வையை சற்று தாமதமாக்கி தனது ஆட்சியை தொடர்ந்தார். பின்பு 2013 ஆம் ஆண்டு அமெரிக்க மீண்டும் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தது.

அப்போதும் 'அந்த நேரத்துக்கு ஏதாவது செய்ய' வேண்டும் என நினைத்த ராஜபக்ஷ அரசாங்கம் 2006ஆம் ஆண்டு மூதூரில் கொல்லப்பட்ட தொண்டர் நிறுவன ஊழியர்களின் மரணங்களைப் பற்றியும் திருகோணமலையில் கொல்லப்பட்ட ஐந்து மாணவர்களின் மரணங்களைப் பற்றியும் விசாரணைகளை மீண்டும் ஆரம்பித்தது. ஆனால் இலட்சகணக்கான ஈழதமிழர்களை கொன்று குவித்து இனவெறி சிங்களம் ஏப்பம் விட்டதை மறைத்து.சர்வதேசத்திடம் பொய்த்திரை போட்டு ஆட்சியை நகர்த்தி கொண்டது.

எமது உறவுகளின் இழப்புகளையும், கோர அழிவுகளின் நினைவுகளையும், காலத்தின் நகர்வால் தமிழ் சமூகத்தின் எழுச்சியையும் , நீதிக்கதறல்களையும் மழுங்கடிக்க செய்தது. இனவாத அரச பயங்கரவாத சதியினுள் சிக்கி கொண்டது சர்வதேசம். நீதி இழந்த தமிழ் சமூகம், சலிப்படைந்த வாழ்வுக்கு இட்டு சென்றது இனவாதம். சர்வதேசம் தாமதிக்கும் ஒவ்வெரு நொடியும் சதிவேலைகலையே இலங்கை அரசு தமிழருக்கு எதிராக செய்து வருகின்றது. ஒரு வேளை உணவுக்கு அலையும் நிலைக்கு இட்டு செல்கிறது.

மொழி, கலை,கலாச்சார பண்பாடு கட்டமைப்புடன் சொந்த மண்ணில் தனித்துவமாக வாழ்ந்த ஈழத்தமிழ் இனத்தின் மீது இனவாத அரசினால் திட்டமிட்டவகையில் கட்டவிழ்த்து விடப்பட்ட இன அழிப்பு போரில் பாதிக்கப்பட்ட மக்களின் சாட்சியங்கள் ஊடாக நடத்தபட்ட ஐநா மனித உரிமை அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை பங்குனி மாதம் சமர்பிக்கப்படும் நிலையில் இருந்த போது புதிதாக பதவி ஏற்ற சிறிசேன அரசின் வேண்டுகோளுக்கு இணங்க, ஐநா மனித உரிமை அமைப்பின் அறிக்கை ஆறு மாதங்கள் ஒத்திவைக்க பட்டதாக தெரிய வருகின்றமை தமிழ் சமூகத்துக்கு கவலை அளிக்கின்றது.

மீண்டும் மீண்டும் நீதிக்காக நீதிவேண்டி எழுச்சி கொள்ளும் சமூகத்தை இப்படிப்பட்ட கால இழுத்தடிப்புக்கள் மூலம் முடிவற்ற தொடர்கதையாக தொடர்கின்றன. சர்வதேசத்தின் கால இழுத்தடிப்புகளை வன்மையாக கண்டித்து நிற்கின்றோம். சர்வதேச சமூகம் எமக்கு ஒரு நிரந்தர தீர்வு வழங்கும் வரை நாம் நீதிக்கொடி தூக்கி போராடுவோம், அதே போல் தமிழ் சமூகமும் போராட முற்பட வேண்டும். அத்தோடு, கலாச்சார சிதைவை கச்சிதமாக மேற்கொண்டு வரும் சிங்களவனின் பிடியில் இருந்து மீண்டும் யாழ் மக்களின் குரல் எழுச்சியடைந்தமை உலக தமிழ் சமூகத்துக்கு பெரும் நம்பிக்கையை தருகின்றது.

யாழ் பல்கலைக்கழக சமூகத்தினரின் 24.02.2015 நீதிக்கான போராட்டத்தில் நாமும் அவர்களுடன் கைகோர்க்கிறோம்.

எம் ஈழத்து உறவுகளே!

உங்கள் குரல்கள் ஓங்கி ஒலிக்கட்டும்! நாம் ஐநா கதவுகளின் முன் நின்று தட்டுகின்றோம். என்றோ ஓர் நாள் நீதிக்கதவுகள் எமக்காக திறக்கும் .. தமிழர்களாய் ஒன்றிணைவோம் வாருங்கள்.

தமிழ் இளையோர் அமைப்பு - சுவிட்சர்லாந்து

http://seithy.com/breifNews.php?newsID=127146&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.