Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியப் பிரதமரின் யாழ்.வருகை தமிழ்மக்களின் துன்பங்களைப் போக்குவதாக அமைய வேண்டும்! - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Suresh-Premachandran-200-news-2.jpg

இந்தியப் பிரதமரின் யாழ்ப்பாண வருகையை முழு மனதுடன் ஒட்டுமொத்த தமிழினத்தின் சார்பில் வரவேற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இந்தியப் பிரதமரின் வருகையானது யாழ்ப்பாணத்துக்கும் வந்தார் என்ற வரலாற்றுடன் மட்டும் நின்று விடாது தமிழ் மக்களின் துன்ப துயரங்களைப் போக்க வழி திறக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், ஊடக பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

   

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் நடுப்பகுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு யாழ்ப்பாணத்திற்கும் வருகை தரவுள்ளார். பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த விஜயத்தை தமிழ் மக்கள் அனைவரும் வரவேற்கின்றனர். பிரமரின் விஜயத்திற்கு முன்னதாக சில கோரிக்கைகளை நாம் முன்வைக்கின்றோம். அதனை செய்து கொடுக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கும் அரசு இதனைச் செய்வதனை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கும் உள்ளது.

 

குறிப்பாக வடக்கு, கிழக்கில் நீண்ட இடம்பெயந்துள்ள மக்கள் முழுமையாக சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்பட வேண்டும். இந்தக் குடியேற்றத்திற்கமைய இந்தியாவிலுள்ள அகதிகளும் இங்கு மீள குடியமர்த்தப்படுவதுடன் அவர்களுக்குரிய அடிப்படை வசதிகள் அனைத்தும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும்.

 

மேலும் சிறைகளில் தடுத்து வைக்கப் பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலை, சரணடைந்தவர்களின் விடுதலை, காணாமல் போனவர்களை கண்டறிந்து அவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்கின்றோம்.இதனூடாகவே இங்கு பல மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

 

இதனை விடுத்து யாழ்ப்பாணத்திற்கும் இந்தியப் பிரதமர் மோடி வந்தார் என்ற வரலாறு மட்டும் இருக்காது தமிழ் மக்களின் துன்ப துயரங்களைப் போக்க வழி திறக்க இந்த விஜயம் வழிகோல வேண்டும்.

 

http://seithy.com/breifNews.php?newsID=127151&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.