Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தேவை-ஈழத்தமிழர் வரலாறு..

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விளக்க முடியுமா?

எமக்கு பல நாட்களாவே சில விடயங்களை கேட்டுத் தெளிவு பெற எண்ணியிருந்தேன். கிராமத்தில் எமது நண்பர்களிடமோ இல்லை உறவினர்களிடமோ அளாவும்போது இந்த வினாவை எழுப்பியும் சரியான விடை கிடைக்கவில்லை. இணையத்திலும் குழப்பமான பதில்களே கிடைக்கின்றன.

சில தமிழ் நண்பர்கள் இங்கே(தமிழகத்தில்) கூறுவதுண்டு-இது அறியாமையால் கூட இருக்கலாம்.

"நம் தமிழர்கள் இங்கிருந்து பிழைக்கபோனவர்கள் சிங்களவனிடம் ஒற்றுமையாக இருப்பதைவிட்டு ஏன் தனிநாடு கேட்டு அநியாயமாக உயிரிழக்க வேண்டும்?"

இந்தக்கேள்விகளைக் கேட்டு எமக்கு சிரிப்பும் வருத்தமுமே வரும். எங்கோ பல மைல்கள் தூரத்திலுள்ள, அதுவும் நம் இரத்தத்தில் சம்பந்தமே இல்லாத லெபனான், இஸ்ரேலியர்களுக்காக வக்காலத்து வாங்கவரும்போது வரும் எரிச்சல் இருக்கே, அதை வார்த்தைகளால் சொல்ல இயலாது.

இங்கே, எம் அருகே பதினைந்தே கல் தொலைவில் மனிதாபமானமே இல்லாமல் நடத்தப்படும் தமிழர்களின் நிலை பற்றி பல தமிழக தமிழர்கள் அதிகம் கண்டுகொள்வது இல்லை. காரணம் மேற்கூறிய அறியா வாதமாகவே இருக்க முடியும்.

விசயன் என்ற சிங்கள மன்னன் தன் தந்தையால் வடஇந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டு தன் தோழர்களுடன் இலங்கையின் தென்பகுதியை அண்டியபோது "குவேணி" என்ற தமிழ்ப்பெண் வரவேற்றதாக அறிகிறேன். பின்னாளில் எற்பட்ட விசயன் மற்றும் சிங்களவனின் சூழ்ச்சியால் தென்பகுதியிலிருந்த தமிழர்கள் விரட்டபட்டதாக அறிகிறேன். ஆகவே தமிழர்கள் சிங்களவனுக்கு முன்னதாகவே குடியிருந்த இனமாக இருந்தபோது, எப்படி அவர்கள் சிறுபான்மை குடிகளாக மாறினார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது.

இந்த வரலாற்று விடயங்களைப்பற்றி தெரிந்துகொள்ள மிகுந்த விருப்பமாக உள்ளேன். மேலும் ஈழத்தமிழர் வரலாற்றைப்பற்றி அறியாத தமிழக தமிழர்களுக்கு இது விளக்கமாகவும் அமையும் என்பது என் கருத்து.

கள உறவுகள் யாரேனும் இதுபற்றிய நம்பகமான விளக்கம் கிடைக்கும் இடங்கள்(இணைய தளங்கள்) சொல்ல முடியுமா?

நன்றி..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுரேஸ், இந்த கேள்வியை வைத்ததற்கு உங்களுக்கு முதலில் நன்றி. என் மனதில் இந்த கேள்வி பல காலமாக இருந்து வருகின்றது. யாழில் சிறந்த பதில்கள் கருத்துக்கள் கிடைக்கும் என நினைக்கின்றேன்.

நான் அறிந்த இலங்கையில், இலங்கைத்தமிழர், இந்திய தமிழர் இரண்டு பேரும் இருக்கின்றார்கள். இலங்கைத்தமிழர்களின் கோட்டை யாழ்ப்பாணம்,.. அங்கு நம் இந்திய வம்சாவழித்தமிழர்கள் ( கண்டி அவர்களின் கோட்டை எனலாமா? அங்கு தான் அவர்கள் தோட்ட வேலைகளில் ஈடுபடுகின்றார்கள்)யாழ்ப்பாண மக்களால் மதிக்கப்படுவதில்லை என்பது மன வருத்ததுக்கு உரியது. பொருளாதார நிலையாக இருக்கலாம்.

இலங்கைத்தமிழர்கள் அதாவது யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்டவர்களுக்கும் இந்திய தமிழர்களுக்கும் பல வேறு பாடுகள் இருக்கின்றதை காணக்கூடியதாக இருக்கின்றது. விழாக்களில் கூட வித்தியாசம், கோயில்களில் கூட வித்தியாசம்.

சிறந்த ஒரு உதாரணத்தை கூறலாம் என நினைக்கின்றேன்.

மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில், தமிழர்கள் இருக்கின்றார்கள். ஆனால் இலங்கைத்தமிழர்கள் தம்மை தமிழர் என்று அடையாளம் காண்பிப்பதை விட, சிலோனீஸ் என்று சொல்வதில் பெருமைப்படுகின்றார்கள். காரணங்களும் இருக்கின்றன. இந்திய வம்சாவழியினர்குகும் இலங்கை வம்சாவழியினருக்கும் பல கருத்து வேறுபாடுகள் அங்கு இருக்கின்றன. தமக்கென தனித்தனி கோயில்கள், இதர விடயங்கள் இப்படி பல பல. ஒரு கருத்துக்கணிப்பின் படி, இலங்கையை வம்சாவழியாக கொண்டவர்கள், சிறந்த கல்வி மான்களாக இருக்கின்றார்களாம் மலாயா, சிங்கப்பூரை பொறுத்தவரை. அத்தோடு, செல்வந்தர்களாகவும் இருக்கின்றார்கள். காரணம், 1919 என்று நினைக்கின்றேன், அந்த காலத்தில், இந்திய தமிழரை தோட்ட வேலைக்கு மலேசியாவில் அமர்த்தும் போது, அவர்களை கண்காணிபதற்காக இலங்கைத்தமிழர் வரவழைக்கப்பட்டார்கள். அதனால் இன்று மலேசியா சிங்கப்பூர் இலங்க்கை வம்சாவழியினரும், அங்கு உள்ள் இந்திய தமிழரை சமமாக நடத்துவதில்லை.. திருமணங்கள் வரும் போது கலப்புத்திருமணத்தை எதிர்க்கின்றார்கள். இது இலங்கையிலும் இருக்கின்றது.

இதைப்பற்றி பேச கூடாது, இருந்தாலும் சொல்கின்றேன், சாதி என்பது தமிழ் நாட்டிலும் இருக்கின்றது, யாழ்ப்பாணத்திலும் இருக்கின்றது. ஆனல். தமிழ் நாட்டில் இருக்கும் சாதி பெயர்கள் வேறாகவும், யாழ்ப்பாணத்தில் இருக்கும் சாதி பெயர்கள் வேறு வேறாகவும் இருக்கின்றன.

மொத்தத்தில், யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட தமிழர்கள் வந்தேறு குடிகளா இல்லையா என்பது எனக்கு ஒரு கேள்விக்குறி... இன்னும் ஒரு விடயம், மொழி. யாழ்பாணத்தில், எம்மை அறியாமல் பல போர்த்துக்கேய சொற்களை பாவிக்கின்றார்கள்.. இது எதனால் என்பது தெரியவில்லை... கதிரை போன்றவை...( நாற்காலி)

எனது நிஜ வாழ்வில், இலங்கை தமிழர்கள் யாரும் நண்பர்கள் இப்போது இல்லை... இந்திய தமிழர்கள் தான் சிலர். எமது கலாச்சார பழக்கவழக்கங்கள், உணவு முறைகள் பலவற்றில் வித்தியாசங்கள் உண்டு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விரிவான விளக்கத்திற்கும் தகவல்களுக்கும் நன்றி "சும்மா..!"

என்னுடைய அனுபவம் ஒன்றை இங்கே கூற விரும்புகிறேன்..சில காலங்களுக்கு முன்னால் நாகையில் நான் பணியாற்றியபோது, நாகை துறைமுகத்திற்கு எதிரிலுள்ள சுங்க இலாகாவில் ஒரு அதிகாரியை சந்திக்க நேர்ந்தது..அவர் இலங்கைத் தமிழில் சரளமாக உரையாடியவிதம் என்னை வெகுவாகக் கவர்ந்தது.

அவரிடம் சென்று ஈழத்தமிழர்களின் துயரம் பற்றி பேச்சுக்கொடுத்தபோது, அவர் இலங்கைத் தமிழருக்கும் இந்திய வம்சா வழியினருக்கும் இடையேயுள்ள கருத்து வேறுபாடுகளையும்,மனத்தாங்கல்-களையும் மிகுந்த வருத்தமுடன் பேசினார். எனக்கு முதலில் இதை நம்பவே முடியவில்லை. அவர் சில இலங்கைத் தமிழர்களை அழைத்து காண்பித்தபோது, மனதில் நெருடல் ஏற்பட்டதென்னமோ உண்மையே.

i try to tell somthink about this but site format si changed i couldnt see in tamil font. why?

karunainilal@gmail.com

  • கருத்துக்கள உறவுகள்

i atached my openion in bamini

அண்ணா குவேனியில் இருந்து 1960 ம் ஆண்டுவரை தமிழர் நம்பி ஏமாந்து போனது வரலாறு. அது இப்போது மாறுவது சந்தோசம்

விஐயன் இங்கு வரும்போது 700 பேருடன் வந்தான். வரும்போது இந்த தீவின் இரு சிறு பிரதேசங்களி;ல் தமிழர் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.

குவேனியை மணந்தபின் விஐயனும் அவனுடைய தோழர்ளும இந்தியாவில் ; (பல்லவம்) இருந்து பெண்களை வரவழைத்து மணமுடித்தார்கள். அப்படிஎனில் அவர்;கள் 701 குடும்பம். அப்போதும் அவர்கள் வளர்ச்சிக்கு இந்தியா துணை நின்றது. காரணம்

விஐயன் வடஇந்திய இளவரசன். இவனும் இவனது தோழர்களும் மணமுடித்தது இந்தியப் பெண்கள். இவ்விரு காரணங்ளாலும் தமிழர்கள் போர் தொடுத்த போதெல்லாம் இந்திய உதவியோடு சிங்களவர் வென்றார்கள்( இப்போதும் தொடர்வது சோகமே)

இவ்வளவையும் மீறி தமது பிரதேசத்தினை தமிழர் ஆண்டார்கள் ஆண்டுகொண்டிருக்கிறார்கள். மேலும் எழுத நேரம். வுசதி போதாததால் எனது சிறிய கருத்து;கள் தொடரும்

நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.