Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்தவை கடுமையாக சாடிய ஜனாதிபதி மைத்திரி

Featured Replies

maithripala-sirisena-speaking.jpg

 

 

தேசிய மருந்­துகள் ஒழுங்­கு­ப­டுத்தல் அதி­கார சபையை நிறு­வு­வ­தற்­கான சட்டமூலத்தை பாரா­ளு­மன்­றத்­துக்குத் கொண்டுவரு­வதை தடுப்­ப­தற்­காக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ 400 மருந்­துக்­கம்­ப­னி­க­ளி­ட­மி­ருந்து தலா 25 இலட்சம் ரூபாவைப் பெற்­றுக்­கொண்டார்.

 
அத்­துடன் சட்ட வரைஞர் திணைக்­க­ளத்தின் பிர­தா­னியை ஓய்­வுக்­குள்­ளா­க்கி­ய­துடன் சட்­ட­வ­ரைபும் அது ஒழுங்க­மைக்­கப்­பட்ட கணி­னியும் கூட காணாமல்போகச் செய்யப்பட்டதாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நேற்று பாரா­ளு­மன்­றத்தில் கடு­மை­யான குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்தார். ஊழல் மோச­டிகள் தொடர்பில் அமைச்­சர்கள் வாய் திறக்க வேண்டாம் என்றும் கணக்­காய்­வாளர் நாயகம் பார்த்துக்கொள்வார் என்றும் மஹிந்த ராஜ­பக் ஷ பணித்­த­தா­கவும் ஜனா­தி­பதி குறிப்­பிட்டார்.
 
அவ­ரது ஆட்­சிக்­கா­லத்தில் அமைச்­சர்கள் எவ்­வாறு நடத்தப்­பட்­டார்கள் என்­பதை என்­னுடன் செயற்­பட்ட அன்­புக்­கு­ரிய அமைச்­சர்கள் மனச்­சாட்­சி­யுடன் நினைத்­துப்­பார்க்க வேண்டும். அவ­ரது செயற்­பா­டுகள் நியா­ய­பூர்­வ­மாக அமைந்­தி­ருந்தால் நான் ஜனா­தி­ப­தி­யா­கி­யி­ருக்கும் நிலை­மையும் ஏற்­பட்­டி­ருக்­காது என்றும் ஜனா­தி­பதி கூறினார்.
 
மேலும் தற்­போது சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள சட்­ட­மூலம் சட்­ட­மாக்­கப்­பட்­டதன் பின்னர் அமைக்­கப்­ப­டு­கின்ற அதி­கார சபைக்கு மிகவும் நேர்­மை­யான பிர­தா­னி­க­ளையும் பணிப்­பா­ளர்­க­ளையும் நிய­மிக்க வேண்டும் என வலி­யு­றுத்­திய ஜனா­தி­பதி நாட்டு மக்­களின் நன்மை கருதி 45 வரு­டங்கள் கழித்­தேனும் பல்­வேறு முட்­டுக்­கட்­டை­க­ளுக்குப் பின்னர் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள சட்ட மூலத்­துக்கு சக­லரும் ஆத­ர­வ­ளிக்­கு­மாறும் கேட்­டுக்­கொண்டார்.
 
பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை இடம்­பெற்ற அமர்வின் போது சுகா­தார அமைச்­ச­ரினால் நேற்று முன்­தினம் செவ்­வாய்க்­கி­ழமை சமர்ப்­பிக்­கப்­பட்ட தேசிய மருந்­துகள் ஒழுங்­கு­ப­டுத்தல் அதி­கார சபை சட்ட மூலம் மீதான இரண்டாம் வாசிப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே ஜனா­தி­பதி மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
 
நேற்­றுக்­காலை 10.35க்கு பாரா­ளு­மன்­றத்தில் பிர­சன்­ன­மான ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பத­வி­யேற்­றதன் பின்னர் பாரா­ளு­மன்­றத்தில் முதல் தட­வை­யாக உரை­யாற்­றி­ய­துடன் ஆளும் எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­களின் உரை­களை செவி­ம­டுத்­ததன் பின்னர் நண்­பகல் 12.00 மணி­ய­ளவில் சபை­யி­லி­ருந்து வெளி­யே­றினார்.
 
முன்­ன­தாக விவா­தத்தை ஆரம்­பித்து வைத்து உரை­யாற்­றிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மேலும் கூறு­கையில் 45 வரு­டங்­க­ளுக்கும் மேலாக உரை­யா­டல்­க­ளுக்குள் மட்­டுமே வரை­ய­றுக்­கப்­பட்­டி­ருந்த தேசிய மருந்­துகள் ஒழுங்­கு­ப­டுத்தல் அதி­கார சபையை நிறு­வு­வ­தற்­கான சட்­ட­மூ­லத்தை பாரா­ளு­மன்­றத்­துக்கு கொண்டு வரு­வ­தை­யிட்டும் அதன் மீதான விவா­தத்தை ஆரம்­பித்து வைத்து உரை­யாற்­று­வ­திலும் மகிழ்ச்­சி­ய­டை­கிறேன்.
 
ஜன­வரி மாதம் 8ஆம் திகதி நாட்டு மக்கள் என்னை ஜனா­தி­ப­தி­யாக தெரிவு செய்­தனர். எமது 100 நாள் வேலைத்­திட்­டத்தில் மேற்­படி சட்ட மூலத்தை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிப்­ப­தற்கு நாம் உறு­தி­ய­ளித்­தி­ருந்தோம். எனினும் மேற்­படி சட்­ட­மூ­ல­மா­னது ஏற்­க­னவே தயா­ரிக்­கப்­பட்­டி­ருந்த போதிலும் அது எமது கரங்­க­ளுக்கு கிட்­டி­யி­ருக்­க­வில்லை. என்னை ஜனா­தி­ப­தி­யாக்­கி­யமை தொடர்பில் நாட்டு மக்­க­ளுக்கு நன்­றியைத் தெரி­விக்­கிறேன். என்னைத் தெரிவு செய்­த­தால்தான் இச்­சட்ட மூலம் பாரா­ளு­மன்­றத்­துக்கு வந்­தி­ருக்­கி­றது.
 
இச்­சட்ட மூலம் இன்று பாரா­ளு­மன்­றத்­துக்கு கொண்டு வரப்­பட்­டி­ருப்­பதன் பின்­ன­ணி­யொன்றும் வர­லாறு ஒன்றும் இருப்­ப­தையும் நினை­வு­ப­டுத்த விரும்­பு­கிறேன். இற்­றைக்கு 45 வரு­டங்­க­ளுக்கு முன்­ப­தாக மனித நேயம் மிக்­க­வரும் போற்­று­தற்­கு­ரி­ய­வ­ரு­மான சிறந்த மனிதன் பேரா­சி­ரியர் சேனக்க பிபிலே இச்­சட்ட மூலம் தொடர்பில் பெரிதும் பிர­யத்­த­னங்­களைக் கொண்­டி­ருந்தார். அவரால் சிந்­திக்­கப்­பட்­டதும் அவ­ரது கொள்­கை­யு­மா­ன­தான தேசிய மருந்­துகள் ஒழுங்­கு­ப­டுத்தல் அதி­கார சபை எனும் விட­ய­மா­னது இன்று தேசிய கொள்­கை­யாக ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.
 
சுகா­தார அமைச்­ச­ராக கட­மை­யேற்­றதன் பின்னர் பேரா­சி­ரியர் சேனக்க பிபி­லேயின் கொள்கை வகுப்­புத்­திட்டம் தொடர்பில் ஆராய்ந்து பார்த்தேன். எதிர்க்­கட்சித் தலைவர் நிமல் சிறி­பால டி சில்­வாவும் சுகா­தார அமைச்­ச­ராக இருந்த கால கட்­டத்தில் அதில் கவனம் செலுத்­தி­ருந்தார்.
 
இருந்த போதிலும் இச்­சட்ட மூலம் சட்­ட­மாக்­கப்­ப­டு­வ­தற்கு பல தடைகள் இருந்­ததைக் கூற வேண்டும். இச்­சட்ட மூலத்தை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கா­தி­ருப்­ப­தற்­காக முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஹ­பக்ஷ சுமார் 40 மருந்துக் கம்­ப­னி­க­ளிடம் தலா 25 இலட்சம் ரூபாவை பெற்­றுக்­கொண்­டுள்ளார். அது மாத்­தி­ர­மன்றி சட்­ட­மூலம் இல்­லாது செய்­யப்­பட்­டி­ருந்­தது. அத்­துடன் சட்ட வரைஞர் திணைக்­க­ளத்தின் பிர­தானி ஓய்­வுக்­குள்­ளாக்­கப்­பட்­டி­ருந்தார். எல்­லா­வற்­றுக்கும் மேலாக சட்­ட­மூலம் வடி­வ­மைக்­கப்­பட்ட கணிணி இயந்­திரம் கூட இல்­லாது செய்­யப்­பட்­டி­ருந்­தது.
மருந்து கம்­ப­னிகள் உள்­ளிட்ட விட­யங்­களில் ஊழல் மோச­டிகள் இடம்­பெ­று­வதை நாம் மஹிந்த ராஜ­ப­க்ஷ­விடம் கூறினோம். ஆனாலும் ஊழல் மோச­டிகள் தொடர்பில் அமைச்­சர்கள் எதுவும் பேசத்­தே­வை­யில்லை என்றும் அது குறித்த கணக்­காய்­வா­ளர்கள் நாயகம் பார்த்­துக்­கொள்வார் என்றும் கூறி விட்டார்.
 
சட்ட வரைஞர் திணைக்­க­ளத்தின் முன்­னைய பிர­தா­னி­யா­னவர் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் வைத்­தி­ய­ராவார். இவரும் ஜனா­தி­ப­தியை போன்றே செயற்­பட்டு வந்தார்.
இவ்­வா­றான விட­யங்கள் சுட்­டிக்­காட்­டப்­பட்ட போது அமைச்­சர்­க­ளுக்கு வழங்கும் அந்­தஸ்து அங்கு இல்­லாது செய்­யப்­பட்­டது. இதனால் அமைச்­சர்கள் கையா­லா­கா­த­வர்கள் என்ற முடி­விற்கு அதி­கா­ரிகள் வந்­தனர். இப்­ப­டி­யான நிலை­மை­யொன்று உரு­வாக்­கப்­பட்டால் அமைச்­சர்­களின் நிலைமை மனோ­நிலை எவ்­வாறு இருக்கும் என்­பதை எண்­ணிப்­பார்க்க வேண்டும். ஊழல் மோச­டிகள் தொடர்­பான விட­யங்­களில் அமைச்­சர்கள் தலை­யிட வேண்டாம் என்று கூறப்­பட்­டதால் அது அதி­கா­ரி­க­ளுக்கு சாத­க­மா­கவும் ஆகிப்­போ­னது. முன்­னைய அமைச்­சர்கள் சுதந்­தி­ர­மாக சுயா­தீ­ன­மாக செயற்­பட்­டீர்­களா என்­பதை மனச்­சாட்­சி­யுடன் நினைத்­துப்­பா­ருங்கள். இந்த நிலை­மைகள் சரி செய்­யப்­பட்­டி­ருந்தால் நேர்மை கடைப்­பி­டிக்­கப்­பட்­டி­ருந்தால் நான் ஜனா­தி­ப­தி­யாக ஆகி­யி­ருக்­க­மாட்டேன். எனது அன்­புக்­கு­ரிய முன்னாள் அமைச்­சர்கள் இதனை புரிந்து கொள்ள வேண்டும்.
 
தேசிய மருந்­துகள் ஒழுங்­கு­ப­டுத்தல் அதி­கார சபையை நிறு­வு­வதன் மூலம் மக்கள் நன்­மை­ய­டை­கின்­றனர். நிறை­வான இல­வச சுகா­தார சேவையை பெற்­றுக்­கொள்ளும் வாய்ப்பை பெறு­கின்­றனர்.
சட்ட மூலம் தொடர்பில் திருத்­தங்கள் இருந்தால் அதனை உள்­வாங்க முடியும். கடந்த காலங்­களில் மலிந்­து­கி­டந்த ஊழல் மோச­டிகள் நாட்டில் துர்­நாற்­றமாய் வீசி­யதை மக்கள் நன்­க­றி­வார்கள்.
இந்­நி­லையில் மேற்­படி சட்ட மூலம் இங்கு கொணடு வரப்­ப­டு­வ­தற்கு முயற்­சி­களை மேற்­கொண்ட சுகா­தார அமைச்சர் ராஜித சேனா­ரத்ன உத­வி­யாக இருந்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோ­ருக்கு நன்­றியை தெரி­வித்து கொள்­கின்றேன்.
 
அத்­துடன் இல்­லாது செய்­யப்­பட்­டி­ருந்த இச்­சட்ட மூலத்தை மீண்டும் புதுப்­பித்தல் வரையில் இரண்டு வாரங்­க­ளுக்குள் உரு­வாக்­கித்­தந்த சட்ட வரைஞர் திணைக்­க­ளத்தின் அதி­கா­ரி­க­ளுக்கும் நன்­றி­யினை தெரி­விக்கும் அதே­வேளை சட்­ட­மூலம் சட்­ட­மாக்­கப்­பட்டு அதி­கா­ர­சபை நிறு­வப்­படும் போது அதன் தலை­வ­ரா­கவும் பணிப்­பா­ள­ரா­கவும் நிய­மிக்­கப்­படும் அதி­கா­ரிகள் மிகவும் நேர்­மைத்­தன்­மை­யு­டை­ய­வர்­க­ளா­கவும் இருத்தல் வேண்டும் என்­பது கவ­னத்திற் கொள்­ளப்­பட வேண்டும் என்­ப­த­னையும் வலி­யு­றுத்­து­கின்றேன். அவ்­வா­றா­ன­வர்­களை அமைச்சர் நிய­மிப்பார் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.
 
மேலும் அதிகார சபை நிறுவப்பட்டதன் பின்னால் அனைத்து மருந்து வகைகளும் இறக்குமதி செய்யப்படுகின்ற அனைத்து வகை வாசனை திரவியங்களும் சபையின் அதிகாரத்துக்குள் கொண்டு வரப்படுகின்றன.
 
மேலைத்தேய மருந்து வகைகள் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் அளவில் செயற்பாடுகள் அமைதல் வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன்.இதேவேளை தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபைக்கான சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட 24 மணித்தியாலத்துக்குள் மக்கள் நன்மைகளை அனுபவித்து விட முடியாது.
 

அதற்கடுத்ததாகவும் வேலைத்திட்டங்கள் இருக்கின்றன. நாட்டு மக்களின் நலனை கருதிய இச்சட்ட மூலத்துக்கு ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற ரீதியில் சகலரும் ஒத்துழைப்புக்களை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். மக்களின் சுகாதார சேவையை திடசங்கற்பமாக கொண்டுள்ள இத்திட்டம் வெற்றியளிக்க வேண்டும் என்றும் பிரார்த்திக்கின்றேன் என்றார்.

http://virakesari.lk/articles/2015/03/05/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF

 

Edited by Athavan CH

நல்ல முயற்சி , ஆனால் நேர்மையான ஒரு வைத்தியரை இதன் பணிப்பாளராக நியமித்தல் நல்லது .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.